search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • பொக்லைன் எந்திரம் பறிமுதல்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி, அம்பலூர், கொடையாட்சி, உதயேந்திரம், சி.வி.பட்டறைபகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் வாணியம்பாடி அடுத்த தேங்காய்பட்டறை பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி கடத்தப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு புகார் வந்தது.

    அவரது உத்தரவின்பே ரில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அளிக்கப் பட்ட வீட்டுமனை பகுதிக்கு அருகே 10 அடி ஆழம் வரையில் தோண்டப்பட்டு அதிலிருந்து மணல் கடத்தப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து தாசில்தார் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தாலுகா அலுவலகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.

    அப்போது டிரைவர் பிரகாசம் மற்றும்துறையேரி பகுதியை சேர்ந்த வி.சி.அன்பரசு, அவரது தம்பி சிவக்குமார் ஆகியோர் பொக்லைன் எந்திரத்தை ஏன் பறிமுதல் செய்கிறாய் என கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தாசில்தார் வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி போக விடாமல் தடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மஞ்சுநாதன் ஆகியோருடன் இணைந்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.

    மேலும் அன்பரசு, சிவக்குமார் மற்றும் டிரைவர் பிரகாசம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேவஸ்தா னம் கிராம நிர்வாக அலுவலர் மீரா வாணி யம்பாடி தாலுகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • 600 மரக்கன்றுகள் நடபட்டது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூ டவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் வேர்கள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.

    மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்று சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    வேர்கள் அறக் கட்டளை தலைவர் வடிவேலு சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

    சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக புன்னை, மாமரம், நாவல், பாதாம், புங்கன், மயில்கொன்றை, மகோகனி, தென்னை, வேங்கை உட்பட 600 மரக்கன்றுகள் நடபட்டது. இதில் சப்-கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது
    • மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். சப்- கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் இனியன் வரவேற்றார். இதில் ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    மேலும் மாற்று திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மாற்று திறனாளிகளிடமிருந்து அனைத்துத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மனுக்கள் பெறப்பட்டது.

    கண் மருத்துவ பிரிவு, காது-மூக்கு-தொண்டை, எலும்பு மூட்டு சிகிச்சை, குழந்தை நலப்பிரிவு, மன நோய் பிரிவு உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    • வேலை முடிந்து வீடு திரும்பியபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பி கஸ்பா அன்னை வாசுகி தெருவை சேர்ந்தவர் ஜெகஜீவன் ராம் (வயது 65). இவர் சேலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வேலு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஜெகஜீவன் ராம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெக ஜீவன் ராம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்க வேண்டும்
    • பொதுமக்கள் வலியுறுத்தி

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இதில் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி - மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பச்சூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதனால் பச்சூர் ரெயில்வே மேம்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் ஆபத்தான முறையில் ரெயில் தண்ட வாளத்தை கடந்து செல்லும் சுழல் உள்ளது.

    சில சமயங்களில் மாண வர்கள் சைக்கிள்களுடன் தண்டவாளத்தை கடக்கும் போது திடீரென ரெயில் வந்துவிடுகிறது. இதனால் மாணவர்கள் பயத்துடனே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

    அதேபோல் பச்சூரில் ரெயில் நீண்ட நேரம் நிற்பதால், ரெயில் பெட்டிகளுக்கு இடையே உள்ள கப்ளிங் மீது ஏறியும், பெட்டிகளின் அடியில் புகுந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

    எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் சிரமமின்றி தண்ட வாளத்தை கடந்து செல்ல மாற்று பாதை பாதை அமைத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதியதாக கட்டப்பட்ட வரும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கலெக்டர் தகவல்
    • வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் நலனில் பாதுகாப்பு மற்றும் சேவை செய்யும் அக்கறை யுள்ள அமைப்புகள் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கு நிதி உதவி, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திட கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதி உதவி பெற்றிட https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ahf_TNAWB_041122.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கம்பம், அடிபம்பு மீது வேகமாக மோதியது
    • போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்

    ஆலங்காயம்:

    சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டி ருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் அடிபம்பு மீது வேகமாக மோதியது.

