search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • காலை 9 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
    • மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    கடலூர்:

    கீழக்குப்பம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 21.11.2023 செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் இருந்து மதியம் 2 மணி வரை கீழ் கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும். மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர் பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலூர், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம், மேலிருப்பு, கீழிருப்பு, காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

    மேலும், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள் பெருஞ் சோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பண்ருட்டி கோட்டப் பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • உமாபதி மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் உமாபதி (வயது 60). இவரது மகள் திருமணம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்காக 10 பவுன் நகை மற்றும் 12 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருமண மண்டபத்தில் வைத்து விட்டு நெய்வேலி வேலுடையான்பட்டு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர்.

    பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் திருமண மண்டபத்திற்கு வந்து மணமகள் அறைக்கு சென்று பார்த்தபோது 10 பவுன் தங்க நகை மற்றும் 12 ஆயிரம் பணத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி நகை மற்றும் பணத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு 5 லட்சம் ஆகும். இது குறித்து மந்தாரக்குப்பம் போலீஸ நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.
    • வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும்.இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

    கடந்த 17-ந் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்கலாம் என மீன்வளத் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட தால் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்து மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். சங்கரா 300 ரூபாய்க்கும், பாறை 200 ரூபாய்க்கும் , ஷீலா 250 ரூபாய்க்கும் , கானாங்கத்த 200 ரூபாய்க்கும் , வஞ்சிரம் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் திரண்டு வந்து மீன்கள் வாங்கியதை காண முடிந்தது. 

    • இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை.
    • வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி 15-வது வார்டில் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தெரு, உறையூரான் தெரு, சக்கரபாணி நகர், கடலுார் பழைய மெயின்ரோடு, அப்பர் தெரு, வடக்கு மாட வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லை, வடிகால் வசதியில்லை. தெருவிளக்கு வசதிகளும் இல்லை, கொசுமருந்து அடிப்பதில்லை. குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை என கூறி அப்பகுதி மக்கள் சார்பில் டிஜிட்டல் பேனர் அச்சிட்டு முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர்.

    இதில் பண்ருட்டி நகராட்சி நிர்வாகமே , வீட்டு வரி கேட்க வரிங்க, தண்ணீர் வரி கேட்க வரிங்க .ஆனால் 15 வது வார்டில் சாலை வசதி, சாக்கடை வசதி, மின்விளக்கு வசதி, பால்வாடி பராமரிப்பு இல்லை. கொசுமருந்து அடிப்பது இல்லை. தெருவை பராமரிப்பதும் இல்லை.இவையெல்லாம் பொதுமக்கள் கேட்டால் நிதியில்லையென சொல்றீங்க . வரி கேட்க மட்டும் வரிங்க. வார்டுக்கு செய்ய வர்ற மாட்டிங்க. இவண் 15-வது வார்டு திருவதிகை என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன‌.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்குள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்திருந்தனர். இதனை மீறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய பொது மக்களை கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வந்ததோடு , போலீசார் அபராதம் விதித்து வந்தனர்.ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்கு மார், தலைமை காவலர்கள் குமரேசன், வினோபாலன், போலீஸ்காரர் சுபாஷ் ஆகியோர் கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவர த்துக்கு இடையூறாகவும், போலீசார் எச்சரிக்கை செய்ததை மீறியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிளை போலீசார் வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும் கடலூர் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை செய்தனர்.

    இதனை தொடர்ந்து ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    பல மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கடலூர் அடுத்த எஸ்.புதூரை சேர்ந்தவர் அருள் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த பல மாதங்களாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்த காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி நிலையில் இருந்தார். இதனை தொடர்ந்து அருளை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்த்தனர். ஆனால் அருள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்: கடலூர் அடுத்த சின்ன குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டு படியில் திடீரென்று வழுக்கி விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த நிலையில் மாரியப்பன் வலி தாங்க முடியாத நிலையில் வீட்டில் தூக்கு போட்டு மயக்க நிலையில் இருந்தார். அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த டாக்டர் மாரியப்பன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சசிகலா (வயது 33) .இவரும் அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் மனைவி தேவியும் கடந்த 16-ந் தேதி கந்தம்பாளையம் மீன் மார்க்கெட் அருகில் மகளிர் சுய உதவிக் குழு பணம் சேமிப்புதொடர் பாக கடன் பெற்றது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்குள்வாய்தகராறுஏற்பட்டது.

