search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது.
    • இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற சானியா முடிவு செய்துள்ளார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் இணைந்து பங்கேற்கிறார்.


    இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ள சானியா, இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா ஜோடியை இன்று எதிர்கொள்கிறார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடந்து வருகிறது.
    • இதில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தோஹாவில் நடைபெற்று வருகிறது.

    இதில் நேற்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று, சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.

    • அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி 6-0, 6-4 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றது
    • இரட்டையர் பிரிவில் அர்ஜூன் காடே 4வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

    சென்னை:

    சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரில், ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் காடே- பிரிட்டனின் ஜே கிளார்க் ஜோடி, செபஸ்தியான் (ஆஸ்திரியா)- நினோ செர்டாரசிக் (குரோசியா) ஜோடியை எதிர்கொணட்து. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-0, 6-4 என்ற நேர்செட்களில் அர்ஜூன் காடே, கிளார்க் ஜோடி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் அர்ஜூன் காடே இரட்டையர் பிரிவில் பெறும் 4வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், அமெரிக்காவின் நிகோலஸ் மொரீனோ டி அல்போரனை எதிர்கொண்டார். இப்போட்டியில் சுமித் நாகல் 4-6, 2-6 என தோல்வியடைந்தார். வெற்றி பெற்ற டி அல்போரன் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் மேக் பர்செலுடன் மோதுகிறார்.

    • கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் சுமித் நாகல் அரையிறுதிக்கு முன்னேறினார்.
    • சென்னை ஓபன் அரையிறுதியில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய வீரர் சுமித் நாகல் முன்னேறி உள்ளார். இன்று ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜே கிளார்க் உடன் சுமித் நாகல் மோதினார். இதில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்ற சுமித் நாகல், அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

    நாகல் கடைசியாக அக்டோபர் 2021-ல் சிபியோ சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார். அதன்பின்னர் நவம்பர் மாதம் அவருக்கு இடுப்பு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த அவர் தற்போது பார்முக்கு திரும்பி, 16 மாத இடைவெளிக்குப் பிறகு முதல் முறையாக ஏடிபி சேலஞ்சர் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அடுத்து சனிக்கிழமை நடைபெற உளள் அரையிறுதி ஆட்டத்தில் நிகோலஸ் மொரினோவை எதிர்கொள்ள உள்ளார்.

    • முதல் சுற்றில் முகுந்த் சசிகுமார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலை எதிர்கொள்கிறார்.
    • சுமித் நாகல் இங்கிலாந்து வீரர் ரயான் பெனிஸ்டனை சந்திக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன் சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. ரூ.1.06 கோடி பரிசு தொகைக்கான இந்தப் போட்டி வருகிற 19-ந் தேதி வரை நடக்கிறது.

    இதல் 20 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    நேற்று நடந்த தகுதி சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சுமித் நாகல், முகுந்த் சசிகுமார் ஆகியோர் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    சுமித் நாகல் 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தென் கொரியாவின் ஜங்குகையும், முகுந்த் சசிகுமார் 4-6, 6-4, 6-4 என்ற கணக்கில் தைவானின் ஜேசன் ஜங்கையும் வீழ்த்தினார்கள்.

    மற்றொரு இந்திய வீரர் திக்விஜய் பிரதாப் சிங் 2-6, 6-7(2-7) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் மைக்கேப்பிடம் தோற்று முதன்மை சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.

    இன்று நடைபெறும் முதல் சுற்றில் முகுந்த் சசிகுமார் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ் பர்செலையும், சுமித் நாகல் இங்கிலாந்து வீரர் ரயான் பெனிஸ்டனையும் சந்திக்கிறார்கள்.

    இருவரும் முதல் சுற்றில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளனர். இருவரும் எதிர்த்து விளையாடும் வீரர்கள் தர வரிசையில் முன்னிலையில் இருப்பவர்கள். இதனால் கடுமையான சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.

    'வைல்டு கார்டு' மூலம் விளையாட தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் இன்றைய முதல் சுற்றில் பல்கேரிய வீரர் டிமிட்டர் குஷ்ரம்கோவை எதிர் கொள்கிறார். டிமிட்டர் தர வரிசையில் 8-வது இடத்தில் உள்ளார்.

    நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்தப் போட்டியில் தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செங்சுன் (தைவான்), அலிபெக் கச்மாசோவ் (ரஷியா) உள்ளிட்ட வீரர்கள் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

    • அபுதாபி ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவு முதல் சுற்று நேற்று நடந்தது.
    • இதில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    துபாய்:

    அபுதாபி ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றுப் போட்டி நேற்று நடந்தது.

    இதில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மெட்டக் சாண்டஸ் ஜோடி, பெல்ஜியத்தின் கிர்ஸ்டன் பிலிப்கன்ஸ், ஜெர்மனியின் லாரா செக்மண்ட் ஜோடியுடன் மோதியது.

    இதில் சானியா மிர்சா ஜோடி 3-6,4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    கடந்த வாரம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.

    • ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
    • டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது.

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப்-1 பிளே ஆப் போட்டியில் இந்திய அணி டென்மார்க் அணியுடன் விளையாடுகிறது. ஒற்றையர் பிரிவில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், டென்மார்க் ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.

    இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரட்டையர் பிரிவு ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 6-2, 6-4 என நேர்செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் டென்மார்க் 2-1 என முன்னிலை பெற்றது.

    அதன்பின்னர் நடைபெற்ற மாற்று ஒற்றையர் ஆட்டத்திலும் டென்மார்க் வெற்றி வாகை சூடியது. இப்போட்டியில் இந்தியாவின் சுமித் நாகலை டென்மார்க்கின் ரூனே, 7-5, 6-3 என்ற நேர்செட்களில் வீழ்த்தினார். இதனால் டென்மார்க் அணி 3-1 என்ற முன்னிலையுடன் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணி, முதல் முறையாக உலக குரூப்-2 சுற்றுக்கு பின்தள்ளப்பட்டது.

    • ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனை வீழ்த்தினார்.
    • மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தோல்வி அடைந்தார்.

    ஹில்லராட்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா, டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன.

    முதல் நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9-ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார். இதில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கியது.

    இந்நிலையில், நேற்று நடந்த மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், டென்மார்க் வீரர் ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் மோதினார்.

    இந்த போட்டியின் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இந்திய வீரர் கோட்டை விட்டார். இதையடுத்து சுதாரித்து கொண்ட சுமித் நாகல் அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் இரு அணிகளும் 1-1 என சமனிலையில் உள்ளது.

    இந்தப் போட்டி 2 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடித்தது

    • அனுபவம் வாய்ந்த டென்மார்க் வீரரின் சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார்.
    • மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார்

    ஹில்லராட்:


    டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப்-1 சுற்றில் இந்தியா - டென்மார்க் அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டிகள் டென்மார்க்கின் ஹில்லராட் நகரில் நடைபெற்று வருகின்றன. முதல் நாளான இன்று ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, உலகின் 9ம் தரநிலை வீரரான ஹோல்கர் ரூனேவை சந்தித்தார்.

    ஆரம்பம் முதலே ரூனேயின் கை ஓங்கியிருந்தது. அனுபவம் வாய்ந்த அவரது சர்வீஸ்களை சமாளிக்க, யூகி தீவிரமாக போராடினார். ஆனாலும் இப்போட்டியில் வெறும் 58 நிமிடங்களில் 2-6, 2-6 என்ற நேர்செட்களில் யுகி பாம்ப்ரி தோல்வியடைந்தார். இதன்மூலம் 0-1 என இந்தியா பின்தங்கி உள்ளது.

    மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் நாகல், ஆகஸ்ட் ஹோம்கிரனுடன் விளையாடுகிறார். இந்த போட்டியில் இந்திய வீரர் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதன்பின்னர் மாற்று ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த சுற்றில் இந்தியா தோல்வியடைந்தால் உலக குருப்-2 நிலைக்கு பின்தள்ளப்படும்.

    • கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.
    • போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை.

    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இம்மாதம் நடக்கும் ஒரு போட்டி தொடருக்கு பிறகு டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

    சமீபத்தில் தனது கடைசி கிராண்ட்சிலாம் போட்டியாக ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடினார். அதில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா மிர்சா-போபண்ணா ஜோடி இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது.

