search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
    • போலீசார் விசாரணை

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்ட மடுவைச் சேர்ந்தவர் குமார் மகன் சுள்ளான், (20) இவர், அரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாமாண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஈட்டியம் பட்டியை சேர்ந்த சபீனா என்பவரை பார்ப்பதற்காக சுள்ளான் இருசக்கர வாகனத்தில் ஈட்டியம் பட்டிக்கு சென்று உள்ளார்.

    இந்நிலையில், அரூர்–தீர்த்தமலை சாலையில், வேப்பம்பட்டி ரைஸ்மில் பஸ் நிறுத்தம் அரு கில்  சுள்ளான் இறந்த நிலையில் கிடந்தார். இது குறித்து அரூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சுள்ளான் அடித்து கொலை செய்யப்ப ட்டதாவும், அவரது கொலைக்கு காரணமா னவர்களை கைது செய்யக்கோரி, நேற்று அரூர் கச்சேரிமேட்டில், சுள்ளானின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்க ளுடன், அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். இதையடுத்து. மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இதைத்தொடர்ந்து உயிரிழந்த சுள்ளானின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோத னைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோத னைக்கு பிறகு சுள்ளானின் உடலை பெற்றோரிடம் ஒப்ப டைத்தனர்.

    உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

    • விவசாயியை கொலை செய்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
    • தாயுடன் உறவில் இருந்ததால் மகன் ஆத்திரம்.

    தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (50) என்பவர் தனது வீட்டில் உள்ளவர்களிடம் விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தார் நாகராஜனை தேடி தோட்டத்திற்கு சென்று பார்த்த போது அவர் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். இச்சம்பவம் குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதனையடுத்து அதே பகுதியை சதிஷ்குமார் (20) என்பவரை போலீசார் கைது விசாரணை செய்தனர். அதில் சதிஷ்குமார் தாயுடன் நாகராஜன் தவறான உறவில் இருந்துள்ளார். இதனை பல முறை சதிஷ்குமார் கண்டித்துள்ளார். இதனை கேட்காமல் நாகராஜன் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நாகராஜனை வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து சதிஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக அப்போதே ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
    • கிராமமக்கள் ஒன்று திரண்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப் பள்ளியில் நவீன் என்பவ ருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7.10.2023. அன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி. அம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்த வேடப்பன், ஆதிகே சவன், இளம்பருதி, விஜயரா கவன், ஆகாஷ், கிரி, சச்சின் உள்ளிட்ட 7 இளைஞர்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

    இந்நிலையில் உயிரிழந்த வர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக அப்போதே ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. கர்நாடகா அரசு சார்பில் ரூ. 5 லட்சம் காசோலையை கடந்த 28.10.2023. அன்று வழங்கப்பட்டது. இந்த நிலையில் இறந்தவர்களின் பெற்றோர்களை சந்தித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஆறுதல் சொல்லி, அவர்களின் தேவையை கேட்டறிந்த உதவி செய்ய டி.அம்மாபேட்டை கிராமத் திற்கு நேரில் சென்று, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து உயிரி ழந்த இளைஞர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுப்பதாக உறுதிய ளித்தார்.

    அப்பொழுது கலெக்டர் வருவதை அறிந்து கிராமமக்கள் ஒன்று திரண்டு அவரிடம் மனுக் களை கொடுக்க திரண்டனர். ஆனால் கலெக்டர் ஊருக்கு வெளியே உள்ள அரசு பள்ளியில் உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர் களை வரவழைத்து பேசி, கோரிக்கை மனுக்களை பெற்று சென்றார்.

    • தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி அருகே மேம்பால நடை பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் உள்ளே வருவதற்கு சிரமப்படுகிறது.

    சேலம் தருமபுரி நேதாஜி பைபாஸ் சாலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் என ஒரு நாளைக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று வருகி ன்றனர். இந்த மருத்துவமனைக்கு எதிரே தருமபுரியின் முக்கிய சாலையாக இருந்து வரும் எஸ்.வி ரோடு பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளதால் எப்போதும் கூட்ட நெரிச்சல் இச்சா லையில் இருந்து வருகிறது.

