search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இலங்கைக்கு எதிரான தொடரில் ரோகித், கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கம்பீர் தொடர்வார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட டி20 தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

    இதனை தொடர்ந்து இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டி20-யின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார். ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
    • 2 போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.

    ஹராரே:

    சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 13 ரன் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை உள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகள் மோதும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சன், சிவம் துபே, ஜெய்ஸ்வால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமாருக்கு பதிலாக கலீல் அகமது இடம் பிடித்துள்ளார்.

    • இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நேற்று நியமிக்கப்பட்டார்.
    • பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அடுத்த பயிற்சியாளர் என்பது குறித்து சமூக வலைதளங்களில் பல கருத்துக்கள் உலா வந்தன.

    அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    அதனை தொடர்ந்து கவுதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நேற்று தெரிவித்தார்.

    பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர்கள் யார் என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. பீல்டிங் பயிற்சியாளராக திலீப் தொடர்வார். மேலும் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் பந்து வீச்சு பயிற்சியாளராக எல் பாலாஜி, ஜாகீர் கான், வினய் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது லட்சுமிபதி பாலாஜியை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் வினய் குமாரை பவிலிங் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பிசிசிஐயிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

    • முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார்.
    • 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் சாதனையை ஆண்டர்சன் முறியடிப்பார்.

    லண்டன்:

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி கிரேக் பிராத்வைட் தலைமையிலும், இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற உள்ளார். இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் சாதனையை ஆண்டர்சன் முறியடிப்பார். 

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை இன்று ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ருதுராஜ் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 77 குவித்ததன் மூலம் 13 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 821 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 844 புள்ளிகளுடன் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் (755 புள்ளி) முகமது ரிஸ்வான் (746 புள்ளி) உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 இடங்கள் பின்தங்கி 646 புள்ளிகள் பெற்று 11-வது இடம் பிடித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.
    • இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

    டி20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடந்தது. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதையடுத்து டி20 உலகக் கோப்பையை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான அணி, ஊழியர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் என 42 பேர் கொண்ட குழுவுக்கு 125 கோடி ரூபாயை பரிசாக அறிவித்தது பி.சி.சி.ஐ.

    இதில், இந்திய அணி வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பட்டியலில் ஒரு போட்டியில் கூட விளையாடாத வீரர்களும் உள்ளனர். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடியும், அவரது பயிற்சியாளர் ஊழியர்களுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படுகிறது. பிசியோ, த்ரோ டவுன் நிபுணர்கள் போன்றவர்களுக்கு தலா ரூ. 2 கோடியும், தேர்வாளர்களுக்கு தலா ரூ.1 கோடி என பரிசு தொகை பிரித்து வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தனக்கு மற்றவர்களை விட அதிக பரிசு தொகை வேண்டாம் எனவும், 2.5 கோடி ரூபாயே போதும் என ராகுல் டிராவிட் பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, ராகுல் தனது மற்ற துணை ஊழியர்களுக்கு வழங்கிய அதே பரிசு தொகையை (ரூ. 2.5 கோடி) விரும்பினார். அவரது உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பை தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.50 லட்சத்தை பி.சி.சி.ஐ. பரிசாக அறிவித்தது. அச்சமயத்தில் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட், பரிசு தொகையை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என பி.சி.சி.ஐ.யை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.
    • வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதோடு ரோகித் சர்மா, விராட்கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்காக அறிவித்தனர்.

    தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது.

    3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.

    இதற்கிடையே இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 20 ஓவர் போட்டியில் மட்டுமே ஓய்வு அறிவித்து இருந்தனர். ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ஆடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, வீராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ஆடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 3 பேருக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட உள்ளதால் இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் தொடரில் 3 பேரும் விளையாடவில்லை எனறு கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவர்கள் பயிற்சி பெற போதுமானதாக இருக்கும்.

    இந்திய அணி செப்டம்பர்-ஜனவரி இடைவெளியில் 10 டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. வங்காளதேசம் (2 டெஸ்ட்), நியூசிலாந்து (3 டெஸ்ட்) ஆஸ்திரேலியா (5 டெஸ்ட்) ஆகியவற்றுடன் மோத இருக்கிறது.

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கும்பட்சத்தில் ஹர்திக் பாண்ட்யா அல்லது கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    • மதுரை அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹரி 20 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • திருச்சி அணி தரப்பில் சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    சேலம்:

    டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வசீம் அகமது- சஞ்சய் யாதவ் ஜோடி அதிரடியாக ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட் ஆகவில்லை.

    இதனையடுத்து இமாலய இலக்குடன் மதுரை அணி களமிறங்குகியது. தொடக்க வீரரான லோகேஸ்வர் 7 ரன்னிலும் அடுத்து வந்த கவுசிக் 1, என்.எஸ்.சதுர்வேத் 7, அக்ரம் கான் 11 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ஒரு முனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஹரி 20 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற மதுரை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. திருச்சி அணி தரப்பில் சஞ்சய் யாதவ், ராஜ்குமார் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும்.

    இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

    இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரை நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பு குறித்து கவுதம் கம்பீர் தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்கு சேவை செய்வது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். மதிப்புமிக்க வேறொரு பொறுப்புடன் மீண்டும் இந்திய அணிக்குள் வருவதில் பெருமை கொள்கிறேன்.

    ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 140 கோடி இந்தியர்களின் கனவுகளை தோள்களில் சுமக்கும் வீரர்களுடன் இணைந்து, அதனை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று தெரிவித்துள்ளார். 

