search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • தருமபுரி மாவட்டத்தில் 3500 லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன.
    • குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காப்பீட்டு கட்டணம் உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு, காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் ஆகியவற்றை உயர்த்தி உள்ளதால் இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த போராட்டத்திற்கு தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 3,500 லாரிகள் பங்கேற்கிறது. எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் இந்த போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பாதுகாப் பாக லாரிகளை நிறுத்தி கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில துணைத் தலைவருமான நாட் டான் மாது தெரிவித்தார்.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தில் குறிப்பிட்ட லாரிகளை தவிர மற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • தருமபுரியில் தீபாவளிக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • அதிக ஆர்டர்கள் கிடைத்ததால் உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு பலகாரங்கள். இதனால் தீபாவளி பண்டிகை கொண்டாடு பவர்கள் தங்களது வீடுகளில் இனிப்பு பலகாரங்கள் செய்து, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலைகள், பெரிய நிறு வனங்கள் போன்ற வற்றில் பணியாற்று கின்றவர்க ளுக்கு அந்தந்த நிறுவனங்களில் தீபாவளிக்கு பட்டாசு மற்றும் இனிப்புகளை பரிசாக வழங்கி வருகின்றனர்.

    இதற்காக சிலர் அடுமனைகள் அமைத்து தனியாக இனிப்புகள் தயாரிப்பதும், பேக்கரிகள் தீபாவளிக்கு என்று பல்வேறு சிறப்பு ரகங்களில் இனிப்புகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியில் பல்வேறு இடங்களில் தீபாவளி பண்டிகைகளுக்கு விதவிதமான வகையில் இனிப்பு பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் தனியார் திருமண மண்டபங்களில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இனிப்புகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படுகின்ற இனிப்பு பலகாரங்கள் சேலம், பெங்களூர், ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சென்னை போன்ற இடங்களில் உள்ள தொழிற்சாலைகள் பெரிய நிறுவனங்கள் போன்றவற்றிற்கு ஆர்டரின் பெயரில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    தீபாவளி இன்னும் 2 நாட்கள் இருக்கின்ற நிலையில் தீபாவளி பண்டிகைக்கான இனிப்பு பலகாரங்கள் செய்யும் பணியும், வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதில் மைசூர் பாக், பாதுர்ஷா, சோன்பப்படி, லட்டு, நட்ஸ் லட்டு, அல்வா, முந்திரி மற்றும் கேரட் அல்வா, முந்திரி கேக், பாதாம் கேக், குலோப் ஜாமூன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகையிலான இனிப்புகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் வாடிக்கையாளர்களை கவருகின்ற வகையில், கொய்யா, வாட்டர் ஆப்பிள், சிறிய துப்பாக்கி தோட்டாக்கள் போன்ற வடிவங்களில் பல வண்ணங்களில் ரசாயனம் இல்லாமல் இனிப்புகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஒரு கிலோ இனிப்புகள் ரூ. 300 வரையிலும், முந்திரி, நெய் போன்றவற்றில் தயாரிக்கப்படும், ஸ்பெஷல் இனிப்பு பலகாரங்கள் கிலோ ரூ. 500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் கடந்த ஆண்டு தீபாவளியை காட்டிலும், இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகப்படியான இனிப்புகள் ஆர்டர் கிடைத்துள்ளதாகவும், இந்த தீபாவளி பண்டிகையில் நல்ல லாபம் கிடைத்திருப்பதாகவும் இனிப்பு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தருமபுரியில் தக்காளி விலை உயர்ந்தது.
    • வியாபாரிகள் மகிழ்ச்சி

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் சுழற்சி முறையில் தக்காளியை அதிகபடியாக சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், காரிமங்கலம் மற்றும் மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் விளைவித்த தக்காளி அறுவடை முடிந்து புதிய தக்காளி பயிர்களை பயிரிட்டுள்ளதாலும் ஏற்கனவே பயிரிட்டுள்ள விவசாயிகளின் தக்காளி செடிகள் சில வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளதாலும் தக்காளி மார்க்கெட்டிற்கு தக்காளி வரது குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது.

