search icon
என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
    • நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய தாலுகாக்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 157 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நெல் அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
    • முத்துப்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    தில்லைவிளாகம் அடுத்த ஜாம்புவானோடை தெற்கில் நாககாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆனி திருவிழா கடந்த 29-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி பால்குட ஊர்வலம், காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கஞ்சிவார்த்தல் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து சாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி ஊராட்சி மன்றம் சார்பில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது
    • 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார்
    • வளைவில் பஸ் திரும்பும் போது நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.

    திருவாரூர்

    திருவாரூரை அடுத்த வடகண்டம் பகுதியை சேர்ந்தவர் ஹசன். இவருடைய மனைவி ஹபீப் நிஷா (வயது 31). ஹசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    ஹபீப் நிஷா நேற்று தனது உறவினர் ஒருவருடன் பவித்ரமாணிக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார்.

    காட்டூர் அருகே உள்ள விளாகம் பகுதியில் பஸ் சென்ற போது, பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக ஹபீப் நிஷா எழுந்து வாசல் அருகே நின்று உள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பும் போது நிலைதடுமாறி அவர் பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹபீப் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முகமதுசுலைமான் மகள் சுகைரா.
    • அப்போது கோரையாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பொதக்குடி பகுதியை சேர்ந்தவர் முகமதுசுலைமான்.

    இவரது மகள் சுகைரா(வயது4). நேற்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் முகமதுசுலைமான் மகளை அழைத்து கொண்டு நீடாமங்கலம் அருகே தண்டாலம் பாலம் வடக்கு பகுதியில் உள்ள கோரையாற்றில் குளிப்பதற்காக சென்றார்.

    பின்னர் ்ஆற்றில் முகமதுசுலைமான் குளிக்க சென்றார்.

    அப்போது கரையில் சுகைரா அமர்ந்து இருந்தார். பின்னர் சுகைராவும் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.

    அப்போது கோரையாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது.

    ஆற்றில் மூழ்கிய சுகைரா அடித்து செல்லப்பட்டார்.

    மகளை காணாததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் தேவங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் தேவங்குடி போலீசார் மற்றும் கூத்தாநல்லூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் ஆற்றில் இறங்கி சிறுமியை தேடினர். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது.

    இதனால் கோரையாறு தலைப்பில் உள்ள அணையை அடைத்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஆற்றில் மூழ்கிய நிலையில் சுகைரா உடல் மீட்கப்பட்டது.

    பின்னர் சிறுமி உடல் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோருடன் ஆற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
    • சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை கடற்கரையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை காவல் உதவி ஆய்வாளர் ரகுபதி தலைமையில் போலீசார் தொண்டியக்காடு, தம்பிக்கோட்டை, கீழக்காடு, ஜாம்புவானோடை, சின்னான் கொள்ளைக்காடு உள்ளிட்ட இடங்களில் கடலோர பாதுகாப்பு படை போலீசார் படகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.

    மேலும், முத்துப்பேட்டை நகர் பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தமிழ்மாறன், சட்டம் ஒழுங்கு டி.எஸ்.பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் ஆலங்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை, கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு சுமார் 70-க்கும் மேற்பட்ட போலீசார் டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது ஏ.டி.ஜி.பி வெள்ளத்துரை உடன் இருந்தார்.

    • மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
    • இதில் கென்னடி பரிதாபமாக இறந்தார்

    திருவாரூர்:

    திருவாரூர் வடுவூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி (வயது63). விவசாயி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காஞ்சிக்குடிகாடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கென்னடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கென்னடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து குறித்து வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறுமியின் உறவினரான அன்பழகன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கமைான் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு அவரது உறவினரான 45 வயது அன்பழகன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாய் வலங்கைமான் போலீசில் புகார் அளித்தார். பின்னர் புகார் நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார் அன்பழ கனிடம் விசாரணை நடத்தினர். இதில் புகார் உண்மை என்பது தெ ரிய வந்தது.

    இதனை யடுத்து அன்ப ழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது.
    • தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் ஊராட்சியில் வீரசேகரன் (வயது 32) என்பவர் ஊராட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், ஆதிரங்கம் ஊராட்சியில் 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. அதில், ஆதிரங்கம் தர்கா எதிரே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து காணப்பட்டது. இந்த தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வீரசேகரன் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு தொட்டியை சுத்தம் செய்தார். அதுமட்டுமின்றி, அந்த தொட்டிக்கு இந்திய தேசியக்கொடி போன்று வர்ணம் பூசியுள்ளார்.

    இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் ஊராட்சி தலைவரை பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து, ஊராட்சி தலைவர் வீரசேகரன் கூறியதாவது:-

    இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2016-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உடையது. இது பழுதான நிலையில் இதனை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும், அதனை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை பொதுமக்களுக்கு உருவாக்கவும் 75-வது சுதந்திர தினம் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நினைவாக தேசியக்கொடியை போன்று வர்ணம் பூசப்பட்டது.

    இதன்மூலம், தொட்டியின் மீது போஸ்டர்களை ஒட்டி அசுத்தப்படுத்துவது குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
    • விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள்கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் 1.35 மணி வரை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெ றவுள்ளது.

    இக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டு றவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    மேற்படி கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை தெரிவித்து, இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
    • ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நாச்சிகுளம் நடுத்தெரு திடலில் நாச்சிகுளம் கிளை செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

    ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் தொழுகை செய்தனர்.

    அதே தொடர்ந்து

    நாச்சிகுளம் தவ்ஹீத் பள்ளி இமாம் முகமது தெளபிக் ஹஜ் பெருநாள் குறித்து உரை நிகழ்த்தினார்.

    அதன் பின் ஒருவொரை ஒருவர் கட்டி அனைத்து வாழ்த்துகளை பரிமாரிக் கொண்டனர்.

    இதில் மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன் மாவட்ட துனை தலைவர் அஸாருதீன் கிளை பொருளாளர் கமருதீன் கிளை துனை தலைவர் செய்யது அபுபக்கர் கிளை துனை செயலாளர் மைதீன் கல்பான் அமீரக பொறுப்பாளர் மூசா மீரான் சாதிக் பாட்சா என 500க்கும் மேற்பட்டோர் இச்சிறப்பு தொழுகையில் கலந்துக் கொண்டனர்.

    • கணினி இயக்குபவர் பணியிடம் ஒன்று பூர்த்தி செய்யப்பட உள்ளது.
    • திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இயங்கிவரும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் கணினி இயக்குபவர் பணியிடம் ஒன்று பூர்த்தி செய்யப்பட உள்ளது.

    இந்த பணியிடத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மாதிரி விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களை திருவாரூர் மாவட்ட இணையதளத்தில் https://tiruvarur.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவு அஞ்சலில் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர்-610 004 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×