search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்.
    • ஷாலினி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட அண்ணா காலணி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஸ்வரி.இவரது கணவர் கலிய பெருமாள்.இவர் கோயம்பு த்தூரில் கொத்தனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ஷாலினி அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மேலும் மகேஸ்வரி திருவாரூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் மகேஸ்வரி நகை கடைக்கு சென்று விட ஷாலினி தனது பள்ளிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மகேஸ்வரி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது ஷாலினி மின்விசிறியில் தனது துப்பட்டாவின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் முதற்கட்டமாக ஷாலினி அடிக்கடி மொபைல் போனில் பேசி வந்ததாகவும் இதுகுறித்து மகேஸ்வரி கண்டித்த காரணத்தினால் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிய வருகிறது.

    மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
    • பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகரமன்ற தலைவர் கவிதா பாண்டியன் முன்னிலை வகித்தனர்.முன்னாள் மாணவர் நல் நூலகர் ஆசைத்தம்பி வரவேற்றார்.

    பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை மாரிமுத்து எம்.எல்.ஏ. வழங்கி பேசுகையில்:-தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கி வருகிறது.

    இன்றைய சூழ்நிலையில் பல்வேறு விதமான ஊடகங்களை பயன்படுத்தி கல்வியில் மட்டுமல்லாது சமுதாய சேவைகள் சமுதாயத்தோடு பொறுப்புணர்வை உணர்ந்து செயல்படுதல் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ளுதல் அன்றைய தினம் நடத்தப்படும் பாடப் பகுதிகளை அன்றைய தினமே புரிந்து படித்து எழுதி பார்த்தல் வேண்டும்.பெற்றோர்கள் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் .

    விளையாட்டு, கலை இலக்கியம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறும் வகையில் தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    முறையான பயிற்சி கடுமையான முயற்சியின் மூலம் அனைவருமே அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்தோடு இருக்க வேண்டும் என்றார். முடிவில் ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

    • சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.
    • 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது.

    அதன்படி, பல்வேறு சுற்றுலா ஆபரேட்டர்கள், விமான நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக விளங்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

    எனவே, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருது பெற விண்ணப்பிக்கலாம். சிறந்த டூர் ஆப்ரேட்டர், சிறந்த உள்நாட்டு டூர் ஆப்ரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான கூட்டாளர், சிறந்த தங்குமிடம் என 17 வகையான விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27-ந் தேதி சென்னையில் வழங்கப்பட உள்ளது. அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

    விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு சுற்றுலா அலுவலருக்கு 89251 58497 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த போது போலீசாரிடம் சிக்கினார்.
    • திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில ஆன்லைன் லாட்டரி சீட்டு சிலர் விற்பனை செய்து வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் அதே பகுதியில் உள்ள குரவஞ்செட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் பழனித்துரை (வயது 41) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தபோது கையும்களவுமாக சிக்கினர்.

    இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

    • அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி கால்நடை ஆஸ்பத்திரி அருகே சிலர் அனுமதியின்றி மது விற்பனை செய்வதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பநாதன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி (வயது 45) என்பவர் அரசு மதுபானங்களை வாங்கி வந்து அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பக்கிரிசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.
    • கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் திருவாரூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி நடைபெற்றது.

    இதில் மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவன் யோகேஷ்ராஜ் 2-ம் இடம் பிடித்தார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மாணவனை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார்.

    பின்னர், மாணவன் யோகேஷ்ராஜையும், அவரது பெற்றோரையும், மாணவனை போட்டிக்கு தயார் செய்த தமிழாசிரியர் ராசகணேசனையும், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராஜன், துணை தலைவர் கைலாசம் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
    • அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ பெருமலை, மேல பெருமலை. குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெல் சாகுபடி வயலுக்கு தேவையான நீர் முறையாக வரவில்லை. இதனால் வயலில் வெடிப்பு ஏற்பட்டு பயிர்கள் கருகும் நிலைக்கு சென்றது.

    இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டடோர் ஊராட்சி மன்ற தலைவர்கள் வளர்மதி, முருகானந்தம், செல்வி ஆகியோர் தலைமையில் இன்று திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி கடை தெரு பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

    இந்த திடீர் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் எடையூறு போலீசார் மற்றும் திருத்து றைப்பூண்டி உட்கோட்ட பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தை முடிவில் விரைவில் வயலுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    இதனால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

    • பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடை பெற்றது.
    • வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பழைய நீடாமங்கலம் துணை சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராணி முத்துலட்சுமி ெதாடங்கி வைத்தார்.

    முகாமில் 5 வயதிற்கு கீழ் உள்ள விடுபட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த தடுப்பூசி பணியை கிராம சுகாதார செவிலியர் மரியம்மாள் மேற்கொண்டார்.

    இந்த முகாம் நேற்று தொடங்கி வருகிற 12-ந்தேதி வரை நடக்கிறது.

    எனவே முகாமை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.
    • கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியி ட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை உழவர்களிடையே பிரபலபடுத்தி ஊக்குவிக்கவும், அங்கக இடுபொருட்களை உழவர் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யவும், 2023-24-ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இயற்கை விவசாயம் செய்திடும் அல்லது செய்திட ஆர்வமுள்ள விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கும் மையம் நிறுவ ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

    இதன்மூலம் இயற்கை இடுபொருட்கள் உற்பத்திக்கான கலன்கள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, பேக்கேஜிங், லேபிலிங் மற்றும் மூல பொருட்கள் வாங்க பயன்படுத்தலாம்.

    இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் குழுக்களுக்கு தங்கள் பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் உழவன் செயலியின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவ லுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
    • முகாமில் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா கலந்து கொண்டு பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் திருத்துறைப்பூண்டி பகுதி பள்ளியில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களு க்கான தலைமை பண்பு மற்றும் புத்தாக்க பயிற்சி முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    நூற்றாண்டு லயன்ஸ் சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சிவகுருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

    முகாமில் மாவட்ட தொடர்பு அலுவலர் ராஜப்பா கலந்து கொண்டு பேசினார்.

    இதில் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் சோமசுந்தரம், ஆலத்தம்பாடி ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் அன்பழகன் மற்றும் மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

    கலந்து கொண்டவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பின்னர், மாணவர்களுக்கு மரக்கன்று மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்ப ட்டன.

    முடிவில் பாமணி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அந்தோணிசாமி நன்றி கூறினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி செய்திருந்தார்.

    • 20 நபர்களுக்கு ஹார்லிக்ஸ் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
    • டாக்டர் பாபு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து பேசினார்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ரோட்டரி டெல்டா சங்கம் சார்பாக 20 நபர்களுக்கு மதர் ஹார்லிக்ஸ் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க தலைவர் மாணிக்கவாசகம் வரவேற்று பேசினார். இன்னர்வீல் சங்கம் சார்பாக உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டது. தலைவி ராஜேஸ்வரி, செயலாளர் வினோதா, முன்னாள் தலைவி கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சங்க மருத்துவ சேர்மன் டாக்டர்பாபு கலந்து கொண்டு தாய்ப்பால் மகத்துவம் குறித்து பேசினார். தலைவர் மாணிக்கவாசகம், செயலர் அகிலன், பொருளாளர் விஜய்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
    • இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

     திருவாரூர்

    திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் கலந்து கொண்டு தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் கலந்துகொண்டனர்.

    பின்னர் கலெக்டர் கூறியதாவது:- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணி அமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

    முகாமில் 2404 வேலை நாடுனர்களும், 96 வேலையளிக்கும் நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான வேலை நாடுனர்களை தேர்வு செய்தனர். இதில் 307 வேலை நாடுனர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 160 வேலை நாடுனர்கள் இரண்டாம் கட்ட தேர்விற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ×