என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பெண்கள் உலகம்
- ஷூவை வாஷிங்மெஷினில் போட்டு சுத்தப்படுத்துவது உறுதியை பாதித்து விடும்.
- ஒவ்வொரு வாரமும் ஷூக்களை சுத்தமாக்குவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.
இல்லத்தரசிகளுக்கு ஒரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால் குழந்தைகளுடைய வெள்ளை நிற ஷூக்கள் அழுக்கடைந்து பழுப்பு நிறமாகிவிட்டால், அவற்றை பழைய தோற்றத்திற்கு எவ்வாறு கொண்டு வருவது என்று யோசித்துக் கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் வீட்டிலேயே உள்ள சில பொருட்களை பயன்படுத்தி வெள்ளை நிற ஷூக்களை புதியது போன்று தோற்றம் அளிக்கக்கூடிய வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.
எலுமிச்சை சாற்றை ஒரு பவுல் நீரில் கலந்து, அந்த நீரை அழுக்கான ஷூ மீது தேய்க்கவும். ஷூவை வெயிலில் ஒரு மணிநேரம் வைத்து, பின்னர் சுத்தமாக கழுவி உலர வைத்து பயன்படுத்தலாம்.
ஒரு பங்கு ப்ளீச்சிங் பவுடரோடு ஐந்து பங்கு தண்ணீர் கலந்து, காற்றோட்டமுள்ள இடத்தில் கைகளுக்கு கிளவுஸ் போட்டு ஷூவை சுத்தம் செய்யவும்.
டூத் பிரஷ்ஷில் கலவையை எடுத்து ஷூவில் தேய்க்கவும். பின்னர் நீரில் கழுவிய பின்பு சில மணி நேரம் நன்கு உலர விட்டு பயன்படுத்தலாம்.
லெதர் ஷூ, க்ராக்ஸ் என எந்த மெட்டீரியல் வெள்ளை காலணிகளை சுத்தம் செய்ய ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவத்தை சேர்த்துக் கலந்து, துணி அல்லது பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி, ஷூ சுத்தமாகும் வரை மெதுவாக ஸ்கிரப் செய்யலாம். பின்னர் தண்ணீரைத் துடைத்து, நன்கு உலர வைத்தால் வெள்ளை நிற ஷூ தயாராகி விடும்.
ஒரு டேபிள்ஸ்பூன் வெந்நீரில், ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளை வினிகர் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து பேஸ்ட் போல செய்யவும்.
டூத்பிரெஷ் கொண்டு அதில் தோய்த்து அதைக் கொண்டு ஷூ மீது வட்டமாக தேய்க்கவும். சில மணி நேரம் அப்படியே உலரவிட்டு, அந்த பேஸ்ட்டை ஈரத்துணி கொண்டு துடைத்து, ஷூவைக் கழுவி நிழலில் உலர்த்தி பயன்படுத்தலாம்.
வெள்ளை க்ரீம் டூத்பேஸ்ட்டை டூத்பிரஷில் எடுத்து, ஷூ முழுக்க கறை உள்ள இடங்களில் தேய்க்கலாம். அதை அப்படியே சில நிமிடங்கள் உலர விட்ட பின்னர் ஈரமான துணி கொண்டு துடைக்கவும்.
அதன் பின்பும் அழுக்கு இருந்தால் அந்த இடத்தில் மட்டும் மீண்டும் ரிப்பீட் செய்து, ஈரத்துணியால் துடைத்து உலர வைத்து பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு வாரமும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் ஷூக்களை சுத்தப்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. ஷூக்களை வாஷிங்மெஷினில் போட்டு சுத்தப்படுத்துவது ஷீவின் உறுதியை பாதித்து விடும்.
ஷூவில் அழுக்கு பட்டாலோ, ஏதேனும் திரவங்கள் பட்டாலோ உடனே சுத்தம் செய்துவிட்டால் பின்னர் சுத்தம் செய்வதில் சிரமம் எதுவும் இருக்காது.
- மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி இலை.
- துத்தி இலையை வதக்கி மூலநோய் மீது கட்டி புண்கள் ஆறும்.
மூலநோய்க்கு மிகச் சிறந்த மருந்து துத்தி, இதன் இலையை வதக்கி கட்ட மூலநோய் கட்டி மற்றும் புண்கள் ஆறும்.
நம் முன்னோர்கள் துத்திக் கீரையை சமையலில் பயன்படுத்தி வந்தனர். இன்று நம் வீடுகளில் இக்கீரையை சமைப்பதையே மறந்துவிட்டோம். மலச்சிக்கலுக்கு துத்தி சிறந்த மருந்து.
இன்றைய பரப்பரப்பான வாழ்க்கைச் சூழலில் பலர் மலச்சிக்கலால் துன்பப்படுகின்றனர். மலச்சிக்கல், ஆரோக்கியத்துக்கு முதன்மையான எதிரி. நீடித்த மலச்சிக்கல் நாளடைவில் மூலநோயாக மாறிவிட வாய்ப்புண்டு.
நாம் உணவில் பயன்படுத்தும் அதிகமான காரம், புளிப்பு, நார்ச் சத்தற்ற மாவுப் பதார்த்தங்கள் ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தி வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. பெருங்குடலில் அதிகம் வாதம் உண்டாகிறது. குடலில் வாதமும், கழிவுகளும் தங்குவதால் மூலத்தில் சூடு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன.
துத்தி இலை குடல் புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி வெளியேற்ற உதவுகிறது. துத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
துத்திக் கீரை- 200 கிராம்
சின்ன வெங்காயம்- 100 கிராம்
வேகவைத்த துவரம்பருப்பு- 3 மேஜைக்கரண்டி
மிளகு தூள்- அரை ஸ்பூன்
சீரகம்- 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்- 3 தேக்கரண்டி
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை:
துத்திக் கீரை, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சிறியதாக அரிந்துகொள்ள வேண்டும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து தாளித்து, வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துத்திக் கீரையை போட்டு வதக்கி சற்று நீர் தெளித்துக் கீரையை வேக விடவேண்டும்.
கீரை வெந்தபின் வேகவைத்த துவரம் பருப்பு, மிளகுத் தூள், உப்பு கலந்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
இந்த கீரையை சூடான சாதத்துடன் நெய் அல்லது நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி கலந்து சாப்பிட, மூலநோய் குணமாகும். மூலத்தின் உண்டாகும் வலி நீங்கும், மலச்சிக்கல் தீரும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நீங்கும்.
மூல நோயால் துன்பப்படுபவர்கள் இந்த கீரையை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சமையலில் பயன்படுத்தலாம்.
- முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம்.
- மலச்சிக்கல் தோன்றும் சமயம் முடக்கறுத்தான் கீரை சாப்பிடலாம்.
மூட்டுகளை முடக்கி வைக்கும் வாதநோயை அகற்றுவதால் இந்த கீரைக்கு முடக்கறுத்தான் கீரை என்று பெயர். தோல் நோய்களுக்கு முடக்கறுத்தான் இலைகளை அரைத்து பூசி குளித்து வரலாம். வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் தோன்றும் சமயம் முடக்கறுத்தான் கீரை சாப்பிடலாம்.
முடக்கறுத்தான் கீரை சாப்பிடும் பொழுது சிலருக்கு பேதி உண்டாகும். அதனால் முதலில் சாப்பிடும் பொழுது ஒரு விடுமுறை நாளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.
தேவையான பொருட்கள்:
முடக்கறுத்தான் இலை- 100 கிராம்
வெங்காயம் -2 (பொடிதாக அரிந்து கொள்ளவும்)
தக்காளி- 2
புளி- சிறிய எலுமிச்சம்பழம் அளவு
சாம்பார் பொடி- 2 ஸ்பூன்
மஞ்சள்தூள்- அரை ஸ்பூன்
தனியாதூள்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் -2 ஸ்பூன்
வெந்தயம்- கால் ஸ்பூன்
உப்பு- சுவைக்கேற்ப
செய்முறை:
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, முடக்கறுத்தான் இலையை வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் ஆற வைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் தாளித்து, தக்காளி, வெங்காயம் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
பின்னர் புளியை கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, தனியா பொடிகளை கலந்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் அரைத்து வைத்துள்ள முடக்கறுத்தான் கலவையை போட்டு உப்பு கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த குழம்பை சூடான சாதத்துடனும், இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிடலாம்.
மூட்டு வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அமையும்.
- தோசைக்கு அரைக்கும் மாவில் சிறிது கொள்ளை சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.
- டால்டா, நெய் கெட்டியாகிவிட்டால் ஸ்பூனை சூடாக்கி கலந்தால் சுலபமாக வரும்.
* இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் எண்ணெய் இல்லாமல் வறுத்த ரவையை சிறிது கலந்து அரை மணி நேரம் ஊறிய பிறகு இட்லி வார்த்தால் சுவையாக இருக்கும்.
* ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து பின்னர் காயப்போட்டால் மிளகாய் வற்றல் பார்க்க வெண்மையாகவும், அதிக ருசியாகவும் இருக்கும்.
* இடியாப்பத்திற்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொண்டால் இடியாப்பம் பிழிவது சுலபமாக இருக்கும்.
* வத்தக்குழம்பு தாளிக்கும்போது ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.
* கொள்ளு பயிறை காலையில் ஊற வைத்து மாலையில் தண்ணீரை வடித்து ஒரு துணியில் கட்டி மறுநாள் உலர்த்த வேண்டும். உலர்ந்த பின் தேய்த்தால் பருப்பு கிடைக்கும். இந்த பருப்பில் சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும்.
* தோசைக்கு மாவு அரைக்கும்போது உளுந்துக்கு பதில் கொள்ளு பருப்பை சேர்த்து அரைத்து செய்தால் தோசை பூப்போல மிருதுவாக இருக்கும்.
* ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேக வைத்து, ஆறியதும் தக்காளி சாறு சேர்த்து தினமும் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும்.
* பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதி.
* அடை மாவுடன் கார்ன் பிளேக்சை பொடித்து சேர்த்து அடை சுட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் தயார் செய்யும்போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக்கொட்டினால் சுவையாக இருக்கும்.
* பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான் தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.
* டால்டா, நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.
* உளுந்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால் சிறிது பச்சரிசி மாவினை சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
* சப்பாத்தி மாவு பிசையும்போது சிறிது பனைவெல்லத்தை காய்ச்சி அதில் சேர்த்து மாவு பிசைந்து சாப்பிட்டால் தனி டேஸ்ட்டாக இருக்கும்.
* சமையல் அறையில் இருக்கும் கத்தரிக்கோலை சாணைப்பிடிக்க ஈஸியான வழி கல் உப்பு ஜாடிக்குள்ளே சொருகி சிறிது நேரம் கத்தரித்தால் உப்புடன் உரசும் போது கத்திரிக்கோலில் சாணை ஏறிவிடும்.
* எந்த வகை பாயசம் செய்யும்போதும் ஏலக்காய்ப் பொடியைக் கடைசியாக சேர்க்க வேண்டும். ஒரு சிட்டிகை பச்சைக் கற்பூரம் சேர்த்தால் அதன் வாசனை அறையெங்கும் மணக்கும்.
* உளுந்து கொழுக்கட்டை செய்யும்போது, தேங்காய் எண்ணெய்யில் தாளித்தால் கொழுக்கட்டை தேங்காய் எண்ணெய் வாசனையோடு கமகமக்கும்.
- அகத்திக்கீரைக்கு உடலில் உள்ள வெப்பத்தை அகற்றும்.
- லேசான கசப்பு தன்மை உடையது.
அகத்திக்கீரைக்கு உடலில் உள்ள வெப்பத்தை அகற்றும் தன்மையுள்ளதால் இந்த கீரை அகத்தி கீரை எனப்படுகிறது இதில் இரண்டு வகை உள்ளது. ஒன்றில் வெள்ளை நிற பூ பூக்கும். மற்றொன்று சிவப்பு நிறத்தில் பூக்கும்.
இந்த கீரையில் பலவகை யான சத்துக்கள் உள்ளன. இது லேசான கசப்பு தன்மை உடையது. இதன் பூக்களும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
வயிற்றுப் புண்களை ஆற்றும் திறன் இந்த கீரைக்கு உண்டு. இதை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும். வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் சத்தும் இதில் உள்ளது. இரும்பு, சுண்ணாம்பு சத்துக்களும் நிறைந்துள்ளது.
கண் பார்வையை அகத்திகீரை துல்லியமாக்கும். அதனால் இது மாலை கண் நோய்க்கு சிறந்த மருந்தாகும்.