    கடந்த அக்டோபர் மாதம் 12 ரூபாயிலிருந்து தொடர்ந்து 16 ரூபாய் வரை விலை உயர்ந்து நீடித்து வந்த நிலையில் நவம்பர் 1 முதல் 21 ரூபாயிலிருந்து 22 ரூபாய்க்கு விலை உயர்ந்து காணப்பட்டது. மேலும் படிப்படியாக தக்காளி வரத்து குறைத்துள்ளது. இன்று தருமபுரி உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூபாய் 32-க்கு விற்பனை செய்ய ப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விவசாயிகள் புதிதாக பயிரிட்டுள்ள தக்காளி விளைச்சல் வரத் தொடங்கினால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தருமபுரி அருகே அதிகாரிகளிடம் விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
    • அரசின் மானிய தொகை குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தெரி விப்பதில்லை.

    தருமபுரி மாவட்டம், அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆர்.டி.ஓ வில்சன் ராஜசேகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரூர் மற்றும் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகு திக்குட்பட்ட பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து விவசா யிகள் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய விவசாயிகள் அதிகாரி களிடம் பல்வேறு கோரிக்கை கள் குறித்து மனுக்கள் அளித்தால் நடவடிக்கை எடுபபதில்லை என்று தங்களது கோரிக்கையை விரிவாக தெரிவித்தனர். அரூர் உட்கோட்ட பகுதி களில் உள்ள அனைத்து துறை அலுவலர்கள் பொது மக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்வதில்லை.

    அதனால் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்படு வதாகவும், மத்திய மாநில அரசு விவசாயிகள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இவ்வகையான நலத்திட்டங்கள் குறித்தும், மானியங்கள் குறித்தும் பொதுமக்களிடம் தெரி விப்பதில்லை. மேலும் அனைத்து துறை அலுவலர்களும் மெத்தனப் போக்கில் செயல்ப டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    பாப்பி ரெட்டிப்பட்டி பகுதியில் சுற்றுச்சூ ழலை மாசு படுத்தும் தனியார் கிழங்கு மில் மீது 20 வருட காலமாக புகார் கொடுக்கபட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், விவசாயிகள் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இது குறித்து எந்த விதமான பதிலும் வழங்கவில்லை என்றும், மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படும் அரசின் மானிய தொகை குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தெரி விப்பதில் காலதாமதம் செய்வதால் விவசாயிகள் திட்டத்தில் பயன் இல்லாமல் போவதாகவும் விவசாயிகள் தொடர்ந்து அரசு அலுவ லர்கள் மீது குற்றச்சாட்டை முன் வைத்தனர்.

    ஈச்சம்பாடி அணைக்க ட்டில் இருந்து தண்ணீர் விடப்பட்டு ஒரு மாத காலமாகிவிட்டது. ஆனால் தற்போது வரை கடை மடைக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. மனுக்கள் கொடுத்தால் அது குறித்து நடவடிக்கை எடுப்பதில் மொரப்பூர் வட்டார வளர்ச்சித்துறை மெத்தன போக்கை கடைபிடிப்பதாக குற்றம் சாட்டினர்.

    அதே போன்று ஈச்சம்பாடி அணைக்கட்டில் இருந்து பம்பு வழியாக நீரேற்றும் முறையை பயன்படுத்தி ஏரி , குளங்களுக்கு நீர் நிரப்ப கடந்த ஆண்டில் ரூ.410 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ப்பட்டும் தற்போது வரை அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நட வடிக்கை மேற்கொள்ள வில்லை என்றால் விவ சாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்து வதாகவும் விவசாயிகள் குறைத்து கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை முன்வைத்தனர்.

    மேலும் அரூர் பாப்பி ரெட்டிப்பட்டி பகுதி களில் நெல் கொள்முதல் நிலையம், கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் கொடுத்தும் மனுக்கள் மீது தற்போது வரை நடவடிக்கை எடுக்க வில்லை என்றனர்.

    • தருமபுரி அருகே பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வாங்க மக்கள் குவிந்தனர்.
    • ரூ. 1 கோடி வரை விற்பனை ஆனது.

