search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி

    • ஆஸ்திரேலியா 1-0 என அயர்லாந்து அணியை வீழ்த்தியது
    • நியூசிலாந்து 1-0 என நார்வே அணியை தோற்கடித்தது

    பெண்களுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. குரூப் 'ஏ' சுற்றில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து- நார்வே அணிகள் முதல் ஆட்டத்தில் மோதின. இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 1-0 என நார்வே அணியை வீழ்த்தியது. ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் நியூசிலாந்து வீராங்கனை ஹன்னா விகின்சன் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- அயர்லாந்து அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 1-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஸ்டெபானி காட்லே கோல் அடித்தார்.

    இன்று மூன்று போட்டிகள் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டத்தில் நைஜீரியா- கனடா அணிகள், 2-வது போட்டியில் பிலிப்பைன்ஸ்- சுவிட்சர்லாந்து அணிகள், 3-வது போட்டியில் ஸ்பெயின்- கோஸ்டாரிகா அணிகள் மோதுகின்றன.

    32 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் அடுத்த மாதம் 20-ந்தேதிவரை நடைபெறுகிறது. 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவில் இடம் பிடித்துள்ள அணிகள் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

    ஒவ்வொரு பிரிவிலும் இருந்தும் முதல் இரண்டு அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

    Next Story
    ×