search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து.
    • பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை.

    மத்திய பிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் உள்ள மகாராணா பிரதாப் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கிரேன் சரிந்து 20 அடி உயரத்தில் இருந்து கீயே விழுந்து விபத்துக்குள்ளானது.

    அந்த கிரேனில், போபாலின் வார்டு 66-ன் கவுன்சிலர் ஜிதேந்திர சிங் ராஜ்புத் தனது மாமாவுடன் கிரேனில் இருந்தார். அவர்களில் ஒருவர் கிரேன் ஆபரேட்டரிடம் மேலே செல்லும்படி சைகை செய்வதைக் கண்டார்.

    கிரேன் சிலையை அடைந்ததும், கவுன்சிலர் மாலை அணிவிக்க முன்னோக்கி சாய்ந்தபோது, கிரேனில் இருந்த வெல்டிங் உடைந்ததால், கிரேன் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    பலத்த காயமடைந்த இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்தில் ராஜ்புத்தின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது, அதே நேரத்தில் அவரது மாமாவும் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சுமாரான வெற்றியை விட படு தோல்வி ஒருவருக்கு அதிக ஊக்கம் அளிக்க்கும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
    • 10 ஆம் வகுப்பு வரை நன்கு படித்து வந்த பிரியால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் உயிரியல் கணித பாடத்தை தேர்வு செய்தார்.

    தேர்வுகளில் தோல்வியடைவதால் இன்றைய தலைமுறை மாணவர்கள் எளிதாக மனம் தளர்ந்து விடுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் அதை சவாலாக எடுத்து வாழ்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் சாதித்துக்காட்டும் மாணவர்களும் இருக்கவே செய்கின்றனர். சுமாரான வெற்றியை விட படு தோல்வி ஒருவருக்கு அதிக ஊக்கம் அளிக்க்கும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.

    அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பில் ஃபெயிலான பிரியால் யாதவ் என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் பல தடைகளை உடைத்தெறிந்து கடின உழைப்பால் MPPSC தேர்வில் வெற்றி பெற்று தனது 27வது வயதில் துணை ஆட்சியர் பதவியில் அமர்ந்திருப்பது கேட்போரை புல்லரிக்க வைப்பதாக உள்ளது.

     

    கடந்த 2021 இல் நடந்த MPPSC தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் அதில் 16 வது ரேங் எடுத்து அசத்தியுள்ளார் பிரியால் யாதவ். 10 ஆம் வகுப்பு வரை நன்கு படித்து வந்த பிரியால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொடுத்த அழுத்தத்தால் உயிரியல் கணித பாடத்தை தேர்வு செய்தார்.

    பிடிக்காத பாடத்தைப் படிதத்தால் இயற்பியலில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் தற்போது துணை கலெக்டராக தேர்வாகியுள்ள பிரியால் யாதவ் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

    முன்னதாக சமீபத்தில் 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர் ஐபிஎஸ் ஆன கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 12த் பெயில் திரைப்படம் பிரியால் யாதவின் வாழக்கையை ஒத்த கதைக்களத்துடன் நகர்வது குறிப்பிடத்தக்கது. 

    • ஜிம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திருட சென்ற இடத்தில் திருடர்கள் பொது மக்களிடம் சிக்கிக் கொண்டால் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் மத்திய பிரதேசத்தில் ஒரு ஜிம்முக்குள் திருட முயன்ற வாலிபரை ஜிம் உரிமையாளர் மடக்கி பிடித்து திருடனுக்கு நூதன தண்டனை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மத்திய பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் நவீன உடற்பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த ஜிம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஜிம்மிற்குள் நடப்பவற்றை வீட்டில் இருந்தே உரிமையாளர் தனது செல்போனில் கண்காணிக்க முடியும். சம்பவத்தன்று இரவு ஜிம்மிற்குள் திருடுவதற்காக வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார்.