    மேலும் எஸ்.வி ரோட்டில் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் பேருந்துகள் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லும் பெற்றோர்கள், மற்றும் தருமபுரி -சேலம், ரி மார்க்கமாக செல்லும் அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால் மருத்துவமனைக்கு எதிரே செல்வதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் மருத்துவ மனையில் இருந்து உணவ கங்களுக்கு செல்லும் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் மற்றும் கிருஷ்ண கிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பேருந்துக்கு செல்வ தற்காக மருத்துவமனை ஒட்டி உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பஸ் நிறுத்த நிலை குடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பஸ் நிறுத்தத்தில் நகர பேருந்து நிலையத்திற்கு செல்லும் பேருந்துகள், சேலம் தருமபுரி சாலையில் இருந்து மருத்துவமனை ஒட்டி உள்ள பகுதியில் அணுகு சாலை (சர்வீஸ் ரோடு) அமைத்துள்ளது. அந்த சாலையின் வழியாக நகர பஸ்கள், மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது பஸ் நிறுத்தத்திற்கு எதிரே உள்ள அணுகு சாலையில் பஸ்கள் செல்லா தவாறு பெரிய பள்ளத்தை தோண்டி உள்ளனர். மேலும் அப்பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் தருமபுரி சேலம் சாலையில் நின்று பஸ்சில் ஏறி செல்வதால் பெரும் போக்குவரத்து இடையூறு இருந்து வருகிறது. மேலும் தருமபுரி மாவட்டம் முழுவதிலும் இருந்து விபத்துக்கள் பிரசவத்தி ற்காக வரும் பெண்கள் உள்ளிட்டவர்களை ஏற்றி வரும் 108 ஆம்புலன்ஸ் உள்ளே வருவதற்கும் சிரமப்படுகிறது.

    இதனால் மாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பொது மக்கள் செல்லும் வகையில் சாலைக்கு குறுக்காக மேம்பால நடைபாதை அமைக்க வேண்டும். பஸ் நிறுத்த அணுகு சாலையை சீரமைத்து பஸ் நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் ராபி பருவ தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது.
    • தக்காளிக்கு ரூ.1960, செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிது

     தருமபுரி மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டில் புதுப்பிக்க ப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்ட ராபி பருவ தோட்டக்கலை ப்பயிர்களான வாழை, வெங்காயம், மரவள்ளி, தக்காளி, கத்தரி மற்றும் வெண்டை ஆகிய பயிர்க ளுக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.

    அதன்படி வெங்காயம், கத்திரி மற்றும் தக்காளி பயிருக்கு 2024-ம் ஆண்டு ஜனவரி 31- ந்தேதியும், வெண்டை பயிருக்கு 2024- ந்ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதியும், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு 2024 ம் ஆண்டு பிப்ரவரி 29-ந் தேதியும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு அதிகப்பட்ச இழப்பீடாக வாழைக்கு ரூ.71600, மரவள்ளிக்கு ரூ.26250, வெங்காயத்திற்கு ரூ.34350, கத்திரிக்கு ரூ.27650, வெண்டைக்கு ரூ.17900, மற்றும் தக்காளிக்கு ரூ.39200, வழங்கப்படும்.

    எனவே, விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள பொது சேவை மையங்கள்மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள்மூலமாகவோ பயிர் காப்பீடு பிரீமியம் கட்டணமாக ஏக்கருக்கு வாழைக்கு ரூ.3580, மரவள்ளிக்கு ரூ.1312.51, வெங்காயத்திற்கு ரூ.1717.51 கத்திரிக்கு ரூ.1382.51, வெண்டைக்கு ரூ.895மற்றும் தக்காளிக்கு ரூ.1960, செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிது.

    மேலும் விவரங்கள் பெற விவசாயிகள்தங்கள் பகுதி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தினை அணுக கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    • கரும்பு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
    • கரும்பை உடனடியாக ஆலைக்கு கொண்டு வந்து அரவைக்கு செல்ல வேண்டும்.

    பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் 14 ந்தேதி கரும்பு அரவை பணிகள் துவங்க உள்ள நிலையில் , பாயிலர் நெருப்பு போட்டு கரும்பு அரவை துவக்க பணிக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொ ள்ளப்பட்டது.

    இதையடுத்து கரும்பு விவசாயிகள் மற்றும் இயக்குநர்கள் ஆலோசனை கூட்டம் மேலான்மை இயக்குநர் யோகவிஷ்னு தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய விவசாயிகள் சர்க்கரை ஆலை சார்பாக கட்டப்பட்டு வரும் திருமண மண்டபம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணி களை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், ஆலை முழுவதிலும் முட்செடிகள், புற்கள் வளர்ந்து புதர் மண்டி இருப்பதால் விஷபூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை அதிக அளவில் நடமா டுவதால் புதர்களை உடனே அகற்ற வேண்டும் என்றும், மேலும் கடந்த ஆண்டு அரவையின் போது சுமார் 5ஆயிரம் சர்க்கரை மூட்டைகள், கரும்பு பால் உள்ளிட்ட வைகளை வீணாக்கி யதாகவும் இதற்க்கு நிர்வாக சீர்கேடுதான் காரணம் என்றும், கரும்பு அறுவடை செய்யும் இயந்திரம் விவசாயாகளுக்கு ஆலை மூலம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இதுவரை வழங்கப்படவில்லை என்றும், ஆள் பற்றாக்குறை கரும்பு வெட்டு கூலி அதிகரிப்பு உரம் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வருவதாகவும், ஆலை நிர்வாக சீர்கேட்டால் ஏற்படும் இழப்பு க்களை மறைத்து, ஆலை நட்டத்தில் இயங்கி வருவதாக பொய்யான தகவல்களை அதிகாரிகள் தெரிவித்து வருவதாக விவ சாயிகள் சரமா ரியாக குற்றம் சாட்டினர்.

