search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற உமர் முகமது(43). வக்கீல். இவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா.

    இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்தநிலையில் உமர் முகமது மற்றும் அவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த ர் உமர் முகமது தனது மனைவியை சரிமாரியாக தாக்கியுள்ளார்.

    இதில் ஹாஜா ஜெய்னுல் அரபா மயங்கினார். இதைத் தொடர்ந்து உமர் முகமது தலைமறைவாகி விட்டார்.

    மறுநாள் ஹாஜா ஜெய்னுல் அரபாவிடமிருந்து போன் ஏதும் வராததை கண்ட அவரது பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டிற்குள் படுகாயத்து டன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் உமர் முகமது மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் ஹாஜா ஜெய்னுல் அரபா மற்றும் அவரது இரு குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து உமர் முகமதுவை கைது செய்யகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

    இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இரவுக்குள் கைது செய்கிறோம் என வாக்குறுதியளித்தார்.

    இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    பின்னர் போலீசார் நேற்றிரவு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் பாலசுப்பிரமணியம் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த உமர் முகமதுவை கைது செய்து அழைத்து வந்து திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.
    • திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவ ட்டம் வலங்கைமான் அருகே உள்ள முனியூர் கிராமத்தை சேர்ந்தவ் ராசப்பன் (வயது 55) தொழிலாளி.

    இவர் அதே பகுதியில் நடந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்தார்.

    அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அதிர்ச்சியடைந்த சக பணியாட்கள் 108 ஆம்புலனசை வரவ ழைத்தனர்.

    பின்னர் மயங்கி விழுந்த ராசப்ப னை பரிசோதித்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கொத்தூர் கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.
    • பொதுமக்கள் சாலையின் நடுவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ரெகுநாதபுரம் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் உள்ள தார் சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது.

    கிராம மக்கள் இந்த சாலையின் வழியே அம்மாபேட்டை உள்ளிட்ட அருகில் உள்ள மற்ற ஊர்களுக்கும் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    சாலை வெகு நாட்களாக பராமரிப்பின்றி மேடு பள்ளங்கள் நிறைந்து காணப்படுவதால் கடும் அவதியடைந்து வந்தனர்.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலையின் நடுவில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உடனடியாக சாலை சீரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    • மன்னார்குடியில் புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 6 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரி கர்ணன், மன்னார்குடி நகர சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீமதி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் ஆகியோர் மன்னார்குடி நகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில் மன்னார்குடி பஸ் நிலையம், கடைத்தெரு, தாலுகா அலுவலக ரோடு, பந்தலடி, கீழப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 கடைகள் கண்டறியப்பட்டன.

    இந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 கடைகளுக்கும் சீல் வைத்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

    • வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.
    • காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் சுராஜ்முகமது(வயது58).

    விவசாயியான இவர் கட்டி மேட்டிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்வதற்காக வேதாரண்யத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சில் ஏறினார்.

    கட்டி மேடு பகுதி வளைவில் பஸ் திரும்பிய போது பஸ்சின் பின்பக்க படியில் நின்று கொண்டிருந்த சுராஜ்முகமது மற்றும் கண்டக்டர் பிரசன்னா ஆகிய இருவரும் பஸ்சில் இருந்து வெளியே சென்று விழுந்தனர்.

    இதில் சுராஜ் முகமதுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    கண்டக்டா் பிரசன்னாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    காயமடைந்த இருவரும் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு அவர்களை பாிசோதனை செய்த டாக்டர்கள் சுராஜ்முகமது உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

    கண்டக்டர் பிரசன்னா உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிைரவர் வருண்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருத்துறைப்பூண்டியில் நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆறு, ஏரி, குளங்கள் ஆகியவை உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ஆறுகள் தினத்தையொட்டி நீர்நிலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுத்தை வெளியிட்டு பேசுகையில்:-

    ஆறு, ஏரி, குளங்கள் போன்றவை அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நீராதாரங்களை கொடுக்கக்கூடியது.

    இவைகளை நாம் மாசுபடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு விட்டுச்செல்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

    நாட்டின் வளத்திற்கு ஆறுகளே பெரும் பங்கு வகிக்கிறது என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் கோமதி செந்தில்குமார், கணக்காளர் முத்து மீனாட்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புரட்டாசி திருவோணத்தை யொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதனையொட்டி வேதாந்த மகாதேசிகர் திருநட்சத்திரம், புரட்டாசி திருவோணம் நட்சத்திரத்தில் ஆழ்வார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.

    அதனைத்தொடர்ந்து சீதா, லட்சுமன, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருத்துறைப்பூண்டியில் 1 லட்சம் பனைவிதைகள் நடும் பணி தொடங்க உள்ளது.
    • பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு பனை பாதுகாப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார், முசிறி விதை யோகநாதன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஒரு லட்சம் பனைவிதைகள் நடும் பணி இந்த வாரம் இறுதியில் (செப்டம்பர்) தொடங்க உள்ளது.

