என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
திருப்பத்தூர்
- திருப்பத்தூர் எஸ்.பி.யிடம் புகார் மனு
- உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த புரட்சி என்பவர் அளித்த மனுவில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பஸ்கள், கடைகள், வணிக வளாகங்களில் 10 ரூபாய்
நாணயங்களை வாங்க மறுக் கின்றனர். எனவே, 10 ரூபாய் நாணயங்களை அனைத்து இடங்களிலும் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இக்கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி. புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில் (திருப்பத்தூர்), சரவணன் (ஆம்பூர்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தும்பேரி ஜமான்கொல்லி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் முரளி (வயது 22), கூலி தொழிலாளி.
இவர் தும்பேரி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், முரளியை எச்சரிக்கை செய்தனர்.
இருப்பினும் முரளி அந்த சிறுமியை அடிக்கடி சந்தித்து பேச வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் அண்ணன் சந்தோஷ், முரளியை பலமுறை கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முரளி இன்று காலை தும்பேரிக்கு வந்தார்.
இதனைப் பார்த்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முரளியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முரளி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் அம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முரளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கி இருந்த சந்தோஷை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் குப்பையில் உணவு பொருட்களை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளனர். அதில்,
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகள், கம்பெனி சிப்ஸ் வகைகள், டூத் பேஸ்ட், குளிர்பானங்கள் மற்றும் மளிகைப்பொ ருட்கள் ஏராளமான பாக்கெட்டுகள் கிடந்தன.
இதையறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை எடுத்து செல்ல அருகே சென்று பார்த்தனர். அப்போது, அவை அனைத்தும் காலாவதியானது என்பது தெரியவந்தது. எனவே,' அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர்.
அவ்வழியாக செல்லும் குழந்தைகள் குப்பையில் வீசப்பட்டுள்ள அந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அவற்றை பார்வையிட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், காலாவதியான உணவு பொருட்களை குப்பையில் வீசி சென்ற மர்ம கும்பலை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் சின்ன ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் பாபு (வயது 64). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர்கள் இருவரும் பைக்கில் இறைச்சி வாங்குவதற்காக இன்று காலை கடைக்கு சென்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த போது நாய் குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக சீனிவாசன் பிரேக் போட்டார். அப்போது பைக்கில் இருந்து நிலை தடுமாறி பாபு கீழே விழுந்தார். இதில் பாபுவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொருட்கள் தீயில் கருகி நாசமானது
- தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர்
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியில் நேற்று மாலை பெய்த மழை காரணமாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் தயாநிதி என்பவரின் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பிடித்துள்ளது.
உடனடியாக அப்பகுதி மக்கள் வீட்டில் இருந்த வர்களை வெளியேற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த டிவி, மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் கருகி நாசமானது.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தகவல்
- முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ளது
ஆம்பூர்:
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற் சித் துறையின் சார்பில் 100 சிறப்பு தனியார் துறைவேலை வாய்ப்பு முகாம் நடத்தவும், அதில் திருப்பத்தூர் மாவட் டத்திற்கு 3 முகாம் நடத்தவும் அரசு உத்தரவிட்டு இருந்தது.
அதன்பேரில் 2 வேலை வாய்ப்பு 'முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. 3-வது தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆம்பூர் இந்து மேல்நிலை ப்பள்ளியில் வருகிற 18-ந்தேதி நடக்கிறது.
இதில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.
எனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், 8-ம் வகுப்பு முதல் பட்டயப்ப டிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரி வித்துள்ளார்.
- நேருக்கு நேர் வேகமாக மோதியது
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு அருகே உள்ள கூவல்குட்டை பகுதியை சேர்ந்தவர் அரவிந்த்( வயது 28). இவர் தனது பைக்கில் ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது புலவர்பள்ளி ஏரிகரையில் எதிரே வந்த பைக் அரவிந்த் சென்ற பைக் மீது நேருக்கு நேர் வேகமாக மோதியது.
பைக்கில் வந்த அர்விந்த் மற்றும் வினோத்(30) ஆகிய 2 பேரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மாற்றம் செய்யப்ப ட்டனர்.
இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர்.
- தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பட்டாசை பொருத்தி வெடித்து சாகசம் செய்தனர். இதனை வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர். பைக்கில் முன்புறம் பட்டாசை பொருத்தி அதனை வெடிக்க செய்தனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வீடியோ போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- ஜெயிலில் அடைத்தனர்
- மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 22).
இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து புகாரின் பேரில் உமராபாத் போலீசார் முகேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று போலீசார் முகேஷை கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். மேலும் பள்ளி மாணவியை மீட்டு வேலூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.
- கேமரா காட்சிகளை வைத்து விசாரணை
- பொருட்கள் எரிந்து நாசமானது
ஆலங்காயம்:
வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் சவுகத் அலி (வயது 33). இவர் அதே பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடைக்கு மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது சவுகத் அலியிடம் திடீரென தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது.
இதனை தடுக்க வந்த சவுகத் அலியின் உறவினர் ஒருவர் மாற்றுத்தி றனாளியான அவர் இது குறித்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் தட்டி கேட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாற்றுத் திறனாளியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
நேற்று இரவு மீண்டும் சவுகத் அலி கடைக்கு மது பாட்டிலுடன் வாலிபர் வந்தார். அப்போது திடீரென மது பாட்டிலில் தீ வைத்து கடைக்குள் வீசினார்.
இதில் கடையில் இருந்த சில பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து சவுகத் அலி வாணியம்பாடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை காட்சிகளை வைத்து வாலிபரை தேடி வருகின்றனர்.
- வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பட்டாசை பொருத்தி வெடித்து சாகசம் செய்தனர்.
இதனை வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர். பைக்கில் முன்புறம் பட்டாசை பொருத்தி அதனை வெடிக்க செய்தனர்.
இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வீடியோ போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- டி.ஐ.ஜி. அஞ்சலி செலுத்தினார்
- மீட்பு பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட் டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை அரசு விரைவு பஸ் மற்றும் தனியார் ஆம்னி பஸ் நேருக்கு நேர் மோதி விபத் துக்குள்ளானது.
இந்த விபத்தில் 6 பேர் பலியாகினர். உடனடியாக அங்கு விரைந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியைச் சேர்ந்த, வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த முரளி (வயது 45) என்பவரும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து முரளி போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கேயேபடுத்து ஓய்வெடுத்தார். சிறிது நேரத்தில் அவரது செல்போன் ஒலித்த போது எடுக்காததால், சக போலீசார் எழுப்ப முயன்றனர்.
அப்போது அவர் சுயநினைவின்றி இருந்ததால், கிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏட்டு முரளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவரது உடல் நேற்று முன்தினம் அவரது சொந்த ஊரான ஆம்பூருக்கு கொண்டுவரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடந்தது.
திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், ஏட்டு உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், செந்தில் உள்ளிட்ட போலீசார் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஏட்டு முரளியின் வீட்டிற்கு சென்று அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
உயிரிழந்த ஏட்டு முரளி கடந்த 2003-ம் ஆண்டு காவலராக பணிக்கு சேர்ந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகாலமாக ஆம்பூர் தாலுக்கா மற்றும் டவுன், உமராபாத், வாணியம்பாடி டவுன் மற்றும் தாலுகா உள்ளிட்ட போலீஸ் நிலை யங்களில் பணியாற்றினார்.
அவருக்கு திருமணம் மனைவி மற்றும் சஞ்சனா (7) என்ற மகளும், லோகித் (5) என்ற மகன் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்