search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மையம் ஏற்பாடு
    • தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் ஊட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வருகிற 4-ந் தேதி ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பும் முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி எம்.பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்குகின்றனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    எனவே 8-ம்வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் இலவசமாக பங்கேற்று பயன்பெறலாம்.

    மேலும் தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகம் சார்பில் இலவச பயிற்சி க்கான பதிவு, மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோ ருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் கடன் குறித்த வழிகாட்டுதல் ஆகிய நிகழ்வுகளும் நடக்க உள்ளன.

    தனியார் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் மேற்கண்ட வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக பங்கேற்று பயன்பெறலாம். மேலும் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் அவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

    எனவே நீலகிரி மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் அடையலாம்.

    மேலும் இந்த முகாம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படுபவர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஊட்டி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

    • திரளான பக்தர்கள் வழிபாடு
    • பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னுர் தாலுகாவுக்கு உட்பட்ட மேலூர் ஊராட்சியில் மகாவிநாயகர் கோவில் அமைந்து உள்ளது. இது 33 ஊர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில் ஆகும்.மேலூர் விநாயகர் கோவிலில் மகாகும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    இதில் ஊர்தலைவர் அர்ஜீனன், கொத்துகார கௌடர் சிவக்குமார், மேக்குநாடு பார்பத்தி கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குண்டன், சாந்தி ராமு, தொழிலதிபர் ராஜேந்திரன், மேக்குநாடு படுகர் நல சங்க தலைவர் தாத்தன், செயலாளர் ராமன், பாலகொலா ஊராட்சி துணைத்தலைவர் மஞ்சை வி.மோகன் மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரளாக வந்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பெண் பக்தர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள்
    • ஆயிரக்கணக்கான பக்தா்கள் வேட்டைக்கொரு மகனை வழிபட்டனா்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூா் புத்தூா்வயல் பகுதியை சேர்ந்த பழங்குடி விவசாயிகள் ஐப்பசி மாதத்தில் விரதம் இருந்து புதிதாக விளைந்த நெற்கதிா்களை அறுவடை செய்து நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலுக்கு எடுத்து வந்து சுவாமிக்கு படையலிட்டு, பின்னர் அங்கு உள்ள பக்தா்களுக்கு நெற்கதிரை பிரசாதமாக வழங்குவது வழக்கம். அவற்றை வீட்டின் பூஜைஅறையில் வைத்து பாதுகாத்தால் பஞ்சம் வராது, விளைச்சல் பெருகும் என்று ஐதீகம்.

    கூடலூர் நம்பாலக் கோட்டை வேட்டைக்கொரு மகன் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான புத்தரி திருவிழா தொடங்கியது. அப்போது விவசாயிகள் கடும் விரதமிருந்து வயற்காட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பின்னர் அங்கு விளைந்து இருந்த முதல் நெற்பயிரை அறுவடை செய்தனர். தொடர்ந்து பாரம்பரிய இசையுடன் புனித நெற்கட்டு குவியல்கள், ஒற்றப்பாறை பகவதி அம்மன் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு அம்மனுக்கு நெற்கதிர்களை படைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பழங்குடி பெண்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து விவசாயிகள் நெற்கதிர் கட்டுகளை நம்பாலக்கோட்டை வேட்டைக்கொரு மகன் கோயிலுக்கு ஊா்வலமாக கொண்டுவந்தனர். அங்கு சுவாமிக்கு படையலிட்டு அறுவடை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினா்.

    கூடலூர் பழங்குடி விவசாயிகளின் புத்தரி திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி கா்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தது வேட்டைக்கொரு மகனை வழிபட்டு சென்றனா்.