தேவையான பொருட்கள்:
அகத்திகீரை- ஒரு சிறிய கட்டு
சிறிய வெங்காயம்- 100 கிராம் (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
சீரகம்- 1 தேக்கரண்டி
மிளகுபொடி- 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல்- ஒரு கப்
உப்பு- தேவைக்கு
செய்முறை:
தேங்காய் துருவலை அரைத்து 200 மி.லி நீரில் கலந்து வடிகட்டி முதல் தேங்காய் பால் எடுக்க வேண்டும். பின்னர் மறுபடியும் 200 மி.லி நீர் கலந்து வடிகட்டி இரண்டாம் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடிகனமான பாத்திரத்தை எடுத்து இரண்டாம்முறை எடுத்த பாலை ஊற்ற வேண்டும். அதில் அகத்திகீரை, சீரகம், மிளகுத்தூள் கலந்து நன்கு வேக வைக்க வேண்டும்.
இந்த கலவை நன்கு வெந்தவுடன் முதலில் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். அதன்பிறகு உப்பும் கலந்து இறக்கிவிட வேண்டும். தேங்காய்பாலில் வேகவைப்பதால் கசப்புத்தன்மை தெரியாது.
இந்த கூட்டில் உள்ள தேங்காய் பாலை மட்டும் வடிகட்டி 50 மி.லி. அளவு எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் தேவையற்ற பூச்சிகள் அழியும். இதை மாதம் ஒருமுறை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் கருப்பையில் உள்ள புண்களுக்கும் இந்த கூட்டு சிறந்த மருந்து.
- எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க் நன்மை பயக்கும்.
- தேவையற்ற முடிகளை அகற்றாது.
சருமத்தில் தூசி மற்றும் காற்று மாசுபாடு, பாக்டீரியாக்கள் போன்றவை படிந்தால், முகப்பரு, அரிப்பு மற்றும் தோல் சிவத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தோலை பராமரிக்க சந்தையில் ஏகப்பட்ட கிரீம்கள் கிடைக்கின்றன.
அப்படி, அனைவராலும் தொடர்ந்து பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பீல்-ஆஃப் மாஸ்க் (peel-off mask) என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. ஏனென்றால், இது எக்கச்சக்க நன்மைகளை கொண்டுள்ளது. அதனால் தான், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இதை உபயோகிக்கின்றனர்.
குறிப்பாக, சருமத்தில் காணப்படும் வெண்புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை அகற்ற Peel Off மாஸ்க் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் ஜெல் அல்லது நீர் சார்ந்த பீல்-ஆஃப் மாஸ்க்குகளை பயன்படுத்துங்கள். அது உங்கள் சருமத்தில் செய்யும் அதிசயங்களையும் காணலாம்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு பீல்-ஆஃப் மாஸ்க்குகள் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. அவை துளைகளை அடைப்பதன் மூலம் உங்கள் தோலில் இருந்து அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. மேலும் ஃபேஸ் வாஷ் அல்லது டோனர்களை விட தோலை நீக்கும் முகமூடிகள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கும்.
கவனிக்க வேண்டியவை:
* Peel Off மாஸ்க் உண்மையில் சரும சேதத்திற்கு வழிவகுக்கும். எனவே, இந்த வகை மாஸ்கினை வாரம் 1 அல்லது 2 முறை (தேவை இருப்பின்) பயன்படுத்தினால் போதுமானது.
* Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின்னர் முகத்தை கழுவ வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இதற்கான பதில் வேண்டாம் என்பது தான். எனினும் எரிச்சல், அரிப்பு இருப்பது போல் உணர்பவர்கள் முகத்தை கழுவலாம்.
* Peel Off மாஸ்க்-கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை (பெண்களின் மீசை) அகற்றுமா என்ற சந்தேகம் இருப்பின், கவலை வேண்டாம். இந்த பேக், தேவையற்ற முடிகளை அகற்றாது. வெண்புள்ளிகளை மட்டுமே அகற்றும்.
* Peel Off மாஸ்க் பயன்படுத்திய பின் சருமம் பொலிவாக இருப்பது போல் தோன்றுவது உண்மை தான். சருமத்தின் இறந்த செல்களை இந்த மாஸ்க் அகற்றுவதால் இப்படி தோன்றுகிறது, எனினும் இந்த பொலிவு நிரந்தரமான ஒன்று அல்ல.
* Peel Off மாஸ்க் பயன்படுத்துகையில் வலி உண்டாவது உண்மை தான். அதேப்போன்று இந்த மாஸ்க் ஆனது, சருமத்துளைகள் சேதம் மற்றும் சிவத்தலுக்கு வழிவகுக்கும் என்பதால், நிபுணர்கள் அதிகம் இந்த மாஸ்கினை பரிந்துரைப்பதில்லை.
