என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கன்னியாகுமரி
- விஜய் வசந்த் வெளியிட்ட பேஸ்புக் பதிவு.
- சமூக வலைதலத்தில் விஜய் வசந்த் நன்றி.
புதுடெல்லி:
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக விஜய்வசந்த் எம்பியை நியமித்து சோனியாகாந்தி உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி நேற்று கட்சியின் நாடாளுமன்ற செயலாளர்கள் மற்றும் பொருளாளர் ஆகியோரை நியமித்தார்.
ரஞ்சித் ரஞ்சன் மாநிலங்களவை செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில், எம்.கே. ராகவன் மற்றும் அமர் சிங் ஆகியோர் மக்களவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக தமிழ்நாட்டை சேர்ந்த கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விஜய் வசந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அன்னை சோனியா காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும். மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும், தலைவி பிரியங்கா காந்திக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாகவும் இந்த மாவட்டத்தின் காங்கிரஸ் நண்பர்கள் அனைவர் சார்பிலும் எனது நன்றி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு எம்.பி. விஜய் வசந்த் தலைமை ஏற்று நடத்தினார்.
- இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று, மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகர மேயர் மற்றும் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் எம்.பி. விஜய் வசந்த் பகிர்ந்துள்ளார்.
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்திற்கு தலைமை ஏற்று, மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் குறித்து ஆய்வு செய்தோம். மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாகர்கோவில் மாநகர மேயர் மற்றும் துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்து… pic.twitter.com/H2bMmOCgee
— VijayVasanth (@iamvijayvasanth) September 10, 2024
- வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இன்று, விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நன்றி பிரச்சார பயணம் மேற்கொண்டார்.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலைக்கடை, கொல்லஞ்சி, நட்டாலம், நல்லூர், விளாத்துறை ஆகிய பகுதிகளில் இன்று வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்தார்.
இதேபோல், தோவாளை செக்கர்கிரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் நெடுவிளை அருள்மிகு சிவ சுடலை மாடசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்களுடன் இன்று விஜய் வசந்த் எம்.பி கலந்து கொண்டார்.
தொடர்நது, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் விஜய் வசந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- ஆவணி திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம்.
- ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா, சித்திரை தெப்பத்திருவிழா, மாசி திருக்கல்யாண விழா மற்றும் ஆவணி திருவிழா ஆகியவை 10 நாட்கள் நடப்பது வழக்கம். இதில் ஆவணி திருவிழா மட்டும் திருமாலுக்காக நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இன்று காலை சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி சந்நதியின் அருகிலுள்ள திருவேங்கடவிண்ணவரம் பெருமாள் சந்நதியின் எதிரிலுள்ள கொடி மரத்தில் திருக்கொடியேற்றப்பட்டது. விழா நாட்களில் தினமும் வாகனபவனி, சிறப்பு வழிபாடு நடக்கிறது.
ஒன்பதாம் நாள் விழா அன்று தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலையில் ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தேவஸம் போர்டு செய்து வருகிறது.
- விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது.
- வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள்.
நாகர்கோவில்:
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் சுப முகூர்த்த தினங்களாகும். இதனால் நாகர்கோவில் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட்டில் வாழை இலையின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.
அப்டா மார்க்கெட்டிற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி நெல்லை மாவட்டம் களக்காடு, ஏர்வாடி, ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்காக வருகிறது. 150 இலைகள் கொண்ட ஒரு கட்டு கடந்த வாரம் ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று விலை கிடுகிடுவென உயர்ந்து ரூ.1500-க்கு விற்பனையானது. ஒரு இலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வாழைத்தார்கள் விலையும் உயர்ந்து காணப்பட்டது. ரசகதலி வாழைக்குலை குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை மாவட்டத்தில் இருந்தும் அப்டா மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக வாழைக்குலைகளின் விலை உயர்ந்தே உள்ளது. தற்போது வாழைக்குலை வாங்குவதற்கு ஏராளமான வியாபாரிகள் வருவதால் விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு வாழைத்தார் ரூ.450 முதல் ரூ.800 வரை விற்பனையானது.
