search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    கென்யா அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்
    X

    கென்யா அணியின் தலைமை பயிற்சியாளராகிறார் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்

    • அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது.
    • டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வாய்ப்பை பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதிலும் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    இதில் விளையாடும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு குரூப்பாக பிரிக்கப்படும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரு அரையிறுதி போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

    டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வரை வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை மையமாக வைத்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான தோதா கணேஷ் என்பவரை கென்ய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தோதா கணேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    Next Story
    ×