    மேலும் விவசாயத் தோட்டத்தில் வெட்ட ப்படும். கரும்பு உடனடியாக ஆலைக்கு கொண்டு வந்து அரவைக்கு செல்ல வேண்டும் ஆனால் நிர்வாக சீர்கேட்டால் கரும்பு வெட்டப்பட்டு நான்கு 5 நாட்கள் கடந்த பிறகு தான் அரவைக்கு அனுப்பப்படுவதாகவும், இதனால் கரும்பு எடை குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்படுவதாகவும் இவற்றை எல்லாம் உடனடியாக சரி செய்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாதப்பன், வெங்கடாசலம், விவசாய சங்க தலைவர்கள் , நிர்வாகிகள், சர்க்கரை ஆலை இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி அருகே பழங்குடி இன மக்களின் கல்வித் தரத்தை உயர்த்த உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்
    • ரூ. 5 லட்சம் செய்து கல்வி வளர்ச்சிக்கான பணிகளை செய்து வருகிறார்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சியில் பழங்குடியின சமூக மக்கள் மட்டுமே வசிக்கும் போதகாடு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசு நடுநி லைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பணி யிடம் காலியாக உள்ள நிலையில், 6 ஆசிரி யர்கள், 2 பகுதி நேர ஆசிரியர்கள் என 8 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இதில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 127 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு தலைமை யாசிரியர் இல்லாததால், பொறுப்பு தலைமை ஆசிரி யராக கணித பட்டதாரி ஆசிரியர் பாரதி பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் முழுவ தும் பழங்குடியினர் சமூக த்தைச் சார்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்ற பள்ளி என்பதால், ஆசிரியர் பாரதி பணியில் சேர்ந்த நாள் முதல் பழங்குடியின மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என எண்ணி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் மாணவர்களை கணிதம் குறித்து சார்ட் மற்றும் கற்றல் உபகர ணங்களை தயார் செய்ய வைத்து, அதனை வகுப்ப றைகள் முழுவதும் காட்சிப்ப டுத்தியுள்ளார்.

    மேலும் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தால், அவர்கள் வகுப்பறை விட்டு வெளியே செல்லக்கூடாது, ஆசிரியர் கற்பிக்கும் பாடத்தை கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் வகுப்பறை முழுவதும், சூத்திரங்கள், அட்ட வணைகள், வாய்ப்பாடுகள் போன்ற அனைத்துக்கும் ஒவ்வொரு விதமான மின்வி ளக்குகளை பொருத்தி, மாண வர்களை கவரும் வகையில் அமைத்து ள்ளார்.

    மேலும் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே மாணவர்கள் அமர்ந்து படிக்கவும், மதிய உணவு உண்ணும் வகையில் இரண்டு கட்டிடங்களையும் இணைத்து மேற்கூறையை அமைத்துக் கொடுத்து ள்ளார்.

    மேலும் இந்த கழிப்ப றைகளை சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்காக தனியாக பணியாளரை வைத்து தனது சொந்த செலவில் மாதம் ஊதியம் கொடுத்து வருகிறார்.

    இதுவறை தமது சொந்த பணம் ரூ.5 லட்சம் செலவில் பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.மேலும் பழங்குடியின மாணவர்கள் மத்தியில் படிப்பு ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளதாக அந்த பகுதி பொது மக்கள் தெரிவித்தனர். 

    • வினாடி வினா , கதை விமர்சனம் ஆகிய பிரிவு களில் போட்டிகள் நடை பெற்றன.
    • 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டி களுக்கு அனுப்ப படுகின்றனர்.

    தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்தறை தருமபுரி வட்டார வள மையம் சார்பில் வட்டார அளவிலான போட்டிகள் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வட்டார வளமை யத்துக்குட்பட்ட அனைத்து நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குட்பட்ட பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கட்டுரை, பேச்சு, கவிதை எழுதுதல், குறும்படம் தயாரித்தல், தனி நடிப்பு, அறிவியல் கண்காட்சி, அறிவியல் செயல்திட்டம், அறிவியல் நாடகம், வினாடி வினா மற்றும் கதை விமர்சனம் ஆகிய பிரிவு களில் போட்டிகள் நடை பெற்றன.