    போட்டிக்கு பிறகு பேசிய சானியா மிர்சா உணர்ச்சிவசமாக காணப்பட்டார். இந்த நிலையில் சானியா மிர்சா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஓய்வுக்கு பிறகு அடுத்த தலைமுறை வீரர்-வீராங்கனைகளுக்கு உதவ விரும்புகிறேன். இளம் வீரர்களை ஊக்கப்படுத்தவும், என்னால் முடிந்த உதவியை செய்யவும் விரும்புகிறேன்.

    போட்டியில் வெற்றி பெற்றாலும், தோற்றாலும் நான் அதிக உணர்ச்சிகளை காட்டுவதில்லை. பொதுவாக என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொண்டிருக்கிறேன்.

    ஆனால் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு பிறகு நான் பேசிய போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன். கிராண்ட்சிலாம் போட்டியில் பங்கேற்பது இதுவே கடைசி முறை என்ற வகையில் அரை இறுதி போட்டியுடன் முடித்ததற்கு நன்றியுடன் இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இன்றைய போட்டியில் சிட்சிபாசை வீழ்த்தினால் ஜோகோவிச் 22-வது கிராண்ட்சிலாமை வென்று நடாலின் சாதனையை சமன் செய்தார்.
    • இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபாரம்.

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 5-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (பெ லாரஸ்)-எலினா ரைபகினா (கஜகஸ்தான்) மோதினார்கள். இதில் ஷப லென்கா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று கிராண்ட்சிலாம் பட்டத்தை முதல் முறையாக கைப்பற்றினார்.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் நடக்கிறது. இதில் 21 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 4-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா)-தர வரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்) மோதினர்.

    டென்னிஸ் போட்டியில் அதிக கிராண்ட்சிலாம் வென்றவர் ரபெல் நடால். ஸ்பெயினைச் சேர்ந்த 36 வயதான அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஒபனில் அவர் 2-வது சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    ஜோகோவிச் 21 கிராண்ட்சிலாமுடன் 2-வது இடத்திலும், ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 20 கிராண்ட்சிலாமுடன் 3-வது இடத்திலும் இருந்தனர்.

    இன்றைய போட்டியில் சிட்சிபாசை வீழ்த்தினால் ஜோகோவிச் 22-வது கிராண்ட்சிலாமை வென்று நடாலின் சாதனையை சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய ஓபனை வெல்லும்போது மேலும் ஒரு சாதனையாக, அவர் 10 மற்றும் அதற்கு மேல் வென்ற 3வது நபர் என்ற பெருமையை பெறுவார் என்றும் கூறப்பட்டது.

    மேற்கூறியபடி, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாசை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜோகோவிச் அபாரமாக வெற்றிப்பெற்றார்.

    • இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள்.
    • போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் 100 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது. 19ம் தேதி வரை சென்னை ஓபன் ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டி நடக்கிறது.

    14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். முதல் நிலை வீரராக சீன தைபேயை சேர்ந்த சென்சியுன்சின் உள்ளார். அவருக்கு 21 வயது தான் ஆகிறது. பெனிஸ்டன் ரியான் ராயர் (இங்கிலாந்து), ஜேம்ஸ் டக்வொர்த் (ஆஸ்திரேலியா) லுகா நார்டி (இத்தாலி), டிமிடர் குஸ்மனோவ் (பல்கேரியா) செபாஸ்டியன் (ஆஸ்திரியா), மிக்கேல் குஷ்கின் (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தியா தரப்பில் பிரிஜ்னேஷ் குணேஸ்வரன், முகுந்த் சசிகுமார் ஆகியோர் தகுதி சுற்றில் விளையாடுவார்கள். 3 வைல்டு கார்டு, 6 தகுதி சுற்று வீரர்கள் உள்ளனர்.

    இந்த போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1.06 கோடியாகும். சாம்பியன் பட்டம் பெறுபவருக்கு ரூ.14.47 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு ரூ.8½ லட்சமும் வழங்கப்படும். போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

    2019ல் கடைசியாக நடந்த சென்னை சேலஞ்சர் போட்டியில் பிரான்சை சேர்ந்த கோரென்டீன் பட்டம் பெற்றார். அடுத்த சேலஞ்சர் போட்டிகள் பெங்களூரு, புனேயில் நடைபெறும்.

    ×