search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • சங்கர் என்ற கோவிந்தன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு தொகுதி அ.தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் வீராங்கனைகளின் ஆலோசனைக் கூட்டம் நெல்லித்தோப்பு லெனின் வீதியில் உள்ள கீர்த்தி மஹாலில் இன்று நடைபெற்றது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார் தலைமை தாங்கினார். சிவாலயா இளங்கோவன், டாக்டர் கணேஷ், சித்தானந்தம், ராஜேந்திரன், சங்கர் உடையார், செந்தில்முருகன், வெற்றியழகன், புகழ் என்ற ராமலிங்கம், சங்கர் என்ற கோவிந்தன், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலோசனைக் கூட்ட த்தில் அ.தி.மு.க. மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் சிறப்புரையாற்றினார். நெல்லித்தோப்பு தொகுதி பலமுறை அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதியாகும். திமுகவை சேர்ந்த ஜானகிராமன் இந்த தொகுதியில் இருந்து சட்டமன்ற  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்-அமைச்சராக இருந்தார்.

    தி.மு.க. முதல்-அமைச்சரையே எதிர்த்து தொண்டர்கள் தீவிர பணியாற்றிய தொகுதியாகும். இந்த தொகுதியின் தொண்டர்களின் உழைப்பால் சட்டமன்ற உறுப்பினராக பதவி சுகம் கண்டவர் இன்று கட்சிக்கு துரோகம் செய்துள்ளார்.

    கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அரசியலில் இருந்து காணாமல் போவா ர்கள். நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக உழைப்பால் பாஜகவை சேர்ந்த ஒரு சிறு பிள்ளை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சட்டமன்ற தொகுதி முழுவதும் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ஆளும்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் இந்த தொகுதியினுடைய முன்னேற்றத்திற்கு இவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மாநிலத்தில் பாஜகவும், என்.ஆர்.காங்கிரசும் கூட்டணியில் இருந்தாலும் மாண்புமிகு முதலமைச்சர் மன நிம்மதியுடன் முதல்-அமைச்சராக செயல்பட முடியவில்லை. முதலமைச்சரின் அனைத்து முடிவுகளிலும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. புதுச்சேரியை ஆளும் அரசு விளம்பர அரசாகவும், அடிக்கல் நாட்டும் அரசாகவும் உள்ளதே தவிர ஆக்கப்பூர்வமான அரசாக இல்லை.

    இவ்வாறு பேசினார்.


    • பெட்ரோல் பங்கில் மானேஜராக வேலை செய்து வந்தார்.
    • மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் கோபி (வயது 51) இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் மானேஜராக வேலை செய்து வந்தார்.

    இவரது 2-வது மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபி மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் புதுவை பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கி இருந்தார்.

    நேற்று காலை வெகு நேரமாகியும் கோபி தங்கி இருந்த அறை திறக்கப்பட வில்லை.இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் கோபி தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகள் இறந்த வேதனையில் கோபி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    • மகளிர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து தானம்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை நகரில் சட்டமன்ற உறுப்பினரின் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.29 லட்சத்து 95 ஆயிரம் 343 மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைப்பதற்கான பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கி தொடங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன், பாஜக விவசாய அணி பொறுப்பா ளர் ராமு, தானம்பா ளையம் பாஜக பிரமுகர்கள் ஞானசேகரன், சக்திவேல், கணேசன் தொகுதி தலைவர் லட்சுமி காந்தன், தவளக்குப்பம் கிருஷ்ண மூர்த்தி, முகாம்மிகை நகர் ஐய்யப்பன், சுந்தரமூர்த்தி, ஜி.ஞா னசே கர், ஜனார்த்தனன் மகளிர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • உதவி தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலமாக வருமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, பாகூர் தொகுதியில் உள்ள பெண் பயனாளிகளுக்கு உதவி தொகை வழங்கிடும் நிகழ்ச்சி பாகூரில் உள்ள விஜயவர்த்தினி மகாலில் நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர் தேனீ. ஜெயக்கு மார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு முதற்கட்டமாக பாகூர் தொகுதியை சேர்ந்த பயனாளிகள் 400 பேருக்கு உதவி தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை துணை இயக்குனர் அமுதா,தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தவமுருகன், விவசாய அணி தலைவர் பாஸ்கர், தி.மு.க., தொகுதி செயலாளர் அரிக்கிருஷ்ணன், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி சாலை வசதி ஏற்படுத்த பரிந்துரை செய்தார்.
    • மீனவர் பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

     புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை சோலை நகர் வடக்கு மீனவர் சுனாமி குடியிருப்பு பகுதிக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்த நிலையில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ்குமார் ஏற்பாட்டில் தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி சாலை வசதி ஏற்படுத்த பரிந்துரை செய்தார்.

