search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்
    X

    சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்

    • 'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.
    • நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும்.

    'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.

    இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




    Live Updates

    • 23 Aug 2023 4:49 PM GMT

      தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்னர் சந்திரயான் 3 விண்கலம், முதன் முதலாக நிலவின் மேல் பரப்பை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    • 23 Aug 2023 4:39 PM GMT

      இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தென் துருவத்திற்கு அருகில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விண்வெளியை ஆராய்வதில் இது ஒரு நீண்ட முன்னேற்றம். அறிவியல் மற்றும் பொறியியலில் இந்தியா அடைந்துள்ள வியத்தகு முன்னேற்றத்திற்கான சான்றாகும் இது என வாழ்த்தியுள்ளார்.

    • 23 Aug 2023 3:30 PM GMT

      சந்திரயான் 3 வெற்றி குறித்து இஸ்ரோ குழுவினருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், "நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்திருப்பது மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவுக்கு மேலும் பெருமை. இந்த தருணத்தில், ஒரு இந்தியக் குடிமகனாக பெருமைப்படுகிறேன்" என்றார்.

    • 23 Aug 2023 3:01 PM GMT

      நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    • 23 Aug 2023 2:43 PM GMT

      சந்திரயான் 3 வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர். சிவகாசியில் அரைமணி நேரம் இடைவிடாது வான வேடிக்கை பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்.

    • 23 Aug 2023 2:30 PM GMT

      இஸ்ரோவையும், கிரிக்கெட்டையும் ஒப்பிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி டுவீட் செய்துள்ளது. அதில், "2019ல் சந்திரயான் 2 திட்டத்திலும், உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா தோல்வி. சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெறும் என நம்பிக்கை" என குறிப்பிட்டுள்ளது.

    • 23 Aug 2023 2:22 PM GMT

      நிலவு மற்றும் விண்வெளிக்கான இந்தியாவின் பயணம் பெருமை மற்றும் உறுதிக்கான தருணம். இது 140 கோடி இந்தியர்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க தருணம்- காங்கிரஸ் அறிக்கை.

    • 23 Aug 2023 2:19 PM GMT

      இஸ்ரோ விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசமும், வெளிநாடுவாழ் இந்திய சமூகமும் பெருமிதம் கொள்கின்றன. இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள்- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

    • 23 Aug 2023 2:15 PM GMT

      ரஷியா, அமெரிக்கா, சீனா என்ற வரிசையில் இனி இந்தியாவை எழுதாமல் கடக்க முடியாது. பூமிக்கும், நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து இந்தியா நிற்கிறது. அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம் இந்த லோகத்துக்காக..

      இது போதாது, நிலா வெறும் துணைக்கோள். நாம் வெற்றி பெற ஒரு விண்ணுலகமே இருக்கிறது. - கவிஞர் வைரமுத்து.

    • 23 Aug 2023 2:09 PM GMT

      நிலவில் காற்று இல்லாததால் லேண்டர் இறங்கியதும் கிளப்பியுள்ள புழுதி படலம் நிற்க வேண்டும். அதற்கு சில மணி நேரமாகும். இளைஞர்கள் இனி விண்வெளி குறித்து படிப்பதற்கு ஆர்வம் ஏற்படும்- மூத்த விஞ்ஞானி நம்பி நாராயணன்.

    Next Story
    ×