search icon
என் மலர்tooltip icon

    தேனி

    • தனது தாயிடம் கம்பத்தில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூறிச்சென்ற அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது நகைக்கடை மேலாளர் பேசினார்.
    • அதில் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது பத்திரபதிவு அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்து கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார்.

    கம்பம்:

    பெரியகுளம் அருகே சருத்துபட்டியை சேர்ந்தவர் வீரமுருகன்(35). இவருக்கும் கம்பத்தை சேர்ந்த ரெஜினா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு பெண்கு ழந்தை உள்ளது. வீரமுருகன் தேனியில் உள்ள நகைக்கடை யில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடையின் திறப்பு விழாவையொட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். தனது தாயிடம் கம்பத்தில் தங்கிவிட்டு மறுநாள் வருவதாக கூறியுள்ளார். இந்தநிலையில் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது நகைக்கடை மேலாளர் பேசினார்.

    அதில் வீரமுருகன் வேலைக்கு வந்துகொண்டிருந்தபோது பத்திரபதிவு அலுவலகம் அருகே திடீரென மயங்கி விழுந்து கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்க னவே வீரமுருகன் இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.

    இதனைதொடர்ந்து வீரமுருகனின் தாய் கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.
    • சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). கூலித்தொழிலாளி. இவருக்கும், கம்பத்தை சேர்ந்த சினேகா(19) என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. கர்ப்பிணியாக இருந்த சினோகவிற்கு வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    கடந்த மாதம் சினோகவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கம்பம் கிராமச்சாவடி தெருவில் தனது தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். கடந்த 22-ந்தேதி பிறந்த குழந்தை வீட்டில் இருந்து திடீரென மாயமானது. பல இடங்களில் தேடிவிட்டு வீட்டில் இருந்த பால்கேனுக்குள் பார்த்தபோது குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு இறந்துகிடந்தது.

    இதுகுறித்து கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதலில் சந்தேக மரணம் என்றும், பின்னர் கொலை வழக்காகவும் மாற்றி போலீசார் விசாரித்து வந்தனர். பிறந்து 25 நாட்களே ஆன ஆண் குழந்தை தண்ணீர் கேனுக்குள் மூழ்கடித்து கொலை செய்தது யார் என்று இன்ஸ்பெக்டர் லாவண்யா, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் தாய் சினேகா மற்றும் பாட்டியிடம் துருவிதுருவி விசாரித்தனர்.

    இதில் குழந்தையை கொன்றது தாய் சினேகா என உறுதியானது. சம்பவத்தன்று தாயை குளிர்பானம் வாங்க வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய சினேகா குழந்தையை பால் கேனுக்குள் திணித்து கொன்றுள்ளார். அதன்பிறகு சந்தேகம் வராத அளவுக்கு பாத்ரூமில் சென்று குளிப்பது போல சென்றுவிட்டார். பின்னர் குழந்தையை தேடுவது போல மற்றவர்களுடன் சேர்ந்து நாடகமாடி உள்ளார்.

    ஆனால் போலீசார் விசாரணையில் அவர் கொலை செய்தது உறுதியானது. எதற்காக ஆண் குழந்தையை கொலை செய்தார். இவருக்கு வேறு யாருடனாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையையே கொலை செய்துவிட்டு தாய் நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாமனார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மருமகனை மிரட்டி வந்துள்ளார்.
    • சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து மருமகனை குத்தி காயப்படுத்தினார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது28). கூலித்தொழிலாளி. இவரது மாமனார் மாரியப்பன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு சதீஷ்குமாரை மிரட்டி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று மது குடிக்க பணம் தராததால் சாவியில் இருந்த மடக்கு கத்தியை எடுத்து சதீஷ்குமாரை குத்தி காயப்படுத்தினார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.

    • ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் புண்ணிய தலமான சுருளி அருவி பண்டார துறையில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
    • பின் லிங்கத்தின் மேல் சாத்த பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    கூடலூர்:

    சிவபெருமானுக்கு அன்னபூரணி அன்னம் இட்ட போது அவரைப் பிடித்திருந்த பிரம்ம ஹத்தி தோஷத்தில் இருந்து விடு பட்டார். அவர் அன்னம் இட்ட தினம் ஐப்பசி மாத பவுர்ணமி. இதனால் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று சிவாலயங்களில் அன்னா பிஷேக வழிபாடு நடை பெற்று வருகிறது. அன்னா பிஷேக பிரசாதத்தை உண்டால் நோய், நொடிகள் வராது என்பது ஐதீகம்.

    இன்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தேனி மாவட்டத்தின் புண்ணிய தலமான சுருளி அருவி பண்டார துறையில் அமைந்துள்ள ஆதி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சிவலிங்கம், நந்தியின் மீது, வடித்து வைக்கப்பட்ட சுத்தமான அன்னத்தை ஆண், பெண் பக்தர்கள் கொட்டி அபிஷேகம் செய்தனர். பின் லிங்கத்தின் மேல் சாத்த பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மீதம் உள்ள உணவு நீர்வாழ் உயிரினங்களுக்காக சுருளி புண்ணிய நதியிலும், முல்லைப் பெரியாற்றிலும், ஏரி, குளங்களிலும் கரைக்க பட்டது. இதையடுத்து அன்னதான மடத்தில் மாலை வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னாபிஷேக நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். குருகுலம் சிவனடியார்கள், பக்தர்கள் குழு , ஆதி அண்ணாமலையார் வட்ட கோவில் பாதுகாப்பு குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்த னர். இதேபோல தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களிலும் இன்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடை பெற்றது.

    • கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் 24-ந்தேதி நீர்மட்டம் 60.47 அடியாக உயர்ந்தது.
    • முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகைஅணை 71 அடிஉயரம் கொண்டதாகும். இதன்மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயராமலேயே இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் 48.65 அடியாக நீர்மட்டம் இருந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வில்லை. வைகை அணைக்கு பெரியாறு, கொட்டக்குடி யாறு, வருசநாடு, மூல வைகையாறு ஆகியவை மூலம் நீர்வரத்து கிடைக்கும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் 24-ந்தேதி நீர்மட்டம் 60.47 அடியாக உயர்ந்தது.

    முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதனால் 24-ந்தேதி 60.47 அடியாக இருந்த நீர்மட்டம் இன்றுகாலை 62.89 அடியாக உயர்ந்துள்ளது. 4 நாட்களில் 2 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைக்கு நீர்வரத்து 1370 கனஅடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 124.10 அடியாக உள்ளது. 1227 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1333 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின்நீர்மட்டம் 53.10 அடியாக உள்ளது. 54 கனஅடிநீர் வருகிறது. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 7 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து உத்தரவு வந்தது.
    • இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த கருப்பையா மகன் சங்கர்(35). இவர் மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் இருந்து தர்மபுரிக்கு மாறுதல் செய்து சங்கருக்கு உத்தரவு வந்தது. ஆனால் அங்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனவேதனையில் தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்ெகாலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் அமச்சியாபுரம் தெற்குதெரு காலனியை சேர்ந்த முத்து மனைவி மீனாட்சி(63). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த மீனாட்சி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். க.விலக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின்நீர்மட்டம் 124.25 அடியாக உள்ளது. வரத்து 1129 கனஅடி, திறப்பு 1333 கனஅடி. இருப்பு 3450 மி.கனஅடி.

    பெரியாறு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் இன்றுகாலை நிலவரப்படி 62.37 அடியாக உள்ளது. வரத்து 1508 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 4071 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. வரத்து 54 கனஅடி, திறப்பு 100 கனஅடி, இருப்பு 401.28 மி.கனஅடி.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடி, வரத்து 11 கனஅடி, திறப்பு 3 கனஅடி, இருப்பு 100 மி.கனஅடி.

    • பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குளத்தில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கி பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    தேனி:

    ஆண்டிபட்டி யூனியன், திருமலாபுரம் ஊராட்சி, பந்துவார்பட்டி விலக்கு அருகே செயல்பட்டு வரும் அர்ப்பணம் மதுபோதை விழிப்புணர்வு மறுவாழ்வு மையம் மற்றும் சுருளிபட்டி சங்கமம் அறக்கட்டளை சார்பில் பந்துவார்பட்டி விலக்கு பகுதியில் உள்ள குளத்தில் பனை விதை நடும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி தலைமை தாங்கி பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் வரதராஜன், சங்கமம் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சுரேஷ்குமார், சுருளிபட்டி அன்புராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அர்ப்பணம் மறுவாழ்வு மையம் இயக்குனர் சதிஷ் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பி.ஏ.ஐ., மாநில தலைவர், தொழிலதிபர் ஜெகநாதன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அர்ப்பணம் மறுவாழ்வு மையம் இணை இயக்குனர் வனிதா சதிஷ் நன்றி கூறினார்.

    • நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
    • பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள கைலாசபட்டியை சேர்ந்தவர் பார்த்திபன். (வயது 27). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

    இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் கருப்பையா (வயது 55). இவருக்கும் ஆட்டோ டிரைவரான பார்த்திபனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தினந்தோறும் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று தகாத வார்த்தைகளால் பார்த்திபன் பேசி வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பார்த்திபன் வழக்கம்போல் மதுபோதையில் கருப்பையா வீட்டின் முன்பாக நின்று கொண்டு தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்போது கருப்பையா அதை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

    அதனை தொடர்ந்து கருப்பையா, அவரது மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய மூவரும் சேர்ந்து பார்த்திபனை அரிவாள், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் பார்த்திபன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த பார்த்திபனின் தம்பியும் காயமடைந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தென்கரை போலீசார் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பார்த்திபனை மீட்டு பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து பார்த்திபனின் உடலை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே பார்த்திபன் இறந்த செய்தி அறிந்ததும் போலீசார் கருப்பையாவை தேடிவந்த நிலையில் அவர் தானாக முன்வந்து தென்கரை போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கருப்பையாவின் மகன் முத்துப்பாண்டி மற்றும் மருமகன் ராஜவேல் ஆகிய 2 பேரும் தலைமறைவாகினர். படுகாயம் அடைந்த பார்த்திபனின் தம்பி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனும் உயிரிழந்ததால் விரக்தியில் இருந்தார்.
    • இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் விஷம்குடித்து மயங்கினார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே அப்பிபட்டியை சேர்ந்தவர் பகவதி மனைவி பஞ்சவர்ணம்(60). இவர் எரசை பகுதியில் உள்ள பள்ளியில் சத்துணவு கூடத்தில் வேலை பார்த்து வந்தார். கணவர் இறந்துவிட்ட நிலையில் மகனும் உயிரிழந்ததால் விரக்தியில் இருந்தார்.

    அவரது மகள் புஷ்பம் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் விஷம்குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள்.
    • உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த பொன்னம்பலம்-வனிதா தம்பதியின் மகன் அபினவ்யஸ்வந்த்(15). இவர் தேவதானப்பட்டியில் கல்வி சர்வதேச பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரதமரால் அறிவிக்கப்பட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காக "பரிக்ஷாபே சச்சா 2023" என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    அதில் அறிவிக்கப்பட்ட கட்டுரை போட்டியில் கடமைகளில் கவனம் செலுத்துதல் என்ற தலைப்பில் தனது கட்டுரையை சமர்ப்பித்தார். அந்த கட்டுரையை பாராட்டி பிரதமர் நரேந்திரமோடி மாணவனுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது,

    உங்களை போன்ற இன்றைய தலைமுறை மாணவர்களின் ஆற்றல், தன்னம்பிக்கை, திறமைகளை பார்க்கும்போது மிகுந்த பெருமிதம் அடைகிறேன். வாழ்க்கையின் ஒவ்வொரு சோதனையிலும் நீங்கள் கண்டிப்பாக வெற்றிபெறுவீர்கள். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    • அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பிச்சைகனி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

    சின்னமனூர்:

    சின்னமனூரில் தேனி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜக்கையன் தலைமையில் ஊழியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டி அமைக்கும் பணியை எவ்வாறு அமைக்க வேண்டும் என எடுத்துக் கூறப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பிச்சைகனி முன்னிலையில் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி மதிவாணன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×