search icon
என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலானடேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் போட்டிகள்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.

    பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி விளையாட்டு அரங்கில் நடந்த போட்டிக்கு பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அங்கையற்கண்ணி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெகநாதன், உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    டேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக் ஆகிய விளையாட்டு போட்டிகள் 14, 17, 19 ஆகிய வயது பிரிவின் கீழ் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரவி, பிரேம்நாத் ஆகியோர் பொறுப்பு அலுவலராக செயலாற்றினர். இப்போட்டிகளில் 30 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டி களில் முதலிடம் பெறுவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவர்.

    62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது

    பெரம்பலூர் 

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரி சார்பில் 62-ம் தேசிய மருந்தியல் வார விழாவையொட்டி டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கிய பேரணிக்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் நெப்போலியன், துணை முதல்வர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணி தொடங்கி வைத்தார். பாலக்கரையில் ஆரம்பித்து, சங்குபேட்டை, கடைவீதி, பழைய பஸ்ஸ்டாண்ட், காமராஜ் ஆர்ச் வரை சென்று ரோவர் மருந்தியல் கல்லூரியில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ,மாணவிகள் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்க மேற்கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தி சென்று கோஷமிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பேரணியில் தாசில்தார் சரவணன் மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இருவரும் பெரம்பலூர் - அரியலூர் சாலை பேரளி பகுதியில் சென்று கொண்டி ருந்தனர்.
    • அப்போது டிப்பர் லாரியின் சக்கரம் ராதிகாவின் தலை மீது ஏறி உள்ளது.

    குன்னம்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு(வயது 40). இவரின் மனைவி ராதிகா(வயது 36). ராதிகாவின் ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்காக, உறவினரான செல்வராஜ்(வயது 45) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பெரம்பலூரை நோக்கி சென்றுள்ளார். இருவரும் பெரம்பலூர் - அரியலூர் சாலை பேரளி பகுதியில் சென்று கொண்டி ருந்தனர். அப்போது பெரம்பலூரை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி ஒன்று இருவரும் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளது. மோதிய வேகத்தில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டு உள்ளார். ராதிகா இருசக்கர வாக னத்துடன் சாலையிலேயே விழுந்துள்ளார். அப்போது டிப்பர் லாரியின் சக்கரம் ராதிகாவின் தலை மீது ஏறி உள்ளது. இதில் ராதிகா தலை சுக்கு நூறாக உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. இதனை கண்ட அப்பகுதி இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் டிப்பர் லாரியை விரட்டி சென்றுள்ளனர். பெரம்பலூர் அருகே கவுல்பாளையத்தில் அந்த டிப்பர் லாரியை கிராமத்து இளைஞர்கள் மடக்கி நிறுத்தி உள்ளனர். விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற லாரி டிரைவரை பிடித்து அப்பகுதி இளைஞர்கள் நன்றாக `கவனித்து' அதன் பின்னர் மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் டிப்பர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உடையார் பாளையம் அருகே உள்ள வெட்டுவா வெட்டு கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(45) என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
    • இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

    குன்னம்

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி, உடையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 35). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர் விடுமுறைக்காக பொன்னமராவதி வந்துள்ளார். விடுமுறையை முடிந்த பின்னர் மீண்டும் சென்னைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பாடாலூர் காரைபிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் சாலையை கடக்க முற்பட்டு உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் இருசக்கர வாகனம் குமார் மீது மோதி விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை பாடாலூர் போலீசார் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல பெரம்பலூர் மாவட்டம் ஊட்டத்துரை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 22). விவசாய தொழில் செய்து வந்த இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஊட்டத்தூர் பிரிவு ரோடு பகுதியில் அவர் சென்று கொண்டிருந்த போது செய்யாறுவில் இருந்து வந்த அய்யப்பபக்தர்கள் கார் ஒன்று இவர் மீது மோதி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு உள்ளார். பாடா லூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.
    • தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் தந்தை ரோவர் மருந்தியல் கல்லூரியில் 62-ம் தேசிய மருந்தியல் வாரவிழா நேற்று தொடங்கியது.

    விழாவையொட்டி நடந்த கருத்தரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். துணை மேலாண் தலைவர் அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழா வினை துவங்கி வைத்தார்.

    இதில் முதன்மை விருந்தி னராக சர்வதேச வணிக துணை பொது மேலாளர் ராஜேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சர்வதேச வணிகத்தில் தொழில்மு னைவு மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டத்தின் இன்றியமை யான்மை குறித்து விரிவாக எடுத்து ரைத்தார்.

    தொடர்ந்து கல்லூரி வாழ்க்கையை பெரிதும் ரசித்து வாழ்வது மாணவர்க ளா? அல்லது மாணவிகளா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது . இதில் பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் நடுவராக பணியாற்றினார்.