இதே போல் செவ்வாழை, ஏத்தன், நாட்டுப்பழம், பச்சை பழம் உள்ளிட்ட அனைத்து வாழைத்தார்கள் விலையும் உயர்ந்துள்ளது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த தினம் அடுத்தடுத்து வந்ததையடுத்து வாழை இலையின் தேவை அதிகரித்தது. இதனால் வாழை இலை விலை உயர்ந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு விலை உயர்ந்து காணப்படும். வாழைத்தாரை பொருத்தமட்டில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்தாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாலைத்தார்களை வாங்கி செல்கிறார்கள்.
வழக்கமாக ஆவணி மாதத்தில் ஓணம் பண்டிகைக்காக கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படாது என்று அந்த மாநில முதல்-மந்திரி கூறியுள்ளார். இருப்பினும் வாழைத்தார்களை வாங்குவதற்கு ஏராளமான பொதுமக்கள் வியாபாரிகள் வருகிறார்கள். எனவே இன்னும் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு.
- மணமக்களை வாழ்த்திய விஜய்வசந்த்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரியின் புதல்வன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
- விஜய் வசந்த் ஆசிரியர் தின வாழ்த்து.
- எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி.
கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் `வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி' என்று ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
- ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
- படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதன்படி அமாவாசை முடிந்த 3-வது நாளான இன்று காலை முதல் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் இந்த நிலை காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் செல்ல போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி கடலில் இறங்கியவர்களை சுற்றுலா போலீசார் வெளியேற்றினர்.
பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம்செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
- விஜய் வசந்த், அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
- மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் அம்மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை நேரில் சந்தித்து கன்னியாகுமரி மாவட்டம் விரிகோடு பகுதியில் அமைய இருக்கும் ரெயில்வே மேம்பாலத்தை அந்த பகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
மேலும் ஊரை ஒதுக்கி மேம்பாலம் கட்டும் திட்டத்தை கை விட வேண்டும் எனவும் கேட்டு கொண்டேன்.
- KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.
- குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
கன்னியாகுமரி மாவட்டம், முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோடியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் தேவை என்ற கோரிக்கை வைத்தனர்.
இதைதொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்து அந்தப் பணிகள் நிறைவுப்பெற்றன.
இந்நிலையில், இந்த புதிய வகுப்பறைகளை கன்னியாகுமரி மாவட்ட எம்பி விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
இதைதொடர்ந்து, நாகர்கோவிலில் புதியதாக ஆரம்பிக்கப்படவுள்ள KIMS மருத்துவமனையின் அறிமுக விழாவில் விஜய் வசந்த் கலந்துக் கொண்டார்.
மேலும், மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த மருத்துவமனை ஏழை மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, ஆவணி திருவிழாவை முன்னிட்டு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்த விஜய் வசந்த் வாழ்த்து பெற்றார்.
- நாகர்கோவிலில் மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம்.
- விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-
நாகர்கோவிலில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி மத நல்லிணக்க ஒற்றுமை நடை பயணம் நடைபெற்றது. இதனை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் கேசவன்புத்தன்துறை புனித மரியன்னை உயர்நிலை பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் தேவை என்ற பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடித்த 2 வகுப்பறைகளை விஜய் வசந்த் நேற்று திறந்து வைத்தார்.
- பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
- பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.
கன்னியாகுமரி:
இரணியல் ரெயில் நிலையத்தில் அமைய இருக்கும் ஜல்லி யார்டு பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது. அதனை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்க்கு பலமுறை கோரிக்கைகள் வைத்தும் பலன் இல்லை.
இதனால் இன்று கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தின் முன்பு
கன்னியாகுமரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் கே.டி.உதயம், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், வட்டார தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்