search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • விளையாடிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    ஆலங்காயத்தை அடுத்த நிம்மியம் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் யோகன்ராவ் (வயது 2). இந்த குழந்தையை குளிக்க வைப்பதற்காக கடந்த 7-ந்தேதி வெந்நீர் வைத்திருந்தனர்.

    அப்போது அங்கு விளையாடிய குழந்தை யோகன்ராவ் பாத்திரத்தை இழுத்ததில் வெந்நீர் கொட்டி படுகாயமடைந்தது.

    உடனடியாக சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டது. இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்
    • கண்காணிப்பு கேமராவில் பதிவு

    ஆம்பூர்:

    ஆம்பூர் பைபாஸ் சாலை அருகே நாகாலம்மன் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் 2 நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை திருட முயற்சி செய்துள்ளனர். திருட முடியாததால் திரும்பி சென்றனர். இந்த காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த சரவணன் (வயது 20) மற்றும் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் சிறுவனை வேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த சின்னகூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). வாணியம்பாடி தனியார் மேல்நிலைப்பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று மதியம் ஜோலார்பேட்டை- கேத்தாண்டப்பட்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு 2 கைகள் மற்றும் கால்கள் துண்டாகி இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 57 சென்ட் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனையை சித்தப்பா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு
    • விரைந்து நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கலந்திரா கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி- லட்சுமி தம்பதியினர் இவர்களுக்கு சுபாஷ் என்ற மகனும், ரோஸி மற்றும் ரீட்டா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சுபாஷ் திருமணம் முடிந்து சின்ன கல்லுப்பள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இதே போல் 2 பெண் பிள்ளைகளும் திருமணம் முடிந்து சேலத்தில் அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். தாய் லட்சுமி கடந்த 12 வருடத்திற்கு முன்பும், தந்தை ஜோதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் கலந்திரா கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான 57 சென்ட் விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை உள்ளது. அதனை ரீட்டாவின் சித்தப்பா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகள் ரீட்டா தங்களுடைய விவசாய நிலம் மற்றும் வீட்டு மனையை அளவீடு செய்து தரக்கோரி ஆன்லைன் மூலம் பதிவு செய்து விட்டு இது வரையில் 8 முறை சேலத்தில் இருந்து வாணியம்பாடி தாசில்தார் ஆபிஸில் உள்ள நில அளவியர் வந்து சென்றுள்ளார்.

    வரும் போதெல்லாம் அடுத்த வாரம் என்று சொல்லி அனுப்பி வருவதால் ஆத்திரமடைந்த ரீட்டா மற்றும் அவரது சகோதரி ரோஸி கைகுழந்தையுடன் தாசில்தார் ஆபிஸ் முன் அமர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டவுன் போலீசார் மற்றும் தாசில்தார் சாந்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் விரைந்து நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம்
    • கலெக்டர் குடும்பத்தினரிடம் வழங்கினார்

    ஆலங்காயம்:

    கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உயிரிழந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் முதல் அமைச்சர் நிவாரண நிதி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த தினேஷ்குமாரின் தயார் தனலட்சுமியிடம் வழங்கினார். அப்போது சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • ரோந்து பணியின்போது சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது பால்னாங்குப்பம் பகுதியில் பெட்டி கடையில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதை பாக்கெட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது போதை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசர் பெட்டிகடை உரிமையாளர் ராஜா (வயது 54) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கடையில் இருந்த போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • 8 பேர் மீது வழக்கு
    • தவணை தொகை செலுத்த வேண்டும் என கேட்கும் போது தகராறு ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த ஜங்கலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொற்கொடி இவர் மகளிர் குழு தலைவியாக செயல்பட்டு வருகிறார்.

    இவரது குழுவில் சங்கீதா என்பவர் தனது உறவினர் நிவேதா என்பவருக்கு கடன் தொகை பெற்று கொடுத்து உள்ளார் இதனால் சங்கீதா கடன் தொகை தாமதமாக கட்டுவதாலும் இறுதி தவணை தொகை செலுத்த வேண்டும் என கேட்கும் போது தகராறு ஏற்பட்டது.

