search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
    • நாட்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன்.

    கொல்கத்தா:

    பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மவுனி அமாவாசையன்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் உள்பட 30 பேர் பலியானார்கள். இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பலி எண்ணிக்கையை உத்தரபிரதேச அரசு மறைக்கிறது. அது மகா கும்பமேளா அல்ல மரண கும்பமேளா என்று கடுமையாக விமர்சித்து இருந்தார்.

    இதற்கு மேற்குவங்காள கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் பதிலடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அதுபற்றி அவர் கூறுகையில், நான் எந்த சர்ச்சையிலும் நுழைய விரும்பவில்லை. இது ஒரு ஜனநாயக அமைப்பு. முதல்-மந்திரியின் அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் அவருக்கு கருத்து தெரிவிக்க உரிமை உள்ளது. என்னைப் பொறுத்தவரை, ஒரு கவர்னராக நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளா, மனிதனை கடவுளுடன் இணைக்கும் பாலமாக கருதுகிறேன். நாட்டின் பாரம்பரியத்தின் உச்சமாக பார்க்கிறேன் என்றார்.

    • டெல்லி முதல் மந்திரி பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பவன் கல்யாண் பங்கேற்றனர்.
    • அப்போது, நீங்கள் இமயமலை செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என பிரதமர் கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. புதிய முதல் மந்திரியாக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டார். டெல்லியின் 4-வது பெண் முதல் மந்திரி குப்தா ஆவார்.

    தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி ரேகா குப்தாவின் பதவியேற்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினரை பிரதமர் மோடி வரவேற்றார்.

    மகாராஷ்டிரா துணை முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, ஆந்திராவின் துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார்.

    இந்நிலையில், ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண், பிரதமர் மோடி இடையிலான உரையாடல் கவனத்தை ஈர்த்தது.

    இதுதொடர்பாக பவன் கல்யாண் கூறுகையில், பிரதமர் எப்போதும் என்னுடன் நகைச்சுவையாகப் பேசுவார். அவர் என் உடையைப் பார்த்து, நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இமயமலைக்குச் செல்கிறேனா என கேட்டார். அதற்கு பிரதமரிடம், தான் இன்னும் எங்கும் செல்லவில்லை. இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன. இமயமலை காத்திருக்க முடியும் என நகைச்சுவையாகக் கூறினார்

    • உடல்நலக் குறைவால் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி (78), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டு, தற்போது டாக்டர்கள் குழு கண்காணிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    தற்போது அவர் நலமாக இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • உ.பியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.
    • ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்கள் உடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

    அப்போது, " ஆங்கிலத்தில் பேசமாட்டேன் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறுகிறார்" என்றார்.

    இதுகுறித்து ராகுலம் காந்தி மேலும் கூறுகையில், " அதிகாரத்தை அடைய ஆங்கிலம் ஒரு கருவி. ஆங்கிலம் மக்களின் மிகப்பெரிய ஆயுதம்.

    பட்டியலின, பழங்குடியின மற்றும் ஏழை மக்கள் உயர்ந்த நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆங்கிலம் கற்கக் கூடாது என ஆர்எஸ்எஸ் கூறுகிறது.

    ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலகம் முழுக்க சென்று எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியலாம்" என்றார்.

    • புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார்.
    • இவர் 2029-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார்.

    இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து சந்தித்தார்.

    இருவரின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை குடியரசு தலைவர் அலுவலகம் சார்பில் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இது தொடர்பான பதிவில், இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஞானேஷ் குமார் நேற்று (புதன் கிழமை) இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ராஜீவ் குமார் ஓய்வு பெற்ற நிலையில், ஞானேஷ் குமார் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்றுள்ளார். இவர் வருகிற 2029 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஞானேஷ் குமார் ஓய்வு பெறுவார்.

    இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் மகா கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனர்.

    உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் 'திரிவேணி சங்கமம்' என்ற இடத்தில் ஜனவரி 13-ந்தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி நாளான வருகிற 26-ந்தேதி வரை 45 நாட்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

    இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதால் 45ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும், தேசிய, மாநில மீட்பு படையினரும் களத்தில் உள்ளனர். இதுவரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உடல்நிலை சரியில்லாத தாயை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு மகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கும்பமேளா பயணம் மேற்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வீட்டிற்குள் 2 நாட்களாக பசியில் வாடிய மூதாட்டி (68) பிளாஸ்டிக் கவர்களை சாப்பிட முற்பட்ட போது அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வந்த ரமேஷ் சிங்கை போலீசார் கைது செய்தனர்.
    • பொக்சோ வழக்கில் ரமேஷ் சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மத்தியப் பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு முன்பு அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காது கேளாத மற்றும் பேச்சு குறைபாடுள்ள 11 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாள்.

    நர்சிங்கர் நகரில் உள்ள அரசு ஓய்வு இல்லத்திற்குப் பின்னால் உள்ள ஒரு குடிசையில் வசித்து வந்த சிறுமி, பிப்ரவரி 1 ஆம் தேதி காணாமல் போனாள். மறுநாள் ஒரு காட்டில் பலத்த காயமடைந்த நிலையில் அவள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    நரசிங்கர் துணைப்பிரிவு காவல் அதிகாரி உபேந்திர பாட்டி கூறுகையில், சிறுமிக்கு அதிக இரத்தபோக்கு ஏற்பட்டிருந்தது. முதலில் நரசிங்கரில் உள்ள சிவில் மருத்துவமனைக்கும், பின்னர் பிப்ரவரி 2 ஆம் தேதி போபாலில் உள்ள ஹமீடியா மருத்துவமனைக்கும் சிறுமி கொண்டுசெல்லப்பட்டாள். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தாள்.