    தீபாவளியை முன்னிட்டு பொம்மிடி வார சந்தையில் மலை ஆடுகளை வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பி, குறிஞ்சிப்பட்டி வார சந்தை, வாரம்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. இந்த கால்நடை சந்தை மிகவும் பிரபலமானது, ஏற்காடு மலையில் உள்ள மலை ஆடுகள், கிராமப் பகுதி ஆடுகள், பொம்மிடி, குறிஞ்சிப்பட்டி, முத்தம் பட்டி, ராமமூர்த்தி நகர், பி.பள்ளிப்பட்டி, பையர் நத்தம், மெனசி, கேத்து ரெட்டிப்பட்டி, பில்பருத்தி என 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தங்களது கால்நடை களான ஆடு, மாடு, கோழி போன்ற வைகளை விற்பதற்கும், வாங்குவதற்கும் இந்த சந்தைக்கு மக்கள் வருகின்றனர்.

    இந்த வாரம் தீபாவளி சந்தை என்பதால் மலைப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள், பொம்மிடி வார சந்தைக்கு அதிக அளவில் வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளி இறைச்சிக்கா–கவும், வளர்ப்புக்காகவும், வியாபாரிகளும், பொது மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    சராசரி குட்டி ஆடுகள் ரூ.4 ஆயிரம் முதல் வளர்ந்து நல்ல நிலையில் உள்ள ஆடுகள் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகின. இந்த வார சந்தையில் ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஆகி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ஆடுகளை மாவட்–டத்தின் பிறப்பகுதி களும், கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திரு வண்ணாமலை என அண்டை மாவட்ட வியாபாரிகள் குவிந்ததால் வார சந்தை மக்கள் கூட்டத்தாலும், கால்நடைகளாலும் நிரம்பி காணப்பட்டது. வியாபாரிகளும், பொது மக்களும் தாங்கள் வாங்கிய ஆடுகளை சரக்கு வாகனங்கள் மூலமாக ஏற்றி சென்றனர்.

    • தருமபுரி அருகே அரசு பள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
    • தேர்வு எழுதும் மாணவர்களை அருகில் அமர வைத்து எழுத வைத்ததை தலைமையாசிரியர் கண்டித்்துள்ளார்.

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 750 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் லோகநாதன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த பள்ளியில் பாலக்கோட்டை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பிளஸ்-2 மாணவர்களுக்கு வேளாண்மை பாடம் எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலையில் கிருஷ்ணன் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். அப்போது காலையில் நடந்த மாணவர்கள் கூட்டத்தில் அனைவரும் முன்பும் ஆசிரியர் கிருஷ்ணன், இடைத்தேர்வில் மாணவர்களை தனித்தனியே அமர்ந்து எழுத வைக்காமல், ஒன்றாக அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளார். இது மிகவும் தவறான செயல் என்றும், இனிமேல் இதுபோன்று இந்த ஆசிரியர் நடந்து கொள்ள வேண்டாம் என்று தலைமை ஆசிரியர் சுட்டி காட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் சிறிது நேரத்தில் கடைக்கு சென்று கயிறு ஒன்று வாங்கி வந்து பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு திடீரென்று தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பென்னா கரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த பென்னாகரம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் கிருஷ்ணன் பள்ளிக்கு சரியாக வராமல் இருந்துள்ளார். மேலும், அவர் பள்ளிக்கு வந்தாலும் வேலை செய்யாமல் இருந்ததாகவும் தெரிகிறது. இதுகுறித்து தலைமைஆசிரியர் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரில் வந்து பார்வையிட்டபோது கிருஷ்ணன் வேலை செய்யாமல் இருந்துள்ளார். உடனே அவரை அழைத்து இனி இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி சென்றனர். இந்த நிலையில் தேர்வில் மாணவர்களை அருகருகே அமரவைத்து தேர்வு எழுத அனுமதித்ததாக தெரியவந்தது. இதனை தலைமை ஆசிரியர் கண்டித்து இன்று மாண வர்கள், மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் சுட்டி காட்டியதால், கிருஷ்ணன் தற்கொலை முயன்றுள்ளார்.