    • 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார்.
    • 2018-ம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக கம்பீர் அறிவித்தார்.

    இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் டெல்லியை சேர்ந்தவர். இவர் 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமானார். சிறப்பான ஆட்டத்தின் மூலம் 2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும் அறிமுகமானார். இதனை தொடர்ந்து 2007-ம் ஆண்டில் டி20 என மூன்று வடிவ இந்திய அணியிலும் இடம் பிடித்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.

    கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமான நபர். அவர் கிரிக்கெட் ஆடிய காலங்களிலேயே ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவார். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது கம்ரான் அக்மல் மற்றும் அப்ரிடியிடம் மோதலில் ஈடுப்பட்டுள்ளார். இது தொடர்பான சம்பவம் அந்த நேரத்தில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் போதும் சரி விளையாடி முடித்து தற்போது ஆலோசகராக இருக்கும் போது சரி, மோதலில் ஈடுபடுவதை தவிர்த்ததில்லை.

    குறிப்பாக விராட் கோலி - கம்பீர் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதை அனைவரும் பார்த்ததுண்டு. அந்த வகையில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆர்சிபி விளையாடும் போது விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் காம்பீர் கொண்டாடுவார். அப்போது விராட் கோலி அவரிடம் வார்த்தை மோதலில் ஈடுபடுவார்.

    அதேபோல் லக்னோ அணிக்கு ஆலோசகராக இருக்கும் போது விராட் லக்னோ வீரர்களிடம் வம்பிலுப்பார். இதனால் போட்டி முடிந்தவுடன் கம்பீர் இது தொடர்பாக விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபடுவார். இது ஐபிஎல் தொடரில் பரபரப்பாக பேசப்பட்டது.

    மேலும் டோனியுடன் இவர் நேருக்கு நேர் மோதுவதில்லை. ஆனால் அவ்வபோது பேட்டியில் டோனியை எதிர்த்து கருத்துக்களை தெரிவிப்பார். டோனியால் மட்டும் தான் உலகக் கோப்பை இந்தியா வாங்கியது என்று கூறி வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என கம்பீர் கூறி வருகிறார். இப்படி டோனியை எதிர்த்து பல கருத்துக்களை அவர் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இதை தவிர டோனிக்கு எதிராக களத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை சுற்றி 4 பீல்டர்களை அவர் சேட் செய்தார். இது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

    இப்படி எதையும் தயங்காமல் செய்யும் கம்பீர், வெற்றிக்காக தன் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நினைப்பவர்.

    2007-இல் நடந்த டி20 உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்தது கெளதம் கம்பீர் தான். 2011-இல், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக சாம்பியனான போதும், அப்போட்டியில் கம்பீரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. 2011 சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பையில் கம்பீர், 9 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 43.66 சராசரி மற்றும் 85.06 ஸ்டிரைக் ரேட்டில் 393 ரன்கள் எடுத்தார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும். 

    முதல் ஓவரில் இருந்து 42-வது ஓவர் வரை நின்று ஆடிய கம்பீர், 97 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், சிலர் இந்த வெற்றிக்கு கேப்டன் மகேந்திர சிங் டோனியை காரணம் காட்டியதும், கம்பீர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய இவரை கொல்கத்தா அணியின் கேப்டனாக அந்த அணியின் நிர்வாகம் நியமித்தது. கவுதம் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி முதன் முதலில் 2012-ம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் ஆனது. அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு கொல்கத்தா இரண்டாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் ஆன போதும் கவுதம் தான் கேப்டனாக இருந்தார்.


    அதனை தொடர்ந்து ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவரது ஆட்டமும் தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஒரு ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் விளையாடிய அவர் அதற்கு அடுத்த போட்டிகளில் இருந்து விலகினார்.

    இதனையடுத்து தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2018-ம் ஆண்டு அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக கம்பீர் அறிவித்தார். கிரிக்கெட்டில் இருந்து விலகிய அவர் 2019 முதல் 2024 வரை 17-வது மக்களவை உறுப்பினராக இருந்தார். பிறகு அரசியலில் இருந்து முழுவதுமாக விலகி மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்பினார்.

    அதன் பிறகு லக்னோ அணியின் ஆலோசராக செயல்பட்டார். 2022, 2023-ம் ஆண்டுகளில் லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கும் மூன்றாவது இடத்திற்கும் அழைத்துச் சென்ற பெருமை கம்பீரையே சேரும். இதனையடுத்து அந்த அணியின் பிரச்சனையின் காரணமாக மீண்டும் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கபட்டார்.


    இந்த ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை வென்றதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியனாகியுள்ளது. இந்த முறை கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்தார். மேலும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி மூன்று முறை பிளே-ஆஃப் சுற்றுகளை எட்டியது.


    2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 84 ரன்களில் சுருண்டது.
    • இந்தியாவின் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    சென்னை:

    தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 17.1 ஓவரில் 84 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பூஜா வஸ்த்ராகர் 4 விக்கெட்டும், ராதா யாதவ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, ஸ்மிர்தி மந்தனா இருவரும் சிறப்பான ஆடினர். ஸ்மிர்தி மந்தனா அரை சதமடித்து 54 ரன்னும், ஷபாலி 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், இந்திய மகளிர் அணி 10.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்துள்ளது.

    • டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய திருச்சி அணி 193 ரன்கள் குவித்தது.

    சேலம்:

    டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற

    மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார்.

    வசீம் அகமதுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.

    ×