search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பிரெஞ்சு நிறுவனங்களின் ஆராய்ச்சி பணிகளை பிரெஞ்சு தூதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • புதுவையில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் ஆகியோரை பிரெஞ்சு தூதர் சந்தித்து பேசுகிறார்.

    புதுச்சேரி:

    இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் தியரிமாத்துஷ் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

    புதுவைக்கு வருகை தந்த அவருக்கு பிரெஞ்சு துணை தூதர் துஷ்தர்லிஸ் டால்போட்பரே தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை புதுவை கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையைம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.

    இதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவுடன் கல்வி கூட்டாண்மை, பல்கலைக்கழக ஒத்துழைப்பு, மாணவர் பரிமாற்ற திட்டங்களால் இருநாட்டு இளைஞர்கள் திறன் மேம்படும். இருநாட்டு மக்களிடையே உறவுகளை மேம்படுத்தும்.

    2025-ம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 20 ஆயிரம் இந்திய மாணவர்களை பிரான்சிற்கு கல்வி கற்க வரவழைக்கவும், 2030-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 30 ஆயிரமாக உயர்த்தவும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

    அவர்களின் கல்விக்கு விசா வழங்கும் முறைகளையும் எளிதாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மாணவர்களை ஈர்க்கும் எளிதான விசா கொள்கையை உருவாக்கும் பணியில் பிரான்ஸ் நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நேற்று புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனங்களின் ஆராய்ச்சி பணிகளை பிரெஞ்சு தூதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். லிசே பிரான்சே பிரெஞ்சு உயர்நிலைப்பள்ளி, அலையன்ஸ் பிரான்சிஸ் நிறுவனத்துக்கு சென்று, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    கல்வி, கலாச்சாரம், அறிவியல் துறைகளில் பிரெஞ்சு கல்வி நிறுவனங்கள் ஆற்றிய பணிகள் குறித்து, ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் பிரெஞ்சு ஆய்வு நிறுவனமான பிரெஞ்சு இன்ஸ்டிடியூட், எக்கோல் பிரான்சே மையத்துக்கு சென்று ஆய்வு பணிகளை கேட்டறிந்தார்.

    அங்குள்ள பழமையான ஆவணங்கள், புதுவை அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் கூட்டு ஆராய்ச்சிகள் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பிரெஞ்சு துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், டாக்டர் சதீஷ் நல்லாமுக்கு நேஷனல் ஆர்டர் ஆப் மெரிட் என்ற முத்திரையை வழங்கினார்.

    கலாச்சாரம், பாரம்பரியம், கல்வி தளங்களில் பிரான்ஸ்- இந்தியா இடையில் ஒத்துழைப்பு அளித்ததற்காக இந்த மதிப்புமிக்க விருது அவருக்கு வழங்கப்பட்டது. இன்று புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, ஆரோவில் செயலாளர் ஜெயந்திரவி, புதுவையில் வாழும் பிரெஞ்சு பிரதிநிதிகள் ஆகியோரை பிரெஞ்சு தூதர் சந்தித்து பேசுகிறார்.

    மாணவ அமைப்புகள் தீர்மானம்

    புதுச்சேரி:

    புதுவை தமிழ் சங்கத்தில் அனைத்து கல்லூரி மாணவ தலைவர்கள் ஆலோசனைக் கட்டம் நடந்தது.

    கூட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணனுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், புதுவையில் அவசரகதியில் தேசிய கல்விக் கொள்கையை அரசு திணிக்கக்கூடாது.

    தேசிய கல்விக் கொள்கை குலக்கல்வி முறையை மட்டுமன்றி மாணவர்களின் ஆழமான கல்வி அறிவை பறிக்கும் என கல்வியாளர்கள் கூறி வருகின்றனர். இதை ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. வரும் ஜனவரி மாதம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

