search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் பெண் சத்துணவு அமைப்பாளர் தனது கணவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அதன் பின்னர் அவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இந்த சம்பவம் குறித்து வாலிபரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி :

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கலப்பம்பாடியை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி. விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனியம்மள். இவர்களுக்கு சுப்பரமணி, மாதையன், சேட்டு ஆகிய 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியாக வசித்து வருகின்றனர். இதில் மாதையன் தனது மனைவி லதாவுடன் பெற்றோர் வீட்டின் அருகிலேயே வசித்து வந்தார்.

    மாதையன்-லதா தம்பதியினருக்கு ஜெயப்பிரியங்கா (25) என்ற மகளும், தமிழ்குமரன் (22) என்ற மகனும் உள்ளனர். லதா எட்டிகுழி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பா ளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் லதாவின் நடந்தையில் சந்தேகம் அடைந்த மாதையன், தனது மனைவியை கண்டித்ததாக தெரிகிறது. இதன் காரணமாக மாதையனுக்கும், லதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்ப வத்தன்று இருவருக்கும் மீண்டும் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த லதா தனது கணவன் மாதையனை அரிவாளால் எடுத்து கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதனால் மாதையன் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ராஜி அங்கு ஓடிவந்து பார்த்தபோது, தனது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். உடனே அங்கிருந்து லதா தப்பி ஓடி விட்டார்.

    உடனே ராஜி அக்கம் பக்கத்தினர் உதவியுடன், தனது மகனை மீட்டு சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராஜி பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் தலைம றைவாக உள்ள லதாவை தேடிவருகின்றனர். குடும்ப தகராறில் கணவனை, மனைவி அரிவாளல் வெட்டிய சம்பவம் அந்த பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று உழவர் சந்தை மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
    • கேதார கவுரியம்மனுக்கு விரதம் இருந்தவர்கள் உழவர் சந்தையில் காய்கறி வாங்கவும், விரதம் கடைபிடிக்காதவர்கள் இறைச்சி கடைகளிலும் கறி வாங்குவதற்காகவும் குவிந்தனர்.

    தருமபுரி:

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகை உள்ளது. தீபாவளி பண்டிகையான நேற்று அதிகாலையிலே பொதுமக்கள் எண்ணை தேய்து குளித்து புத்தாடைகள், நகைகள் அணிந்து பட்டாசு வெடித்தும், வீடுகளில் தீபம் ஏற்றியும் தீபாவளியை கொண்டாடினார்கள். நேற்று முன்தினம் மாலை, 3 மணி முதல் அமாவாசை தொடங்கியதை அடுத்து கேதாரகவுரி விரதம் இருப்பவர்களில் நேற்று மாலை, 3 மணிக்கு மேல் கேதாரகவுரி விரதம் மேற்கொண்டனர்.

    இதற்காக நேற்று காலை தர்மபுரி உழவர் சந்தை மற்றும் சந்தைபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகள், இலை, விரத பொருட்கள் வாங்க அதிகளவில் குவிந்தனர். கேதார கவுரி விரதம் மேற்கொள்ளாதவர்கள், அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் ஆடு, கோழி கறிகள் மற்றும் மீன் உள்ளிட்டவை வாங்க அதிகளவில் குவிந்தனர். இதனால், காய்கறி கடைகள், இறைச்சி கடைகளில் நேற்று முன்தினம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதியம், 12 மணி முதல் மதுபானம் வாங்குபவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது.

    • நல்லம்பள்ளி அருகே கல்குவாரி உரிமையாளர் மிரட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • குவாரியில் வெடிவைத்து கற்களை தகர்க்கும் பொழுது கற்கள் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்தனர்

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சந்தாரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் நடேசன் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

    அதே பகுதியில் பல வருடங்களாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வெடிவைத்து கற்களை தகர்க்கும் பொழுது அருகில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் கற்கள் விழுவதாகவும், ஒரு சில நேரங்களில் ஆடு, மாடுகள், பொது மக்களின் மீதும் விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கல்குவாரிக்கு அனுமதி முடிந்து ஒரு வருடம் நெருங்கும் நிலையில் மீண்டும் அனுமதி வாங்கி உள்ளார்களா என கேள்விக்குறியாக உள்ள நிலையில் அப்பகுதி பொதுமக்கள் கல்குவாரியை மூட வேண்டும் என பல்வேறு இடங்களில் புகார் தெரிவித்துள்ளனர்.

    அதே போன்று கல்குவாரிக்கு மிக அருகாமையில் உள்ள நடேசன் என்பவர் கல்குவாரியை மூட வேண்டும் என தொடர்ந்து புகார்களை அளித்து வந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த கல்குவாரி உரிமையாளர், மற்றும் ஊழியர்கள் சில மாதங்கள் முன்பு நடேசன் குடும்பத்தாரை தரகுறைவாக பேசி நடேசன் மகன் சந்தோஷ்(20) என்பவரை அடித்ததாகவும், சில நாட்கள் முன்பு மீண்டும் வீட்டிற்கு நேரில் வந்து சந்தோஷ் மற்றும் அவருடைய தாயாரையும் மிரட்டியதால் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தோஷ் நேற்று முன்தினம் வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி உள்ளார்.

