search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருவாரூர்:

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு நோய் தாக்குதல் இருந்து வருகிறது.

    இது தொடர்பாக அனைத்து அரசுமருத்துவ மனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசுக்களை அழிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் காரணமாக 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் 8 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றவ ர்களுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து சென்னைக்கு அனுப்ப ப்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனையின் சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    டெங்கு பாதிக்கப்பட்ட வர்களுக்கு பிரத்தியேகமாக தனியாக அறை ஒதுக்கப்பட்டு அதில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் டெங்கு சிகிச்சை பெறு பவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையின் சுற்றுப்புறங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை என ஈடுபட்டுள்ளனர்.

    • மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.
    • மோட்டார் சைக்களிவ் வந்த இருவர் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், இருள்நீக்கி பகுதியை சேர்ந்தவர் காந்திமதி (75) .

    இவர் மன்னார்குடி செங்குந்த முதலியார் தெருவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.

    அங்கு நேற்று மதியம் பள்ளிக்கு சென்று இருந்த பேரக்குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்களிவ் வந்த இருவர், சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் இருவரும் காந்திமதியிடம் தங்களை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டு, வயதானவர்கள் கழுத்தில் நகை அணிந்து தனியாக செல்லக்கூடாது வழிப்பறி நடக்கிறது.

    எனவே கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை கழட்டித் தாருங்கள்" எனக் கூறி அவரது மணிபர்ஸில் வைப்பது போல, ஏமாற்றி செயினை திருடி சென்றுள்ளனர்.

    வீட்டில் வந்து மூதாட்டி காந்திமதி பார்த்தபோது செயின் இல்லை.

    இது தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் எனக் கூறி மூதாட்டி காந்திமதி இடம் தங்க சங்கிலியை நூதனமாக திருடிய இந்த சம்பவம் அனைத்தும் அப்பகுதியில் இருந்த சிசி டிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

    அந்த சிசிடிவி வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் மன்னார்குடி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்துக்கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சி

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த ஓவரூர் கிராமத்தில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் பனை விதை நடும் விழா நடைபெற்றது. விழாவில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக ஊராட்சி தலைவர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 30 ஆயிரம் பனை விதைகளை ஒரே நேரத்தில் விதைப்பு செய்யும் நிகழ்ச்சியை மாரிமுத்து எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இதில் வட்டார தோட்ட க்கலை உதவி இயக்குனர் இளவரசன் திட்டத்தை பற்றி விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முருகையன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா, பாசன கமிட்டி செயலாளர் காளிதாஸ், ஊராட்சி துணை தலைவர் ரமேஷ், வட்டார தோட்டக்கலை அலுவலர் சூர்யா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இளங்கோவன், புலவேந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு, தில்லைவிளாகம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணி நடந்தது.
    • கடற்கரை பகுதிகளில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ஓசோன் தினம் மற்றும் சர்வதேச கடற்கரை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள், பள்ளிகல்வித் துறை இணைந்து முத்துப்பேட்டை தாலுகா தொண்டியக்காடு, தில்லைவிளாகம் கடற்கரை பகுதியை தூய்மை செய்யும் பணி நடைப்பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார்.

    திருவாரூர் மாவட்ட சுற்று ச்சூழல் உதவி பொறியாளர் விஜயகுமார், தில்லைவிளாகம் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், பாலம் தொண்டு நிறுவனச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ராசேந்திரன் வரவேற்றார். தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் மாயகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி மாணவ மாணவி களின் விழிப்புணர்வு பேரணி, தூய்மை பணியை துவக்கிவைத்து முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி பேசும்போது ஓசோன் என்ற வாயுமண்டலம் சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதா கதிர்களை பூமிக்கு வராமல் தடுத்து மனிதனையும், உயிரினங்களையும் காக்கிறது, பல்வேறு காரணங்களால் அதில் ஓட்டை விழுந்துள்ளது, சுற்றுச்சூழலை காப்பதன் மூலம் அதை சரிசெய்ய முடியும்,

    கடற்கரை பகுதிகளில் போடப்படும் குப்பைகளால் நீர் வாழ் உயிரினங்கள் அழிகின்றன. கரைக்கு முட்டையிட வரும் ஆமைகள் வலைகளில் சிக்கி உயிரிழக்கின்றன.

