search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • சபரிமலைக்கு மாலை அணிவதாக கூறி ஒகேனக்கல்லுக்கு வந்த கிராம நிர்வாக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் சோமனஅள்ளி ஆதி திராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகண்ணன் (வயது 50). இவருக்கு திருமணமாகி சாலம்மாள் (47) என்ற மனைவியும், அருளேஷ் (31), ஜெயசீலன் (24) என்ற மகன்களும், ஜெயகிருபா (26) என்ற மகளும் உள்ளனர்.

    ஜெயகண்ணன் இண்டூர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    ஜெயகண்ணனின் இளைய மகன் ஜெயசீலன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜெயகண்ணன் மனவேதனையுடன் காணப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சபரிமலைக்கு மாலை அணிவிப்பதாக கூறிவிட்டு ஒகேனக்கல் வந்திருந்த ஜெயகண்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனே ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜெயகண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகண்ணன் தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 மாதங்களுக்கு முன்பிருந்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை துவங்கினர்.
    • ரூ. 1000க்கு விற்கபடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்சிய டைந்துள்ளனர்.

    தருமபுரி,

    தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீப திருநாள். ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் அகல் விளக்குகளில் எண்ணை ஊற்றி வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். காத்திகை தீப திருநாளை யொட்டி மண்பாண்ட தொழிலாளர்கள் கார்த்தி கைக்கு 2 மாதத்திற்கு முன்பி ருந்தே அகல் விளக்கு தயாரிக்கும் பணியை துவங்கி விடுவார்கள்.

    அதே போல் தருமபுரி அருகேயுள்ள அதியமான்கோட்டை, கிருஷ்ணாபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்து அகல்விளக்கு தயாரிக்கும் பணியினை துவங்கினர்.

    இந்நிலையில் கார்த்திகை தீபதிருநாள் இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில் இப்பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடந்த ஆண்டு 1000 விளக்குகள் ரூ. 600 முதல் 700 ரூபாய் வரை விற்கபட்ட நிலையில் இந்தாண்டு 1000 விளக்குகள் ரூ. 1000க்கு விற்கபடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்சிய டைந்துள்ளனர்.

    மேலும் இங்கு தயாரிக்கும் விளக்குகளை தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர்.

    மேலும் ஏரி, குளம், குட்டைகளில் இருந்த மண் எடுத்து மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். மண் எடுப்பதற்காக அனுமதி வழங்கிய அரசு தற்போது இரண்டு வருடமாக மண் எடுக்க அனுமதி வழங்காமல் கெடுபிடி செய்து வருகிறது.

    மேலும் ஓசூர் அதியமான் கோட்டை தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மண் எடுப்பதால் மண் கிடைக்காமல் தங்களால் போதிய அளவில் தயாரிக்க முடியாமல் இருந்து வருகிறோம். ஆகையால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு குளம் குட்கைளில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 8 மாணவர்கள் காயம்
    • அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

      கடத்தூர்,

    ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி பஸ் பாப்பிரெ ட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி யில் இருந்து சுகர் மில் வழியாக மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது.

    அப்பொ ழுது அம்மாபாளையம் ஜாலிகாடு பிரிவு ரோடு அருகில் பஸ் சென்ற பொழுது ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில்பஸ்ஸின் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்து வந்த 8 மாணவ மாணவியர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.

    இந்த பஸ்ஸை ஆலாபுரம் நடுவர் பகுதியைச் சேர்ந்த குமார் ஓட்டி வந்தார். இவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து ஆ பள்ளிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை நேரம் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் குறைந்த அளவே பஸ்ஸின் பின்பகுதியில் அமர்ந்திருந்த நிலையில் முன் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படாத வகையில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாப்பி ரெட்டிப்பட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • ஒப்பந்த தொழிலாளர்கள் என 200க்கும் மேற்ப ட்டோர் வேலை செய்கின்றனர்.
    • இ எஸ், பி.எப், பிடித்தம் போக 315 ரூபாய் தின கூலியாக வழங்கப்படுகிறது

    தருமபுரி, 

    தருமபுரி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்ட த்தில் நேற்று காலை முதல் இரவு கடும் குளிரிலும் , மழையிலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    உயர் நீதிமன்ற உத்தரவு ப்படி உள்துறை தலைமைச் செயலாளர் சிவராமன் ஐ.ஏ.எஸ், ஆணையினை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தருமபுரி நகராட்சி ஒப்பந்த ஊழி யர்கள் நேற்று காலை முதல் இன்றும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளது. இதில் நிரந்தர பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என 200க்கும் மேற்ப ட்டோர் வேலை செய்கின்றனர்.

    இதில் ஒப்பந்த தொழிலா ளர்களை சென்னை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் (சரம் எனர்வோ) என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு ஆண்கள் பெண்கள் என 106 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு நாள் ஒன்றுக்கு இ எஸ், பி.எப், பிடித்தம் போக 315 ரூபாய் தின கூலியாக வழங்கப்படுகிறது.

    ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் பற்றாக்குறை என்பதால் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். என உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழ்நாடு உள்துறை தலைமைச் செயலாளர் சிவராம் ஐ.ஏ.எஸ். ஒப்பந்த ஊழியர்களுக்கு தினக்கூலியாக 610 வழங்க வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது.

    இந்த ஆணை கடந்த மாதம் 27 ந்தேதி அனைத்து நகராட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தருமபுரி ஒப்பந்த ஊழிய ர்களுக்கு உள்துறை செயலா ளர் ஆணையை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

    அதற்கு நகராட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதனால் வாழ்வாதாரம் பாதிப்படை ந்துள்ளதாக தருமபுரி நகராட்சியில் உள்ள 106 ஒப்பந்த ஊழியர்களும் இன்று மூன்று அம்ச கோரிக்கை களான உயர்நீதி மன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த ஊழி யர்களுக்கு நாள் ஒன்றுக்கு 610 ரூபாய் வழங்க வேண்டும்.

    மேலும் தீபாவளி போனஸ் ஆக ரூபாய் 7000 வழங்க வேண்டும். தொழிலாளியின் சம்ப ளத்தில் பிடித்தம் செய்த பி.எஃப் மற்றும் இதர பணத்தை உரிய அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

    உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரவிலும் அவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இரவு வீசிய குளிரிலும், அதிகாலை பெய்த மழையிலும் நனைந்தபடி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

    • போலீஸ் வருவதை அறிந்த இளங்கண்ணன் தப்பி ஓடிவிட்டார்.
    • 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    தருமபுரி 

    தருமபுரி மாவட்டம் அரூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு மதுபானத்தை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அரூர் போலீசார் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த எல்ல புடையாம்பட்டி அருகே உள்ள கெளாப் பாறை கிராமத்தைச் சேர்ந்த இளங்கண்ணன்( வயது 45 )வீட்டில் சோதனை செய்ய சென்ற போது போலீஸ் வருவதை அறிந்த இளங்கண்ணன் தப்பி ஓடிவிட்டார்.

    இந்த நிலையில் போலீசார் இளங்கண்ணன் வீட்டை சோதனை செய்தபோது வீட்டின் பின்புறம் 19 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதில் சில பாட்டில்களில் மூடி திறக்கப்பட்டு இருந்தது. அந்த பாட்டில்களில் ஊம த்தங்காய் சாறை கலந்து விற்பனைக்கு வைத்தி ருப்பது தெரியவந்தது.

    ஊமத்தங்காய் கலந்த மதுவை குடித்தால் குடிமகன்களுக்கு கூடுதல் போதை கிடைப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 150 மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள இளங்கண்ணனை தேடி வருகின்றனர்.

    • கடந்த 4 ஆண்டுகளாக பகுதி நேர ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.
    • அலுவலக வாசல் முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.  

    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி ஊழியர்கள் 2பேருக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த பணியாளர்களாக இருந்து வருபவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கோகிலா (42) மற்றும் மெகராஜ்( 45) ஆகிய இருவர் இந்த திட்டத்தின் கீழ் பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக பகுதி நேர ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் இது குறித்து செயல் அலுவலர் கலா ராணியிடமும், பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி ஆகியோரிடம் பலமுறை தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் இதுவரை தங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை எனக் கூறி நேற்று 12 மணி அளவில் அலுவலக வாசல் முன்பு நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தர்ணா போராட்டத்திற்கு பிறகு பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் இருவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இச்ச சம்பவத்தால் பேரூராட்சி அலுவலகப் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது. 

    • நீதிமன்றத்தில் ஆஜரானவர்களிடம் நீதிபதி கேள்விகளை கேட்டார்.
    • வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    தருமபுரி:

    கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதற்காக அவர் மீது 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

    இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இன்று 2 வது முறையாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானர். அவர்களிடம் சில கேள்விகளை நீதிபதி கேட்டார்.

    பின்னர் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 8-ந்தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

    • கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்
    • 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி, 

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பட்டா மாற்றம் செய்வதற்கான சிறப்பு மனுக்கள் பெரும் முகாம் தமிழகம் முழுவதும் நடத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்டி தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்து பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த சிறப்பு முகாமில் பட்டா, சிட்டாவில் உள்ள எழுத்து பிழை, பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல் உள்ளிட்டவைகளும் சரிபார்க்கபட்டது. இதில் தருமபுரி, பென்னாகரம், காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாலக்கோடு உள்ளிட்ட 5 ஒன்றியங்களில் இருந்தும் 2000 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமில் கலந்து கொண்ட வர்கள்க ளுக்கு தனித்தனியே இருக்கைகள் அமைக்கபட்டு பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் எழுத்து பிழை இருந்தவர்களுக்கு உடனடியாக சரிசெய்யபட்டு திருத்தப்பட்ட பட்டாவை உரியவர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதே போன்று அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரூரில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், ஆர்.டி.ஓ கீதா ராணி, தாசில்தார்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
    • கிணற்றில் பிணமாக மிதந்தார்.