    அப்போது ஷட்டரின் அருகே திருடன் சுற்றித்திரிவதை வீட்டில் இருந்தே ஜிம் உரிமையாளர் செல்போனில் பார்த்துள்ளார். உடனடியாக ஜிம்மிற்கு சென்ற அவர், திருடனை கையும் களவுமாக பிடித்தார். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தார். முன்னதாக அந்த ஜிம் உரிமையாளர் திருடனுக்கு நூதன தண்டனை வழங்க முடிவு செய்தார். அதன்படி அந்த திருடனை ஜிம்மில் உள்ள டிரெட்மில்லில் ஓட வைத்தார். இதுதொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    போபால்:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி அபார வெற்றி பெற்றார்.

    இவர் 12,26,751 வாக்குகள் பெற்றார்.

    இவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் 51,659 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11,75,092 ஆகும்.

    இந்தத் தொகுதியில் நோட்டா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2,18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
    • 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    இந்த நிலை எந்த நேரமும் மாறும் என்ற சூழலில், மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. எனவே தற்போதுள்ள நிலவரத்தை வைத்துக்கொண்டு வெற்றியை நிச்சயிக்க முடியாது. 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.

    இந்நிலையில் இந்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில். 1.35 லட்சத்திற்கு மேற்பட்டோர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    தற்போதைய நிலவரப்படி இந்தூரில் பா.ஜ.க. வேட்பாளர் சுமார் 7 லட்சம் வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. கோட்டையாக கருதப்படும் இந்தூர் தொகுதியில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால் வாணி அசுர வேகத்தில் முன்னிலை பெற்றார்.
    • மக்களும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டிபம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.

    காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால், வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி பிரசாரம் செய்தது.

    இந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் முதலே பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால் வாணி அசுர வேகத்தில் முன்னிலை பெற்றார். அவர் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தார். 9.30 மணி நிலவரப்படி சங்கர் லால் வாணி 1 லட்சத்து 9 ஆயிரத்து 56 வாக்குகள் பெற்றார்.

    அப்போது அவர் 93 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார். நோட்டா 16 ஆயிரத்து 480 ஓட்டுகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.

    இந்தூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழக்கிறார்கள்.

    • மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.
    • இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    திருமணத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி - ஜனாதிபதி இரங்கல்

    மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 13 பேர் படு காயமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜல்வார் மாவட்டம் மோயித்புரா பகுதியில் இருந்து மத்திய பிரதேசம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள குமால்பூருக்கு திருமண நிகழ்ச்சிக்காக சுமார் 50 பேர் டிராக்டரில் வந்துகொண்டிருந்தனர்.

    நேற்று (ஜூன் 2) இரவு ராய்கரில் உள்ள பிப்லோடி கிராமத்துக்கு அருகே டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்த்துள்ளது. இதில் டிராக்டருக்கு அடியில் பலர் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ், ஜேசிபி இயந்திரத்தின் உதவிவியுடன் டிராக்டருக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டு படுகாயமடைந்த 145 பேரை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஒருவர் கூறுகையில், டிராக்டரில் அளவுக்கு அதிகமான நபர்கள் அமர்ந்திருந்தந்தாலும் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாலும் விபத்து ஏற்பட்டதாக கூறினார்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமைத்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

     

    • பல்வீர் சிங் கையில் தேசிய கொடி ஏந்திய படி நடனம் ஆடினார்.
    • முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரை சேர்ந்தவர் 73 வயதான பல்வீர் சிங் சப்ரா. இவர் குழு ஒன்றுடன் இணைந்து யோகா பயிற்சி முகாம் நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்தூரில் உள்ள பூட்டி கோட்டி என்ற பகுதியில் பல்வீர் சிங் யோகா பயிற்சி வழங்கி வந்துள்ளார்.

    பயிற்சிக்கு இடையில், பல்வீர் சிங் தனது கையில் தேசிய கொடி ஏந்திய படி தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். நடனம் ஆடிக் கொண்டிருந்த போது, பல்வீர் சிங் மேடையிலேயே கீழே விழுந்தார். முதலில், அவர் நடனத்தின் அங்கமாக கீழே விழுந்திருப்பார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர்.