    முன்னதாக கல்லூரியின் முதல்வர் நெப்போலியன் வரவேற்றார். முடிவில் துணை முதல்வர் மாரிய ம்மாள் நன்றி கூறினார் னார். கருத்தரங்கில் 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், கல்வி ஒருங்கிணைப்பாளர் சக்திஷ்வரன், அலுவலக மேலாளர் ராஜா மற்றும் ரோவர் மருந்தியல் கல்லூரி யின் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
    • பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த மாதம் 10-ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்ப தாவது:-

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் கடந்த மாதம் 10-ந்தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இத்தேர்வுக்கு தகுதி பெற விண்ணப்பதாரர் ளிடமிருந்து விண்ணப் பங்கள் இணைய தளம் வழியாக மட்டுமே டிசம்பர் 1-ந்தேதி பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படு கின்றன. இதற்கான எழுத்து தேர்வு 24-12 -2023 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, பெரம்பலூர் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்பட உள்ளது.

    இதற்கான கல்வி தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். மேலும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி முடித்து தேர்வு முடிவுகள் நிலுவையில் இருப்பவர்க ளும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் மேலாண்மை நிலையங்க ளில் 2023-24ம் ஆண்டு நேரடி பயிற்சி அஞ்சல் வழி பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்ந்துள்ளவர்க ளும், இப்பணிக்கு உரிய சான்று கட்டணம் செலுத்தி யதற்கான ரசீதினை, பெரம் பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு இணைய தளத்தில் பதி வேற்றம் செய்து விண்ணப் பிக்கலாம். முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை. மேலும் இது தொடர்பான விரி வான விவரங்கள் பெரம்ப லூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூரில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது
    • 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்டது

    பெரம்பலூர்,

    70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை மற்றும் கால்நடை பராம்பரிப்புத்துறை இணைந்து டிஆர்டீ.182 அயிலூர் பால் உற்பததியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. கால்நடை சிகிச்சை முகாமில் சிறந்த கன்றுக்குட்டிகளுக்கு பரிசுகளை கால்நடைத்துறை உதவி இயக்குனர் குணசேகரன் வழங்கினர். அருகில் பால்வளத்துறை கூட்டுறவு சர்பதிவாளர் விஜயா பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக fileim கண்காணிப்பாளர் ரமேஷ், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் விஸ்வநாதன், ஆவின் உதவி பொது மேலாளர் முனுசாமி, ஆவின் கால்நடை மருத்துவர் அன்பழகன், விரிவாக்க அலுவலர் இளங்கோவன், கால்நடை மருத்தவ குழு சிறுவாச்சூர், ஆவின் மருத்துவ குழு இணைந்து முகாமில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்கச் செயலாட்சியர் பிரேம்குமார் செய்து இருந்தார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது
    • 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டியில்லாப் பயிர்க்கடன் நவம்பர் 15 -ந் தேதி முடிய ரூ.245.08 கோடி 29,524 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நடப்பாண்டில் அக்டோபர் 2023 முடிய 41,405 விவசாயிகளுக்கு ரூ.30.22 கோடி மதிப்புள்ள 12975.366 டன் உர விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயிர் கடன், டாம்கோ, டாப்செட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கியதில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது..இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அகரம்சீகூர் அருகே சாலையில் நின்ற லாரி மீது பைக் மோதி என்ஜினீயர் பலியானார்
    • மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை கைப்பறறி விசாரணை நடத்தி வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் மகன் வினோத்குமார் (வயது 32).இவை பெரம்பலூர் மாவட்டம் விஜயகோபாலபுரத்தில் இயங்கி வரும் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் சேஃப்டி என்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் வினோத்குமார் தனது சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வாலிகண்டபுரம் சென்றார். அங்கு தனது வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார்.திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது குன்னம் வட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இவர் மோதினார்.இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார், பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மங்களமேடு போலீசார் வினோத்குமாரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செட்டிகுளம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது
    • முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின் மீது பிரசித்தி பெற்ற தண்டாயுத பாணி சுவாமி கோயில் உள்ளது. மற்ற முருகன் கோயில்களில் முருகன் கையில் வேல் இருக்கும். ஆனால் இந்த கோயிலில் முருகன் கையில் வேலுக்கு பதிலாக செங்கரும்பு ஏந்தி நிற்பார். இதனால் இந்த முருகனுக்கு செங்கரும்பு ஏந்திய செந்தில் ஆண்டவர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா வையொட்டி ஷண்முகா ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து தண்டாயுதபாணி உற்சவர் சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, விபூதி, பழவகைகள் மற்றும் கலச தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து உற்ச வர் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளோடு மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்த னூர், இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், பொம்மனப்பாடி, சத்திர மனை, வேலூர், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மாவலிங்கை மற்றும் பெரம்பலூர் மாவட்ட மின்றி, வெளி மாவட்டங்க ளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்ட னர். பக்தர்களுக்கு பிரசாத மும், அன்னதா னமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தண்டாயுத பாணி சுவாமி கோயிலில் இருந்து சுவாமிகள் செட்டி குளம் கடைவீதியில் அமைந்துள்ள ஏகாம்ப ரேஷ்வரர் கோயி லுக்கு வந்தடைந்தது. அங்கி ருந்து சிறப்பு அலங்காரம் செய்த பிறகு வீதி உலா தொடங்கி முக்கிய வீதியின் வழியாக வீதி உலா நடை பெற்றது. முடிவில் சூரச ம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து செட்டி குளம் கடைவீதி அருகே உள்ள ஏகாம்பரேஷ்வரர் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடை பெற்றது. 

