search icon
என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓட்டப்பந்தயம்
    • முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தனியார் கல்லூரி சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது.

    முனைவர் ஆல்பர்ட் எபினேசர் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர் அசோக்குமார் சின்னசாமி துவக்கி வைத்தார்.விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மேல்நிலை பள்ளி மாணவர்கள், ஆசியர்களுடன் கலந்துரையாடினார்
    • வாழைத்தோட்டம் பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டது

    ஊட்டி,

    தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று மசினகுடி பகுதியில் உள்ள பால் கூட்டுறவு சங்கத்தில் திடீரென ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார்.

    தொடர்ந்து வாழைத்தோட்டம் பகுதியிலும் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள மேல்நிலை பள்ளிக்கு சென்று மாணவர்கள், ஆசியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவருடன் கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, ஒன்றிய கவுன்சிலர் உத்தமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 4 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் 3 மாதத்திற்கு ரத்து
    • உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் 20 ஆலைகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள்கள் தரமாக தயாரிக்க வேண்டும் எனவும், கலப்பட தேயிலை தூள்கள் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    மாவட்டம் முழுவதும் கலப்பட தேயிலை தூள் குறித்த விழிப்புணர்வு அவ்வப்போது பொது மக்கள் இடையேயும், தொழிற்சாலை ஊழியர்கள் மத்தியிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு தொழிற்சாலையிலும் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளின் அளவை கண்காணித்து அவ்வப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    இதுபோல் தேயிலை வாரிய உத்தரவை மீறி செயல்படும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கலப்படம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 20 தொழிற்சாலைகளுக்கு சோக்காஸ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல் நான்கு தேயிலை தொழிற்சாலைகளின் உரிமம் மூன்று மாதத்திற்கு மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

    • கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடப்பட்டது
    • சிறந்த 3 கிடேரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட வள்ளுவர் நகர் கால்நடை மருந்தக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

    முகாமில், கால்நடைக ுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்யப்பட்டது.

    இதுதவிர சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுதல், தாது உப்பு கலவை வழங்குதல், கால்நடைகளுக்கான சிறு கண்காட்சி அமைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.

    முகாமில், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகள் 3 பேருக்கும், கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான பரிசுகளை 3 பேருக்கும், 10 பயனாளிகளுக்கு மினரல் மிக்சர் பாக்கெட்டுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, பாராட்டி னார்.

    முன்னதாக, மாவட்ட கலெக்டர் முகாமில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

    முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். பகவத்சிங், முதன்மை நோய் நிகழ்வியல் அலு வலர் டாக்டர்.சத்திய நாராயணன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் டாக்டர்.எஸ்.பார்த்தசாரதி(ஊட்டி), டாக்டர்.நீலாவண்ணன்(கூடலூர்), பேராசிரியர் மற்றும் தலைவர், எஸ்.பி.ஆர்.எஸ் சாண்டி நல்லா டாக்டர்.என்.பிரேமா, கால்நடை உதவி மருத்துவர்கள் டாக்டர்.எம்.நாகஜோதி (சோலூர்), டாக்டர்.எம்.ராஜமுரளி (ஊட்டி), டாக்டர். ஏ.பொன்கலையாணி (ஊட்டி), மருதனிராஜ் (தலைகுந்தா),டாக்டர்.மேஜர் கணேஷ் (டி-ஆர்.பஜார்). சோலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
    • கட்சி நிர்வாகிகளிடம் கையெழுத்து பெறுவதற்கான அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி கலைஞர் அறிவாலயத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர்அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, இளங்கோ, ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவன், பிரேம்குமார், பீமன், சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். திராவிட தமிழர் கட்சி செயலாளர் வெண்மணி கலந்துகொண்டு பேசினார். முன்னதாக

    நிகழ்ச்சியில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ராஜா, எல்கில்ரவி, காந்தல்ரவி, செந்தில்நாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நாகராஜ், பாபு, முரளிதரன், பத்மநாபன், மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஜெகதீஷ், அசார்கான், சந்திரகுமார், மருத்துவர் அணி துணை அமைப்பாளர்கள் ரூபேஷ், ஊட்டி நகரமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்ணு, கஜேந்திரன், ரகுபதி, மேத்யூஸ், ரவி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் பவீஷ் நன்றி கூறினார்.