- கற்பூரவல்லி மிகச் சிறந்த மருத்கதுவம் கொண்டர் மூலிகை.
- வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
கற்பூரவல்லி மிகச் சிறந்த மருத்கதுவம் கொண்டர் மூலிகை. இது ஓமவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. கற்பூரம் மற்றும் ஓமம் நறுமணம் உள்ள இந்த செடியின் இலைகள் நீர்ச்சத்து நிறைந்து தடித்து இருக்கும். இதன் இலைகளில் உள்ள கார் வாக்ரால், தைமால் மற்றும் பீட்டா காரோபைலின் போன்ற வேதியியல் பொருட்கள், இலைகளின் நறுமணம் மருத்துவ குணங்களுக்கு காரணமாகின்றன.
குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு ஒவ்வாமையால் உண்டாகும் தும்மல் மற்றும் சளி, இருமலுக்கு கற்பூரவல்லி அருமருந்து. தோலில் உண்டாகும் ஒவ்வாமை, தோலில் ஏற்படும் கானாக்கடி போன்ற தடிப்புக்கும் இதன் இலையை தோலில் தேய்க்கலாம். கற்பூரவல்லி சருமத்துக்கு நல்ல மருந்து.
குழந்தைகளுக்கு பருப்புசாதத்தில் ஒரு கற்பூரவல்லி இலையைக் கலந்து பிசைந்து ஊட்டலாம். அப்போது உணவு நன்கு ஜீரணமாகும்.
கற்பூரவல்லிச் செடியை மிக எளிதாக தொட்டிகளில் வளர்க்கலாம். செடியின் தண்டை உடைத்து நட்டால் புதுச்செடி வளர்ந்து விடும்.
தேவையான பொருட்கள்:
கற்பூரவல்லி இலை- 30
கறுப்பு உளுந்து- 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல்- 4
தேங்காய்த் துருவல்-4 ஸ்பூன்
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- சுவைக்கேற்ப
பெருங்காயம் தூள்- 1 ஸ்பூன்
நல்லெண்ணெய்- 3 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, புளி, உளுந்து, மிளகாய்வற்றலை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கற்பூரவல்லி இலைகளை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். சற்று ஆறிய பின் தேங்காய்த் துருவல் கலந்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்து அதன்பின் உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து கலக்க வேண்டும். சுவையான கற்பூரவல்லி சட்னி ரெடி.
இந்த சட்னி செய்வதற்கு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இந்த சட்னி சுவையாக இருக்கும். இட்லி,தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சளி, இருமல், அஜீரணம், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம்.
- துணையின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.
- துணையுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதிகாச காவியான மகாபாரதத்தின் ஒரு அங்கமான பகவத்கீதையில் நாம் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை முன்வைக்கும் சாராம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. கிருஷ்ணர் கூறிய அந்த போதனைகளில் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வித்திடும் அம்சங்களும் கூறப்பட்டுள்ளன. அவை...
1. தன்னலமற்றவராக இருங்கள்
திருமணமான தம்பதியர் தங்கள் உறவு வலுவாக நீடித்திருக்க, துணையின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். துணையின் ஒவ்வொரு தேவைகளையும் கேட்டறிந்து நிறைவேற்றுங்கள். அவரின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அன்பை பொழிவதில் தன்னலமற்றவராக இருங்கள்.
2. பொறுமையை கடைப்பிடியுங்கள்
சவால்களை எதிர்கொள்ளும்போது, அஞ்சாமல் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். இந்த பொறுமை குடும்ப வாழ்விலும் தொடர வேண்டும். துணையிடத்தில் பொறுமையாகவும், அன்பாகவும் இருக்க வேண்டும். இது தேவையற்ற சண்டைகள் மற்றும் தவறான புரிதல்களை தடுக்கவும், பிரச்சனைகளை சமாளிக்கவும் உதவும்.
3. ஈகோவை விட்டொழியுங்கள்
வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனைகள் எழுவதற்கு வழிவகுக்கும் அகங்காரத்தை விட்டுவிடுமாறு கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார். திருமணமானவர்களிடையே ஈகோ எட்டிப்பார்த்தால் அது அடிக்கடி மோதல்களுக்கு வழிவகுக்கும். துணையுடனான உறவை பாதிக்கலாம். அதனால் ஈகோவை விட்டொழியுங்கள்.
