search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இங்கு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம்.. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரோகித் சர்மா
    X

    இங்கு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம்.. ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரோகித் சர்மா

    • இந்தியா- ஆஸ்திரேலியா இடையே விளையாட்டிலும் சரி, வர்த்தகத்திலும் சரி நீண்ட காலம் நட்புறவு இருந்து வருகிறது.
    • ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தை அனுபவிக்க விரும்புகிறோம்.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தனது மனைவிக்குப் பிரசவத்தில் இரண்டாவது குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்டில் ரோகித் சர்மா கலந்துகொள்ளவில்லை. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கும் இரண்டாம் டெஸ்டில் கலந்துகொள்ள அவர் ஆஸ்திரேலியா சென்றுள்ளார்.

    அங்கு ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்ற ரோகித் ஷர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸை நேற்று [வியாழக்கிழமை] சந்தித்த அவர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையே விளையாட்டிலும் சரி, வர்த்தகத்திலும் சரி நீண்ட காலம் நட்புறவு இருந்து வருகிறது.

    பல ஆண்டுகளாக இங்கு வந்து கிரிக்கெட்டை உற்சாகமாக விளையாடுகிறோம். ஆஸ்திரேலிய மண்ணில் கிரிக்கெட் ஆடுவது எப்போதும் சவாலானது. முந்தைய தொடர்களிலும், கடந்த வாரத்திலும் இங்கு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம். அதே உத்வேகத்துடன் அடுத்து வரும் போட்டிகளையும் எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளோம்.

    அதே சமயம் ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தையும் அனுபவிக்க விரும்புகிறோம். இங்குள்ள ஒவ்வொரு நகரங்களும் வெவ்வேறு விதமான உணர்வைத் தருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட்டை ரசித்து விளையாடுவது எப்போதும் பிடிக்கும்.

    வரும் வாரங்களில் ஆஸ்திரேலிய மக்களையும், எங்களது சாதனைகளுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் இந்திய ரசிகர்களையும் குதூகலப்படுத்துவோம் என்று நம்புகிறேன் என்று பேசியுள்ளார்.

    Next Story
    ×