    • செடிகளில் உள்ள இலைகள் மலர்கள் போல் நிறம் மாறி மாறி காட்சி அளிக்கின்றது.
    • சிவப்பு நிறத்தில் மலர்களைப் போல் காட்சியளிக்கும் இந்த ரெட் லீப் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது பழமை வாய்ந்த பங்களாக்களை கட்டியதுடன் அரிய வகையான மரங்களும், மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டது.

    இவை அனைத்தும் தற்போது வரை மலை மாவட்டத்தின் அழகினை மேலும் மெருகூட்டி வருகிறது. இதில் ஒரு பகுதியாக குன்னூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரெட் லீப் மலர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது,

    தற்போத இந்த செடிகளில் உள்ள இலைகள் மலர்கள் போல் நிறம் மாறி மாறி காட்சி அளிக்கின்றது. ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தச் செடிகள் மலைப்பாதை ஓரங்களிலும் பங்களா மற்றும் தனியார் எஸ்டேட் பகுதிகளிலும் நடவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் சாலை ஓரத்தில் பாதுகாப்பு வேலையாக இந்த செடிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவை பச்சை, மஞ்சள், சிவப்பு மற்றும் இளம் சிவப்பு ஆகிய வண்ணங்களில் அவ்வப்போது நிறம் மாறி காட்சி தரும் தன்மை உள்ளது. தற்போது சிவப்பு நிறத்தில் மலர்களைப் போல் காட்சியளிக்கும் இந்த ரெட் லீப் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர். இது மட்டும் அல்லாமல் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாளை முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளதால் இந்த மலர்களை அறுவடை செய்து வாகனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள், ஒர்க்ஷாப் உள்ளிட்டவைகளுக்கு பூஜைகளுக்காகவும் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • யானைகள் தேயிலை தோட்டங்களில் உலா வந்து கொண்டிருந்தது.
    • கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனிதர்களை தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் நாடு காணி, பொன்னுார் மற்றும் பொன்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் அங்கிருந்து, பாண்டியார் டான்டீ குடியிருப்பு அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று உலா வந்து கொண்டிருந்தது. யானைகள் உலா வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • காட்டெருமையை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நாட்டு துப்பாக்கி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
    • பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    அருவங்காடு,

    குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலாடா செல்லும் சாலையில் 4 வயது மதிக்கதக்க ஆண் காட்டெருமை ஒன்று தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக குந்தா வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

    இதனைத் தொடர்ந்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் மற்றும் வனத்துறையினர் கொலக்கம்பை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டனர்.

    அதன் பின்பு கால்நடை மருத்துவர் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் வரவழைக்கப்பட்டு காட்டெருமை பிரேத பரிசோதனை செய்தனர்.

    அப்போது காட்டு எருமையின் தலையில் இருந்து நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா மற்றும் கடினமான ரப்பர் பொருள் அகற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இறந்த காட்டெருமையின் உடல் உறுப்புகளை ஆய்வுக்காக தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்க்கு அனுப்பி ஆய்வுக்கு பின் விபரம் தெரிவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் காட்டெருமை மரணம் குறித்து குந்தா வனத்துறையினர் யாரேனும் இறைச்சிக்காக காட்டெருமையை வேட்டையாடினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கெந்தலா மற்றும் கொல்லிமலை பகுதியை சேர்ந்த 4 பேரிடம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் காட்டெருமையை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நாட்டு துப்பாக்கி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் அறிவிப்பு