    • மூன்றாவது ஆண்டாக அய்யப்ப பக்தர்களுக்கான அன்னதான முகாம் தொடங்கப்பட்டது.
    • இங்கு கார்த்திகை,மார்கழி என இரண்டு மாதம் முழுவதும் என வரும் ஜனவரி 14-ம்தேதி வரை என 60 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும்.

    பெரம்பலூர்

    அகில பாரத அய்யப்ப சேவா சங்க பெரம்பலூர் மாவட்ட யூனியன் சார்பாக சிறுவாச்சூர் மலையப்ப நகர் பிரிவு அருகே மூன்றாவது ஆண்டாக அய்யப்ப பக்தர்களுக்கான அன்னதான முகாம் தொடங்கப்பட்டது.

    முன்னதாக காலை 6 மணிக்கு கணபதி ஹோ மமும் அதனை தொடர்ந்து கோ பூஜை நடந்தது. தனலட்சுமி குழுமத்தின் தலைவர் சீனிவாசன் அன்ன தான கூடத்தை திறந்து வைத்தார். அஸ்வின்ஸ் குழும தலைவர் கணேசன் சங்க கொடியினை ஏற்றி வைத்தார்.

    ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன் , லயன்ஸ் கிளப் ஆளுநர் இமயவரம்பன் , முன்னாள்

    விக்டரி லயன்ஸ் கிளப் தலைவர் குணசீலன் , முன்னாள் ஊராட்சி தலைவர் ராமராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். அகில பாரத அய்யப்ப சேவா சங்கத்தின் மத்திய துணை தலைவரும், மாநில இணை செயலாளரும், திருச்சி மாவ ட்டத்தின் செயலாளருமான ஸ்ரீதர் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் சங்க கவுரவ தலைவர் சேகர், மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் பால கிருஷ்ணன், பொருளாளர் தியாகராஜன், துணை தலைவர்கள் கோவிந்தராஜ், ரவீந்திரன், இணை செயலாளர் சதீஷ்குமார், ஆலோசகர் ரவிச்சந்திரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இங்கு கார்த்திகை,மார்கழி என இரண்டு மாதம் முழுவதும் என வரும் ஜனவரி 14-ம்தேதி வரை என 60 நாட்கள் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். மாலை அணிந்து அய்யப்பன் சுவாமி கோவிலுக்கு செல்லும் அய்யப்ப பக்தர்க ளுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    • பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் எளம்ப லூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம் ஹார விழா நடந்தது.

    விழாவையொட்டி பாலமுருகனுக்கு பல்வேறு வகையான வாசனை திரவி யங்களால் அபிஷேகங்கள் செ ய்யப்பட்டு மகாதீ பாரதனை காண்பிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று இரவு சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் நாகரத்தினம், அர்ச்சுணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் சுப்ரமணியன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்ய ப்பட்டு மகாதீ பாரதனை காண்பி க்கப்பட்டது. பின்னர் சுவாமி திருவீதி உலா வந்து தெப்பக்குளம் பகுதியில் முருகன் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு எளம்பலூர் பிரம்மரிஷி மலை யடிவாரத்தில் காக ன்னை ஈஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக முருகப்பெ ருமானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக செய்ய ப்பட்டு அலங்காரம் செய்ய ப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்க ப்பட்டது.

    இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொ ண்டு முருகனை வழிப்ப ட்டனர். பின்னர் அனை வருக்கும் அன்னதானம் வழங்க ப்பட்டது. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தவயோகி தவசிநாத சுவாமிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

    பெரம்பலூர் மாவ ட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செட்டிகுளம் பால தண்டாயுதபாணி கோவில், வாலி கண்டபுரம் வாலீ ஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நடந்தது.

    ×