    இதனால் உயிர் பன்மயம் பாதிக்கப்ப டுகிறது எனவே நீர் நிலைகளில் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்று தூய்மை பணியை மேற்கொண்டனர் கிழிந்தவலைகள், பிளாஸ்டிக், மரத்துண்டுகள், பழைய துணிகளை சேகரித்து ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பிறகு சுற்றுசூழல் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    நிகழ்ச்சியை தேசிய பசுமைப்படை ஒருங்கி ணைப்பாளர் நடனம், மாவட்ட ஆட்சியர் அலுவலக பசுமைத் தோழர் பேகன் ஜமீன் ஆகியோர்

    ஒருங்கிணைத்தனர்.மாவட்ட சுற்றுச்சூழல் மன்றங்க ளின் ஒருங்கிணை ப்பாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். தொண்டியக்காடு கீழ வாடியக்காடு பள்ளி மாணவ மாணவிகள் தூய்மை பணியில் கலந்துக்கொண்டனர்.

    • கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார்.
    • அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பேரளம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள இலவங்கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 24).

    இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் இரண்டு நாள் விடுமுறையில் கார்த்திக் வீட்டிற்கு வந்துள்ளார்.

    நேற்று மாலை தனது தம்பி கணேஷ், நண்பர் முகேஷ் ஆகியோருடன் கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார்.

    3 பேரும் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் உள்ள பள்ளத்தில் கார்த்திக் நீந்தியபோது திடீரென தண்ணீரில் மூழ்கினார்.

    இதனை பார்த்த உடன் வந்தவர்கள் கார்த்திக்கை மீட்க முயன்றும் முடியவில்லை.உடனடியாக அவர்கள் கரைக்கு வந்து நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நன்னிலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து கார்த்திக்கை தேடினர்.இரவு வெகுநேரமாகி விட்டதால் போதிய வெளிச்சம் இன்றி தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறையினர் மீண்டும் கார்த்திக்கை தேடும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது 20 அடி ஆழத்தில் புதைந்திருந்த கார்த்திக்கை பிணமாக மீட்டனர்.

    பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வந்த வாலிபர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர் போன்று வேடமிட்டு அனைவரையும் அசத்தினார்கள்.
    • கொசு என்று அரக்கனை அழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ- மாணவி கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர், போன்று வேடமிட்டு வந்து அனை வரையும் அசத்தினார்கள்.

    மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடைந்த பொருள்கள் மற்றும் ஆட்டுக்கல் கொடக்கல், உடைத்த தேங்காய் மூடி, போன்ற பொருள்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற வாசகத்தை கூறி கொசு என்று அரக்கனை அழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .

    மேலும் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்து வரை அணுக வேண்டும் என்றும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

    • வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது.
    • புதிய பஸ் நிலையத்திலிருந்து போலீசார் அணிவகுப்பு ஒத்திகை புறப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையில் வருகிற 24-ந்தேதி இந்து முன்னணி சார்பில் 31-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முத்துப்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக புதிய பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்ட அணிவகுப்பு ஒத்திகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை முன்னிலையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சோமசுந்தரம், ஆயுதப்படை டி.எஸ்.பி. சந்திரமோகன், இன்ஸ்பெக்டர்கள் முத்துப்பேட்டை ராஜேஷ், பெருகவாழ்ந்தான் முணியான்டி, எடையூர் அனந்த பத்மநாதன், களப்பாள் விஜயா, திருக்களார் செந்தில்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

    • கர்நாடக முதல்-மந்திரி மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயி கள் சங்கம் சார்பில் காவிரி டெல்டாவில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்து ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலா ளர் குடவாசல் சரவணன், மாநில துணை செயலாளர் செந்தில் குமார் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி தொடர்ந்து 2 மாத காலமாக அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளார்.

    இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பான மத்திய அரசுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள காவிரி டெல்டா ரெயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக போராட்டம் குறித்த பிரசுரங்களை நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கினார்.

    • நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடை பெற்றது.
    • தேனீ வளர்ப்பின் பயன் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும் கூறப்பட்டது.

    திருவாரூர்:

    தேசிய தேனீ வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் நீடாமங்கலத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு குறித்து 7 நாள் பயிற்சி தொடங்கியது.

    இந்த பயிற்சியை விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தொடங்கி வைத்து தேனீ வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டார்.

    உழவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேனீ வளர்ப்பின் பங்கு குறித்தும், சுற்றுச்சூழல் சமநிலைப்படுத்துதலில் தேனீக்களின் பங்கு குறித்தும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலெட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் பேசினர்.

    இதனை தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெரியார் ராமசாமி, தொழில்நுட்ப வல்லுனர்(பயிர் பாதுகாப்பு) ராஜேஷ் ஆகியோர் தேனீ வளர்ப்பின் பயன் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், பயிற்சியின் நோக்கம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.

    பயிற்சியில் தேனீவளர்ப்பு கருத்துக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.

    • நன்னிலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • ஆதலையூர், பாக்கம் கோட்டூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்மினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி,

    குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர்,

    ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்மினியோகம் இருக்காது.

    இந்த தகவலை திருவாரூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரபா தெரிவித்துள்ளார்.

    • 11 வயது சிறுமி உள்ளிட்ட நான்கு பேர் நேற்று அனுமதி
    • காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழப்பு

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் நேற்று 11 வயது சிறுமி உள்ளிட்ட நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாதிரி முடிவு வருவதற்கு முன்னதாக உயிரிழந்தார்.

    கேரள மாநிலம் பசும்பாரா பகுதியை சேர்ந்த அவர், டாக்டர் படிப்பை முடித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தை மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களையும் டெங்கு அச்சுறுத்தி வருகிறது. கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பீகாரில் வைரஸ் காய்ச்சலால் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

    • கருத்தரங்கில் தங்களது கல்லூரியில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
    • எழுத்து பிழை காரணமாக சனாதன எதிர்ப்பு என்று தவறாக கூறப்பட்டுவிட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, திரு.வி.க கல்லூரியின் முதல்வருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நாளை (வெள்ளிக்கிழமை) காட்டூர் கலைஞர் கோட்டத்தில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கில் தங்களது கல்லூரியில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில், சனாதன எதிர்ப்பு குறித்த தங்களது கருத்துக்களை கலைஞர் கோட்டத்தில் நடைபெறும் கருத்தரங்கில் தெரிவிக்குமாறு கூறி, கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட சுற்றறிக்கை மாணவர்களுக்கு அனுப்பட்டு இருந்தது. இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது.

    இந்நிலையில், மாணவர்களுக்கு திருத்தப்பட்ட சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில், கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சனாதனம் பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து கல்லூரி முதல்வர் ராஜாராமனிடம் கேட்டபோது:-

    முதலாவதாக கல்லூரி நிர்வாகம் சார்பில் சனாதன எதிர்ப்பு பற்றிய தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என தவறாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. அதில் சனாதனம் பற்றிய கருத்துக்களை தெரிவிக்கும்படி தான் கூறப்பட வேண்டி இருந்தது. ஆனால் எழுத்து பிழை காரணமாக சனாதன எதிர்ப்பு என்று தவறாக கூறப்பட்டுவிட்டது.

    மேலும், எங்களது கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவோ, எதிராகவோ செயல்படவில்லை. சனாதனம் பற்றி கருத்து சொல்வதற்கும், சொல்லாமல் இருப்பதற்கும் மாணவர்களுக்கு உரிமை உண்டு. எனவே, இந்த சுற்றறிக்கை திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் பெயரிலே செயல்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது என்றார்.

    ×