search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    • அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
    • அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் துறைவாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

    அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பணி முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இதற்காக மாலை 6.40 மணியளவில் துணை முதல்-அமைச்சர் உ த ய நி தி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு கலெக்டர் பிரசாந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    இதையடுத்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. இதற்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் பிரசாந்த், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரேஷ் அகமது, எம்.பி.க்கள் மலையரசன், ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை வாரியாக அரசின் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார். அப்போது அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி செல்லும் வகையில் அதிகாரிகள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    வருவாய்த்துறையில் மனுக்களை நிராகரிக்காமல் அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    க ள் ள க் கு றி ச் சி யி ல் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மெதுவாக செல்லும் திட்டங்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் துரிதமாக முடிக்கப்பட்ட திட்டங்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தில் மாவட்டம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ஒரு சில துறைகளில் மட்டும் பணிகளில் தொய்வுகள் உள்ளன. இதை தீர்ப்பதற்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

    மாவட்டம் உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆவதால் அமைச்சரும், கலெக்டரும் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜத்சதுர்வேதி, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி பெருமாள், அரசு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு புறப்பட்டு சென்றார்.

    • மாநாட்டு திடலை முழுமையாக கண்காணிக்க 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
    • வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மாநாட்டு திடலுக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

    விக்கிரவாண்டி:

    திரைப்பட முன்னணி நடிகர் விஜய், அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என்று பெயரிட்டுள்ள அவர், தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் வருகிற 27-ந்தேதி பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    85 ஏக்கர் மாநாட்டு திடலில் மேடை 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு வரும் கட்சி தலைவர் விஜய், முதலில் 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றுகிறார். பின்னர் அவர், அங்கிருந்து மாநாட்டு மேடைக்கு செல்லும் வகையில் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களை விஜய் சந்திப்பதற்காக 800 மீட்டர் நீளத்திற்கு ரேம்ப் வாக் செல்கிறார். இதற்காக ரேம்ப் வாக் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மாநாடு நடைபெறும் இடத்தை இரவிலும் பகல்போல் காட்சி அளிக்கும் வகையில் 937 கம்பங்கள் நடப்பட்டு, அதில் 15 ஆயிரம் மின்விளக்குகள் அமைக்கப்படுகிறது. இந்த மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிரும் பட்சத்தில் மாநாட்டு திடலை இரவு நேரத்திலும் பகலாக்கி விடும்.

    மாநாட்டு திடலை முழுமையாக கண்காணிக்க 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மாநாட்டுக்குள் நுழைய 5 வழிகளும், மாநாட்டில் இருந்து வெளியேறுவதற்கு 15 வழிகளும் அமைக்கப்படுகிறது. தொண்டர்களின் வசதிக்காக 350 மொபைல் கழிவறைகள் அமைக்க எற்பாடு நடைபெற்று வருகிறது.

    மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்காக 207 ஏக்கர் இடம் தயார் நிலையில் இருக்கிறது. மாநாட்டு பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மாநாட்டு திடலுக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

    • நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.
    • மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர்.

    நாகப்பட்டினம்:

    கடல் நீர் மற்றும் நன்னீரில் வாழும் உயிரினம் நண்டு. நண்டுகள் ஒரே நேரத்தில் ஆயிரம் முதல் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும். கடல் உணவுகளில் முக்கிய இடம் பிடிக்கும் நண்டு நரம்பு மண்டல செயல்பாடுகளுக்கு உதவி செய்கிறது. குறைவான கலோரிகள் உள்ளதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நண்டு ஒரு நல்ல உணவாக உள்ளது.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரையில் நேற்று மீனவர்கள் வலையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு சிக்கியது.

    மீனவர்கள் அந்த கல்நண்டுடன் கரைக்கு வந்தனர். அந்த நண்டை அவர்கள் சோதனை செய்தனர். நண்டின் பின்பகுதியில் சுமார் 8 லட்சம் முட்டைகள் இருப்பது தெரியவந்தது.

    உடனே மீனவர்கள் அந்த கல் நண்டை ஒரு பெட்டியில் தண்ணீரை நிரப்பி வென்டிலேட்டர் பொருத்தி உயிருடன் விட்டனர். தொடர்ந்து இந்த கல் நண்டு குஞ்சு பொரிப்பதற்காக அந்தமான் மீன் குஞ்சு பொரிப்பகத்துக்கு விமானத்தில் அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது.

    குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து ஒரு வாரத்தில் குஞ்சுகள் பொரித்தவுடன் நண்டு குஞ்சுகள் பத்திரமாக கடலில் விடப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    குஞ்சு பொரிப்பதற்காக நண்டு ஒன்று அந்தமானுக்கு விமானத்தில் பறக்க இருப்பது மீனவர்களிடம் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
    • நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து இருந்தது.

    அதன்படி நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை தமிழகத்தில் பல்வேறு பகுதிகள், சென்னை புறநகர் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. நள்ளிரவு முதல் மழை பெய்ததை அடுத்து சென்னையில் குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது.

    இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நாளை உருவாக இருப்பதை ஒட்டி தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    • தமிழகத்தின் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
    • சென்னையின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    • ஆளுநரின் பாதுகாப்பு பணிக்காக காவல் உதவியாளர் செந்தில்குமார் சென்றிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி செந்தில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் செந்தில் குமார்.

    தஞ்சை தமிழ் பல்லைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநரின் பாதுகாப்பு பணிக்காக செந்தில்குமார் சென்றிருந்தார்.

    அப்போது, இருசக்கர வாகனத்தில் பாப்பாநாடு பகுதி வழியே சென்றபோது கறம்பியம் அருகே லாரி மோதி செந்தில் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்த காவல் உதவியாளரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    அதன்படி, காவல் உதவியாளரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    • முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கோவை மாவட்டம் வால்பாறையில் 4 வயது சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 4 வயது மகள் அப்சராவை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவம் பரபப்பை ஏற்படுத்தியது.

    சிறுமியின் குடும்பத்திற்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.

    மேலும், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருக்கவும், இரவில் வெளியே வர வேண்டாம் எனவும் வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    • டிடி தமிழ் நிகழ்ச்சியில் திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.

    விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    அப்போது 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியை நீக்கிவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.

    இந்நிலையில், நாட்டின் பிரதமரே திராவிடர்தான் என்று பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

    இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா, "திராவிடம் என்பது இடத்தை குறிக்கும். இனத்தை அல்ல. தர் என்றால் சமஸ்கிருதத்தில் மரம் என்று அர்த்தம். தக்காண பீடபூமிக்கு தெற்கே உள்ள காடுகள் நிறைந்த பகுதியில் 56 தேசங்கள் இருந்தது. அங்கு 2 பெரிய நிலப்பரப்புகள் இருந்தது. அதற்கு பெயர் பஞ்ச திராவிடம். இதில் முதல் மாநிலமே கூர்ஜரம் அதாவது குஜராத். அதனால் இந்த நாட்டின் பிரதமரே திராவிடர் தான். இதை நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும்.
    • கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஸ் கட்சி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    5 நாட்களுக்குள் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க தலைவர் விஜய்க்கு பகுஜபன் சமாஜ் கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணை தலைவர் சந்தீப், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    த.வெ.க. இன்னும் பதிவு செய்யப்படாத நிலையில், கட்சி கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.
    • ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்குகிறார்

    திருவண்ணாமலை மாநகரில் மக்களின் பொதுப் போக்குவரத்து வசதிக்காக சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

    அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், அடி அண்ணாமலை கிராமத்தின் அருகே, 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாகம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அதிகப்படியான மக்கள் கிரிவலம் வரும் நிலையில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதில் மகிழ்ச்சி. கடந்த முறை கிரிவலத்தில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டார்கள். இன்று தங்கள் தவறுகளைத் திருத்திக்கொண்டு அவர்கள் கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற வகையில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்." எனக் கூறியுள்ளார்.

    இந்நிலையில், தமிழிசையின் கருத்துக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

    அவரது பதிவில், "இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!

    அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் 'கிரி'வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் 'சரி'யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – 'சரி' வலம்!

    ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!

    'எல்லோருக்கும் எல்லாம்' என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!

    நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.

    ஒன்றிய அரசின் 'டி.டி. தமிழை'ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்! #StopHindiImposition" என்று பதிவிட்டுள்ளார்.

    • பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.

    சென்னை எழும்பூர் அருகே சொகுசு கார் ஒன்று தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு விபத்து ஏற்படுத்தியுள்ளது. இதில், பலத்த காயங்களுடன் குழந்தை உள்பட 6 பேர் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியுள்ளது. மேலும், கார், இரண்டு பைக்குகளும் பலத்த சேதமடைந்துள்ளன.

    விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றவர்களை பொதுமக்களே பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

    காரை ஓட்டி வந்தவர் மற்றும் அவரது மகன் என இருவரும் கைதாகி உள்ளனர்.

