search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்தி
    • நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்து செய்தியில் கூறி யிருப்பதாவது:-

    தமிழ் மக்களால் பெரிதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் கார்த்திகை தீபத்திருநாளும் ஒன்றாகும். இந்நாளில், இருள் மற்றும் தீமைகளை நீக்கும் முடிவில்லாத ஒளியின் ஆதாரமான சிவபெரு மானின் அருளாசியைப் பெற வீடுகளிலும் கோவில்களிலும் பிரகாச மான தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர்.

    தீபத்தின் ஒளி எப்படி அனைத்து உயிரினங்களின் மீதும் விழுகிறதோ, அதுபோல் நமது அன்பும் கருணையும் மற்றவர்களுக்கு ஒளியை வழங்குவதாக அமைய வேண்டும்.

    கார்த்திகை தீபத்தின் ஒளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்து, பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிகாட்டட்டும் என்று கூறி அனைவருக்கும் கார்த்திகை தீப நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    • 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் சமூக நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று நடந்தது. போட்டியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஜோதியை விளையாட்டு வீரர்களிடம் வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    விழாவில் சமூக நலத்துறை செயலர் பங்கஜ் குமார் ஜா, இயக்குனர் குமரன், துணை இயக்குனர்கள் ஆறுமுகம், கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

    போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப் படுத்தி வருகின்றனர்.

    இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வருகிற 3-ந் தேதி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.போட்டிக்கான ஏற்பாடுகளை சமூக நலத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • சி.பி.எஸ். இ., பள்ளியின் உள்ளரங்கத்தில் நடந்த போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
    • இந்தாண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமலோற்ப வம் கல்வி குழுமம் சார் பில், 14-ம் ஆண்டு பள்ளி களுக்கு இடையேயான வினாடி- வினா போட்டி நடந்தது.

    சி.பி.எஸ். இ., பள்ளியின் உள்ளரங்கத்தில் நடந்த போட்டியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த 140-க்கும் மேற்பட்ட மாண வர்கள் பங்கேற்றனர். இளநிலை, முதுநிலை என இரு பிரிவுகளில் போட்டி நடந்தது. இளநிலை பிரிவில் செயின்ட் பேட்ரிக் பள்ளி முதலிடமும், பெத்தி செமினார் பள்ளி2-ம் இடமும், செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி 3-ம் இடத்தையும் பிடித்தன.முதுநிலை பிரிவில் பெத்தி செமினார் பள்ளி முதலிடமும், தி ஸ்டெடி பள்ளி 2-ம் இடமும், செயின்ட் ஜோசப் குளூனி பள்ளி 3-ம் இடம் பிடித்தன.

    அமலோற்பவம் மேல் நிலைப்பள்ளி முதல்வர் ஆன்டோனியோஸ் பிரிட்டோ, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

    இந்தாண்டிற்கான வினாடி-வினா சுழற்கோப்பையை பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி பெற்றது.

    • 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
    • பேராசிரியைகள் அலமேலு மங்கை, மல்லிகேஸ்வரி, ஆசிரியைகள் பாரதி, திவ்யலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரியின் மனையியல் துறையின் கீழ் இயங்கும் மழலையர் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ராஜி சுகுமார் தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினராக உயர்கல்வி மற்றும் தொழில் நுட்பசார்பு செயலர் சவுமியா கலந்துகொண்டு மாறு வேடம், கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல், பாட்டு போட்டி உள்ளிட்டவைகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    விழாவில் மனையியல் துறை தலைவர் தனலட்சுமி, பேராசிரியைகள் அலமேலு மங்கை, மல்லிகேஸ்வரி, ஆசிரியைகள் பாரதி, திவ்யலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    முடிவில் ஆசிரியை தேவிபிரியா நன்றி கூறினார்.

    • பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வர வேற்புரை வழங்க பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமையுரை ஆற்றினார்.
    • அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கல்வித்துறை சார்பில் மொழி நல்லிணக்க நாளை கொண்டாடும் வகையில் அரசு பள்ளி களுக்கு இடையே பல்வேறு இந்திய மொழிகளில் கட்டுரை பேச்சு மற்றும் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.

    போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வர வேற்புரை வழங்க பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமையுரை ஆற்றினார். பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும் சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மோகன் பிரசாத் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

    இறுதியாக பள்ளியின் பொறுப்பாசிரியர் செம்பியன் நன்றி கூறினார்.இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை மனையியல் விரிவுரையாளர் தெய்வக் குமாரி மற்றும் தாவரவியல் விரிவு ரையாளர் அன்பு மொழி செய்திருந்தனர்.

    • லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், சாணரப்பேட்டை மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
    • பொதுப்பணித்துறை பொது சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவைதனகோடி நகர் மற்றும் சாணரப்பேட்டைமேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் பராமரிப்பு பணி வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தனகோடிநகர், தர்மாபுரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சி தலைவி நகர், சாணரப்பேட்டை மற்றும் அதனைசார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    காந்தி திருநல்லூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யும் பணி காரணமாக 29-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை காந்தி திருநல்லூர், தனபாலன் நகர், கல்கி நகர், சேரன் நகர், அகத்தியர்கோட்டம், அருணா நகர், கணபதி நகர், என்.ஆர்.ராஜீவ் நகர், வள்ளலார் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    கோரிமேடு (இந்திராநகர் அரசு தொடக்கப்பள்ளி அருகில்) பூத்துறை ரோட்டில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை குருநகர், சிவாஜி நகர், பிரியதர்ஷினி நகர், இஸ்ரவேல் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது.

    இத்தகவலை பொதுப்பணித்துறை பொது சுகாதாரகோட்ட செயற்பொறியாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

    • மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது.
    • இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடைய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையானது, இதுவரை செயல்பாட்டில் இருந்த கருணைத்திட்ட ம் 1989 - ஐ மாற்றி, அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் 2022' என்ற புதிய திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது.

    தற்போது இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக மோட்டார் வாகன விபத்து நிதியம் என்ற நிதி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அடையாளம் தெரியாத வாகனங்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

    இந்த திட்டத்தால் இழப்பீடு பெறும் வழிமுறை வருமாறு:-

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படும் நபர் அல்லது இறந்தவரின் உறவினர் முதலில் இழப்பீடு விசாரணை அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். (புதுச்சேரி- மாவட்ட துணை கலெக்டர், காரைக்கால்- காரைக்கால் டவுன் தாசில்தார்.)

    இழப்பீடு விசாரணை அதிகாரி விண்ணப்பம் பெற்ற ஒரு மாதத்திற்குள் அவருடை ய விசாரணை அறிக்கையை இழப்பீடு தீர்வை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    விசாரணை அறிக்கையை ஆய்வு செய்து தீர்வை அதிகாரி 15 நாட்களுக்குள் நஷ்ட ஈடுக்கான ஆணையை ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்க வேண் டும். அதனை பெற்ற ஜெனரல் இன்ஸ்சூரன்ஸ் கவுன்சில் 15 நாட்களுக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு தொகையை வழங்க வேண்டும்.

    இந்த நடவடிக்கைகளை ஆய்வு செய்ய புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்திற்கு தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
    • வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 44). தனியார் நிறுவன ஊழியர். இவர் உறவினர் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பேஸ்புக்கில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.

    இந்த வழக்கில் குற்றம் நிரூப்பிக்கப்பட்டதால் முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    பின்னர் முருகன் தான் செய்த தவறை உணர்ந்து நீதிபதியிடம் மன்னிப்பு கேட்டார். இதையடுத்து குற்றவாளிகளுக்கான நன்னடத்தை கால சட்டம் 1958-ன் கீழ் தண்டனையை ரத்து செய்து முருகனை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேக விழா  நடைபெற்றது.

    முன்னதாக விக்னேஸ்வர பூஜையுடன் விழா கடந்த 18-ந் தேதி தொடங்கியது. 19-ந் தேதி புண்யாஹாவாசனம், பஞ்சகவ்யம், நவக்கிரக ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. 20-ந் தேதி மூர்த்தி ஹோமம், திசா ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. 21-ந் தேதி மாலை முதல்கால யாக பூஜை, 22-ந் தேதி காலை 2-ம் கால யாகபூஜை, மாலையில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜை நடந்தது.

    மாலை 5-ம்கால யாக பூஜை நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு 6-ம் கால யாக பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடந்தது.

    8.30 மணிக்கு அம்மன் ராஜகோபுரம், விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    விழாவில் திருப்பணிக்குழு கவுரவ தலைவரும் அமைச்சருமான லட்சுமி நாராயணன், சிவசங்கரன் எம்.எல்.ஏ. விஜய மக்கள் இயக்க தலைவர் புஸ்சி ஆனந்து, சத்யா ஜூவல்லரி சத்ய நாராயணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா விற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.

    • ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஊழியர்கள் என பணியில் உள்ளனர்.
    • தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கரியமாணிக்கம், பண்ட சோழநல்லூர், கல்மண்டபம், வடுவகுப்பம், செம்படபேட்டை, நடுநாயகபுரம் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெறுவார்கள்.

    நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள் மற்றும் நர்சுகள் ஊழியர்கள் என பணியில் உள்ளனர்.

    வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெற காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மட்டுமே சீட்டு பதிவு செய்யப்படுவதால், கூட்டம் அதிகமாக காணப்படும் தற்போது ஒரு டாக்டர் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் அனைவரையும் அவரே கவனிக்க வேண்டிய உள்ளது.

    இதனால் வெளிப்புற நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை உள்ளது.

    மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், ஆம்புலன்ஸ் இருந்தால் டிரைவர் பற்றாக்குறை இருப்பதாக குற்றம் சாற்றுகின்றனர்.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மாநில துணைச் செயலாளர் கதிர் பிரபாகரன் மற்றும் தொகுதி செயலாளர் மலரவன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நெட்டப்பாக்கம் போலீஸ் (பொறுப்பு) சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வட்ட ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    தொகுதி எம்.எல்.ஏ. மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் அன்பழகன் பேச்சு
    • ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பது நெருப்பு கொண்ட ஈட்டியால் இளைஞர்களின் இதயத்தை துளைப்பதாகும்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித் துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பும் அரசின் முடிவினை கண்டித்து

    அ.தி.மு.க. சார்பில் கல்வித்துறை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 11 ஆண்டுகளாக நடுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யவில்லை. நடுநிலை ஆசிரியர்களில் இருந்து உயர்நிலை பள்ளிக்கு 40 சதவீத பதவி உயர்வு அடிப்படையிலும் 60 சதவீதம் நேரடியாகவும் நியமிக்க வேண்டும் என நியமன விதி இருந்தும் அரசு இந்த விஷயத்தில் மிக மிக அலட்சியமாக இருந்து வந்துள்ளது.

    தற்போது ஏதோ அவசர தேவைக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு தற்காலிகமாக நியமனம் செய்ய இருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். ஏன் காலியாக உள்ள பணியிடங்களை ஆட்சி அமைந்ததில் இருந்து அரசு நிரப்ப முன்வரவில்லை?

    ஆசிரியர் பணி முடித்த இளைஞர்கள் அரசு பணி கிடைக்காமல் தனியார் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் பணி செய்கின்றனர்.

    இந்த இளைஞர்களை கொண்டு காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது என்பது நெருப்பு கொண்ட ஈட்டியால் இளைஞர்களின் இதயத்தை துளைப்பதாகும்.

    அரசு பணிகளில் 33 வயது மற்றும் 35 வயதுக்கு மேல் யாரையும் பணியில் அமர்த்த முடியாத சூழ்நிலையில் 60 வயது முடிந்தவர்களை ஒப்பந்த அடிப்படையில் அரசு பணிகளில் அமர்த்துவது எந்த பணி நியமன சட்டத்தில் உள்ளது.

    ஓய்வுபெற்ற ஆசிரியர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் முடிவினை அரசு கைவிட வேண்டும். தமிழகத்தை போல ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை நீக்க வேண்டும். அப்போது தான் நீண்ட காலமாக பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்கும்.

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில இணை செயலாளர் கணேசன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், துணைச்செயலாளர்கள் எம்.ஏ.கே. கருணாநிதி நாகமணி ஜெயசேரன், காந்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மீனவரணி செயலாளர் ஞானவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தார் சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
    • நகராட்சி ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் பகுதியில் புதியதாக அமைந்துள்ள சப்தகிரி கார்டன் மெயின் ரோடு மற்றும் உட்புற சாலைகளுக்கு கழிவுநீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய தார் சாலை அமைக்கும் பணிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.

    இதேபோல் முத்தியால்பேட்டை லூயி கண்ணையா நகர் தோட்டம் பகுதிக்கு கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணிக்கும் மொத்தம் ரூ.21.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கு வதற்கான பூமி பூஜை இன்று நடந்தது.

    2 பணிகளையும் பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம், நகராட்சி ஊழியர்கள் மற்றும் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் அந்த பகுதியை சார்ந்த முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×