search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர்கள் தெய்வ சகாயம், பாஸ்கரன், தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் நடராஜன் வரவேற்றார்.

    வட்டார வளமைய சிறப்பு பயிற்சி ஜானகிராமன் பேசுகையில், சமச்சீர் உணவு அல்லது சரிவிகித உணவு என்பது வயதிற்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ற வகையில் அளவிலும் குணத்திலும் தேவைக்கேற்ற உணவுப் பொருள்களைக் கொண்டதாகும்.

    இவ்வுணவு உடலுக்கு வேண்டிய கலோரிகள், புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அனைத்தையும் போதுமான அளவு கொடுத்து சிறிதளவு எதிர்பாராத தேவைக்கும் பயன்படக்கூடிய அளவில் உணவுச் சத்துக்களைக் கொடுக்கிறது.

    சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    உடலின் இயக்கங்கள் சரிவர நடைபெற்று, உடல் நலமும் நல்ல முறையில் இருக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்க ட்டைகள் மாண வர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி செய்து இருந்தார்.

    ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், ஆடின் மெடோனா, அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
    • ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    மத்திய ரெயில்வே மந்திரிக்கு, தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

    காரைக்குடி- மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள தில்லைவிளாகம் ரெயில் நிலையம் சுதந்திர இந்தியாவின் முதல் ரெயில்வே அமைச்சர் கும்மட்டிதிடல் அமரர்சந்தானம் சொந்த ஊருக்கு அருகில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான ராமர், நடராஜர் கோவில் உள்ள கிராமத்தின் பெயர் கொண்ட ரயில் நிலையம் ஆகும்.

    உலகப் பிரசித்தி பெற்ற ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 250 மாணவ- மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே புலிவலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் புலிவலம், காட்டாற்று பாலம், கூடூர், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 640 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தினந்தோறும் 250 மாணவ மாணவிகளுக்கு இங்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் எப்போதும் போல் நேற்று புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது.

    மதிய உணவு உட்கொண்டு பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளியில் மயக்கம் அடைந்துள்ளனர்.

    அதனையடுத்து மயக்கம் அடைந்த மாணவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதித்தனர்.

    இதில் சௌமியா மற்றும் காவியா ஆகிய இரண்டு மாணவிகளுக்கு உடல்நலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் 7ம் வகுப்பு படித்து வரும் ஜெகதீஸ்வரன் தர்ஷன் சாரநாதன் சஞ்சனா சுபலட்சுமி மாதேஷ் மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் முகேஷ் நிவாஸ் ஆகியோர் தனி வார்டில் அனுமதி க்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    சிகிச்சை பெற்று வரும் மாணவ மாணவிகளையும் அவர்களது பெற்றோ ர்களையும் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, பூண்டி கலைவாணன் எம். எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இது தொடர்பாக திருவாரூர் தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் மதிய உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மன்னார்குடியில் 13-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டம் நடக்கிறது.
    • யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியப்பதாவது:-

    மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

    மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவிதொகை, வீட்டுமனைபட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை, தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம். யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுதிறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின் அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் மட்டும் 2023-24ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளி நல்ல நிலையில் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றிதழையும், மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

    • இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
    • தேவேந்திரன் மதுவில் பூச்சிமருந்தை கலந்துகுடித்தார்.

    திருவாரூர்:

    வலங்கைமானை அடுத்த வடக்கு பட்டம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தனபால்.

    இவரது மகன் தேவேந்திரன்(வயது34). விவசாயி கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி கிருஷ்ணவேனி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விரக்தி அடைந்த தேவேந்்திரன் நேற்றுமுன்தினம் மதுவில் பூச்சிமருந்தை கலந்துகுடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமலிங்கம், ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் தெய்வ சகாயம், தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் சிவராமன் வரவேற்றார்.

    ஓய்வு பெற்ற ஆசிரியர் தேன் அமுத சொல்வேந்தர் சாகுல் ஹமீது இலக்கிய மன்ற விழாவினை தொடக்கி வைத்து பேசும்போது:-

    இலக்கியம் என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும்.

    இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

    தமிழ் இலக்கியம் சுமார் 2000 வருடங்கள் பழமையானது.

    இலக்கிய வளமும் தொடர்ச்சியும் கொண்ட ஒரு மொழியாகும். எனினும், தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலானவை, இன்பியல் இலக்கியங்கள்.

    தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் என்றார்.

    இதையடுத்து நிகழ்ச்சியில் ஜூன் மாதம் விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பேனாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    இதில் ஆசிரியர்கள் விஜயகுமார், பாலசுப்பிரமணியன், பிரபாகரன், அன்புமணி, அலுவலர்கள் குமார், சுகந்தி, முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், செல்வம், ஆடின் மெடோனா, சுந்தர், அறிவழகன், அஜிதா கனி, மில்லர் ஆகியோர் செய்து இருந்தனர்.

    ஆசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.

    • நகராட்சி பள்ளியில் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது.
    • மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேல்நிலைப்பள்ளியின் பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ராசுப்பிபிள்ளை,

    நகர மன்ற உறுப்பினர் ஶ்ரீதர் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினர். மாணவர்களின் இயல், இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பல்வேறு இலக்கியப் போட்டிகளில் வெற்றிபெற்ற,

    பொதுத்தேர்வில் தமிழ்ப்பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு

    நூல்கள் நினைவுப்பரிசாக வழங்கபட்டன.

    பிற துறை ஆசிரியர்கள் வாழ்த்துரையாற்றினர்.

    பள்ளியின் முதுகலை த்தமிழாசிரியர் ராசகணேசன் வரவேற்பு ரையாற்றினார்.

    தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் உயரிய விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் முனைவர் ராசகணேசன் கவுரவி க்கப்பட்டார்.

    முடிவில் பட்டதாரி தமிழாசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    • ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி.
    • ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல்.

    திருநாகேஸ்வரம்:

    ஆடுதுறை பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

    துணை தலைவர் கமலா சேகர் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக செயல் அலுவலர் ராம்பிரசாத் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

    ஆடுதுறை பேரூராட்சி அலுவலக பயன்பாட்டிற்காக ரூ.11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை மற்றும் எரிபொருள் வைப்பறை அமைத்தல், 3-வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.ஆர் பார்க் பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்தல், பேரூராட்சி உள்விளையாட்டு அரங்கம், டானரி தெரு பகுதியில் ரூ. 12.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், கால்நடை மருத்துவமனை அருகிலும், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் சிறிய மின் விசை பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு அமைத்தல், நடராஜபுரம் குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளி அருகே ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திறந்தவெளி மழைநீர் வடிகால் பகுதிகளில் மூடி அமைத்தல் பணி,

    டானரித்தெரு ,மருத்துவக்குடி, பாத்திமாநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரித்தல் மற்றும் பழுது நீக்கம் பணிகள், கஞ்சான் மேட்டுத்தெரு மற்றும் கிருஷ்ணன் கோயில் தோப்பு தெருவை இணைக்கும் இணைப்பு பாலம் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் இருபுறமும் தடுப்புச் சுவருடன் புதிய பாலம் அமைக்கும் பணி, புது முஸ்லீம் தெருவில் ரூ.6.20லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவருடன் கூடிய சிறுபாலம் அமைத்தல் பணி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் முடிவடைந்த பணிகள் குறித்தும் தற்போது மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டன.

    கூட்டத்தில் ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தரமாகவும் விலை மலிவாகவும் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் கூடிய உழவர் சந்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சிலர்கள் முத்துபீவி ஷாஜஹான், மீனாட்சி முனுசாமி, சரவணன், செல்வராணி சிவக்குமார், இளங்கோவன், சுகந்தி சுப்ரமணியன், சாந்தி குமார், ஷமீம் நிஷா ஷாஜஹான், கண்ணன், பால் தண்டாயுதம், மாலதி சிவக்கொழுந்து, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பரமேஸ்வரி சரவணக்குமார் நன்றி கூறினார்.

    • வாய்க்காலில், பொதுமக்கள் கழிவுகளை கொட்டக்கூடாது.
    • குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு ஊராட்சியில் முதன்மை பாசன வாய்க்காலில் சில மதகுகளில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது.

    அந்த பிளாஸ்டிக் கழிவுகள் தூய்மை பணியாளர்கள் கொண்டு அகற்றும் பணி நடைபெற்றது.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் மாலினி ரவிச்சந்திரன் கூறுகையில்:-

    பாசன வாய்க்கா ல்களிலும், நீர் நிலைகளிலும் பொதுமக்கள் கழிவுகளை கொட்டக்கூடாது.

    மழைக்காலம் தொடங்க உள்ளதால் பொது இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    இந்நிகழ்வில் துணைத்த லைவர் பாக்யராஜ், செயலாளர் புவனேஸ்வரன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • சைபர் கிரைம் எவ்வாறு நடக்கிறது? என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நி லைப்பள்ளிகளில் படிக்கும் 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வலங்கைமான் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு, சைபர் கிரைம் எவ்வாறு நடக்கிறது? எவ்வாறு அதை எதிர்கொள்வது? என்பது குறித்து மாணவ- மாணவி களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

    இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.
    • மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டப்பணிகளை கண்காணிப்பதற்காக வெளிமுகமை முறையில் 100 எண்ணிக்கையிலான தொழில்நுட்ப உதவியாளர்கள் முற்றிலும் தற்காலிகமாக ஊக்க ஊதியம் அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இப்பணியிடத்திற்கான கல்வி தகுதிகள் டிப்ளமோ / பொறியியல் படிப்பில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கட்டுமான பணியில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    5 வருடத்திற்கு மேலான அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    வயது முதிர்வின் காரணமாக பணிஓய்வு பெற்றுள்ள உதவி பொறியாளர்கள் / பணி மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ஊதியமுறைகளானவை பயனாளிகளின் வீட்டின் நிலைகளுக்கு ஏற்ப தவணை தொகைகள் விடுவிப்பதன் அடிப்படையில் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    ஒரு வீட்டிற்கான 4 நிலைகளில், ஊக்க த்தொகையாக பேஸ்மண்ட் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், ஜன்னல் மட்டம் நிலைக்கு 30 சதவீத தொகை ரூ.450-ம், கூரை மட்டம் நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம், பணி முடிவுற்ற நிலைக்கு 20 சதவீத தொகை ரூ.300-ம் ஆக கூடுதலாக ரூ.1,500 வேலையளிக்கும் முகமைக்கு விடுவிக்கப்படும்.

    இப்பணிக்காக ஊதியம் ஏதும் தனியாக வழங்கப்பட மாட்டாது.

    நிபந்தனை களானவை, நிலுவையிலுள்ள வீடுகள் "அனைவருக்கும் வீடு" மொபைல் செயலி மூலம் ஒவ்வொரு தொழில்நுட்ப உதவியா ளருக்கும் இணைக்கப்படும். பணியில் சேரும் தொழில்நுட்ப உதவியாளர்கள் வேலை யளிக்கும் முகமையின் கீழ் வந்ததாக கருதப்படுவர்.

    தனியார் எந்த வகையிலும் அரசுப்பணியில் உரிமை கோர இயலாது. (PMAY(G)) திட்டம் செயலாக்கம் முடிவுற்றதும் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர்.

    உரிய கல்விச்சான்று நகல் மற்றும் அனுபவ சான்று நகல் ஆகிய வற்றுடன் விண்ணப்பத்தை நேரடியாகவோ (அ) அஞ்சல் வழியாகவோ நாளை (05-ந் தேதிக்குள்) மேலாளர், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், திருவாரூர் என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    மேற்குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவை நடைபெற்றது.
    • கால்நடைகளுக்கு தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள் வழங்கினார்.

    மன்னார்குடி:

    ரோட்டரி மாவட்ட அன்னபூர்ணா திட்டத்தின் கீழ் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளிக்கோட்டை மற்றும் மன்னார்குடியில் கால்நடைகளுக்கு அன்னதானம் கால்நடைகளுக்கு தீவனங்கள் வழங்குதல், கன்றுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் ஆகியவைகள் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் உதவி ஆளுநர் டாக்டர் பாலகிருஷ்ணன் தீவனங்கள் மற்றும் பச்சை புற்கள்வழங்கினார். திட்ட இயக்குனர் ரமேஷ், செயலர் அன்பழகன், மண்டல செயலர் ரெங்கையன், ஹரிரவி, முன்னாள் தலைவர்கள் நடராஜன், சாந்தகுமார், தளிக்கோட்டை பால் உற்பத்தியாளர்கள் ரமணி, குமுதம். சங்க செயலர் சாரதா, சுமதி, அசோக்குமார், சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    ×