    கூட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். சந்திரா தேசிய கல்வி கொள்கை சாதக பாதகங்களை விளக்கினார். பீபோல்டு பஷீர் தேசிய கல்வி கொள்கையின் உள் நோக்கங்களை விளக்கினார். தமிழ்ச்சங்கம் திருநாவுக்கரசு புதுவை மாநிலம் இழந்து வரும் உரிமைகள் குறித்து பேசினார். கூட்டத்தில் தாகூர் கலை கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, ராஜீவ்காந்தி கலைக்கல்லூரி மாணவ தலைவர்கள் மனோஜ், கவுதம், பிரதீப், ராஜ், ராகுல், பிருந்தா, நர்மதா, சாந்தினி, விஜயலட்சுமி, ரெஜினாமேரி, ஜெயசூர்யா, நிவேதா, கீர்த்தனா, கிரிதரன், வீரகவுதம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    • வினாடி-வினா போட்டி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய பட்டிமன்றம் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் நடைப்பெற்றது.
    • தீனதயாளன் ஊழல் தடுப்பு வாரம் தொடர்பாக கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், இசையாசிரியர் ஜோதிபிரபா நன்றி கூறினார்‌.

    புதுச்சேரி:

    புதுவை மணப்பட்டு, கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரி சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழா கடந்த 31-ந் தேதி முதல் தொடங்கி 5-ந் தேதி வரை நடந்தது.

    இதில் ஊழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவர்களை பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பற்றிய பட்டிமன்றம் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் கல்லூரி சார்பில் நடைப்பெற்றது.

    இதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவிகளுக்கான ஊழல் மற்றும் கண்காணிப்பு குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் புதுவை தெற்கு பகுதி போக்குவரத்து போலீஸ் மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஊழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகள் பற்றிய கருத்துகளை எடுத்துரைத்தார்.

    இதில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் போக்குவரத்து மற்றும் சாலை விதிமுறைகள் குறித்து விளக்க உரையாற்றினார். கல்லூரியின் இயக்குநர் முத்துமாணிக்கம் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் மஞ்சுளா சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரை ஆற்றினார். துணை முதல்வர் மஞ்சுளா வரவேற்றார். உதவிப்பேராசிரியர் சினி. தீனதயாளன் ஊழல் தடுப்பு வாரம் தொடர்பாக கல்லூரியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்தும், இசையாசிரியர் ஜோதிபிரபா நன்றி கூறினார்.

    • தீயணைப்பு துறை அறிவுறுத்தல்
    • உத்தரவுகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் வல்லவன் அறிவுறுத்தி உள்ளார்.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையை யொட்டி பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகள், அறிவு றுத்தல்கள் வெளி யிடப்பட்டுள்ளது.

    சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி அதிக ஒலி எழுப்பும் வெடிகள், சரவெடி, பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் 20 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.

    இந்த உத்தரவுகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் வல்லவன் அறிவுறுத்தி உள்ளார்.

    புதுவை தீயணைப்பு துறை அதிகாரி இளங்கோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    பட்டாசுகளை நடுவீதியில் கொளுத்துவது ஆபத்தானது. சிறுவர்களோடு பெரியவர்கள் உடனிருப்பது பாதுகாப்பானது. உயரே சென்று வெடிக்கும் ராக்கெட், அவுட், சீன பட்டாசுகள் வெடிக்க அனுமதியில்லை. தடையை மீறி இதை உபயோகித்து விபத்து ஏற்படுத்தினால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    கம்பி மத்தாப்புகளை பயன்படுத்திய பின் தண்ணீரில் போட வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடாமல், நீண்ட குச்சியால் அகற்ற வேண்டும். பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடை, காலணி அணிந்திருக்க வேண்டும். குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பள்ளி, மருத்துவமனை, பெட்ரோல் பங்க், முதியோர் இல்லங்கள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    தீயணைப்பு அவசர உதவிக்கு புதுவையில் 101 என்ற அவசர சேவை, அந்தந்த பகுதி தீயணைப்பு நிலைய ங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.1000 வழங்கும் திட்டத்தை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் மேம்பாட்டுத்துறை மூலம் மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்குவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் பயனாளி களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    அதுபோல் உப்பளம் தொகுதியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டையை வழங்கினார்.

    நிகழ்ச்சியின் போது தி.மு.க. மகளிரணி மாநில அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீராம், காங்கிரஸ் சிட்டிபாபு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேலு, அரிகிருஷ்ணன், நோயல், காளப்பன், விநாயகமூர்த்தி, கணேசன், சகாயம், ராக்கேஷ், பாஸ்கல், மோரீஷ், ரகுமான், மரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அ.ம.மு.க. சார்பில் வழங்கப்பட்டது
    • சிறப்பு அழைப்பாளர்களாக அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று இதனை வழங்கி னர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டா டப்படுகிறது.