    அதன்படி ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை நடந்தது. சாலை அமைக்கும் பணியை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள், சோலை நகர் வடக்கு மீனவர் பஞ்சாயத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது.
    • காங்கிரஸ் பொருப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி நினைவு தின நிகழ்ச்சி அரியாங்குப்பம் பிரம்மன் சிலை சதுக்கம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளரும், தொகுதி காங்கிரஸ் பொருப்பாளருமான சங்கர் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவரும் முன்னாள் அரசு கொறடா வுமான அனந்தராமன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அன்புமணி ஆகியோர் இந்திரா காந்தி உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் கங்கேயன், மாநில மகிளா காங்கிரஸ் தலைவி பொன்னி, தேங்காய்திட்டு முருகன், காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன், குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெற்று வருகின்றது.
    • பல லட்சங்கள் புரளும் வியாபார தளமாக இருந்து வருகின்றது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் புகழ்பெற்ற மாட்டு வார சந்தை மதகடிப்பட்டில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடை பெற்று வருகின்றது.

    இந்த சந்தையில் புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மாட்டு வியாபாரிகள் இந்த சந்தையில் ஒன்று கூடி மாடுகளை விற்பதும், வாங்குவதும் என பல லட்சங்கள் புரளும் வியாபார தளமாக இருந்து வருகின்றது.

    இந்த வாரச்சந்தையில் மாடுகள் மட்டும் இல்லாமல் காய்கறிகள், பழங்கள், கருவாடுகள், மரக்கன்றுகள், மாடுகளுக்கு தேவையான மூக்கணாம் கயிறு, சாட்டை ஆகியவற்றை வியாபாரிகள் அதிக அளவில் விற்பனை செய்வார்கள். தற்போது இந்த சந்தை மேம்படுத்தப்படாமல் குடிநீர், கழிவறைகள், சிமெண்ட் தரைகள், சுற்றுச்சுவர் மற்றும் கதவுகள் என அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை பெய்த மழையால் வாரச்சந்தை எங்கு பார்த்தாலும் சேரும், சகதியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த வாரம் வியாபார கடைகள் குறைந்து காணப்பட்டது.

    • புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்.
    • கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் உதயநாள் விழா இன்று நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்து மாநில நாட்களையும் கவர்னர் மாளிகையில் கொண்டாடும்போது தேச ஒற்றுமை ஏற்படும்.

    பல மொழி பேசினாலும், பல மாநிலமாக இருந்தாலும் கலாச்சாரத்தால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். எனக்கு யாராலும் பாதுகாப்பற்ற நிலை வராது.

    புதுவையில் பதவியேற்றவுடன் 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தது. அனைத்தையும் எடுக்கும்படி கூறினேன். இதனால் பாதுகாப்புக்கு இருந்த மத்திய பாதுகாப்பு படை சென்றது.

    ஓரடுக்கு பாதுகாப்பு மட்டும் இருந்தது. என் பாதுகாப்பை அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்.

    கவர்னர் மாளிகை எதிரே உள்ளது பொதுமக்களுக்கான சாலை. அதனால் தான் திறந்துள்ளோம். எதிர்க்கட்சியினர் பாதுகாப்பு தடுப்புகளை எடுக்கும்படி கூறிவிட்டு, இங்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என கோரிக்கை வைக்கிறேன்.

    பிரச்சனை என்றால் என்னிடம் நேரில் வந்து பேசுங்கள். புதுவையில் ஆரோக்கியமான சூழல் வேண்டும். தடுப்புகள் இல்லாததால் பெட்ரோல் குண்டு போட்டுவிடாதீர்கள்.

    தெலுங்கானாவில் மசோதாவுக்கு கையெழுத்து போடாததால் நீதிமன்றம் சென்றார்கள்.

    இது அந்தந்த மாநில பிரச்சனை. தமிழக மசோதாவை அந்த கவர்னர் எதிர்கொள்கிறார். அதில் கருத்து சொல்ல விரும்பவில்லை.

    புதுவையில் அதிகாரிகள், எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர், முதலமைச்சர், அமைச்சர்கள், கவர்னர் என்ற இணைப்பு சரியாக இருக்க வேண்டும்.

