search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை டாஸ் வென்றது.
    • மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்டவில்லை.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் மும்பை டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் டாஸ் போடுவதில் மீண்டும் மும்பை அணியால் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் ஏமாற்று வேலை செய்ததாக முன்பே ஒரு முறை சர்ச்சை எழுந்தது.

    அதனையடுத்து ஒவ்வொரு போட்டியிலும் டாஸ் போடும்போது யார் டாஸ் வென்றார்கள் என டாஸ் போட்ட பின் கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டினார்கள்.

    அந்த வகையில் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா காசை சுண்டினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஹெட்ஸ் என கேட்டார். ஆனால் மேட்ச் ரெப்ரீ கீழே விழுந்த காசை உடனடியாக கையில் எடுத்ததோடு, ஹர்திக் பாண்டியா டாசில் வென்றதாக அறிவித்தார்.

    மற்ற போட்டிகளில் எல்லாம் டாசுக்கு பயன்படுத்திய காசை நேரலையில் காட்டிய நிலையில் இந்த முறை கீழே விழுந்த காசை காட்ட வில்லை. இதை அடுத்து சமூக வலை தளங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் டாசில் ஏமாற்று வேலை செய்து வெற்றி பெற்று விட்டதாக கூறி வருகிறார்கள்.

    ஒருவேளை உண்மையிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி டாசில் வென்றிருக்கலாம். ஆனால், மேட்ச் ரெப்ரீ அவசரப்பட்டு கீழே விழுந்த காசை தொலைக்காட்சியில் காட்டும் முன் கையில் எடுத்து விட்டார் என சில ரசிகர்கள் குறிப்பிட்டு மேட்ச் ரெப்ரீ தவறு செய்து விட்டதாக விமர்சித்து வருகிறார்கள்.

    • ஒரு கட்டத்தில் ஜிம்பாப்வே அணி 41 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து திணறியது.
    • இலங்கை தரப்பில் தஸ்கின் அகமது, சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மகேதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    ஜிம்பாப்வே அணி 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்களாக ஜே கும்பி- கிரேக் எர்வின் களமிறங்கினர். கிரேக் எர்வின் 0 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் ஜே கும்பி 17 ரன்னிலும் அடுத்து வந்த பிரையன் பென்னட் 16, வில்லியம்சன் 0, கேப்டன் ராசா 0, ரியான் பர்ல் 0, எல் ஜாங்வே 2 என வெளியேறினர். இதனால் ஜிம்பாப்வே அணி 41 ரன்னில் 7 விக்கெட்டை இழந்து திணறியது.

    இதனையடுத்து கிளைவ் மடாண்டே- டபிள்யூ மசகட்சா ஜோடி பொறுப்புடன் ஆடி விளையாடி ரன்களை உயர்த்தினர். கிளைவ் மடாண்டே 43 ரன்னிலும் டபிள்யூ மசகட்சா 34 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனால் ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இலங்கை தரப்பில் தஸ்கின் அகமது, சைபுதீன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மகேதி ஹசன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • இன்றைய ஆட்டத்தில் தோற்றால் மும்பை அணி முதல் அணியாக வெளியேறும்.
    • 2012-ம் ஆண்டுக்கு பிறகு வான்கடே மைதானத்தில் மும்பையை கொல்கத்தா அணி வென்றதில்லை.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    5 முறை சாம்பியனான மும்பை அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்வியுடன் 6 புள்ளி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. மும்பை அணி இனிவரும் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, மற்ற அணிகளின் முடிவு தனக்கு சாதகமாக அமைவதுடன், ரன்-ரேட்டிலும் திடமாக இருந்தால் ஒருவேளை அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிக்கலாம். மாறாக இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அந்த அணி முதல் அணியாக வெளியேறும்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் மும்பை அணி 23 முறையும், கொல்கத்தா அணி 9 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    வான்கடே மைதானத்தை பொறுத்தமட்டில் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணி பெருமளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இங்கு 10 ஆட்டங்களில் மும்பையுடன் மோதி இருக்கும் கொல்கத்தா அணி 9-ல் தோல்வி அடைந்துள்ளது. ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்த மைதானத்தில் மும்பையை வீழ்த்த முடியாமல் தவிக்கும் கொல்கத்தா அணி அந்த நிலையை மாற்றுமா? என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

    • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.
    • உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்கள் முறையே ராஜஸ்தான், கொல்கத்தா, லக்னோ, ஐதராபாத் ஆகிய அணிகள் உள்ளன. இந்த புள்ளிபட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வெற்றி 5 தோல்வியுடன் 5-வது இடத்தில் உள்ளது.