    • கோத்தகிரி ஜி.டி.ஆர் நடுநிலை பள்ளி செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டனர்
    • பழங்குடியினர் வசிப்பிடங்களில் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தேசிய பழங்குடியின தலைவர் ஆனந்த் நாயக் பழங்குடியின மக்கள் வசிக்கும் இடம் மற்றும் அவர்களின் கல்வி. வாழ்வியல் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

    ஆனணயத்தின் செயலர் அல்காதிவாரி, இணை செயலாளர் தவுதங், துணை இயக்குநர் தூபே, ஆய்வு அலுவலர் ஆர்.எஸ்.மிஸ்ரா, ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து இந்த குழுவினர் கோத்தகிரியில் உள்ள ஜி.டி.ஆர் நடுநிலை பள்ளி அவற்றின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள மாணவர்களையும் நேரில் சந்தித்து, பேசி, அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தனர்.

    பின்னர் குஞ்சப்பனை கோழிக்கரை பழங்குடியினர் வசிப்பிடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.

    அதனை தொடர்ந்து தமிழக அரசினர் விருந்தினர் மாளிகையில் தேசிய பழங்குடியின ஆனணயத்தின் தலைவர் ஆனந்த் நாயக் தலைமையிலான குழுவினர் பழங்குடியின தலைவர்களிடம் கலந்துரையாடினர். தொடர்ந்து அங்கு நடந்த பழங்குடியினர் கலைநிகழ்ச்சியையும் பார்வையிட்டனர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரிய தர்சினி, மாவட்ட ஊராட்சி ஒன்றியதலைவர் பொன் தோஸ், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூசணகுமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, கோத்தகிரி வளர்ச்சி அலுவலர் ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
    • சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, ரேகிங் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் மாவட்ட கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அருணா கூறியதாவது:-

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ரேகிங் புகார்கள் பெறப்படும் வகையில் புகார் பெட்டிகள், அதேபோல் மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் அரசு தங்கும் விடுதிகளில், சம்மந்தப்பட்ட வார்டன்கள் ரேகிங் தொடர்பான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரேகிங் ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்திரராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனப்பிரியா (பொது), வருவாய் கோட்டாட்சியர்கள் மகராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), முகமது குதரதுல்லா (கூடலூர்), வட்டாட்சியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் பொன்ராஜா முன்னிலை வகித்தார்.

    ஊட்டி,

    அ.தி.மு.க. ஊட்டி நகர பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமையில் நடந்தது. ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் பொன்ராஜா முன்னிலை வகித்தார்.

    ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாந்திராமு, துணை செயலாளர் கோபால் கிருஷ்ணன், மாநில இளைஞர் அணி இணை செயலாளர் பாலநந்தகுமார், பாசறை மாவட்ட செயலாளரும், கவுன்சிலருமான அக்கீம் பாபு, ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, சக்சஸ் சந்திரன், பா.குமார், குன்னூர் நகர செயலாளர் சரவணகுமார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, மீனவர் அணி மாவட்ட செயலாளர் விஷாந்த், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர்.
    • ஜெயச்சந்திரன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது64). இவர் நேற்றிரவு ஊட்டியில் இருந்து கோவைக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    அந்த சமயம் மழை பெய்து கொண்டிருந்தது. இவரது கார் குன்னூர் அருகே உள்ள மரப்பாலம் பகுதியில் வந்த போது, மலையில் இருந்து திடீரென பாறை ஒன்று உருண்டு வந்து, காரின் முன் பகுதி மீது விழுந்தது.

    இதில் கார் இடிபாடுகளில் சிக்கி கொண்டது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் சிக்கியவரை மீட்டனர். அவருக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி விட்டார்.

    • கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.

    அரவேணு,

    கோத்தகிரி தெங்கரை பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்.

    இவர் சம்பவத்தன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோத்தகிரிக்கு வந்தார்.

    அப்போது அவரின் செல்போன் மாயமானது.

    இதுதொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அவர்கள் டிராக்கர் டிவைஸ் நவீன கருவி உதவியுடன் கண்காணித்தனர்.

    இதில் அந்த செல்போன் சிக்னல் குஞ்சப்பனை பகுதியை காட்டியது.

    போலீசார் உடனடியாக அங்கு சென்று பாஸ்கரின் செல்போனை மீடடு ஒப்படைத்தனர். 

    • நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி, குன்னூர் டி.எஸ்.பி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளை யம் தேசிய நெடுஞ்சாலை யில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து ஊட்டிக்கு 61 பேர் பஸ்சில் சுற்றுலா வந்தனர்.