4. சமநிலையை பேணுங்கள்
வாழ்க்கையில் சமநிலையை பின்பற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிலும் திருமண வாழ்க்கையில் ஆரோக்கியமான சமநிலையை நிலைநிறுத்த பாடுபட வேண்டும். அதற்கு துணையுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
5. விசுவாசமாக இருங்கள்
எப்போதும் நேர்மையாக மட்டுமின்றி தர்மத்தின் பாதையின் வழியே நடக்க வேண்டும். துணைக்கு விசுவாசமாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். மேலும் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்கும்போது துணைக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
6. அன்புடன் இருங்கள்
பரமாத்மாவுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதை பற்றி கிருஷ்ணர் அடிக்கடி கூறுகிறார். இந்த பாடத்தை உறவுகளுக்கும், வாழ்க்கைக்கும் பின்பற்ற வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு, ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்க வழிகாட்டும்.
7. மன்னியுங்கள்
துணை செய்யும் சின்ன சின்ன தவறுகளை மன்னியுங்கள். அது திருமண உறவுக்கு அவசியமானது, அடிப்படையானதும் கூட. தவறுகளை மன்னித்து அதனை திருத்திக்கொள்வதற்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.
8. நேர்மையாக இருங்கள்
எந்தவொரு சூழ்நிலையிலும் உண்மையாக, நேர்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். குறிப்பாக துணையிடத்தில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இது துணையுடனான நம்பிக்கை மற்றும் புரிதலை வளர்த்தெடுக்க துணைபுரியும்.
- தோல் பராமரிப்பு விஷயத்தில் முன்னெச்சரிக்கை தேவை.
- தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட் ஆகிவிட்டது. எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சில அழகு குறிப்புகள் இங்கே...
சுற்றுச்சூழலில் உள்ள தூசி, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவை நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது சருமத்தையும் பாதிக்கிறது.
பெண்கள் தங்கள் சரும அழகில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. எப்பொழுதும் ஏதாவதொரு வேலையில் பிசியாக இருக்கும் இவர்கள் தங்கள் அழகில் அதிக கவனம் செலுத்துவதில்லை.
ஆனால் சிலர் இப்போதெல்லாம் ஆண்களும் தங்கள் அழகு மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்துகிறார்கள்.
ஒரு வேளை, தாங்கள் அழகாகத் தெரிந்தால் மற்றவர்களை கவர முடியும் என்ற எண்ணத்தினாலோ அல்லது தங்கள் தன்னம்பிக்கையின் காரணமாகவோ, முகத்தில் பொலிவு மற்றும் நல்ல உடலமைப்புக்காக ஏங்குகிறார்கள்.
சில சமயங்களில், பெண்களை விட ஆண்கள் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள் மற்றும் அழகு நிலையங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.
ஆனால் ஆண்கள் தங்கள் தோல் பராமரிப்பு விஷயத்தில் சில சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் அதிகமாக வெளியே செல்வார்கள்.
அவர்களின் தோல் ஏற்கனவே கடினமாக இருக்கும். அப்படி இருக்கும் போது முகம், தாடி மீசையில் தூசி போன்றவற்றால் தோல் எரிச்சல் ஏற்படலாம். இதை தவிர்க்க தோல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
ஆண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்:
நீரேற்றமாக இருங்கள்:
சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்க உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருக்க வேண்டும். உடல் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அர்த்தம். நீரிழப்பைத் தடுக்க நாள் முழுவதும் போதுமான நீர் உட்கொள்ளல் அவசியம்.
எண்ணெய் பசை சருமத்தை போக்க சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். குளிர்காலத்தில் ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.
சன்ஸ்கிரீன்:
வெளியில் செல்லும் போது உங்கள் சருமத்தில் சன் ஸ்க்ரீன் லோஷனைப் பயன்படுத்துவது அவசியம். இந்த சன் ஸ்கிரீன் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் சருமத்திற்கு நல்லது.
இது தீங்கு விளைவிக்கும் மாசுக்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமல்லாமல், சூரிய ஒளியால் சருமம் கருமையாவதையும் தடுக்கிறது. வெளியில் செல்லும்போது தூசி மற்றும் அழுக்குத் துகள்கள் காற்றில் வந்து தோலில் படர்ந்து சருமத் துளைகளை அடைத்துவிடும்.