    சென்னை அணிக்கு பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்து வீச்சு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. முஸ்தஃபிசுர் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் வெற்றி பெற போட்டியில் கூட சென்னை அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

    சிஎஸ்கே அணிக்கு பந்து வீச்சுக்கு பக்க பலமாக இருந்த வங்காள தேச வீரர் முஸ்தஃபிசுர் ரகுமான் சிஎஸ்கே அணியில் இருந்து விடை பெற்றார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசுர் வங்கதேசம் திரும்பினார்.

    இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்த பதிவில் எல்லாவற்றுக்கும் நன்றி மஹி பாய். உங்களைப் போன்ற லெஜண்டுடன் சேர்ந்து விளையாடியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. உங்களது மதிப்புமிக்க அறிவுரைகளுக்கு நன்றி.

    அவற்றை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். உங்களை மீண்டும் சந்திக்கவும், மீண்டும் உங்களுடன் சேர்ந்து விளையாடவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    • இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.
    • 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது ரிச்சர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்‌ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

    20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இந்திய, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான நடுவர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ் பிரவுன், தர்மசேனா, கஃபேனி, கோஃப், ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, மதனகோபால், மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷீத் ரியாஸ், ரீஃபெல், லாங்டன் ருசேர், ஷாஹித் சைகத், ராட் டக்கர், அலெக்ஸ் வார்ப், வில்சன் மற்றும் ஆசிப் யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நடுவர் என்றாலே இந்திய அணிக்கு நியாபகம் வருவது ரிச்சர்ட் கெட்டில்பரோ. அவர் நாக் அவுட் சுற்றில் இந்திய அணிக்கான போட்டியில் நடுவராக இருந்தால் அந்த போட்டியில் கிட்டத்தட்ட இந்தியா தோல்வியடைந்து விடும் என்று ரெக்கார்ட் சொல்கிறது.

    குறிப்பாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி சதம் அடிக்க இவர் காரணமாக திகழ்ந்தார்.

     

    வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்க 2 ரன்னும் அணியின் வெற்றிக்கு 2 ரன்னும் தேவை என்ற நிலையில் பந்து வீச்சாளர் வைடு வீசுவார். ஆனால் அதனை நடுவராக இருந்த ரிச்சர்ட் வைடு கொடுக்காமல் ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அதுவும் யாராலும் மறந்திருக்க முடியாது. 

    • டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா 122 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

    கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான வருடாந்திர தரவரிசையை ஐசிசி அப்டேட் செய்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த வருடம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.

    இந்தியா 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 105 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா (103), நியூசிலாந்து (96), பாகிஸ்தான் (89), இலங்கை (83), வெஸ்ட் இண்டீஸ் (82), வங்காளதேசம் (53) ஆகிய அணிகள் முறையே 4-வது முதல் 9-வது இடங்களை பிடித்துள்ளன.

    2021 மே முதல் 2023 மே மாதம் வரை 50 சதவீதமும், அதன்பின் 12 மாதங்கள் வரை 100 சதவீதமும் ஒரு அணியின் செயல்பாடு கணக்கிடப்படும்.

    அதேவேளையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 122 புள்ளிகள் பெற்று இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 112 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தள்ளது. பாகிஸ்தான் 106 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், நியூசிலாந்து 101 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

    டி20 கிரிக்கெட்டில் இந்தியா 264 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 257 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 252 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா 250 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

    • வீராட்-அனுஷ்கா RCB நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பாலிவுட் நடிகைகளில் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரப் நே பனா தி ஜோடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலியும் காதலித்து வந்தனர்.