    இதற்காக பனை விதைகள் சேகரிப்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

    இந்த பணியை சேவை அமைப்புகள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    பணிகள் முடிந்த பிறகு நெடுஞ்சாலைகள், ஆற்றங்கரைகள், குளம், வாய்க்கால், ஓடை, பள்ளி, கல்லூரி, கோவில் வளாகங்க ளில் பனை விதைகள் நடும்பணி தொடங்கும்.

    இப்பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், சேவை அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    பணியானது வருகிற நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும்.

    இப்பணி முழுக்க மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    நிகழ்வில் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

    பேட்டை சிவா, கோட்டூர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி, மடப்புரம், ரொக்க குத்தகை, அண்ணாநகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் விக்னேஷ், மாதவன், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் வினோத், நகர தலைவர் அய்யப்பன், ஒன்றிய தலைவர் பூபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    முடிவில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயபால் நன்றி கூறினார்.

    • பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.
    • முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 31-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    இதற்கு பா.ஜனதா மாநில விவசாய அணி துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்குகிறார்.

    இந்து முன்னணி ஒன்றிய தலைவர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசுகிறார்.

    அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாஷம், இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை நிறுவனர் ராமகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.

    சிறப்பு அழைப்பாளர்களாக பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகாணந்தம், இந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார், பா.ஜனதா மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, மாவட்ட துணை தலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

    ஊர்வலமானது மதியம் 2 மணிக்கு தொடங்கி ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலிருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்ஹா, மேலக்காடு, கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையின் முக்கிய பகுதி மற்றும் ஊர்வல பாதை முழுவதும் 165 இடங்களில் கண்காணிப்பு கேமாரக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    5ஆளில்லா குட்டி விமானங்கள், ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    100-க்கும் மேற்பட்ட இடத்தில் போலீசார் நிறுத்தி பைனாக்குலர் பயன்படுத்த உள்ளது.

    மேலும் பதற்றமான பகுதிகளில் சாலை இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள், ஆஸ்பட்டாஸ் சீட் கொண்ட தடுப்பு வேலிகள் அமைத்து மற்றும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான பேரிக்காடுகள் போடப்பட்டுள்ளது.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருச்சி சரக ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை டிஐஜி ஜெயசந்திரன், திருச்சி டிஐஜி பலவன், விழுப்புரம் டிஐஜி ஜியாவுல் ஹக், திருவாரூர் எஸ்.பி.சுரேஷ்குமார், மயிலாடுதுறை எஸ்பி மீனா, தஞ்சை எஸ்.பி ஆஸிஷ் ராவத், எஸ்ஐயூ எஸ்பி பாண்டியராஜன், திருச்சி டிராபிக் எஸ்பி செல்வகுமார், சேலம் எஸ்பி மதிவாணன், கரூர் எஸ்பி சுந்தரவதனம், கடலோர காவல் படை எஸ்பி அதிவீரப்பாண்டியன், திருச்சி ரயில்வே எஸ்பி செந்தில்குமார், அரியலூர் எஸ்பி பரோஸ்கான் அப்துல்லா உட்பட 10 ஏடிஎஸ்பி, 37 டிஎஸ்பிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், ஊர்காவலர் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள தஞ்சை, நாகை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களை சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினரும், கமோண்டோ போலீசாரும் வந்துள்ளனர்.

    மேலும் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். முத்துப்பேட்டை நகரை போலீசார் தீவிர கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

    இதனை முன்னிட்டு முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 9 டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டுகிறோம்.
    • கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியு ள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது,

    இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி வருகிறது.

    ராமநாதபுரம், காரை க்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோ ட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லை விளாகம், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம், அகஸ்தியம்பள்ளி, திருவாரூர் போன்ற பகுதி யிலிருந்து சென்னையில் வசித்து வரும் பொது மக்கள், அலுவலர்கள், வர்த்தகர்கள், பணியாள ர்கள், மாணவ மாணவிகள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வந்து திரும்பும் வகையில் சென்ற ஆண்டு சிறப்பு ரயிலை இயக்கியது போல் (சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் - இராமேஸ்வரம் வண்டி எண் 06041/06042) இந்த ஆண்டும் சென்னை எழும்பூரில் இருந்து ராமநாதபுரம் வரை திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டு க்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி ரயில் தடத்தின் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுகிறோம்.

    இந்த சிறப்பு ரெயில்களை முன்கூட்டியே அறிவித்தால் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வசதியாக இருக்கும்.

    கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிகள் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பதற்றமான பகுதிகளில் வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
    • 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலத்தில் உப்பூர், ஆலங்காடு, தில்லைவிளாகம், ஜாம்புவானோடை, அரமங்காடு, கோவிலூர், மருதங்காவெளி உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக ஆசாத்நகர் சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல், ஓடக்கரை வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது. ஊர்வலத்தை முன்னிட்டு போலீஸ் துறை சார்பில் கடந்த ஒரு வார காலமாக பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட வருவாய் துறை சார்பிலும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில் கண்காணிக்க ஆங்காங்கே தற்காலிக கோபுரங்கள். பதற்றமான பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு கம்புகள் கொண்டு வேலிகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த ஊர்வலத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ×