search icon
என் மலர்tooltip icon

    இந்தியா (National)

    சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்
    X

    சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்

    • 'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.
    • நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும்.

    'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.

    இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.




    Live Updates

    • 23 Aug 2023 2:01 PM GMT

      இந்தியாவின் இமாலய சாதனைக்கு நடிகர் மாதவன் கண்ணீர் மல்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 23 Aug 2023 1:59 PM GMT

      இன்னும் சில மணி நேரங்களில் ரோவர் தன் செயல்பாட்டை துவங்கும்- விஞ்ஞான வீரமுத்துவேல்.

    • 23 Aug 2023 1:55 PM GMT

      இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உங்களுக்கும் உங்களது குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்- பிரதமர் மோடி.

    • 23 Aug 2023 1:53 PM GMT

      நிலவின் தென் துருவத்தில் முதன் முதலாக இந்தியா தடம் பதித்துள்ளது பெருமையாக உள்ளது. விக்ரம் லேண்டரை சீராக தரையிறக்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்து.- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

    • 23 Aug 2023 1:50 PM GMT

      சந்திரயான்- 3 விக்ரம் லேண்டர் நிலவில் தடம் பதித்ததன் மூலம் உலக நாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது. திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 தரையிறங்கியது. அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பு, ஆதரவுக்கு நன்றி- இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

    • 23 Aug 2023 1:07 PM GMT

      சந்திரயான்- 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நிலவின் மேற்பரப்பை கைப்பற்றிய 4வது நாடாக இந்தியாவை நிறுத்தும் ஒரு மகத்தான சாதனை எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    • 23 Aug 2023 1:04 PM GMT

      நிலவின் தென் துருவத்தில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, அதற்காக உழைத்த விஞ்ஞானிகள் மற்றும் குழுவுக்கு இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 23 Aug 2023 12:59 PM GMT

      இது மறக்க முடியாது தருணம். அனைவரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது- இஸ்ரோ விஞ்ஞானிகள்.

    • 23 Aug 2023 12:57 PM GMT

      சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்து வேலுக்கு, சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்தனர்.

    • 23 Aug 2023 12:47 PM GMT

      இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. நமது கண்முன்னே இந்தியா வல்லரசாகி உள்ளது. இந்த தருணம் 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தருணம். இந்த வெற்றியின் மூலம் புதிய இந்தியா உருவாகி உள்ளது. நாட்டு மக்களுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்- பிரதமர் மோடி.

    Next Story
    ×