search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றன.
    • அடுத்த சுற்றுக்கு முன்னேற சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில், தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. அந்த வகையில், பிளே ஆஃப் சுற்றுக்கு நான்காவது அணியாக தகுதி பெறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    வருகிற 18 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற இருக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற முடியும்.

    அந்த வகையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு தயாராகும் வகையில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் டோனி இன்று பயிற்சியில் ஈடுபட்டார். சி.எஸ்.கே. அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக இருக்கும் டோனி இன்றைய பயிற்சியின் போது பந்துவீசினார். இது தொடர்பான வீடியோவை சி.எஸ்.கே. அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பகிர்ந்து இருக்கிறது. 


    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இன்றைய போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், டாஸ் போடப்படாமலேயே போட்டி கைவிடப்பட்டது. இந்த போட்டி கைவிடப்பட்டதை அடுத்து புள்ளிகள் அடிப்பைடையில் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது.

    முன்னதாக குஜராத் அணி விளையாட இருந்த போட்டி இதே போன்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து அந்த அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் போட்டி 26-ந்தேதி முடிவடையும் நிலையில், உலகக்கோப்பை போட்டி தொடங்க ஒரு வாரம் கூட இல்லை.
    • வழக்கமாக ஒவ்வொரு அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்காளதேச அணி அமெரிக்கா புறப்பட்டுள்ளது.

    பொதுவாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். அந்த வகையில் இந்தியா இரண்டு பயற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 26-ந்தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இரண்டிற்கும் இடையில் ஒரு வார இடைவெளி கூட இல்லை.

    இந்த நிலையில் இந்தியா ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் விளையாடும் எனத் தெரிகிறது. நியூயார்க்கில் நடைபெறும் அந்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் (ஜூன் 1-ந்தேதி) அமெரிக்கா கனடாவை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்தியா விளையாடும் லீக் போட்டிகள் நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பயணத்தை தவிர்க்க பயிற்சி ஆட்டமும் அங்கேயே நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் டல்லாஸ், நியூயார்க் மற்றும் மியாமி அருகில் உள்ள போர்ட் லார்டர்ஹில் ஆகிய மூன்று இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் ஐசன்ஹோவர் பார்க் மைதானத்தை அதிகவேக ஒட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

    சில நாட்களுக்கு முன்பு தரம்சாலாவில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் ரிலீ ரோசோவ் அதிரடியாக விளையாடி அசைச்சத்தம் அடித்தார். அவர் அரைசதம் அடித்ததை வானத்தை நோக்கி துப்பாக்கி சுடுவது போன்று சைகை காட்டி கொண்டாடினார்.

    அதன்பின்பு கரண் சர்மா பந்துவீச்சில் ரிலீ ரோசோவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது விராட் கோலி துப்பாக்கி சுடுவது போன்று ஆக்ஷன் காட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.

    இந்நிலையில், ஸ்போர்ட்ஸ்டார் மீடியாவில் ரிலீ ரோசோவ் பேட்டியளித்தார். அப்போது, "எல்லா டி20 போட்டிகளிலும் நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என எல்லாரும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் நீங்கள் விராட் கோலியாக இல்லாத வரை, அது நடக்கவே நடக்காத ஒன்று" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் 5 அரை சதங்கள் மற்றும் ஒரு அபார சதத்துடன் 661 ரன்களுடன் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் கோலி தற்போது முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
    • ஐதராபாத் அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐதராபாத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.

    ஏழு மணியில் இருந்து டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மைதானத்தில் இன்னமும் மழை நீடிப்பதால் டாஸ் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

    • ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
    • ரிக்கி பாண்டிங் அல்லது பிளமிங் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இதனால் ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவி ஜூன் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்பது உறுதியாகியுள்ளது.

    ராகுல் டிராவிட் மீண்டும் விண்ணப்பம் செய்ய விரும்பவில்லை. சில முன்னாள் வீரர்கள் அவரை வலியுறுத்திய போதிலும் மறுத்து விட்டார்.

    விவிஎஸ் லட்சுமண் இந்திய அணியில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இல்லாதபோது பயிற்சியாளராக செயல்பட்டார். மேலும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ளார். இதனால் விவிஎஸ் லட்சுமண் விண்ணப்பம் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் விவிஎஸ் லட்சுமணும் விண்ணப்பிக்க விரும்பவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிளமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், ரிக்கி பாண்டிங் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராகவும் உள்ளார்.

    • இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை.
    • எந்த விஷயத்தையும் எட்ட முடியாமல் விட்டுவிட்டு, அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன்.

    இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. 35 வயதான இவர் தற்போதும் முழு உத்வேகத்துடன் 100 சதவீதம் பங்களிப்பை அணிக்காக கொடுத்து வருகிறார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தார். இதனால் டி20 அணியில் சேர்க்கப்பட்டார்.

    டி20 கிரிக்கெட்டிற்குப் பிறகு விராட் கோலி ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    ஆனால் விராட் கோலி ஒருபோதும் ஓய்வு தொடர்பாக பேசியது கிடையாது. இந்திய அணிக்காக தனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் ஓய்வு குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    ஒரு விளையாட்டு வீரராக எங்களுடைய விளையாட்டு வாழ்க்கையும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் நான் சற்று பின்னோக்கி செல்கிறேன். இதை செய்ய முடியவில்லையே, இதை செய்திருக்கலாமே என என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை நினைக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், என்னால் எப்போது தொடர்ந்து செல்ல முடியாது.

    எனவே குறையாக இருக்கும் எந்த விஷயத்தையும் செய்யாமல் விட்டுவிட்டு அதற்காக பின்னர் வருத்தப்படுவதை நான் செய்யமாட்டேன். ஒருமுறை எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடித்தவுடன் நான் போய் விடுவேன். அதன்பின் நீங்கள் என்னை பார்க்கமாட்டீர்கள். எனவே தற்போது விளையாடும் வரை என்னிடம் உள்ள அனைத்தையும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அதுதான் என்னை தொடர்ந்து விளையாட வைக்கிறது.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    35 வயதாகும் விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதம், 30 அரைசதங்களுடன் 8848 ரன்கள் குவித்துள்ளார். 292 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 50 சதம், 72 அரைசதம் அடித்துள்ளார். மொத்தம் 13 ஆயிரத்து 848 ரன்கள் அடித்துள்ளார். 117 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதம், 37 அரைசதங்களுடன் 4037 ரன்கள் அடித்துள்ளார்.

    • ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கேப்டன் கம்மின்ஸ், நடராஜன், புவனேஸ்குமார் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.
    • சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 66-வது 'லீக்' ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கிறது. ஐதராபாத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி குஜராத்தை வீழ்த்தி 8-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்துடன் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 3-வது அணியாக ஐதராபாத் இன்று தகுதி பெறலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    ஐதராபாத் அணியில் டிரெவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், கேப்டன் கம்மின்ஸ், நடராஜன், புவனேஸ்குமார் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

    சுப்மன்கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி 6-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • பஞ்சாப் அணியில் சாம் கரன் 63 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது. பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ- பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 4 ரன்னில் வெளியேறினார். மிகவும் மோசமான விளையாட்டை வெளிப்படுத்திய பேர்ஸ்டோ 22 பந்தில் 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷசாங் சிங் டக் அவுட் ஆனார். அடுத்து சிறிது நேரத்தில் ரிலீ ரோசோவ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில் கேப்டன் சாம் கரன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய ஜித்தேஷ் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கரன் அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் அசுதோஷ் சர்மா - சாம் கரன் இறுதி வரை சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதக்கு அழைத்து சென்றனர். இதனால் பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான், சாஹல் 2 விக்கெட்டும் டிரென் போல்ட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

    • ரியான் பராக் சிறப்பாக ஆடி 48 ரன்களை குவித்தார்.
    • சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல், ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கவுகாத்தியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களுக்கும், டாம் கோலர் கேட்மோர் 18 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 18 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் பொறுப்பாக ஆடினார்.

     


    அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் 28 ரன்களை அடித்து அவுட் ஆனார். துருவ் ஜூரெல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இவர்களை தொடர்ந்து வந்த ரோவ்மேன் போவெல் 4 ரன்களிலும், டொனோவன் ஃபெரைரா 7 ரன்களிலும் அவுட் ஆகினர். போட்டி முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை குவித்துள்ளது.

    பஞ்சாப் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாம் கர்ரன், ஹர்ஷல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.

    அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    • ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது.
    • 23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    நேபாள கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

    2022ம் ஆண்டு ஹோட்டல் அறையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது பாலியல் புகார் எழுந்தது

    இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த காத்மாண்டு நீதிமன்றம் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது

    23 வயதான அவர் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேபாள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லமிச்சேனை விடுதலை செய்தது

    எதிர்வரும் டி20 உலகக்கோப்பைக்கான நேபாள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், மே 25 வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால் சந்தீப் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×