    அவரைப் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார். அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவ–சாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி

    தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே வன பகுதியை ஒட்டியுள்ள ஜில் திம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குள்ளப்பன் (வயது .60) இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாய பணிசெய்து கொண்டி ருந்தார்.

    அப்போது தனது விவசாய நிலத்தில் இருந்து இலை தலை பறிப்பதற்காக தேன்கனிக்கோட்டை வன சரகத்திற்கு உட்பட்ட வன சரகம் ஆகும் இந்த இந்த வனத்திற்குள் குள்ளப்பன் சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் இருந்துள்ளது இந்த நிலையில் குள்ளப்பனை கண்ட இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோசமாகி குள்ளப்பனை தும்பிக்கையால் தாக்கியும்,

    தொடையை தந்தந்தால் குத்தி கிழித்து விட்டு அங்கி ருந்து சென்றது. இதில் குள்ளப்பன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார், அப்போ து வனப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள், இதனை கண்டு காயமடைந்த விவசாயி குள்ளப்பனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விவ சாயி குள்ளப்பன் யா னையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது:-

    தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்கவும் கனிம வளங்களை எடுப்பதற்காகவும் உள்ளே செல்லக் கூடாது என அரசு கட்டுப்பாடுகள் விதித்தும் விதிமுறைகளை மீறி பாதுகாக்கப்பட்ட வனப்ப குதிக்குள் செல்லும்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவ–சாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் அரசு விதிமுறைகளை மீறி வனப்–பகுதிக்குள் செல்வார்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

    • தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது.
    • பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி எஸ்.வி,ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது .

    இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோல் தருமபுரி ஹரிஹர நாத சுவாமி கோவில் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    வே.முத்தம்பட்டி

    தருமபுரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேய சாமி கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம் அல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று ரெயில் மூலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இதேபோல் தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் ஐப்பசி மாத அமாவாசையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பல்வேறு சிறப்பு ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சோகத்தூர் வீரதீர ஆஞ்சநேயர் சாமி கோவில், கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    • பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் தாழ்வான மின்கம்பியால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • மின்துறையினர் மாதந்திர பராமரிப்பு நாட்களில் இதுபோன்று ஆபத்தான மின் கம்பிகளை தேர்வு செய்து சீர் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் பொம்மிடி, கே என்.புதூர், முத்தம்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, ராமியம்பட்டி, கடத்தூர், உள்ளிட்ட துணை மின்நிலையங்கள் உள்ளன.

    இந்த மின் நிலையங்களில் இருந்து வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் ஆகியவற்றிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. கிராம பகுதிகளில் விவசாய நிலங்கல், சாலையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் என ஏராளமான இடங்களில் மின்கம்பிகள் எட்டினால் கையில் எட்டும் அளவிற்கு மிகவும் தாழ்வாக செல்கின்றன.

    இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் டிராக்டர், பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள், புல்லு கட்டு ஏற்றி செல்லும் வாகனங்களில் உரசி மின் விபத்துக்கள் ஏற்பட்டு சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை இருந்து வருகின்றது. இதை தவிர பல இடங்களில் கம்பிகளில் மரங்களில் உள்ள கிளைகள் உரசி மின் விபத்து ஏற்பட்டு கரும்பு பயிர்கள் எரிந்து விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்ந்து வருகின்றது.

    இதேபோல் மின்கம்பங்கள் பழுதாகி மின்கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது விழுந்து ஆபத்து ஏற்படுத்துமோ என்ற வகையில் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மின்துறையினர் மாதந்திர பராமரிப்பு நாட்களில் இசூதபோன்று ஆபத்தான மின் கம்பிகளை தேர்வு செய்து சீர் செய்ய வேண்டும். அவற்றை சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வளர்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • தீபாவளி பண்டிகையை யொட்டி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களி லும் நடைபெற்ற கேதார கவுரியம்மன் விரத சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • கேதரா கவுரியம்மனுக்கு விரதம் இருந்த பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு தட்டில் 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அதிரசம், மஞ்சள் கொம்பு மற்றும் பூக்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

    தருமபுரி:

    தீபாவளி பண்டிகையை யொட்டி வரும் அமாவாசை தினத்தில் குடும்ப நன்மை மற்றும் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டும் என்று பெண்கள் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத அமாவாசை தினமான இன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தருமபுரி குமாரசாமிப் பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் கேதார கவுரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    பின்னர் அம்மனுக்கு அலங்கார சேவையும், மகா தீபாரதனையும் நடை பெற்றது. இதில் ஏராளமான பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஒரு தட்டில் 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அதிரசம், மஞ்சள் கொம்பு மற்றும் பூக்கள் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

