search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 18 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 1997-ம் ஆண்டு கைப்பற்றி இருந்தது.

    கொழும்பு:

    இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதன் மூலம் 18 ஆண்டுகளுக்கு பின்பு மோசமான சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதாவது இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 1108 நாட்களுக்குப் பின் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி உள்ளது. கடைசியாக ஜூலை 2021-ல் இந்திய அணியை ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில் 3-வது போட்டியில் இந்தியா வென்றால் இந்த தொடரை 1 - 1 என சமன் மட்டுமே செய்ய முடியும். ஒருவேளை இலங்கை அணி 3-வது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை 2 - 0 என கைப்பற்றும். எனவே, இந்தியா இந்த தொடரை கைப்பற்ற வாய்ப்பு இல்லை. இதனால் 18 ஆண்டுகள் கழித்து இலங்கை அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி கைப்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டன. அதனால், அந்த தொடர் 0 - 0 என்ற அளவில் முடிவுக்கு வந்தது. அந்தத் தொடர் சமன் செய்யப்பட்டது.

    அதேபோன்ற சூழ்நிலை இப்போதும் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கும் கூட இந்திய அணி 3-வது போட்டியில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தொடரை சமன் செய்ய முடியும். ஒரு வேளை இந்திய அணி மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தால் 27 ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்த மோசமான சாதனையை செய்யும்.

    கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவுக்கு எதிரான 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது.
    • இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜெஃப்ரி வாண்டர்சே ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

    இப்போட்டியில் இலங்கை அணி வீரர் ஜெஃப்ரி வாண்டர்சே 10 ஓவர்கள் பந்து வீசி 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திற்காக அவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

    இதன் மூலம் ஒரு சுழற்பந்து வீச்சாளராக, இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சு வெளிப்படுத்திய வீரர்கள் வரிசையில் ஜெஃப்ரி வாண்டர்சே 3-வது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 1989-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தியா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 41 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 3-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அதனை ஜெஃப்ரி வண்டர்சே முறியடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் 30 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், இலங்கையைச் சேர்ந்த அஞ்சதா மெண்டிஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

    • அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
    • உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கிறார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிரகாம் தோர்ப். 55 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கிரகாம் தோர்ப் மறைவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    அதில், "கிரகாம் தோர்ப், MBE, காலமானார் என்ற செய்தியை மிகுந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். கிரகாம் தோர்ப் மரணத்தால் உணரும் ஆழ்ந்த அதிர்ச்சியை விவரிக்க பொருத்தமான வார்த்தைகள் இல்லை என்று தோன்றுகிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக 100 போட்டிகளில் விளையாடி உள்ள கிரகாம் தோர்ப் 82 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரகாம் தோர்ப் இங்கிலாந்து அணி கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். 

    • இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
    • முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.

    இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை தொடர்ந்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை மற்றும் இந்தியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி சமனில் முடிந்தது.

    இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி நேற்றிரவு கொலம்போவில் நடைபெற்றது. துவக்கம் முதலே சிறப்பாக விளையாடிய இலங்கை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த போட்டியில் தோல்வியுற்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் பற்றி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார்.

    இது குறித்து பேசும் போது, "நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. எப்படி விளையாடினோம் என்பது பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், மிடில் ஓவர்களில் எங்களது பேட்டிங் பற்றிய பேச்சுவார்த்தை நிச்சயம் இருக்கும். ஒரு போட்டியில் தோல்வி அடையும் போது, எல்லாமே வலிக்கும்."

    "அந்த பத்து ஓவர்களை மட்டுமே கூறிவிட முடியாது. தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும், அந்த வகையில் இன்று நாங்கள் தோற்றுவிட்டோம். சிறிது ஏமாற்றமாகத் தான் இருக்கிறது. ஆனால் இதெல்லாம் நடக்கும். உங்கள் கண் முன் இருப்பதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்," என்று தெரிவித்தார். 

    • திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.
    • அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் ஷாருக்கான் தலைமையிலான லைகா கோவை கிங்ஸ் மற்றும் ரவிசந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதின.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதிலில் களமிறங்கிய கோவை அணி பேட்டர்கள் துவக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே எடுத்தது.