    இதில் வட்டார அளவில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடம் பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட அளவிலான போட்டி களுக்கு அனுப்ப படுகின்றனர்.

    வட்டார அளவிலான போட்டிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா நடத்தினார். இதில் அவ்வையார் மகளிர் மேல்நி லைப் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, வட்டாரக் கல்வி அலுவ லர்கள் ஜீவா, நாசர், கலை ச்செல்வி, வட்டார ஒருங்கி ணைப்பாளர் பானுரேகா மற்றும் ஆசிரியர் பயிற்று நர்கள் கலந்து கொண்டனர்.

    • தருமபுரி அருகே காதலித்து திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்
    • கிராம நிர்வாக அலுவலர் புகார்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த சாமிசெட்டிபட்டி அருகே உள்ள போலனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சஞ்சீவன், இவருக்கும் கொல்லி மலையை சேர்ந்த சதாசிவம் மகள் மோகனப்பிரியா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 4 ந்தேதி மோகனப்பிரியா, விஷம் சாப்பிட்டதாகவும் அவரை மீட்டு கொங்களாபுரம் தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று பின்னர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மோகனப்பிரியா உயிரிழந்தார். அவரது உடல் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சவக்கடங்கில் உள்ளதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கிராம நிர்வாக அதிகாரி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

    • குடிப்பழக்கத்தை கண்டித்ததால் விபரீத முடிவு
    • தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே பையர் நத்தம் கதிரிபுரத்தை சேர்ந்த வர் மணி. இவரது மகன் புகழேந்தி (வயது22). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.கூலி வேலைக்காக கடந்த 8 மாதங்க ளுக்கு முன்பு மயிலாடு துறைக்கு சென்ற புகழேந்தி அப்பகு தியை சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திரு மணம் செய்து கொண்டார்.

    கடந்த சில ஆண்டுகளா கவே குடிப்பழக்கத்திற்கு அடிமையான புகழேந்தி திருமணத்திற்கு பிறகு திருந்தி வாழ வேண்டும் என குடும்பத்தினர் அடிக்கடி கண்டித்து வந்துள்ளனர். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி வேலைக்குச் சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். அப்போது புகழேந்தி குடிபோதையில் இருந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட இவரது தந்தை மணி, தாயார் ,மனைவி ஆர்த்தி ஆகியோர் அவரை கண்டித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த ்புகழேந்தி வீட்டின் அறைக்குச் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அவரது பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது புகழேந்தி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து தந்தை மணி பொம்மிடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் திருமணமான சில மாதங்க ளிலேயே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்ப–வம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • போலீஸ், பிரஸ் என போலி ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
    • பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும் போது சிலர் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகவும், குற்ற செயல்களில் செய்து விட்டு தப்பி செல்வதற்காவும் தங்களது இருசக்கர வாகனங்களில் போலீஸ் என்றும் பிரஸ் மற்றும் மீடியா போன்ற போலி ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து கொண்டு உலா வருகிறார்கள். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது;- போலி ஸ்டிக்கர் ஒட்டியுள்ள நபர்கள் சில இடங்களில் அப்பாவி பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தும், சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் குடித்து விட்டும் வாகனம் ஓட்டுகின்றனர்.

    சிலர் அதனை செய்பவர்களுக்கும் உடந்தையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகி்றது. இது போன்ற நபர்களால் போலீசாருக்கும் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களிடத்தில் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இ்ந்த போலி ஸ்டிக்கர் ஒட்டிள்ள நபர்கள் நடந்து கொள்கிறார்கள். மேலும் தருமபுரி, அரூர், பென்னாகரம், உள்ளிட்ட பகுதிகளில் இதுக்கு தனியாக போலீசாரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஸ்டிக்கர் ஒட்டி வாகனம் ஓட்டி வரும் நபர்களை பிடித்து, அவர்கள் அடை யாள அட்டை மற்றும் அவர்களது முகவரியை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    • அதிக பணம் தருவதாக கூறி பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.
    • தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகர் பகுதியில் பாலியல் தொழில் நடைப்பெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் கோகுல் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அண்ணா நகர் பகுதியில் சந்தேக படும்படியாக நின்று கொண்டி ருந்த வட மாநில பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

    இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தான் கொல்கத்தா மாநிலம் மணிக்கபூரை சேர்ந்தவர் என்றும், கூலி வேலை தேடி வந்த தன்னை குப்பு என்பவரின் மகள் ராஜாமணி (வயது 65) கோவையை சேர்ந்த வீராசாமி (43) மற்றும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த செல்வகுமார் (56) ஆகியோர் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் ஈடுபட வைத்ததாக தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணை தொப்பூர் பெண்கள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து வீராசாமி, செல்வகுமார் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் தலைமறைவாக உள்ள ராஜாமணியை தேடி வருகின்றனர்.

    ×