    இதையொட்டி பல்வேறு தரப்பினரும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகி றார்கள். அரசியல் தலை வர்கள், அரசியல் பிரமு கர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் பட்டாசு, இனிப்பு களை வழங்கி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதேபோல் உழவர்கரை தொகுதியை சேர்ந்த நலிவுற்ற 50-க்கும் மேற்பட்ட ஊனமுற்றோர்க ளுக்கு அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டில் வேட்டி-சேலை, இனிப்புகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அ.ம.மு.க. வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி.சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று இதனை வழங்கி னர்.

    இதில் தொகுதி செயலா ளர்கள் தட்டாஞ்சாவடி ராமச்சந்திரன், உழவர்கரை கலியமூர்த்தி, கதிர்காமம் சிவக்குமார், மாணவரணி செயலாளர் ஜெகதீஷ், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மூர்த்தி மற்றும் உழவர்கரை தொகுதி அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • தீபாவளி பண்டிகைக்காக தலா 500 கிேலா ஸ்வீட், பட்டாசு பாக்ஸ் வழங்கினார்
    • 18 வயது நிரம்பிய அட்டவணை இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு துணிக்கான பணம் இலவச ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை (12-ந் தேதி) கொண் டாடப்படுகிறது.

    இதையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தீபாவளி பரிசாக 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்க ரைக்கான பணம் ரூ.490 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    மேலும், செப்டம்பர், அக்டோபர் ஆகிய 2 மாத அரிசிக்கான பணம் சிவப்பு குடும்ப அட் டைதாரர்களுக்கு ரூ.1,200, மஞ்சள் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.600 வீதம் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டது.

    18 வயது நிரம்பிய அட்டவணை இனத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு துணிக்கான பணம் இலவச ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

    இதேபோல், கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசுத்தொகை ரூ.3,500ல் இருந்து ரூ.4 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,000 என தீபாவளி பாண்டி கையையொட்டி பயனா ளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டது. இது மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதுவையில் உள்ள 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் உட் பட 33 எம்.எல்.ஏ.க்களும் தலா 500 பட்டாசு பாக்ஸ், 500 கிலோ ஸ்வீட் வீதம் முதல் வர் ரங்கசாமி தீபாவளி பரிசு வழங்கினார்.

    இது எம்.எல்.ஏ.க்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தாண்டு நாடாளு மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் கட்சி பாகுபாடின்றி அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க் களுக்கும் தீபாவளி பரிசு வழங்கியது குறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கேட்ட போது, சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று ஒற்றை வார்த்தை யில் பதில் அளித்துவிட்டு சென்றார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • உலக ஆயுர்வேத தினத்தை யொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

     புதுச்சேரி:

    இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் சார்பில் 8–-வது உலக ஆயுர்வேத தினத்தையொட்டி, பொதுமக்கள், மாணவர்கள், முதியோர், கர்ப்பிணிகள், விவசாயிகள் என அனைவரும் ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து ஆயுர்வேதம் மருத்துவம் சார்ந்த மக்கள் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார். தொடர்ந்து கண்காட்சியை பார்வையிட்டு உலக ஆயுர்வேத தினத்தை யொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்திய மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இந்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை ஆயுர்வேத திட்ட அதிகாரி டாக்டர் பத்மாவதம்மா வரவேற்றார். அனுதினமும் ஆயர்வேதம் என்ற தலைப்பில் டாக்டர் ராமசாமி பேசினார். டாக்டர் ஜீவா ஆனந்த் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, வேலவன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், அங்காளன், சரவணன், சுப்பிரமணி, கார்த்திகேயன், பாலமுருகன், யோகானந்தன், கலைமணி, கலியபெருமால், கோவிந்த ராஜன், நடராஜன்,, ஏழுமலை, தட்சிணாமூர்த்தி, மனோ, அரிகரன், சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழா முடிவில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் பிரசன்ன லட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆயுர்வேத மருத்துவ அதிகாரி டாக்டர் ஜீவானந்தம் செய்திருந்தார்.

    • மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கி னார்.
    • புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி, மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி (எம்.ஐ.டி) இயந்திரவியல் துறை, இந்திய பொறியாளர் அமைப்பு மாணவர் பிரிவு சார்பில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங் கம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி, பொரு ளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இயந்திர வியல் துறை தலைவர் ராஜாராம் வரவேற்றார். புதுவை போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களி டையே உரையாற்றினார்.

    கருத்தரங்கில் அனைத்து துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். இயந்திர வியல் துறை உதவி பேரா சிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார். கருத்த ரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சுமித்ரா, சிவராமகிருஷ் ணன் ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • புதுவையில் கடும் போக்குவரத்து நெரிசல்
    • புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையையொட்டி புதுவையில் வியாபாரம் களைகட்டியுள்ளது. புதிய ஆடைகள், பட்டாசு, இனிப்பு ஆகியவற்றை வாங்குவதற்காக மக்கள் முக்கிய வீதிகளில் உள்ள கடைகளுக்கு வருகின்றனர். புறநகர், கிராமப்புற பகுதியிலிருந்தும், அண்டை மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்திலில் இருந்தும் புதுவைக்கு மக்கள் பொருட்கள் வாங்க படையெடுத்தனர்.

    இதனால் புதுவை நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும் சண்டே மார்க்கெட் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து இயங்கி வருகிறது.

    நேற்று இரவு திடீரென மழை பெய்தது. இதனால் வியாபாரம் பாதித்தது. சண்டே மார்க்கெட் கடைகளை மூடினர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் நகர பகுதியில் அதிகளவில் மக்கள் நடமாட்டம் இருந்தது. முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக நகர பகுதியில் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் தடை விதித்திருந்தனர். புதுவையில் இன்று காலை பரவலாக அவ்வப்போது பெய்தது.

    மழையை பொருட்படுத்தாமல் தீபாவளி பொருட்கள் வாங்க பொதுமக்கள கூட்டம் அலை மோதியது.

    • புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.
    • குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    மங்கலம் தொகுதிக்குட்பட்ட உறுவையாறு மூகாம்பிகை நகர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.36 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நடந்தது. வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் பூமி பூஜை செய்து குழாய் பதிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி, கிராம சுகாதார குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாராணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் திருநாவுக்கரசு இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


    • சொர்ணாவூர் அணை நிரம்பி வழிகிறது
    • பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    புதுச்சேரி

    புதுச்சேரி, தமிழகம் கர்நாடகா மாநிலங்களில் பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கர்நாடகா பகுதியில் உள்ள அணை திறக்கப்பட்டு அங்கு இருந்த உபரி நீர் சாத்தனூர் அணையை வந்தடைந்தது.

    சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 3500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் தற்போது தென்பெண்ணையாற்றில் பாய்ந்தோடி வருகிறது. இதனால் வெள்ள அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றின் வழியாக வரும் நீர் புதுச்சேரி பொதுப்பணித்துறை கீழ் பராமரித்து வரும் சொர்ணாவூர் அணையை இன்று காலை எட்டியது.

    தற்பொழுது இந்த ஆற்றில் 1.30 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் இருபுறம் கரைபுரண்டு வந்து கொண்டு இருக்கிறது. தண்ணீர் அதிகமாக வருவதால் சொர்ணாவூர் அணை நிரம்பி தண்ணீர் வழிகிறது. மேலும் இந்த அணையில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு 1.10 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் வருகிறது.

    கடந்த சில நாட்களாக பாகூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வாய்க்கால், நிலம் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பாகூர் ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஏற்கனவே சாத்தனூர் அணை திறக்கப்பட்டு அணைகள் நிரம்பிய நிலையில் மீண்டும் அதிகப்படியாக தண்ணீர் வருவதால் அரசு, கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.


    புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆற்றில் வரும் தண்ணீரின் அளவையும் வாய்க்காலில் மூலமாக ஏரிகளை நிரப்பி வருவதையும் பணியையும் கவனித்து வருகின்றனர். கடந்த மாதம் இதே போல அணைகள் நிரம்பியது குறிப்பிடத்தக்கது.


    ×