    இருவருக்கும் கடும் வாக்கு வாதம் நடந்தது. அப்போது மீன் வெட்டிக் கொண்டிருந்த தேவியின் கணவர் பாஸ்கரன் சசிகலாவைஅசிங்கமாக திட்டி கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் சசிகலாவை வெட்ட வந்தபோது சசிகலாவின் கணவர் முருகன் தடுத்ததில் முருகனின் இடது கையில் கத்தி பட்டது.இதில் காயம் அடைந்த முருகனை அவரதுமனைவிசசிகலா அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பாஸ்கரின் மனைவி தேவி காலால் எட்டி உதைத்து கையில் வைத்திருந்த ஐஸ் உடைக்கும் கட்டையால் சசிகலாவை அடித்து மிரட்டினார். இதனால் காயமடைந்த சசிகலா அவரது கணவர் முருகன்ஆகியோர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சை பெற்றனர்.இதுகுறித்து சசிகலா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில்பாஸ்கர் மற்றும் பாஸ்கரின் மனைவி தேவி மீது வழக்கு பதிவு செய்து பண்ருட்டி போலீசார்விசாரித்து வருகின்றனர்.

    முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பல்வேறு பகுதிக ளில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொ ள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ் ரூபாய் 3.94 கோடி மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், காட்டுமன்னார்கோவில் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வீடுகள் கட்டுமான திட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களின் நல்வாழ்விற்காக 300 ச.அடிகொண்ட 4 வீடுகள் கொண்ட தொகுப்பு வீடுகளாக 18 தொகுப்புகளை கொண்டு தலா ரூ 5 லட்சம் வீதம் மொத்தம் 72 வீடுகள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு செய்தார்.

    மேலும் செட்டிதாங்கல், கீழக்கடம்பூர் மற்றும் தொரப்பு ஆகிய 3 ஊராட்சிகளில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42.60 லட்சம் மதிப்பீட்டில் கிராம செயலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும்,தொரப்பு ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அருண்மொழித்தேவன் ஊராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், சண்டன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.42 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் அவ்வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் ரூ.5.90 லட்சம் மதிப்பீட்டில் ஆண்கள் கழிவறை ஆகிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.82.15 லட்சம் மதிப்பீட்டில் பழஞ்சநல்லூர் - தேவனாம்புத்தூர் சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவான ஆய்வு மேற்க்கொண்டு, அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர கலெக்டர் அறிவுறுத்தினார்.அப்போது ஒன்றிய குழு தலைவர் சாதியா பர்வின் நிஜார் அகமது , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன் , சுகுமார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வீட்டிற்குள் போதுமான வெளிச்சம் இல்லாததால், ராஜாங்கம், மின் வயரில் பல்பை கட்டி வேலை செய்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மீது மின்சாரம் பாய்ந்தது.

    கடலூர்:

