search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கோ பூஜை, கணபதி ஹோமம், சாய் நாதரா, விசேஷ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலை பாமணி ஊராட்சி சுந்தரபுரியில் உள்ள சீரடி சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேக முதலாமாண்டு நிறைவு விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு காகட ஆர்த்தி, கோ பூஜை, கணபதி ஹோமம், சாய் நாதரா, விசேஷ ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பின்னர், பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

    அதனை தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை வழிபட்டனர்.

    தொடர்ந்து, ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இதில் மன்னார்குடி செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை தாளாளர் திவாகரன், ஸ்ரீராம் உலகரட்சகர் சீரடி சாய்பாபா அறக்கட்டளை தலைவர் கருணாநிதி, செயலாளர் ராஜேந்திரன், துணை தலைவர் ஆடிட்டர் ராகவன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

    • பெண்ணின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.
    • அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் பேகம். இவருடைய கணவர் ஷாகுல் ஹமீது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 3 குழந்தைகள் இவர்கள் மூன்று பேரும் திருவாரூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்று விட்டு யாஸ்மின் பேகம் வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற போது 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உள்ளே மறைந்து இருந்து ஜாஸ்மின் பேகம் உள்ளே நுழைந்ததும் அவரின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.

    இதில் மயக்கம் அடைந்து ஜாஸ்மின் பேகம் சம்பவ இடத்தில் கீழே விழுந்துள்ளார்.

    அப்போது அவர் கழுத்து மற்றும் காலில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

    ஜாஸ்மின் பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் கிருஷ்ணனுக்கு படைக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அடுத்த வடக்குபட்டம் கிராமத்தில் உள்ள கோகுலகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

    விழாவை யொட்டி உறியடி மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் ஏராளமான சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக கிருஷ்ணனுக்கு பிடித்த சீடை, முறுக்கு, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    • கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்துள்ளது.
    • மண்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த கனிஷ் மீது மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்கு ட்பட்ட தீபங்குடி தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர்.

    விவசாய கூலித் தொழிலாளி.

    இவரது மகன் கனிஷ் (வயது 8). இவர் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரர் பீட்டர் என்பவருக்கு திருமணம் நடக்கவிருப்பதால் தங்களது ஓட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்துள்ளது.

    மேலும் வேலையாட்கள் கீற்றுகளை பிரித்து விட்டு கீற்று போடுவதற்காக விட்டுச் சென்ற நிலையில் அந்த கூரைக் கொட்டகையில் உள்ள மண்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த கனிஷ் மீது மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது.

    சுவர் மேலே விழுந்ததால் சிறுவன் சத்தம் போட முடியாமல் சுவருக்கிடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

    இதனையடுத்து சிறிது நேரம் கழித்து இதனை கவனித்த குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து குடவாசல் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோ தனைக்காக வைத்துள்ளனர்.

    மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியு ள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
    • பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கிராம உள்ளாட்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்கள் செய்த வேலைக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காத தையும் கண்டித்தும், பல வருடங்களாக வழங்காமல் இருக்கும் நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு ஒன்றிய கவுரவ தலைவர் பெத்தபெருமாள் ஒன்றிய சங்க தலைவர் கருணாநிதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஏஐடியுசி துணை செயலாளர் காந்தி, சங்க மாவட்ட தலைவர் சாந்தகு மார் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.

    • மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட, மருந்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், திருத்துறைப்பூண்டியில் சங்கத்தின் தலைவர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.

    செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    பொருளாளர் நடராஜன், நிர்வாகிகள் பாபு, பாஸ்கரன், மற்றும் திருவாரூர் மாவட்டம் முழுவதுமிருந்து வந்திருந்த மருந்து வணிகர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில், ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களுக்கு உரிமம் வழங்கப்படாத நிலையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆன்லைன் மருந்து விநியோகஸ்தர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஒரே மருந்து, ஒரே விலை என்பதை நாடு முழுவதும் உறுதி செய்ய வேண்டும்.

    உரிமங்கள் இன்றி ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    உரிமங்கள் இல்லாத மருந்து வணிகர்களுக்கு மருந்துகளை விநியோகம் செய்கின்ற விநியோகஸ்தர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மீது மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை வழக்கு தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்-அமைச்சர் கர்நாடக அரசுக்கு காவிரி விவாகரத்தில் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தண்ணீரை பெற்று தர தமிழக அரசை வலியுறுத்தியும் அ.ம.மு.க. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார்.

    துணை பொது செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான எம். ரங்கசாமி முன்னிலை வகித்தார். முன்னதாக மன்னை நகர செயலாளர் ஆனந்தராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி. வி. தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற போது சென்னையில் இருந்து விமானம் மூலம் கர்நாடக சென்று அங்கு அனைத்து அமைச்சர்களுடன் பேசிய தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவிரி நீர் பிரச்சினை குறித்து கர்நாடகா முதல்வரிடம் பேச விரும்பவில்லை.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக அரசுக்கு காவிரி விவாகரத்தில் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டா லும் அ.ம.மு.க 40 தொகு திகளிலும் போட்டியிடும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன், அம்மா தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சத்தியமூர்த்தி, விவசாய பிரிவு செயலாளர் சங்கர், வர்த்தக பிரிவு செயலாளர் அம்பிகா சங்கர், வக்கீல் பிரிவு இணை செயலாளர் ரவிச்சந்திரன், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் செங்கொடி, தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், அம்மா தொழிற்சங்க பேரவை மின்வாரிய பிரிவு தலைவர் ராவணன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், மன்னார்குடி நகர, ஒன்றிய நிர்வாகிகள், நீடாமங்கலம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    • வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயிர் செய்வது அனைவருக்கும் விருப்பமான விஷயம்.
    • ஒரு தொகுப்பில் மா ஒட்டு செடி, கொய்யா பதியன், நெல்லி ஒட்டுச்செடி, எலுமிச்சை ஒட்டுச்செடி மற்றும் சீதா செடி உள்ளது.