    அருவங்காடு,

    தென்காசி மாவட்டம் மாவட்டம் கடையத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கடந்த 30-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள சுற்றுலா தலங்களை பார்த்துவிட்டு ஊட்டியில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மரப்பாலம் அருகே வந்த போது 50 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியது. இதில் 9 பேர் பலியானதுடன் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது தொடர்பாக குன்னூர் போலீசார் பஸ் டிரைவர்கள் முத்துக்குட்டி, கோபால் மற்றும் பஸ் உரிமையாளர் சுப்ரமணி, சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதனிடையே சிகிச்சையில் இருந்து வந்த ஓட்டுநர் முத்துக்குட்டியை போலீசார் கைது செய்து, ஊட்டி நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பொறுப்பற்ற நிலையில் பஸ் ஓட்டி சென்றதற்காக முத்துக்குட்டியின் ஓட்டுனர் உரிமம் 10 ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

    • குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடந்தது
    • மாணவ-மாணவிகள் பதாகைகளுடன் பங்கேற்பு

    ஊட்டி,

    நீலகிரியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், நீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு பிரச்சார வாகனம் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதனை கலெக்டர் அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்க ளையும் வழங்கி னார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை வழியாக ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சென்று நிறைவடைந்தது. இதில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 85 மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட 100 பேர் பங்கேற்று விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

    முன்னதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்து றையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் திரையிடப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்ப டங்களை பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு வாக னத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த வாகனத்தின் மூலம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

    இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன், ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுதாகர், உதவி பொறியாளர் சங்கீதா, துணை நிலநீர் வல்லுநர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோதங்கராஜ் கண்காட்சியை பார்வையிட்டார்
    • மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டுகோள்

    ஊட்டி,

    ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி புத்தகத்திருவிழா நேற்று தொடங்கியது. இது வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. நீலகிரி புத்தகத்திருவிழாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். முன்னதாக தேசிய விருதுபெற்ற கவிஞர் சீனு ராமசாமியின் புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

    தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தம் வகையில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை சார்பில் புத்தகத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு புத்தகங்கள் அடங்கிய தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டு உள்ளன.

    ஒரு புத்தகம் எழுத வேண்டுமெனில் பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டும். அதேபோல மாணவ-மாணவிகள் எண்ணிய இலக்கை அடைய வேண்டுமெனில் தொடர்மு யற்சிகளை மேற்கொண்டு போராடி முன்னேற வேண்டும். ஒரு நல்ல புத்தகம் மனிதனின் வழிகாட்டியாக அமையும். எனவே வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

    நீலகிரி புத்தகத்திருவிழா வில் சமூகநலன், தோட்டக் கலை, ஆதிதிராவிடர்-பழங்குடியினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.

    மேலும் நீலகிரி புத்தகத்திருவிழாவில் தினமும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலைநி கழ்ச்சி, இலக்கிய சொற்பொ ழிவு நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே புத்தக திருவிழா வெற்றி பெற அனைவரும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் ஊட்டி எம்.எல்.ஏ ஆர்.கணேஷ், மாவட்ட வனஅதிகாரி கவுதம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்க உறுப்பி னர் அருண்மாதவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், நகர்மன்ற தலை வர்கள் வாணீஸ்வரி (ஊட்டி), பரிமளா (கூடலூர்), ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (ஊட்டி), கீர்த்தனா (கூடலூர்), ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷோபனா, முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாவட்ட சமூகநல அதிகாரி பிரவீணாதேவி, மாவட்ட நூலக அதிகாரி வசந்தமல்லிகா, ஊட்டி தாசில்தார் சரவணகுமார், வட்ட வழங்கல் அதிகாரி மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அண்ணா, பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை ஏற்பாடு
    • போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் வருகிற 27-ந் தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப அறிவுறுத்தல்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேரறிஞர் அண்ணா, பெரியார் பிறந்தநாளை யொட்டி வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தப்பட உள்ளது.

    ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் காலை 10 மணிக்கு இந்த போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களில் சிறப்புடன் திறமையை வெளிப்ப டுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து, 2 பேருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடை பெறும் நேரத்தில் மாண வர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப் பெறுவர்.

    எனவே தரப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளிலும் பேசுவதற்கு உரிய தயாரிப்புடன் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

    மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் கல்லூரி முதல்வர் பரிந்து ரையுடன் ஒப்பமும் பெற்று வருகிற 27-ந் தேதிக்கு ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

    இந்த போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×