    மேலும், காரின் முகப்பில் உகாண்டாவுக்கான தூதரக அலுவலகம் என குறிப்பிடப்பட்ட போஸ்டர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஏற்படுத்திய சர்ச்சையால் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
    • நேற்று கவர்னர் விழாவில் அந்த மூத்த பெண் பாடகி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு அழைக்கப்படவில்லை.

    சென்னை:

    சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் நேற்று மாலை தொலைக்காட்சி பொன் விழா கொண்டாடப்பட்டது. அதனுடன் இந்தி மொழி மாதம் கொண்டாட்டத்தின் நிறைவு விழாவும் நடந்தது.

    விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். விழா தொடங்கும்போது தேசிய கீதத்தை தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

    தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள்.

    "நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்

    சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்ட மிதில்............." இவ்வாறு முதல் இரண்டு வரிகளை பாடிய அந்த 4 பெண்களும் 3-வது வரியான,

    தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்- என்ற வரியை படிக்க தொடங்கும் போது சற்று திணறலுக்குள்ளனார்கள். 3 வினாடிகள் திணறிய அந்த பெண்கள் அந்த வரியை தவிர்த்து விட்டு அடுத்து 4-வது வரியான,

    "தக்கசிறு பிறைநுதுலும் தரித்தநறுந் திலகமுமே...." -என்று அடுத்த வரிக்கு தாவி சென்று விட்டனர்.

    இது தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சி தலைவர்களும் கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் சட்டத்தை மீறிய கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும்" என்று போர்க்கொடி தூக்கினார்.

    இதையடுத்து கவர்னர் ஒரு விளக்கம் வெளியிட்டார். அதில் அவர் முதலமைச்சரின் கருத்து இனவாதமானது. அவரது கண்ணியத்தை குறைக்கும் வகையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதோடு தமிழ் மொழிக்கு செய்து வரும் சேவைகளை பட்டியலிட்டு இருந்தார்.

    கவர்னரின் அந்த விளக்கத்துக்கு முதலமைச்சர் நேற்று இரவு 11 மணிக்கு உடனடியாக சுட... சுட... பதிலடி கொடுத்தார். அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், "தமிழ்த் தாய் வாழ்த்தை பக்தி சிரத்தையுடன் பாடுவேன் என்று விளக்கம் அளித்துள்ள கவர்னர் முழுமையாக பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே ஏன் கண்டிக்கவில்லை" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

    மேலும் பிளவுவாத சக்திகளிடம் இருந்து விலகி அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி கடமையாற்றுங்கள் என்றும் கூறி இருந்தார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஏற்படுத்திய சர்ச்சையால் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை தூர்தர்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், "கவனகுறைவாக நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. இந்த விஷயத்தில் கவர்னருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கவர்னர் தரப்பிலும், முதலமைச்சர் தரப்பிலும் சற்று அமைதி ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த சலசலப்புக்கு வித்திட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய 4 பெண்களிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கவர்னர் மாளிகை தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

    அதன் அடிப்படையில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. சென்னை தூர்தர்ஷனில் விழாக்கள் நடைபெறும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசை நாடக பிரிவில் உள்ள மூத்த பெண் ஊழியர் ஒருவர்தான் வழக்கமாக பாடுவது உண்டு.

    ஆனால் நேற்று கவர்னர் விழாவில் அந்த மூத்த பெண் பாடகி தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு அழைக்கப்படவில்லை. அதற்கு பதில் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவுகளில் உள்ள 4 பெண் ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியதாக தெரிய வந்துள்ளது.

    அவர்களில் 2 பேர் தமிழ்த்தாய் வாழ்த்தின் 3-வது வரியை பாடாமல் விட்டுவிட்டதுதான் இவ்வளவு குழப்பத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த 2 பெண்களும் 3-வது வரியை பாடாததால் மற்ற 2 பெண்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த வரியை நழுவ விட்டதாக தூர்தர்ஷன் ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள்.

    இந்த விவகாரத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தின் 3-வது வரியை அந்த பெண்கள் எப்படி பாடாமல் விட்டார்கள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. இதற்கு விடை காண இன்று தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த 4 பெண்களிடமும் தூர்தர்ஷன் மூத்த அதிகாரி கள் அடுத்தடுத்து விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. அதில் எத்தகைய விடை கிடைத்தது என்ற விவரத்தை தூர்தர்ஷன் அதிகாரிகள் வெளியிடவில்லை.

    திராவிடம் திட்டமிட்டு மறைக்கப்பட்டதா? அல்லது தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பெண்களிடம் ஏற்பட்ட திணறலா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    ×