    திருவாரூர்:

    முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொருவருக்கும் பழச்செடிகளை தங்களது வீட்டு தோட்டத்தில் வளர்த்து பயிர் செய்வது ஒரு விருப்பமான விஷயம். குறிப்பாக ஒட்டு செடிகளை வாங்கி நடவு செய்வது அனைவராலும் முடியாத காரியம். ஒட்டுச்செடியின் விலை கூடுதலாகவும் அனைவராலும் எளிதில் வாங்கக்கூடிய விலையில் இருப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசால் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பழ தொகுப்பு தளை அரசு நிர்ணயித்த மானிய விலையில் வழங்குதல் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்கு 547 பழச்செடி தொகுப்பு வினியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 5 வகையான பழச்செடிகள் அடங்கிய ஒரு தொகுப்பில் ஒரு மா ஒட்டு செடி, கொய்யா பதியன், நெல்லி ஒட்டுச்செடி, எலுமிச்சை ஒட்டுச்செடி மற்றும் சீதா அடங்கிய தொகுப்பின் முழு விலை ரூ.200 ஆகும்.

    இதில் மானிய விலை ரூபாய் 150 நீங்களாக ரூ. 50-ஐ ஒரு ஆதார் கார்டு நகலுடன் செலுத்தி முத்துப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து அல்லது tnhorticulture.gov.in என்ற இணையத்தின் வாயிலாகவும் பதிவு செய்து மானியம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.
    • சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகி ப்பாளர்கள் சங்க தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது:-

    அந்த்யோதயா ரெயிலானது முன்பதிவு இல்லா பெட்டி களுடன் ஏழை, எளிய மக்களுக்காக இந்திய ரெயில்வே துறையால் இயக்கப்பட்டு வரும் ரெயிலாகும்.

    இந்த ரெயில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இயக்கப்பட வில்லை என்பது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த குறையாக உள்ளது.

    இதனால் அந்த மக்கள் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் செல்கின்றனர்.

    எனவே, அப்பகுதி மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் சென்னை செல்ல ஏதுவாக திருநெல்வேலியில் இருந்து பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி- விஸ்வரூபம், காலசந்தி பூஜைகள் ஆகியவை நடந்தது.
    • தொடர்ந்து, மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் (கிருஷ்ணன் கோவில்) குடமுழுக்கு நடைபெற்றது.

    இக்கோவிலில் குடமுழுக்கு நடந்து 60 வருடங்கள் கடந்த நிலையில் அறநிலையத்துறையினர் கோவிலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவு செய்தனர்.

    இதன்படி கோவில் திருப்பணி வேலைகள் நிறைவடைந்து யாகசாலை பூஜைகள் தொடங்கியது. நேற்று காலை 7 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி-விஸ்வரூபம், காலசந்தி பூஜை, நித்யஹோமம், மூலமந்திரஹோமங்கள் கடம் புறப்பாடு நடந்தது.

    தொடர்ந்து காலை 9.30 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. 9.45 மணிக்கு மூலஸ்தான தீபாராதனை நடந்தது. மாலை திருக்கல்யாணம் நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜவிநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து படைக்கப்பட்டது.

    இதேபோல் ஞான சித்தி விநயாகர் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி,

    நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவில் தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவில் விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் கோவில் விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவில் விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    • நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும்.
    • காவல்துறை பணி கடுமையான சவாலான பணி.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் பணியில் இருக்கும்போது உயிரிழந்த சிறப்பு சப்-இன்ஸ்பெ்கடர் ரமேஷ்குமார், எடையூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து விருப்ப ஒய்வு பெற்று உயிரிழந்த நம்பிராஜன் குடும்பத்தினருக்கு தலா 7 லட்சம் வீதம் 14 லட்சம் வழங்கினர்.

    இந்த நிகழ்வில் கலந்துகொண்ட திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேசும்போது காவல்துறையில் தங்களது பேட்ஜ் நண்பர்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் எப்பொழுதும் உறுதுணையாக இருப்போம் என காட்டுவதாக இந்த நிகழ்வு உள்ளது. காவல்துறை பணி கடுமையான சவாலான பணி. மன அழுத்ததை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டு இனி மாதம் ஒரு முறை குடும்பத்தினருடன் அதிகாரிகளுடன் தங்கள் கஷ்டங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்படும். சுவர் இருந்தால் தான் சித்திரம் என்ற பழமொழிக்கு எடுத்துகாட்டாக நம் உடல் உறுதியாக இருந்தால் தான் பணியை சிறப்பாக செய்ய முடியும். அதனால் மது. புகையிலை பழக்கம் உள்ளவர்கள் அந்த பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டும் என்றார். இந்நிகழ்வில் திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி.சோமசுந்தரம். இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உடனிருந்தனர்.

    ×