    மகளிர் குழு தலைவி பொற்கொடி மற்றும் 4 உறுப்பினர்கள் சங்கீதாவிடம் நிலுவைத் தொகை கேட்கும் போது தகராறு ஏற்பட்டு தகாத வார்த்தைகளால் திட்டி இரு தரப்பினரும் கையால் தாக்கிக் கொண்டனர்.

    நாட்டறம்பள்ளி போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கர்நாடகாவில் இருந்து திருப்பத்தூருக்கு எடுத்து சென்றனர்
    • கூலி தொழிலாளர்கள் 2 பேர் கைது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் பெரிய கரம் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் என்கிற சரவணன் (23). இருவரும் கம்பி கட்டும் வேலை செய்து வந்தனர்.

    இவர்கள் இருவரும் கர்நாடகாவில் இருந்து 23 அட்டை பெட்டிகளில் காரில் மது பாட்டில்கள் கடத்தி வருவதாக கந்திலி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் இன்று காலை கந்திலி போலீசார் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது பெங்களூரு வில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    சோதனையில் 23 அட்டைப்பெட்டிகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் காருடன் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து ராம்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை வசூல்
    • உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை

    ஆலங்காயம்:

    ஆயுத பூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி டோல்பிளாசா அருகில் போக்குவரத்து துறை ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின் பேரில் வேலூர் துணை ஆணையர் நெல்லையப்பன் மேற்பார்வையில் வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட்ராகவன்( வாணியம்பாடி), அமர்நாத் (ஆம்பூர்) ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி சொகுசு பஸ்களை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.

    வழக்கமாக ரூ.700 கட்டணம் வசூல் செய்வதற்கு பதிலாக ரூ.2000 வரை கூடு தலாக அதிக கட்டணம் வசூல் செய்து வந்ததும்,சரக்கு வாகனங்கள் போல் பஸ்சின் மீது பொருட்கள் ஏற்றிச் சென்றது, சுற்றுலா வாகனம் என அனுமதி பெற்று பயணிகளை ஏற்றி பயன்படுத்தி வந்தது என அனுமதிக்கு புறம்பாக இயக்கி வருவது கண்டறியப்பட்டது. 4 ஆம்னி பஸ்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    மேலும் பஸ்களின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அதன் மீதான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.

    • பொதுமக்கள் பீதி
    • ஆந்திர வனதுறையினருக்கு தகவல்

    ஆலங்காயம்:

    தமிழக எல்லையான ஆந்திர மாநிலம் குப்பம் அருகே வனப்பகுதி உள்ளது. நாயனூர் - பெரிய வளைவு சாலை ஓரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது.

    அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாடுவதை தங்கள் செல்போன் மூலம் பதிவு செய்தனர். அதனை சமூக வலைதள ங்களில் பதிவிட்டு ள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த பொது மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆந்திர வனதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்து றையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

    மேலும் சிறுத்தை தமிழக எல்லைக்குள் புகுந்துள்ளதா? ஆந்திரா எல்லைக்குள் புகுந்ததா என கண்காணித்து வருகின்றனர். தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள கொல்லப்பள்ளி, பெத்த வங்கா பகுதிகளுக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமே உள்ளதால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை நடமாடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் சாய்பாபா தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 35). தொடப்பம் வியாபாரி. இவருக்கு மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தாயார் விஜயா பல்வேறு இடங்களில் தேடியும் இவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வியாபாரியை தேடி வருகின்றனர்.

    • வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார்
    • உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் பக்கிரிதக்கா பகுதியில் உள்ள ஊது பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் ஆகி ஷாமிலா (வயது 26) என்கின்ற மனைவியும் தியாஸ்ரீ (வயது 5), ஜெயசுகன் (வயது 1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

    அப்போது நேற்று முன்தினம் இரவு கார்த்திக் மனைவி வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை கண்டித்தார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை.

    இதனால் கார்த்திக் தனது உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதனால் கார்த்திக் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தாய் மற்றும் 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.

    ×