    கீழே விழுந்த பல்வீர் சிங் சில நிமிடங்கள் ஆகியும் எழாமல் படுத்த நிலையிலேயே இருந்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த அவரது குழுவினர் அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவர் சுயநினைவின்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே முதலுதவி அளித்து பல்வீர் சிங்கை மருத்துவமனை அழைத்து சென்றனர். மருத்துவமனையில் பல்வீர் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பேசிய பல்வீர் சிங் சப்ராவின் மகன் ஜக்ஜீத் சிங், "எனது தந்தை பல ஆண்டு காலமாக தேச பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். அவர் இதுதவிர சமூக சேவை சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்," என்று தெரிவித்தார்.

    உயிரிழந்த பல்வீர் சிங் சப்ராவின் கண்கள் மற்றும் சருமத்தை தானமாக வழங்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    • 8 பேரை வெட்டிக்கொலை செய்தவர் வீட்டுக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.
    • கொலை குறித்து மகுல்கிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டத்தில் போதல்கச்சார் என்ற கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு தொழில்களில் உள்ளனர். என்றாலும் அவர்களுக்கிடையே இதுவரை எந்தவித பிரச்சனையும் வந்தது இல்லை.

    இந்த நிலையில் அந்த கூட்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நேற்று அதிகாலை கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். அந்த கூட்டு குடும்பத்தை சேர்ந்த ஒருவரே இந்த கொலைகளை செய்து இருப்பது தெரியவந்தது. அவர்களது வீட்டில் 8 பேர் உடல்களும் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அவர்களை வெட்டி கொலை செய்தவர் வீட்டுக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். கொலையில் இருந்து அக்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு குழந்தை தப்பித்து போலீசாருக்கு தகவல் அளித்ததன் மூலம் சம்பவம் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து மகுல்கிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் 8 பேரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது அதே குடும்பத்தை சேர்ந்த தினேஷ் என்பது தெரியவந்துள்ளது. தினேஷுக்கும், வர்ஷா என்பவருக்கும் 8 நாட்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது.

    கடந்த ஓராண்டாக மனநலம் சரியில்லாத தினேஷ், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் போதைப்பொருளுக்கும் அடிமையாகி உள்ளார். இந்நிலையில், திருமணம் செய்து வைத்தால் தினேஷ் குணமாகிவிடுவார் என நம்பி அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதையடுத்து சம்பவம் நடந்த அன்று இரவு தினேஷ் மனைவியுடன் சண்டையிட்டதாகவும் கூறப்படுகிறது.

    • இந்தூரைச் சேர்ந்த பெண்ணுக்கு சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது
    • அவருக்கு ரத்த தானம் செய்ய மகாராஷ்டிரா நபர் சுமார் 400 கி.மீ. பயணம் செய்தார்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் ஆபரேஷன் செய்யப்பட்டது. அவரது ரத்த வகை 'ஓ பாசிடிவ்' எனக்கருதி ஆபரேஷன்போது ஓ பாசிடிவ் ரத்தம் செலுத்தப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அந்தப் பெண்ணுக்கு மிக அரிதான பாம்பே குரூப் ரத்த வகை இருப்பது தெரிந்தது.

    இதையடுத்து, அந்தப் பெண்ணுக்கு ரத்த தானம் செய்ய மகாராஷ்டிர மாநிலம் ஷிர்டியைச் சேர்ந்த ரவீந்திர அஷ்டேகர் நண்பரின் உதவியுடன் காரில் பயணித்தார். சுமார் 400 கிலோமீட்டர் தொலைவு பயணத்துக்குப்பின் அவரது பாம்பே குரூப் ரத்தம் பெறப்பட்டு, அந்தப் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.