    மங்கலம்பேட்டை பழைய நெசவாளர் தெருவை சேர்ந்த ராஜா (வயது 46), கொத்தனார். இவர் இவருடன் கள்ளக் குறிச்சி மாவட்டம், சிறு வத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாங்கம் (47), கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டு நெமிலி கிராமத்தைச் சேர்ந்த வீரம்மாள் (30) ஆகிய 3 பேர் கொத்தனார் மற்றும் சித்தாள் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.இவர்கள் விருத்தாச லத்தை அடுத்த மங்கலம் பேட்டை ஷேக்நகரில் கட்டிட வேலை செய்துக் கொண்டிருந்தபோது, வீட்டிற்குள் போதுமான வெளிச்சம் இல்லாததால், ராஜாங்கம், மின் வயரில் பல்பை கட்டி வேலை செய்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனைக் பார்த்த வீரம்மாள் ஓடி வந்து ராஜாங்கத்தை காப்பாற்ற முயன்றார். அப்போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனைப் பார்த்த ராஜாவும், உடனே ஓடி வந்து ராஜாங்கத்தை காப்பாற்ற முயன்றார். அப்போது, ராஜா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனால், அலறியடித்துக்கொண்டு, ராஜா கீழே விழுந்தார். அலறல் சப்தம் கேட்டு ஓடி வந்த அங்கிருந்தவர்கள், வீட்டில் உள்ள மின்சார இணைப்பை துண்டித்து விட்டு, ராஜாவை மீட்டு உளுந்தூர் பேட்டை அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இறந்து போன ராஜாவுக்கு ராஜகுமாரி என்ற மனை வியும், ஜனனி (19), பவதாரணி (16) என்கிற 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • அனுமதியின்றி பேனர் அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    அனுமதியின்றி பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்தது. அத்துடன், விதிமீறலினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கடலூர் மாவட்ட எல்லையில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மட்டுமின்றி, அச்சடித்துக் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படி ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், அனுமதியின்றி பேனர், செண்டர் மீடியனில் நோட்டீஸ் ஒட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கி மாற்று பஸ்சில் சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
    • பஸ் கண்டக்டரை டெப்போவிற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடலூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் மெய்யனூர் கிளையில் டிரைவராக சத்யமூர்த்தி, கண்டக்டராக எஸ்.நேரு ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று இவர்களுக்கு சேலம்-சிதம்பரம் வழித்தடத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பஸ் காலை 5.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டது. பஸ் நெய்வேலிக்கு 4 கிலோ மீட்டருக்கு முன்பு ஊமங்கலம் என்ற பகுதியில் சென்றபோது விழுப்புரம் போக்குவரத்து கழக கடலூர் மண்டல உதவி மேலாளர் தலைமையிலான டிக்கெட் பரிசோதகர்கள் குழு பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது தலைவாசல் பஸ் நிலையத்தில் ஏறிய பயணிகளுக்கு வழங்கப்பட்ட 2 நூறு மற்றும் 2 ரூ.10 மதிப்புள்ள பயணச் சீட்டுகள் நேற்றைய தேதியில் வழங்கிய பயணப்பட்டியலில் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் அந்த பயணச்சீட்டுகள் இதே கண்டக்டரால் ஏற்கனவே இவருடைய முந்தைய பணியில் பயணிகளுக்கு விற்கப்பட்டவை என தெரிந்தது.

    கண்டக்டர் நேரு ஏற்கனவே அவரால் விற்கப்பட்ட பயணச் சீட்டை வைத்திருந்து மீண்டும் பயணிகளுக்கு மறுவிற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கண்டக்டர் நேரு பணி தொடராமல் பணிநிறுத்தம் செய்யப்பட்டார். மேலும் கண்டக்டர் நேருவை சேலம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாற்று கண்டக்டர் ஏற்பாடு செய்யப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில் மாதந்தோறும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் அலுவலர்களால் கண்டக்டர்களின் பணப்பை மற்றும் லாக்கர்கள் திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவது சேலம் போக்குவரத்துக் கழகத்தில் வழக்கமாக நடைமுறையில் உள்ளது.

    • சிதம்பரம் அருகே பூலாமேடு கிராமத்தில் உள்ள குளத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறையினர் மீட்டனர்.
    • சுமார் 9 அடி நீளமுள்ள 145 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பூலாமேடு கிராம குளத்திற்குள் முதலை ஒன்று புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதாக வனத்துறையினருக்கு அக்கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் பிரபு, சிதம்பரம் பீட் வனக்காப்பாளர் அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாளர் ஞானசேகர், வனகாப்பாளர் அலமேலு மற்றும் நந்திமங்கலம் ராஜ் குழுவினர் உதவியுடன் சுமார் 9 அடி நீளமுள்ள 145 கிலோ மதிக்கத்தக்க முதலையை பத்திரமாக பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

    ×