என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள்: சாதனை படைத்த விராட் கோலி
- இந்தியா 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
பெர்த்:
ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சில் இந்தியா 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்தன. தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜெய்ஸ்வால் 161 ரன்னும், விராட் கோலி 100 ரன்னும் அடித்தனர்.
534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 3-வது நாள் முடிவில் 12 ரன்னுக்குள் 3 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் விராட் கோலி அடித்த சதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 30-வது சதமாக பதிவானது. மூன்று வடிவிலான போட்டிகளையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலியின் 10-வது சதம் இது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.