என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 135 ஆக அதிகரிப்பு
- வயநாட்டில் பெய்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
- கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நேற்றும் கனமழை கொட்டி தீர்த்தது.
இதில் வயநாட்டில் பெய்த கனமழையால் நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, சூரல்மலை, முண்டகை ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் முண்டகையில் பெய்த கனமழையால் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 500 வீடுகளில் வசித்து வரும் சுமார் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Live Updates
- 30 July 2024 1:00 PM IST
சுற்றுலா தலங்கள் மூடல்
கேரளாவில் கனமழை பெய்துவரும் நிலையில் இன்று வயநாடு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும், எர்ணாகுளம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
திருச்சூர் மாவட்டத்தில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
- 30 July 2024 12:53 PM IST
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். 500 குடும்பங்கள் தவித்து வருகின்றனர். நிலைமையை மத்திய அரசு உணர வேண்டும். கேரள அரசிடம் போதிய நிதி இல்லை. மத்திய அரசு உதவ வேண்டும்.
நாங்கள் மத்திய அரசுக்கு வரி செலுத்துகிறோம். துயரமான நேரத்தில் எங்களுக்கு உதவுங்கள். உடனடியாக நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக உடனே ரூ.5 ஆயிரம் கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும்- கேரளாவை சேர்ந்த பல்வேறு கட்சி எம்.பி.க்கள் மேல் சபையில் பேசினர்.
- 30 July 2024 12:48 PM IST
நிலச்சரிவில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதல்வர் முக ஸ்டாலின் மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார். மத்திய அரசும் மீட்பு பணிகளுக்கு உதவ களமிறங்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 30 July 2024 12:18 PM IST
கேரளாவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் 700 பேர் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
- 30 July 2024 12:12 PM IST
நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
- 30 July 2024 12:07 PM IST
மீட்பு பணிகளில் இந்திய ராணுவம்:
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவத்தை சேர்ந்த 225 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 122 காலாட்படை பட்டாலியன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதற்காக கண்ணூர் மையத்திலிருந்து 4 குழுவினர் வயநாடு புறப்பட்டது.
- 30 July 2024 11:56 AM IST
நிலச்சரிவில் சிக்கியவர்களை துரிதமாக மீட்கும் பேரிடர் மீட்பு படையினர்... வீடியோ
- 30 July 2024 11:43 AM IST
தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறை, காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பணியாற்றி வருகின்றனர். இதுவரை நிலச்சரிவில் சிக்கிய 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க கல்பேட்டாவில் உள்ள பத்தேரி செயிண்ட் மேரி பள்ளிக்கூடத்தில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
- 30 July 2024 11:34 AM IST
நிலச்சரிவு மீட்பு பணிகளை துரிதப்படுத்த ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அமைத்துள்ளார். கேரளா மாநில வனத்துறை அமைச்சர் ஏகே சசீந்திரன் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பணிகளை சென்றடைந்த நிலையில், அமைச்சர் ராமசந்திரன் கடணப்பள்ளி விரைவில் சம்பவ இடத்திற்கு விரைகிறாரப். இவர்களுடன் வருவாய் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர், சிறுபான்மை மற்றும் பழங்குடியின துறை அமைச்சர் ஆகியோர் விரைவில் சம்பவ இடத்திற்கு விரைகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்