    இதனையடுத்து அப்பகுதியில் 46 இடங்களில் உள்ள 136 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் ரமேஷ் சிங் என்ற நபர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சுற்று தெரிந்ததை கண்டுபிடித்தனர்.

    ரமேஷ் சிங் என்பவர் கும்பமேளாவில் குளித்துவிட்டு ஜெய்ப்பூருக்கு செல்லும் ரயிலில் வருவதை அறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ரமேஷ் சிங்கின் பின்னணியை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    2003 ஆம் ஆண்டு ஷாஜாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ரமேஷ் சிங்கிற்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

    பின்னர் 2013 ல் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ரமேஷ் சிங், 2014 ஆம் ஆண்டு 8 வயது சிறுமியைக் கடத்தி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், 2019 ஆம் ஆண்டு தொழில்நுட்ப காரணங்களை காட்டி, மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

    இதனையடுத்து 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த கையேடு வெளியே வந்த ரமேஷ் சிங் காது கேளாத வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபரை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு
    • மிரட்டல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்னேத் ஷிண்டே காருக்கு வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்வேன் என மும்பை காவல் நிலையங்களுக்கு மர்ம நபர் தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தொடர்ச்சியாக காவல் நிலையங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

    இன்று காலை முதல் கொரிகான், ஜெ.ஜெ. மார்க் காவல் நிலையங்கள் மற்றும் மந்த்ராலயா காவல் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

    தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு மூலம் வெடிக்க செய்வதாக மிரட்டியுள்ளார்.

    • டெல்லி முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
    • டெல்லி பெண் முதல்வராக பதவி ஏற்ற 4-வது நபர் இவர் ஆவார்.

    டெல்லி மாநில முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் ஆகிய 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். துணைநிலை ஆளுநர் சக்சேனா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    ரேகா குப்தா பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் டெல்லி மக்கள் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை உள்ளது என பிதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    ரேகா குப்தா அடிமட்ட பொறுப்புகளில் இருந்து வளர்ந்து வந்தவர். கல்லூரி அரசியல், மாநில அமைப்பு, மாநகராட்சி நிர்வாகம் போன்ற பதவிகள் வகித்த நிலையில், தற்போது எம்எல்ஏ- ஆகி முதல்வராகியுள்ளார்.

    டெல்லி வளர்ச்சிக்காக முழு வீச்சில் பாடுபடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் சிறுவன் கெஞ்சுகிறான்.
    • இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நாய்க்கு பயந்து ஓடியதால், 8 வயது குழந்தையை லிஃப்டில் இருந்து வெளியே இழுத்து பெண் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

    இது தொடர்பாக சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு சிறுவன் லிஃப்ட் உள்ளே நின்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் தனது செல்ல நாயுடன் உள்ளே வருகிறார். அப்போது நாயைப் பார்த்து பயமடைந்த சிறுவன் நாயை லிஃப்ட்டிற்குள்ளே கொண்டு வரவேண்டாம் என்று அப்பெண்ணிடம் கெஞ்சுகிறான்.

    இதனால் கோபமடைந்த அப்பெண், சிறுவனை லிப்டிலிருந்து வெளியே இழுத்து அடித்தார். இதனையடுத்து, அந்த சிறுவன் மீண்டும் லிப்டிற்குள் நுழைந்து அழுகிறான்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில், அப்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • ரேகா குப்தா உடன் 6 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
    • பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி சுமார் 27 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் யார் என அறிவிக்காமல், இன்று பதவி ஏற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் நேற்று டெல்லி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ரேகா குப்தா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். டெல்லி சட்டமன்ற பாஜக கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், துணைநிலை ஆளுநர் சக்சேனாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

    அதனடிப்படையில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட தலைவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

    ஆளுநர் சக்சேனா ரேகா குப்தாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனையடுத்து ரேகா குப்தா முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.  அவருடன் பர்வேஷ் சாகிப் சிங் வர்மா, கபில் மிஷ்ரா, ரவீந்தர் இந்திரஜ் சிங், மன்ஜிந்தர் சிங் சிர்சா, பங்கஜ் குமார் சிங், ஆஷிஷ் சூட் உள்ளிட்டவர்கள் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்றதன் மூலம் டெல்லியின் 4-வது பெண் முதல்வரானார் ரேகா குப்தா.

    டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன.

    ரேகா குப்தா ஷாலிமார் பார்க் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி வேட்பாளரை சுமார் 29 ஆயிரம் வாக்குகள் விததியாசத்தில் தோற்கடித்திருந்தார்.

    • உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.
    • தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.

    நாட்டில் 3-வது முறையாக தெலுங்கானாவில் உலக அழகி போட்டி நடைபெற உள்ளது.

    இந்த போட்டிகளில் உலகம் முழுவதும் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்க உள்ளனர்.

    நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலுங்கானா, ஐதராபாத் பெருநகர பகுதி பிரபலமாகும். தெலுங்கானா சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

    தொடக்கம் மற்றும் நிறைவு விழா போட்டிகள் ஐதராபாத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள போட்டிகள் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இடங்கள் தேர்வு நடந்து வருகிறது.

    ×