அவை சருமத்தில் பருக்கள், வெடிப்புகள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதனால்தான் சன் ஸ்க்ரீன் தடவினால் இந்தப் பிரச்னைகள் வராது. ஆனால் சருமத்திற்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுப்பது நல்லது.
சமச்சீர் உணவு:
சருமத்தில் ஏற்படும் மாசுபாட்டின் விளைவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி அழகுசாதனப் பொருட்கள் அல்ல. எந்தவொரு பிரச்சனையையும் சமாளிக்க மிக முக்கியமான விதி சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.
உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்கும் உணவைத் தேர்ந்தெடுக்கவும். இது உடலை உள்ளேயும் வெளியேயும் ஆரோக்கியமாக வைக்கிறது.
புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்.
சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளைத் தடுக்க, காரமான உணவுகள், புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கங்களைத் தவிர்க்கவும்.
இப்போது அழகாக இருப்பது ஆண் பெண் இருபாலரும் பின்பற்றும் டிரெண்ட். எனவே ஆண்களும் தங்கள் சருமத்தின் அழகில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்களுக்கான சந்தையில் பல பிராண்டுகளின் தயாரிப்புகள் உள்ளன.
ஆண்களுக்கான கரி முகமூடிகள் மற்றும் திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் தோல் கண்டிஷனர்கள் இதில் அடங்கும். இவற்றை காலையில் தடவினால், நாள் முழுவதும் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
யோகா, தியானம், ஜிம் போன்ற தினசரி பயிற்சிகள் உங்களை உடல் ரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இது சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
- ஸ்டெம் செல் சிகிச்சை அனைத்து நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.
- குழந்தை பேறுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிப்பது எப்படி?
இன்றைய காலகட்டத்தில் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வாக அமைந்து வருகிறது. குழந்தையின்மை சிகிச்சையில் ஸ்டெம் செல் சிகிச்சை பெரும் பங்காற்றி வருகிறது.
சினை முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், கர்ப்பப்பையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து அதை வலுவாக்கி குழந்தை பேறு ஏற்படுத்தி கொடுப்பதிலும் ஸ்டெம் செல் சிகிச்சை முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கான ஸ்டெம் செல் சிகிச்சை எப்படி அளிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
குழந்தை பேறுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிப்பது எப்படி?
ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள கொழுப்பு அல்லது எலும்பு மஜ்ஜையில் இருந்து ஸ்டெம் செல்லை பிரித்து எடுத்து, ஒரு சிறப்பு ஊசி மூலமாக சினைப்பையில் துளை போட்டு, சினைப்பைக்குள் இந்த ஸ்டெம் செல்லை செலுத்துகிறார்கள்.
இந்த ஸ்டெம் செல்லானது சினைப்பைக்குள் சென்றதும் முட்டைகளின் வளர்ச்சியை தூண்டுகிறது. இதன் மூலம் பெண்களுக்கு முட்டைகளின் வளர்ச்சியும், எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
மேலும் சினைப்பையில் இருக்கும் பழுதான முட்டைகளையும் ஸ்டெம் செல்லானது திறம்பட செயல்பட வைத்து நல்ல தரமான முட்டைகளாக மாற்றுகிறது. ஐ.வி.எப். சிகிச்சை தோல்வியில் முடிந்த நோயாளிகளுக்கு கூட ஸ்டெம்செல் சிகிச்சை அளித்தவுடன் கருமுட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் கருவாக்கும் திறனும் அதிகரிக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. வழக்கமாக ஐ.வி.எப். சிகிச்சை மூலம் கருமுட்டை தானம் பெற்று பெண்கள் குழந்தை பேறு பெறும் போது, கரு முட்டையானது தானமாக கிடைத்தது தான், தன்னுடைய முட்டை இல்லை என்ற மனக்குறையும், ஏக்கமும் பெண்களுக்கு இருக்கும்.
ஸ்டெம் செல் சிகிச்சையானது பெண்களின் அந்த ஏக்கத்தை போக்கி, அவர்களது சினைப்பையில் முட்டையை உருவாக்கி, அவர்களுடைய முட்டையிலேயே குழந்தை பேறு ஏற்படுத்தி கொடுக்கிறது. எனவே பெண்கள் தங்களது மரபணுவில் குழந்தை பேறு பெறுவதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை என்பது மிக முக்கியமான வழிமுறையாகும்.
முகத்தில் சுருக்கம், முடி கொட்டுதலுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை:
வயதாகும் போது நிறைய பெண்களுக்கு தலைமுடி கொட்டும் பிரச்சினை இருக்கும். அவர்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும். பெண்களுக்கு முடி கொட்டுவதற்கு கூந்தல் மாற்று சிகிச்சைக்கு பதிலாக ஸ்டெம் செல் மிகச் சிறந்த பலனை அளிக்கிறது.
ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கும் பெண்களுக்கு முடி வளர்ச்சி மிகவும் அழகாக இருக்கும். இந்த சிகிச்சையின் மூலம் பெண்களுக்கு இயற்கையாகவே முடி வளர்ச்சி நன்றாக இருக்கிறது.
வயதாகும் போது ஒவ்வொருவருக்கும் முகத்தில் சுருக்கம் ஏற்படும். ஆண், பெண் இருவருக்குமே வயதாகும்போது முகத்தில் சுருக்கம் என்பது இயற்கையாகவே ஏற்படுகிறது. இந்த முகச்சுருக்கத்தை சரி செய்வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்லதொரு பலனை அளிக்கிறது.
வெளிநாடுகளை சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களின் வயதான தோற்றத்தை சீரமைத்து இளமையான தோற்றத்தை பெற ஸ்டெம் செல் சிகிச்சை பெறுகின்றனர். இதன் மூலம் அவர்கள் இளமையான தோற்றத்துடன் உடல் பொலிவையும் பெற்றுள்ளனர். எனவே உடல் தோற்றத்தை இளமையாக மாற்றுவதற்கு ஸ்டெம் செல் என்பது மிகவும் முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
- உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக, போதிய ஊட்டச்சத்து இல்லாமை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் முடி சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
இதில் முடி உதிர்வு, வறண்ட முடி, பொடுகு பிரச்சனை, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு முடி பிரச்சனைகள் எழுகின்றன. அந்த வகையில் மீன் எண்ணெய் முடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.
மீன் எண்ணெய் என்பது கானாங்கெளுத்தி, மத்தி, சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களின் திசுக்களில் இருந்து பெறப்படுகிறது. இதில் நல்ல அளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது.
குறிப்பாக டோகோசாஹெக்ஸெனோயிக் (டிஹெச்ஏ), ஈகோசாபென்டேனோயிக் (இபிஏ) போன்றவை உள்ளது. இந்த ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அவசியமானதாகக் கருதப்படுகிறது.
மீன் எண்ணெயில் உள்ள நன்மைகள்:
சருமம் மற்றும் முடி இரண்டின் ஆரோக்கியத்திற்கும் மீன் எண்ணெய் உதவுகிறது. சருமத்திற்கு மீன் எண்ணெயை பயன்படுத்துவது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் முகப்பருவைச் சமாளிக்க உதவுகிறது.
ஆய்வு ஒன்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்ற சப்ளிமென்ட்ஸைப் பயன்படுத்துவது முடி அடர்த்தியில் பங்களிக்கிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குணமாக்கவும், குறைக்கவும் உதவுகிறது. மேலும் இவை முடி வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.
இந்த அமிலங்கள் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிப்பதற்கு பங்களிக்கிறது. இவை முடிக்கு நன்கு ஊட்டமளிப்பதுடன் பொடுகு அல்லது அதிகப்படியான வறட்சி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த அதிகரித்த ரத்த ஓட்டம் முடியின் மயிர்க்கால்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்சிஜனை வழங்குகிறது. இவை ஆரோக்கியமான மற்றும் வலுவான முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.
இது போன்று மீன் எண்ணெய்களை பயன்படுத்துவது முடியின் அமைப்பை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
- முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
- அரிசி கழுவிய நீரினால் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்.
அரிசி கழுவிய நீரின் பயன்கள்:
அரிசி கழுவு போது அந்த தண்ணீரை வீணாக்காமல் சருமத்தை அழகு படுத்துவதற்கு பயன்படுத்தலாம். அரிசி கழுவிய நீரால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை ஒரு துணியால் வடிகட்டவேண்டும். அந்த நீரால் முகத்தையும், கூந்தலையும் அலசினால் அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைக்கும். இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமமும் பொழிவுடன் காணப்படும்.
அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்த பிறகு சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் நிறமும் பாதுகாக்கப்படும்.
இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்