    சரியான நேரத்தில் குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைத்ததால் அந்தப் பெண் உயிர் தப்பினார் என டாக்டர்கள் தெரிவித்தனர். சுமார் 400 கிலோமீட்டர் பயணித்து ரத்த தானம் செய்த ரவீந்திராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    ரத்த வகைகளில், ஏ, பி, ஓ மற்றும் ஏபி ஆகிய வகைகள்தான் பெரும்பாலும் நமக்கு தெரிந்தவை. பாம்பே குரூப் என்பது மிகவும் அபூர்வமானது. இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்குத்தான் இந்த ரத்த வகை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிந்துவாரா கலெக்டர் இன்று காலை கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
    • கூட்டு குடும்பத்தில் 8 பேரை கொன்று விட்டு ஒருவர் தற்கொலை செய்து இருப்பது கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டத்தில் போதல்கச்சார் என்ற கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் ஒரே சமையல் செய்து வாழ்ந்தனர்.

    அந்த கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பல்வேறு தொழில்களில் உள்ளனர். என்றாலும் அவர்களுக்கிடையே இதுவரை எந்தவித பிரச்சனையும் வந்தது இல்லை.

    இந்த நிலையில் அந்த கூட்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நேற்று இரவு கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டனர். அந்த கூட்டு குடும்பத்தை சேர்ந்த ஒருவரே இந்த கொலைகளை செய்து இருப்பது தெரியவந்தது.

    அவர்களது வீட்டில் 8 பேர் உடல்களும் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்தன. அவர்களை வெட்டி கொலை செய்தவர் வீட்டுக்குள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    எதற்காக அந்த நபர் தனது குடும்பத்தை சேர்ந்த 8 பேரை வெட்டிக்கொன்றார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மகுல்கிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிந்துவாரா கலெக்டர் இன்று காலை அந்த கிராமத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கூட்டு குடும்பத்தில் 8 பேரை கொன்று விட்டு ஒருவர் தற்கொலை செய்து இருப்பது அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டடவடமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது.
    • தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    மத்திய பிரதேச மாநிலம் சாகர் பகுதியில் வசித்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

    அப்பகுதியைச் சேர்ந்த நால்வர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வன்கொடுமை செய்து, போலீசிடம் சென்றால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் அந்த சமயத்தில் அரசியல் ரீதியாக பூதாகரமாக வெடித்த நிலையில் வழக்கு மீதான விசாரணை இன்று வரை நடந்து வருகிறது. வழக்கை வாபஸ் பெறும்படி பெண்ணின் குடும்பத்துக்கு உறவினர்கள் மூலமும் ஊர்க்காரர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்கப்பட்டது வந்தது.

    ஆனால் வழக்கை வாபஸ் பெற பெண்ணின் குடும்பம் திட்டவட்டமாக மறுத்த நிலையில் அன்றிலிருந்து அந்த குடுமபத்தை சோகம் நாலாபுறப்பும் சூழத் தொடங்கியது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் 18 வயது தம்பியை 9 பேர் கொண்ட கும்பல் அடித்துக் கொன்றது. தனது மகனைக் காப்பாற்றுவதற்காக அவர்களின் முன்னிலையில் தனது ஆடைகளை சிறுவனின் தாய் களைந்து நின்ற கொடூரமும் நிகழ்ந்தது.

    இந்த சம்பவத்தில் 9 பேர் மீதும் சிறுபான்மையினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலையை நேரில் பார்த்த சிறுவனின் உறவினரை கடந்த மே 25 ஆம் தேதி சமாதானம் பேசுவதாக அழைத்து வழக்கில் சம்பந்தமுடையவர்கள் கொலை செய்துள்ளனர்.

    இதைதொடரந்து பாதிக்கபட்ட பெண்ணும் உயிரிழந்த உறவினரின் உடலுடன் கடந்த மே 26 ஞாயிறுக்கிழமை வேனில் வரும்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 6 வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தொடந்து கொலை செய்யப்பட்டு, அந்த பெண்ணும் உயிரிழந்துள்ளது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாராமுகம் காட்டியதாக ஆளும் பாஜக கட்சியை எதிரிக்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

    ×