    அரூர், 

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாவேரிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். வனத்துறையில் பணியாற்றி இறந்து விட்டார். இவருடைய மகன் இளமதி தமிழ்செல்வன் (25).இவர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கடந்த 7 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அக்கம் பக்கம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி நாசன்கொட்டாய் பகுதியில் உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

    அதனை அரூர் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது உறவினர்கள் வந்து பார்த்தனர். அப்போது இறந்து போனது இளமதி தமிழ்செல்வன் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 412 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
    • வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது.

    தருமபுரி, 

    அரசுப்பள்ளி மாணவர் களின் கலை சார்ந்த திறன்களை வளர்ப்பதற்காக நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற 412 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    இம்மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் இன்று முதல் 24ந்தேதி வரை வேலூர், செங்கல்பட்டு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடக்கிறது. மாநில அளவிலான போட்டிகளுக்கு செல்லும் மாண வர்களை தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    • பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.
    • வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது

    அரூர்,

    அரூர் மாரியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி சூரசம்ஹாரம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது.

    கடந்த 13.11.23ம் தேதி தொடங்கிய விழா விக்னேஷ்வர பூஜை, ஹோம பூஜைகள் ஆகியவற்றுடன் 18ம் தேதி கந்த சஷ்டி விழாவும் நேற்று 20.11.23சுவாமி திருக்கல்யாணமும் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. மாலை அலங்கரிக்கப்பட்ட வாகன த்தில் சுவாமி திருவீதி உலா வும் நடைபெற்றது.

    அர்ச்ச கர்கள் விஜயகுமார், லோக நாதன் ஆகியோர் சுவாமி திருக்கல்யாணத்தை நடத்தி னர். முல்லைரவி தலை மையில் விழா குழுவினர் செல்வதயாளன், விஸ்வ நாதன், சிவபிரகாசம், பத்ம நாபன் ஆகியோர் ஏற்பாடு களை செய்திருந்தனர்.

    • தருமபுரி கலெக்டர் வழங்கினார்
    • பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளியில் உள்ள தனியார் மஹாலில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில் கலெக்டர் சாந்தி சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், 1915 பயனாளிகளுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

    70-வது அகில இந்தியக் கூட்டுறவு வாரவிழா முதலமைச்சரின் ஆணைக்கி ணங்க ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்கு களில் கூட்டுறவு அமைப்பு களின் பங்கு எனும் பிரதானப் பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

    தருமபுரி மாவட்டத்தில் 523 கூட்டுறவு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பொதுவிநியோகத் திட்டத் தின் கீழ் 498 முழுநேர நியாய விலைக்கடைகளும், 586 பகுதிநேர நியாய விலைக் கடைகளும் என ஆக மொத்தம் 1084 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நியாய விலைக் கடை களில் 4,68,364 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியன விநியோ கிக்கப்பட்டு வருகிறது.

    2022-23-ஆம் நிதியா ண்டில் 61,405 விவசாயி களுக்கு ரூ.499.95 கோடி பயிர்க்கடன் வழங்க ப்பட்டுள்ளது. பயிர்க்கடன் உட்பட இதர கடன்கள் 1,89,458 நபர்களுக்கு ரூ.1464.15 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் அக்டோபர் 2023 வரை 28,159 விவசாயிகளுக்கு ரூ.251.21 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் ்கடன் உட்பட இதர கடன்கள் 1,16,332 நபர்களுக்கு ரூ.936.35 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    விவசாயி களுக்கு வட்டி யில்லா பயிர்க்கடன்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தாங்கள் பெற்ற பயிர்க்கடனை தவணை தவறாது திரும்ப செலுத்து பவருக்கு 7% வட்டித் தொகை முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக் கொண்டு வட்டியே இல்லாத விவசாயக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்தார். கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, நடத்தப்பட்ட கட்டு ரைப்போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவி யர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    மேலும், இன்று நடைபெற்ற 70-வது அனைத்திந்தியக் கூட்டுறவு வார விழாவில் 922 நபர்களுக்கு பயிர்க்கடனாக ரூ.774.46 இலட்சமும், கால்நடை பராமரிப்பு கடன் 303 நபர்களுக்கு ரூ.131.18 இலட்சமும், 34 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 523 பயனாளிகளுக்கு ரூ.464.11 இலட்சமும், மாற்றுத் திறனாளி கடன்கள் 54 நபர்களுக்கு ரூ.27.71 இலட்சமும், டாம்கோ தனி நபர் கடனாக 34 நபர்களுக்கு ரூ.23.18 இலட்சமும், டாம்கோ குழுக் கடனாக 71 நபர்களுக்கு ரூ.38.66 இலட்சம், வீடு அடமானக் கடன் 8 நபர்களுக்கு ரூ.77.50 இலட்சமும் ஆக மொத்தம் இவ்விழாவில் 1915 உறுப்பினர்களுக்கு ரூ.15.36 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    இவ்விழாவில் பென்னா கரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ராமதாஸ், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

    ×