    கோவை அணி சார்பில் ராம் அரவிந்த் 27, அத்தீக் உர் ரஹ்மான் 25 மற்றும் சுஜய் 22 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் அணி சார்பில் விக்னேஷ் புத்துர், சந்தீப் வாரியர் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு வழக்கம்போல ரவிசந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். இவருடன் ஆடிய மற்ற வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    திண்டுக்கல் அணி சார்பில் ரவிசந்திரன் அஸ்வின் 52, பாபா இந்திரஜித் 32 மற்றும் சரத் குமார் 27 ரன்களை எடுத்தனர். கோவை அணி சார்பில் சித்தார்த், வல்லியப்பன் யுதீஸ்வரன் மற்றும் கௌதம் தாமரை கண்ணன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

    • முதலில் ஆடிய இலங்கை 240 ரன்களை எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

    இந்நிலையில், இலங்கை-இந்திய் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது. அவிஷ்கா பெர்னாண்டோ 40 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 30 ரன்னிலும் அவுட்டாகினர். வெலாலகே 39 ரன்னிலும், கமிந்து மெண்டிஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடியாக ஆடியது.

    முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா அரை சதமடித்து 64 ரன்னில் அவுட்டானார், சுப்மன் கில் 35 ரன்னில் வெளியேறினார். அக்சர் படேல் ஓரளவு தாக்குப் பிடித்து 44 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கையின் வாண்டர்சே 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    • டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கோவை அணி 129 ரன்கள் எடுத்துள்ளது.

    சென்னை:

    டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.

    மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி கோவை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுஜய் அதிரடியாக ஆடி 12 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. ராம் அர்விந்த் 27 ரன்னும், அதிக் உர் ரகுமான் 25 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    திண்டுக்கல் சார்பில் சந்தீப் வாரியர், விக்னேஷ், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    • டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    சென்னை:

    டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஆர்.அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சும் மோதுகின்றன.

    மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி கோவை அணி முதலில் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 240 ரன்களை எடுத்தது.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

    இந்நிலையில், இலங்கை-இந்திய அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. முதல் பந்தில் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ், அவிஷ்கா பெர்னாண்டோவுடன் இணைந்து நிதானமாக ஆடினார். 2வது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில் அவிஷ்கா 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து குசால் மெண்டிஸ் 30 ரன்னில் அவுட்டானார்.

    சமரவிக்ரமா 14 ரன்னும், சரித் அசலங்கா 25 ரன்னும், ஜனித் லியாங்கே 12 ரன்னும் எடுத்தனர்.

    7வது விக்கெட்டுக்கு வெலாலகேவுடன் இணைந்த கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடினார். 72 ரன்கள் சேர்த்த நிலையில் வெலாலகே 39 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் கமிந்து மெண்டிஸ் 40 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை எடுத்தது.

    இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • இந்திய அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
    • முதல் ஒருநாள் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வியின்றி டையில் முடிந்தது.

    கொழும்பு:

    இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி டையில் முடிந்தது.

    இந்நிலையில், இலங்கை-இந்திய் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

    டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்குகிறது.

    • இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
    • இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜொகிந்தர் சர்மா, எம்எஸ் டோனியை சந்தித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு டோனியை சந்தித்த தருணங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

    இது தொடர்பான பதிவில் அவர், "நீண்ட காலத்திற்கு பிறகு உங்களை சந்தித்தது அருமையாக இருந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் உங்களை சந்தித்த மகிழ்ச்சி இன்று வித்தியாசமாக இருந்தது," என குறிப்பிட்டுள்ளார்.


    2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக கடைசி ஓவரை வீசிய ஜொகிந்தர் சர்மா, அதில் 12 ரன்களை தடுத்து நிறுத்தி இந்திய அணி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கினார்.

    பாாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியின் கடைசி ஓவரில் முதல் பந்தை மிஸ்பா உல் ஹக் சிக்சருக்கு பறக்க விட்ட போதிலும், ஓவரின் மற்ற பந்துகளை சிறப்பாக வீசிய ஜொகிந்தர் சர்மா ரன்களை கட்டுப்படுத்தி அசத்தினார்.

    தற்போது ஜொகிந்தர் சர்மா மற்றும் எம்எஸ் டோனி சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் உள்ளது.
    • அதிநவீன பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ள சின்னசாமி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய கிரிக்கெட் அகாடமியை பெங்களூருவில் பிசிசிஐ உருவாக்கி வந்தது. இந்த புதிய அகாடமியின் கட்டுமான வேலைகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த அகாடமி திறக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த அகாடமியில் மூன்று உலத்தரம் வாய்ந்த மைதானங்கள் உள்ளன. அத்துடன் 45 பயிற்சி ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பயிற்சி, காயத்தில் இருந்து மீணடு வருவதற்கான பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    சிறந்த சூழ்நிலையில் தற்போதைய வீரர்கள் மற்றும் எதிர்கால வீரர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.

    தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமி சின்னசாமி மைதான வளாகத்தில் அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய கிரிக்கெட் அகாடமி தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    ×