search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முன்னணி வீரர்கள் மீண்டும் ஏமாற்றம்: முதல் நாள் முடிவில் இந்தியா 86/4
    X

    முன்னணி வீரர்கள் மீண்டும் ஏமாற்றம்: முதல் நாள் முடிவில் இந்தியா 86/4

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    மும்பை:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து 65.4 ஓவரில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ரோகித் சர்மா 18 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலுடன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 50 ரன்களைக் கடந்த நிலையில் ஜெய்ஸ்வால் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய முகமது சிராஜ் முதல் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து இறங்கிய விராட் கோலி 4 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளால் இந்திய அணி திணறி வருகிறது.

    இறுதியில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்களை எடுத்துள்ளது. சுப்மன் கில் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    Next Story
    ×