    எங்கு குறை இருந்தாலும் சரி செய்யலாம். அதிகாரிகளால் முதலமைச்சருக்கும், எனக்கும் சங்கடங்கள் இருக்கலாம். அது சரி செய்யப்பட்டு மாநிலத்தில் மக்கள் பலன் அடைய வேண்டும்.

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோருடன் அதிகாரிகளுக்கு சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். அதை களைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். புதுவை தலைமைச் செயலரை அழைத்து பேசினேன். முதலமைச்சரிடமும் பேசியுள்ளேன்.

    அதிகாரிகள் தாமதம் செய்வது கவலை அளிக்கக்கூடியதாக இருந்தது.

    முதலமைச்சர், அமைச்சர்களை கலந்து ஆலோசித்து சுமூகமாக செயலாற்ற நடவடிக்கை எடுத்துள்ளேன்.

    தமிழகத்தில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்

    தமிழகத்திலும் முதலமைச்சரும், கவர்னரும் அமர்ந்து பேசி தீர்வு காணலாம். சும்மா சண்டையே போடவேண்டியதில்லை. தெலுங்கானாவிலும் இதே கருத்தையே சொல்கிறேன். கருத்து வேறுபாடுகளோடு இருக்கும்போது பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. கருத்து ஒற்றுமை தேவை. அது புதுவையில் இருக்க வேண்டும்.

    அது இருப்பதுபோல் நான் பார்த்து கொள்வேன். பயங்கரவாதத்துக்கு எங்கேயும் இடம் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர்.
    • போலீசார் விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் கோபி (வயது 51) இவர் அங்குள்ள பெட்ரோல் பங்கில் மானேஜராக வேலை செய்து வந்தார்.

    இவரது 2-வது மகள் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபி மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் புதுவை பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கி இருந்தார்.

    நேற்று காலை வெகு நேரமாகியும் கோபி தங்கி இருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மின் விசிறியில் கோபி தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து உருளையன் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மகள் இறந்த வேதனையில் கோபி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • உலக வாழ்விட தினம் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.
    • மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) இயந்திரவியல் துறை இந்திய பொறியாளர் அமைப்பு மாணவர் பிரிவு சார்பில் உலக வாழ்விட தினம் சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார். இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறைத் தலைவர் ராஜாராம் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை கிரீன் கியாஸ்- கெமிக்கல்ஸ் பெர்டிலைசர்ஸ் தனியார் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி என்ஜினீயர் ஞானசேகரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    கருத்தரங்கில் இயந்திரவியல் துறை மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ் குமார் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடவியல் துறை பேராசிரியை ராஜலட்சுமி மற்றும் உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • இன்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக இருந்தது.
    • தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்தது.

    குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. நேற்றைய தினம் வானிலை மாறி, மாறி இருந்தது.

    இந்நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக இருந்தது. இன்று அதிகாலையில் நல்ல மழை பெய்தது.

    தொடர்ந்து லேசான மழை பெய்தது. காலை 9.30 மணியளவில் மழை கொட்டத்தொடங்கி யது. சுமார் அரைமணிநேரம் விடாமல் கனமழை பெய்தது. மழையால் புதுவை நகர சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    குளிர்ந்த காற்று

    இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன்பிறகும் தொடர்ந்து லேசான மழை பெய்த வண்ணம் உள்ளது. குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.

    • இதனடிப்படையில் துறைமுகத்தை ஒட்டி தேங்காய்திட்டு செல்லும் பாதையில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.
    • பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் நேதாஜி நகர் அம்பேத்கர் சாலையின் இருபுறத்திலும் மீன் விற்கின்றனர்.

    இதனால் காலையில் பள்ளி, அரசு அலுவலகங்கள் தொடங்கும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அங்கு மீன் விற்ப னையை வேறு இடத்தில் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதனடிப்படையில் துறைமுகத்தை ஒட்டி தேங்காய்திட்டு செல்லும் பாதையில் அரசுக்கு சொந்த மான இடம் உள்ளது. அந்த இடத்தில் மீன்மார்க்கெட் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கான பூமி பூஜையும் நடந்துள்ளது.

    இந்நிலையில் அங்கு மீன் மார்க்கெட் கட்ட நேதாஜி நகர் பகுதி மக்களும், சில சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    மார்க்கெட் கட்டுவதை எதிர்த்து மறியல் நடத்தப்படும் என அவர்கள் அறிவித்தனர்.

    இதற்காக இன்று காலை உப்பளம் கல்லறை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அம்பேத்கர் சிலை அருகே அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் அவர்கள் பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ×