search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • இலவசமாக பானிபூரி கேட்டு தகராறு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் தண்டபாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம உத்தர் மகன் லல்லி (23). இவர் திருப்பத்தூரில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை திருப்பத்தூரைச் சேர்ந்த சஹில் ரகுமான் (31) என்பவர், லல்லியிடம் பானிபூரி வாங்கி சாப் பிட்டுள்ளார்.பின்னர் சஹில் ரகுமானிடம் லல்லி பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து தனக்கு எப்போதும் இலவசமாக பானிபூரி தரவேண்டும் என சஹில்ரகுமான் தெரிவித்தாராம்.

    இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சஹில் ரகுமான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லல்லியை குத்தியுள்ளார்.

    இதுகுறித்து லல்லி அளித்த புகாரின்பேரில், திருப்பத்தூர் நகர போலீஸார் வழக்குப்பதிந்து, சஹில் ரகுமானை கைது செய்தனர்.

    • கர்நாடகாவில் போலீசார் கைது செய்தனர்
    • பெயர்- விலாசம் மாற்றம்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலகண்ணன்(வயது 42). தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

    மேலும் இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். இதில் கமலக்கண்ணன் முன்விரோதம் காரணமாக

    கடந்த 2011-ம் ஆண்டு, ஜூன் மாதம் 5-ந் தேதி வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள சக்தி நகரில் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் நேதாஜி நகரை சேர்ந்த சுதாகர்(வயது 31), விஸ்வநாதன்(23) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த விஸ்வநாதன் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகினார்.

    இவரைப் பிடிக்க கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வாணியம்பாடி கோர்ட்டு பிடி வாரண்டு பிறப்பித்து போலீசாருக்கு உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை பிடிக்க வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் திருப்பதியில் விஸ்வநாதன் வசித்து வந்த நிலையில் மீண்டும் போலிஸ் தன்னை தேடுவதை அறிந்த அவர் கர்நாடகா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டார்.

    பின்னர் கர்நாடகவில் பதுங்கியிருந்த விஸ்வநாதனை தனிப்படை போலீசார் வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    விஸ்வநாதனிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    ஜாமினில் வெளியே சென்றவர் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியில் தஞ்சம் அடைந்தார்.

    அங்கு தன் பெயர், விலாசம் மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை மாற்றி கொண்டு, வாய் பேசாத லட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

    இவருக்கு 12 வயதில் மகன் உள்ளான். நாங்கள் திருப்பதி வருவதை அறிந்த விஸ்வநாதன், கர்நாடகாவுக்கு தப்பி சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்று கைது செய்தோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • சிறுவன் உட்பட 4 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி, விவசாயி. இவர் நிலத்தகராறு காரணமாக கடந்த 2022-ம். ஆண்டு டிசம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக 14 வயது சிறுவன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை சம்பவம் நடைபெற காரணமாக இருந்த பிரச்சனைக்குரிய அந்த நிலத்தை கண்காணிக்க கொலை செய்யப்பட ராமமூர்த்தியின் மகன் தினேஷ்குமார்(31) ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியுள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி இரவு அங்கு பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி திருடிச் சென்றனர்.

    இது குறி்த்து தினேஷ்குமார் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமமூர்த்தி கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுவன், சிறுவனின் தந்தை மகேந்திரன்(40), பார்த்திபன்(23), விமல்குமார்(22) உள்ளிட்ட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி தர்மராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஆலங்காயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று சாரைபாம்பை பிடித்தனர். அதேபோல் ஆலங்காயம் அடுத்த மிட்டூர் பகுதியில் மெக்கானிக் கடையில் புகுந்த 7 அடி நீளம் உள்ள சாரை பாம்பு மற்றும் ஆலங்காயம் படகுப்பம் வண்ணாங்குட்டை பகுதியில் வீட்டின் அருகில் இருந்த 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பையும் தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.

    பிடிபட்ட 3 பாம்புகளும் ஆலங்காயம் வனத்துறையினர் ஒப்படைக்கப்பட்டு, காப்பு காட்டில் விடப்பட்டது.

    • கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது
    • 9 நாட்களாக பூஜைகள் நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சென்னாம்பேட்டை பகுதியில் பாண்டுரங்கன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மகளிர் குழுக்கள் சார்பில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு கடந்த 9 நாட்களாக பூஜைகள் நடந்தது.

    அதன்படி நவராத்திரி விழா கடைசி நாளான நேற்று பெண்கள் பாடல்கள் பாடி, சரஸ்வதி தேவியின் அருள்பெற வேண்டியும் சிறப்பு வழிப்பாடுகள் நடத்தினர்.

    • கொரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்டன
    • பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    ஆம்பூர்:

    ஆம்பூரில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சா லைகள், காலணி தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

    அதனால் ஆம்பூரிலி ருந்தும் சென்னைக்கு ரெயில் மூலம் பணியாளர்கள் சென்று வருகின்றனர். அதே போல வியாபார நிமிர்த்தமாக ஆம்பூரிலிருந்து, வெளியூர்க ளுக்கும், வெளியூரிலிருந்து ஆம்பூருக்கும் வரும் வியாபாரிகள் ரெயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

    மேலும், ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளுக்கு ரெயில் மூலம் சென்று வருகின்றனர்.

    கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது ரெயில், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

    ஆம்பூர் ரெயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட திருப்பதி-மைசூர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

    அதன்படி திருப்பதி -மைசூர் செல்லும் ரெயில் நேற்று இரவு முதல் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதனால் பயணிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 10 பைக் பறிமுதல்
    • சினிமா பாணியில் விரட்டி பிடித்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் குற்ற பிரிவு போலீசார் நேற்றிரவு சான்றோர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 3 பேர் போலீசாரை பார்த்து பைக் நிறுத்தி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அவர்களை போலீசார் சினிமா பாணியில் விரட்டி சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள கோட்டைகாலனி பகுதியை சேர்ந்த நிரஞ்சன் (வயது18), வல்லரசன் (24), அரவிந்தன் (20) என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது.

    இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 பைக்குகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்குவரத்துக்கு இடையூறாக நடத்தப்பட்டதால் நடவடிக்கை
    • போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரமாக கண்காணித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலையில் குதிரை வண்டிகளை வைத்து ஓட்ட பந்தயம் நடத்துகின்றனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு ள்ளாவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வந்தனர்.

    அதன்படி போலீசார் இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டதோடு தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று போக்குவரத்துக்கு இடையூறாக குதிரை பந்தயம் நடந்தது.

    இதனை பார்த்த போலீசார் உடனே அந்த குதிரை வண்டியை விரட்டி பிடித்தனர்.

    மேலும் பந்தயம் நடத்திய வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த பிரேம் (வயது 23) என்ற இளைஞரை வாணியம்பாடி தாலுகா போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து குதிரை வண்டியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக தேசிய நெடுஞ்சாலைகளில் குதிரை பந்தயம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • அரசு பள்ளியில் கட்டப்பட்டுள்ளது
    • பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், கொரட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 750 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த தலைமை ஆசிரியர் உள்பட 30 பேர் பணிபுரிகின்றனர்.

    இங்குள்ள மாணவர்களின் அவசர தேவைக்காக கட்டப்பட்ட கழிவறை கட்டிடங்கள், கட்டி முடித்து பல வருடங்கள் ஆனதால் பழுதடைந்து காணப்பட்டது.

    எனவே புதிய கழிவறை கட்டித்தர வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் தனியார் சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் மாணவிகளுக்கு நவீன வசதிகள் கொண்ட பிரத்தியேகமான கழிவறை கட்ட முன் வந்தது. அதன்படி ரூ.23 லட்சம் மதிப்பில் கப்பல் வடிவில் புதிய கழிப்பறை கட்டப்பட்டது.

    மேலும் கழிவறை கதவுகளில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியமூட்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் நாப்கின், டிஸ்பென்சர்கள் மற்றும் எரிப்பான்கள் உள்ளடக்கிய 8 கழிவறை என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல் வடிவிலான கழிவறை நேற்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    அரசு பள்ளியில் நவீன வசதிகளுடன் கப்பல் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள கழிவறை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    • ஆந்திராவை சேர்ந்தவர் கைது
    • ஆட்டோ பறிமுதல் செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் ரேசன் அரிசி சேகரிக்கப்பட்டு கர்நாடகம் மற்றும் ஆந்திராவிற்கு விற்கப்படுகிறது. இதனால் குடிமை பொருள் குற்ற புலனாய்வு பிரிவு கண்காணிப்பாளர் ஸ்டாலின் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட பகுதி தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை பணிகளை தீவிர படுத்த குடிமை பொருள் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    உத்தரவின் பேரில் தமிழக ஆந்திர எல்லை சோதனை சாவடியில் குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் முத்தீஸ்வரன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அவ்வழியாக வந்த 1 ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது கண்டறியப்பட்டது இதனை தொடர்ந்து ஆட்டோவில் கடத்தப்பட்ட சுமார் 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் ராமகுப்பம் பகுதியை சேர்ந்த வாசு (47) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் சிறைப்பிடிப்பு- பரபரப்பு
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த வெங்க ளாபுரம் ஊராட்சியில் சுமார் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர்.

    கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சீரான குடிநீர் வழங்கவில்லை. திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெங்களாபுரம் அருகே திருப்பத்தூர்- திருவண்ணா மலை சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த அரசு பஸ்சையும் சிறை பிடித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதும க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டிஎஸ்பி தனிப்படை குற்ற பிரிவு போலீசார் நேற்று இரவு ஆம்பூர் பைபாஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக பைக்கில் வந்த வாணியம்பாடி டவுன் வி.எஸ்.கே. நகர் சேர்ந்த மாதவன் வயது (20) என்வரை பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது ஆம்பூர் சுற்று புற பகுதியில் கடந்த சில நாட்களாக மாதவன் 7 பைக்குகளை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×