    இதில் மின் கம்பம் மற்றும் பம்பு முற்றிலுமாக சேத மானது. இந்த விபத்தில் டிரைவர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதி மக்கள் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வாணிய ம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த வாணி யம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி விட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கம்பம், அடிபம்பு மீது வேகமாக மோதியது
    • போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்

    ஆலங்காயம்:

    சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி லாரி ஒன்று சென்றது. லாரியை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 42) என்பவர் ஓட்டினார்.

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள நெக்குந்தி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்று கொண்டி ருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த மின் கம்பம் மற்றும் அடிபம்பு மீது வேகமாக மோதியது.

    இதில் மின் கம்பம் மற்றும் பம்பு முற்றிலுமாக சேத மானது. இந்த விபத்தில் டிரைவர் செல்வத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனடியாக அப்பகுதி மக்கள் டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக வாணிய ம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதித்தது. வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து நின்றதால், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த வாணி யம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விபத்தில் சிக்கிய லாரியை அப்புறப்படுத்தி விட்டு, போக்குவரத்தை சரி செய்தனர்.

    விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 1,188 பேர் மனு அளித்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பட்டா முகாம் நடைபெற்றது.

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

    ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. க.தேவராஜி முன்னிலை வகித்தார். வாணியம்பாடி சப்-கலெக்டர் பிரேமலதா அனைவரையும் வரவேற்றார்.

    முகாமில் வாணியம்பாடி, ஆம்பூர் தாலூகாவை சேர்ந்த பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், பெயர் திருத்தம் உள்ளிட்டவை கேட்டு 1,188 பேர் மனு அளித்தனர்.

    இதில் உதயேந்திரம் பேரூராட்சி மன்ற தலைவர் பூசாராணி, ஆம்பூர் தாசில்தார் குமாரி, கிராம நிர்வாக அலுவலர்கள் , வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முடிவில் வாணியம்பாடி தாசில்தார் மோகன் நன்றி கூறினார்.

    • பலத்த காயமடைந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பறவைகுட்டை கிராமத்தை சேர்ந்தவர் மாசிலாமணி (வயது 60). இவர் கடந்த 18-ந் தேதி இரவு மிட்டூரில் இருந்து பறவைகுட்டை நோக்கி சென்றார்.

    அப்போது அவர் நிலைத்தடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து, பலத்த காயமடைந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் மாசிலாமணியை மீட்டு சிகிச்சைக்காக, வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பயனின்றி மாசிலாமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காலி பணியிடங்கள்
    • வருகிற 1-ந்தேதி கடைசி நாள்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவர், திருப்பத்தூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் பெரும்பலநோக்கு கூட்டுறவு சங்கம், கூட்டுறவு நகர வங்கிகள், பணியாளர் கூட்டுறவு சிக்கணம் மற்றும் கடன் சங்கங்கள், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வருகிற 1-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

    இதற்கான எழுத்துத் தேர்வு 24.12.2023 அன்று பகல் 10 மணிமுதல் 1 மணி வரை திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி.

    முற்பட்ட வகுப்பினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து வகுப்பினருக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

    விண்ணப்பதாரார்கள் எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அரசாணைப்படியான இடஒதுக்கீடு, இனச்சுழற்சி முறை, அவர்கள் தெரிவித்த முன்னுரிமை விருப்பச் சங்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு, உரிய சங்கத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவார்கள்.

    மேலும் இது தொடர்பான விரிவான விவரங்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் http://drbtpt.in வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் சீனிவாசன் (வயது 40), சசி (40) ஆகியோர் செட்டியப்பணுர் கூட்டு சாலையில் இருந்து வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக ஒரே பைக்கில் நெக்குந்தி நோக்கி சென்றுகொ ண்டிருந்தனர். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே பலியானார். சசி படுகாயமடைந்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களின் உதவியுடன் படுகாயமடைந்த சசியை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பலியான சீனிவாசன் உடலை கைப்பற்றி வாணியம்பாடி தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×