    இவர்கள் இருவருக்கும் 2017- ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. 2021 ஜனவரி மாதம் வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா, விராட்கோலி விளையாடும் முக்கிய போட்டிகளில் எல்லாம் களத்திற்கு வந்து அவரை

    உற்சாகப்படுத்த என்றுமே தவறியதில்லை. சமீபத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் விராட்கோலி தனது 50-வது சதத்தை பூர்த்தி செய்தபோது அனுஷ்கா சர்மா, முத்தங்களை பறக்கவிட்டு உற்சாகத்தை கொடுத்தார். தற்போதும் கூட ஐபிஎல் தொடரில் RCB அணியில் விளையாடும் விராட் கோலியை அவ்வபோது சந்தித்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

     இந்த நிலையில் அனுஷ்கா ஷர்மா கடந்த மே- 1ந்தேதி அன்று தனது 36-வது பிறந்த நாளை வீராட் கோலியின் RCB நண்பர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடினார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
    • எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடந்தது.

    இந்த போட்டியில் இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி ஆடினார். அப்போது அவரது ஆட்டத்தின் போது ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவார கோஷமிட்டனர்.ஆனாலும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் எளிதாக வென்றது.




    இந்நிலையில் சென்னையை சேர்ந்த 103 வயது ராம்தாஸ் என்பவர் தோனியின் தீவிர கிரிக்கெட் ரசிகர். இவர் தோனி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை தவறாமால் பார்த்து ரசிப்பார்.

    தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி கேள்விபட்ட தோனி 103 வயதான அந்த ரசிகரைநேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.




    மேலும் அந்த ரசிகருக்கு தனது கையொப்பமிட்ட சிறப்பு பரிசாக ஜெர்சி சட்டை ஒன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    எம்.எஸ்.தோனி 103 வயது ரசிகருக்கு சிறப்பு பரிசு வழங்கிய வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ரசிகர்கள் தோனியை பாராட்டி வருகிறார்கள்.

    • ஆரம்ப கட்டத்தில் அவரது சாதனைகள், 17 வயதிலேயே தனது கவுண்டி கிளப்புடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
    • சர்வதேச சுற்றுகளில் அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுழற்பந்து வீச்சாளர் ஜோஷ் பேக்கர் 20 வயதில் மரணமடைந்ததாக வொர்செஸ்டர்ஷைர் கிரிக்கெட் கிளப் நேற்று அறிவித்துள்ளது. ஜோஷ் பேக்கர் இறப்புக்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றாலும், கவுண்டியின் தலைமை நிர்வாகி ஆஷ்லே கில்ஸ், பேக்கர் காலமான செய்தி 'நம் அனைவரையும் பேரழிவிற்கு ஆளாக்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

    பேக்கர் 2021-ம் ஆண்டு வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக விளையாடத் தொடங்கியபோது தனது முதல் தர கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கினார்.

    ஆரம்ப கட்டத்தில் அவரது சாதனைகள், 17 வயதிலேயே தனது கவுண்டி கிளப்புடன் தனது முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் சர்வதேச சுற்றுகளில் அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் கடைசியில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. ராஜஸ்தான் முதல் ஓவரில் 1 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட்லர், சாம்சன் 0 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

    இதனையடுத்து ஜெய்ஸ்வால் - ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். ஜெய்ஸ்வால் 67 ரன்னிலும் பராக் 77 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து ஹெட்மயர் 13 ரன்னில் நட்ராஜன் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    இதனால் ராஜஸ்தான் வெற்றி பெற 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். முதல் பந்தில் ஜூரல் (1) விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த அஸ்வின் 1 ரன் எடுத்தார். அடுத்த 3 பந்துகளை ரோமன் பவல் டாட் பந்துகளாக மாற்றினார். கடைசி பந்தை பவல் சிக்சராக மாற்ற கடைசி ஓவரில் ராஜஸ்தானுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5-வது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.

    இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதனால் ஐதராபாத் அணி 1 ரன்னில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டும் நடராஜன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
    • இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி முதலில் தடுமாறினாலும் பின்னர் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது.

    ராஜஸ்தான் தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் வீசி 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது மோசமான சாதனையை சாஹல் படைத்துள்ளார். இதற்கு முன்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 1 விக்கெட் வீழ்த்தி 54 ரன்கள் விட்டுக் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் தரப்பில் நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அபிஷேக் 12 ரன்னிலும் அன்மோல்பிரீத் சிங் 5 ரன்னிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். மெதுவாக விளையாடிய ஹெட் 44 பந்தில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசன் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் அரை சதம் விளாசி அசத்தினார்.

    இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ரன்னிலும் கிளாசன் 42 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    ×