    மேலும், இந்த ஆசிரியர் இதுபோல் பாலக்கோடு அரசு பள்ளி, பி.அக்ரஹாரம் அரசு பள்ளி ஆகிய பள்ளிகளில் இதுபோன்று ஏற்கனவே செயல்பட்டதால் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் அவரை பென்னாகரம் அரசு பள்ளியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தருமபுரி அருகே திருமணம் ஆன இளம்பெண் மாயம் ஆனார்.
    • கணவர் போலீணில் புகார்.

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மேல் சவுளுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி, (வயது 31) இவருக்கும் மேல் சவுளுப்பட்டியைச் சேர்ந்த மாரி மகள் மகேஸ்வரிக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது.

    இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 12 ந் தேதி காலை சின்னசாமி வெளியில் வேலையாக சென்று விட்டு மாலை வீட்டில் வந்து பார்த்தபோது மனைவி மகேஸ்வரியை காணவில்லை.

    இது குறித்து உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து சின்னசாமி காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மகேஸ்வரியை தேடி வருகின்றனர்.

    • தருமபுரி மாணவியை பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது
    • ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகேயுள்ள அனுமந்தநகர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதியமான்கோட்டை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பள்ளி மாணவியை நல்லம்பள்ளி கீ்ழ்பூரிக்கல் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(27). ஆட்டோ டிரைவர் என்பவர் தனது ஆட்டோவில் அடிக்கடி பள்ளிக்கு அழைத்து சென்று வந்துள்ளார். இதில் அவருக்கும் மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவி வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் சென்று மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து பல முறை மாணவியை தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி குழந்தைகள் நல குழுமத்தில் புகார் தெரிவித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் படி மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தை தேடி வருகின்றனர்.  

    • தருமபுரியில் பூண்டு விலை உயர்வு
    • உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவு

    தருமபுரி மாவட்டத்தில் பூண்டின் விலை உயர்ந்து வருவதால் பெண்கள் கவலை அடைந்துள்ளனர். சமையலுக்கு இஞ்சி பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி விலை ஏற்றத்தை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்து வருகிறது. உணவு பரிமாறும் போது கண்டிப்பாக மணக்க மணக்க பெண்கள் ரசம் வைப்பார்கள்.

    தற்போது பூண்டு விலை உயர்வால் ரசம் வைக்கவே யோசிக்கும் நிலை உருவாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து வரும் பூண்டினால் தமிழகத்தின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சமீப நாட்களாக பூண்டு வரத்து குறைந்து விட்டதாகவும், இதன் காரணமாக விலை அதிரடியாக உயர்ந்து இருப்பதாகவும் வியாபா ரிகள் கூறுகின்றனர்.

    கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு ரூ.62 என்ற விலையில் விற்பனை யானது. நல்ல தரமான உயர்ரக பூண்டு ஒரு கிலோ ரூ.72-க்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறிவிட்டது.

    ஒரு கிலோ பூண்டு ரூ.198 க்கு விற்பனை செய்யப்ப டுகிறது. வெளி மார்க்கெட்டில் ரூ.200 க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விளைச்சல் பாதிப்பு ஒரு பக்கம் கூறப்பட்டாலும், மராட்டிய மாநிலத்தில் இருந்து உக்ரைன் நாட்டுக்கு பூண்டு ஏற்றுமதி செய்யப்படுவதும் வரத்து குறைவுக்கு ஒரு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

    • தார் கலவை தயாரிக்கும் போது வெளியேறும் நச்சுப் புகையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார்
    • சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

    தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக ஏற்கனவே தருமபுரி, கோபிநாதம்பட்டி, செம்மண அள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அரூர் எச்.அக்ரஹாரம் அருகே தற்காலிகமாக தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தார் கலவை தயாரிக்கும் எந்திரம் மூலமாக தார் கலவை தயாரித்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தார் கலவை தயாரிக்கும் போது புகை கூண்டு வழியாக வெளியேறும் நச்சுப் புகையில் இருந்து வெளியேறும் ஒரு விதமான வாடையின் காரணமாக அந்தப் பகுதி வாழ் மக்கள் தலைவலி, குமட்டல், வாந்தி ஏற்பட்டு உடல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

    இதேபோன்று அளவுக்கு அதிகமான நச்சு புகைகள் வெளியேறுவதால் அந்த சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளா க்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் நச்சுப் புகை வெளியேறு வதால் காற்று மாசடைந்து மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து பொது மக்களும், விவசாயிகளும் கூறுக்கையில்:-

    இந்த பகுதியில் தார் கலவை தயாரிப்பதால் சுகாதாரமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நச்சுப் புகையின் காரணமாக பயிரி டப்பட்டுள்ள அனைத்து விவசாய பயிர்க ளும் நோய் தாக்கு தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதால், மகசூல் குறைந்து விவசாயிகள் பெறும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றோம் என்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகமும், சுற்றுச்சூழல் நிர்வாகமும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி

    • தருமபுரி இனிப்பு கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • விதிமுறைகளை பின்பாற்றாதவர்களுக்கு அபராதம்

    தருமபுரி மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பு இடங்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளில் ஆய்வு செய்து உணவு பாதுகாப்பு விதிமுறைகள் படி நடைமுறை பின்பற்ற ப்படுகின்றனவா எனவும், இல்லாத பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், காரிமங்க லத்தில் மொரப்பூர் ரோடு, பைபாஸ் சாலை, அகரம் பிரிவுரோடு, தருமபுரி ரோடு, பஸ் நிலையம் பகுதி, பாலக்கோடு காரிமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தார்.

    ஆய்வில் ஒரு சில தயாரிப்பு கூடங்கள் மற்றும் பேக்கரிகளில் இருந்து பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 4 லிட்டர், அதிக நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட கார, இனிப்பு வகைகள் 22 கிலோ மற்றும் காலாவதியான குளிர்பா னங்கள், உரிய விபரங்கள் அச்சிடாத கார்ன்பிளார் பவுடர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அப்பு றப்படுத்தி அழிக்கப்பட்டது.

    மேற்படி கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 1000 வீதம் 4 கடைகளுக்கு உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உரிய சுகாதாரம் காணப்ப டாத, பராமரிக்காத 2 கடைகளுக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளித்து 3 தினங்களுக்குள் உரிய குறைபாடுகள் கலைந்து பதில் அறிக்கை புகைப்ப டத்துடன் அலுவல கத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஆய்வில் இனிப்பு கடைகளில் பணியாற்றும் பணி யாளர்கள் சுத்தம், உரிய உடைகள், கையுறைகள் மற்றும் சுற்றுப்புற சுத்தம் ஆகியவற்றை பிற்பற்ற அறிவு றுத்தப்பட்டது. அனைத்து உணவு வணி கர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் முறையாக பெற்று புதுப்பித்தல் வேண்டும். புதுப்பிக்காதவர்கள் மற்றும் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, சான்றி தழ்கள் நுகர்வோர் பார்வை யில்படுமாறு மாட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டது.

    தொடர்ச்சியாக அனைத்து பகுதி களிலும் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர்.

    • தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
    • நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிற நிலையில், தமிழக காவிரி கரையோர எல்லை பகுதிகளான, அஞ்செட்டி, ஒகேனக்கல், நாட்றம்பாளையம் ஆகிய வனப்பகுதிகளில் கன மழை பெய்தது.

    இதனால் தமிழக-கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு வழியாக வரும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று வரை வினாடிக்கு 2000 கனஅடியாக இருந்த நீர்வரத்தானது கனமழை காரணமாக படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை நேரத்தில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இந்த நீர்வரத்தானது மேலும் படிப்படியாக அதிகரித்து இன்று காலை வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக உயர்ந்து வருகிறது.

    இந்த நீர்வரத்தால் ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. மேலும் தற்போது 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள இந்த நீர்வரத்து, சுற்று வட்டார பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்தே அதிகரிக்கவோ குறையவோ வாய்ப்பு உள்ளது என மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×