    ஊட்டியை சுற்றி பார்த்து விட்டு, மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். அப்போது, குன்னூர் மரப்பாலம் பகுதியில் வந்த போது சுற்றுலா பஸ் திடீரென பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த நிலையில் பஸ் விபத்தில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குன்னூரை சேர்ந்த இந்து முஸ்லிம், கிறிஸ்டியன் அமைப்பினர் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத போதகர்கள் அவர்களது முறைப்படி பிரார்த்தனை செய்து அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. சவுந்தர்ராஜன், குன்னூர் டிஎஸ்பி குமார், குன்னூர் இன்ஸ்பெக்டர் சதீஷ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் முத்துசாமி மற்றும் குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாஷிம் ராஜா, சமுக ஆர்வலர் உஷாபிரங்களின், நகர மன்ற உறுப்பினர்கள் ஜாகிர், மணிகண்டன், குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விபத்து நடந்த சமயத்தில் சிறப்பாக செயல்பட்ட 7 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு குன்னூர் நகர மன்ற துணைத் தலைவர் வாசிம் ராஜா சன்மானம் வழங்கினார்.

    • காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓடியதால் டிரைவர் உயிர் தப்பினார்
    • உயிர் சேதம் ஏற்படும் முன்பே யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இதில் ஒற்றை யானை ஒன்று அவ்வப்போது சாலைக்கு வந்து, வாகன ஓட்டிகளை துரத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி நோக்கி கார் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அப்போது வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை அந்த சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    யானை நிற்பதை பார்த்ததும் காரை ஓட்டி வந்தவர், காரை சிறிது தொலைவிலேயே நிறுத்தி விட்டார்.சாலையில் சுற்றி திரிந்த யானை மிகவும் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டது.

    திடீரென அந்த யானை, காரை நோக்கி வேகமாக ஓடி வந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காரின் டிரைவர், காரின் கதவை திறந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    காரின் அருகே வந்த யானை ஆக்ரோஷமாக, காரை அடித்து நொறுக்கியது. மேலும் காரை அப்படியே அலேக்காக தூக்கி நடுரோட்டில் வீசியது.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சத்தில் உறைந்து போயினர்.

    20 நிமிடத்திற்கும் மேலாக அந்த இடத்தை விட்டு நகராமல் யானை அங்கேயே நின்றபடி காரை சேதப்படுத்தியது.

    இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த ஆண்டு சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் அதிக அளவில் இடம்பெயர்ந்து உணவு தேடி மலை பாதைக்கு வருவதால் வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

    குறிப்பாக ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன்பே காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • நகர செயலாளர் சரவணகுமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    ஊட்டி,

    குன்னூரில் நகர அ.தி.மு.க சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் சரவணகுமார் செய்திருந்தார்.

    நீலகிரி மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் பொன்னுராஜ், மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி செயலாளர் சஜீவன், இளைஞரணி மாநில துணை செயலாளர் பாலாநந்தகுமார், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, இளைஞரணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சிவகுமார், மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 

    • பந்தலூர் பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.
    • சிறுத்ைத வேட்டையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது.

    எனவே இங்கு காட்டு யானை, கரடி, காட்டு மாடு, சிறுத்தை, புலி ஆகிய வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் பந்தலூர் இந்திரா நகர், எம்.ஜி.ஆர் நகர், நத்தம், ரிச்மண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சிறுத்தைப்புலி கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் உலா வருகிறது.

    அங்கு உள்ள வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி செல்கிறது.

    இதற்கிடையே நத்தம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் இரவு நேரத்தில் ஒரு சிறுத்தைப்புலி புகுந்தது.

    தொடர்ந்து அங்கு உள்ள ஒரு வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடியது. பின்னர் இறைச்சியை வாயில் கவ்வி கொண்டு சென்றது.

    இந்த காட்சிகள் குடியிருப்பில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கண்காணிப்பு காமிரா மூலம் தெரியவந்தது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

    ×