    இதேபோன்று தருமபுரி நகரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில், நெசவாளர் நகர் வேல்முருகன் கோவில் மற்றும் மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் மற்றும் அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், எஸ்.வி.ரோடு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கோவில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அரூர், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பாரப் பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, மாரண்ட அள்ளி உள்ளிட்ட அனைத்து ஊர்களில் உள்ள கோவில்களிலும் கேதார கவுரியம்மன் விரத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் விரதம் இருந்த பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • அரூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.
    • அரூர் ஸ்ரீ அயப்பன் ஆலயத்தில் வருடாபிஷேகத்தை ஒட்டி கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

    அரூர்:

    அரூர் நான்கு ரோடில் உள்ள ஸ்ரீ அயப்பன் ஆலயத்தில் 11 வருடாபிஷேக விழா நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற விழாவின் முதல் நாள் கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கலசாபிஷேகம் ஆகிய வையும் மாலை சிறப்பு அலங்காரம் வழிபாடுகளும் நடத்தப்பட்டது.

    மறு நாள் அயப்பன் சுவாமிக்கு வருடாபிஷேகமும் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பட்டது. நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிப்பட்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

    • அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
    • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டத்தில் ஆங்காங்கேய பொதுமக்கள் ஒன்று திரண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் சரவெடிகள் உள்ளிட்ட வைகளை வெடிக்க கூடாது.

    அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.

    கட்டுப்பாடுகளை மீறுவது மீது நடவடிக்கை எடுக்கப்படும் அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடி களை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

    குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என அரசு கட்டுப்பாடுகள் விதித்தி ருந்தது இந்த கட்டுப்பாடுகளை மீறியும் அரசு வகுத்த நேரத்தை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீதும் தடை செய்யப்பட்ட வெடிகளை வெடித்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் மாவட்டத்தில் அரசு விதிமுறையை மீறி பட்டாசுகள் வடித்த 17 பேரும் இது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தருமபுரி அருகே பெண்ணிடம் செயின் பறித்து சென்ற 2 பேருக்கு வலை வீச்சு
    • கடையில் பொருள் வாங்குவது போல சம்பவம்

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள கே. வேட்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் அறவேந்தன்(37). இவர் தனது வீட்டுக்கு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இதனை இவரது தாயும், தம்பியும் சேர்ந்து வியாபாரம் பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் அறவேந்தன் தாய் மட்டும் கடையில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கடையில் இருந்த பெண்ணிடம் சாமன் வாங்குவது போல பாவனை செய்து உள்ளனர்.

    அவர்கள் கேட்ட பொருளை எடுத்து கொண்டு அவர்கள் அருகில் வந்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த செயினை பறித்து சென்றனர். இது குறித்து அறவேந்தன் அளித்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

    • ஐப்பசி மாதம் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி அனைத்து சிவன் கோயில்க ளிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில், ஐப்பசி மாதம் பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. முதலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நந்திக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் உபகார பூஜைகளும், தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதே போன்று தருமபுரி நெசவாளர் நகரில் உள்ள மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

    தருமபுரி குமாரசா மிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், தருமபுரி கடைவீதி அங்காள பர மேஸ்வரி அம்மன் உடனா கிய மருதவா ணேஸ்வரர் கோவில், தீய ணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரக தாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசா கரம் சோ மேஸ்வரர் கோவில், சவு லுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதேபோல் பிரசித்தி பெற்ற பையர்நத்தம் அமிர்தேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ சிறப்பாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் கிராமத்தில், மயிலை மலை ஸ்ரீ பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த மலைக்கோ யில் அடிவா ரத்தில் எழுந்தரு ளியுள்ள அமிர்தே ஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் ஐப்பசி மாத தேய்பிறை பிரதோ ஷத்தையொட்டி பக்தர்கள் வழிபட்டனர்.

    இதில் நந்தி பெருமானுக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், அபிஷேக பொடி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • ஒகேனக்கலில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    காவிரி நீர் பிடிப்பு பகுதி களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 14 ஆயிரம் கன அடி வரை அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து மழையின் அளவு குறைந்த தன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கி கடந்த இரு தினங்களுக்கு முன்பு 11 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இந்த நிலையில் ஒகேனக்–கல்லில் நேற்று நிலவரப்படி 7,500 கன அடியாக குறைந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்து வருகிறது.

    இதனைத்தொடர்ந்து ஒகேனக்கல் மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து சென்றது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 14 ஆயிரம் கனஅடி அளவில் அதிகரித்ததால் சுற்றுலா பணிக ளின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் கடந்த பரிசல் இயக்க தடை விதித்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து இன்றும் 7,500 கன அடியாக நீர்வரத்து தொடர்ந்து நீடித்து வருவதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. தீபாவளியையொட்டி இன்று ஒகேனக்கல்லில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பரிசலில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

    சுற்றுலா பயணிகள் எண்ணை மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, காவிரி ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் குளித்தும், அங்குள்ள மீன் கடைகளில் மீன்களை ருசித்தும் மகிழ்ந்தனர்.

    ×