என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தலைப்புச்செய்திகள்
- பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம்
சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சமூகத்தால், ஒருபோதும் விடுதலை அடைய முடியாது. ஆண்களுக்கு நிகராய் சமூக அடுக்கின் அத்தனை படிநிலைகளையும் தனது அறிவால், உழைப்பால் கட்டியமைத்தவர்கள் பெண்கள்.
ஆனால், வீடு தொடங்கி வீதி வரை சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்போம் என்றும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளை அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியேற்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
- வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
- இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும்.
அடுத்த 4 தினங்களுக்கு வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும்.
இலங்கை மற்றும் தமிழக கடற்பகுதியை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். புயல் என்பது கடலின் வெப்ப நிலைமை பொறுத்து உருவாகும்.
டெல்டா மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்யும். இதனால் டெல்டா மாவட்டங்களுக்கு நாளை முதல் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
சென்னையில் 27 மற்றும் 28ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடற்பகுதிகளில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளன.
- நயன்தாராவின் ஆவண திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியானது.
2022 ஆம் ஆண்டு பிரபல சினிமா ஜோடியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என்ற இரு மகன்கள் உள்ளன.
நயன்தாராவின் ஆவண திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு மத்தியில் நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியானது. இந்த ஆவண திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி. அவ்வப்போது அவர்கள் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள். தங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது வழக்கம்.
தற்பொழுது விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரௌடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற தங்கமே என்ற பாடலை அவர்களின் மகன்கள் பாடியுள்ளனர்.
குறிப்பாக அதில் இடம் பெற்ற அப்பப்பா, அட அட அடா, என்ற வரிகளை உயிர் மற்றும் உலக் பாடியுள்ளனர். அதை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Okay, this video shared by #VigneshShivan is all kinds of cuteness!!!! #Nayanthara pic.twitter.com/6T7H2EJotw
— Avinash Ramachandran (@Avinash_R13) November 25, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
+8
- ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்குகிறது.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நேற்று துவங்கியது. முதல் நாள் ஏலத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். நேற்றைய ஏலத்தில் ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதேபோல் எதிர்பார்க்கப்பட்ட சில வீரர்கள் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்க முடியாத சம்பவங்களும் அரங்கேறின. அந்த வகையில், ஐபிஎல் மெகா ஏலம் இரண்டாவதாக நாளாக இன்றும் நடைபெறுகிறது.
- நான் பிறந்தவுடன் என் அம்மா [ஜெயா பச்சன்] நடிப்பதை நிறுத்திவிட்டார்
- எனது வீட்டை பொறுத்தவரை நான் அதிஷ்டசாலி
சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது என்பது டிரண்ட் ஆகி வருகிறது. மிகவும் நெருக்கமாக அறியப்பட்ட ஸ்டார் தம்பதிகள் திடுதிப்பென விவாகரத்து அறிவித்து பிரிந்துவிடுகிறார்கள். தனுஷ், ஜெயம் ரவி தொடங்கி தற்போது ஏர்ஆர் ரகுமான் வரை லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது.
இங்கு இப்படி என்றால், அதேபோல் பாலிவுட்டில் ஸ்டார் ஜோடிகள் இதோ பிரிகிறார்கள், அதோ பிரிகிறார்கள் என ஊடகங்களே விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி வருகின்றன. அப்படி விவாகரத்து வதந்திக்கு ஆளான ஜோடிதான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி.
இவர்களுக்கு 7 ஆம் கிளாஸ் படிக்கும் ஆராத்யா என்ற மகளும் உளளார். ஐஸ்வர்யா இருக்கும் போட்டோவில் அபிஷேக் இல்லை, இருவரும் தனித்தனியாக நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என மீடியா துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஏஆர் ரகுமான் விவாகரத்து குறித்து திரை வட்டாரங்களில் டாக் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அபிஷேக் பச்சன் தனது மனைவிக்கு ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்.
செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது,
நான் பிறந்தவுடன் என் அம்மா [ஜெயா பச்சன்] நடிப்பதை நிறுத்திவிட்டார், ஏனென்றால் அவர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்பினார். அப்பா [அமிதாப் பச்சன்] வீட்டில் இல்லாதபோது ஒரு வெற்றிடத்தை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. என்று அவர் கூறினார்.
தொடர்ந்து ,மனைவி ஐஸ்வர்யா குறித்து பேசிய அபிஷேக், எனது வீட்டை பொறுத்தவரை நான் அதிஷ்டசாலி. நான் வெளியில் பட வேலையாக செல்லும்போது ஐஸ்வர்யா வீட்டில் இருந்து ஆராத்யாவை கவனித்துக் கொள்கிறார். அதற்கு அவருக்கு மனமுவந்து நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது.
- போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்ததும் மோசடி செய்ய முயன்ற நபர் அழைப்பை துண்டித்துள்ளனர்.
மத்தியப்பிரதேசத்தில் துணைக் காவல் ஆணையருக்கு கால் செய்து சைபர் கிரைம் கும்பல் மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தூர் மாவட்டத்தின் குற்றப்பிரிவு துறையின் கூடுதல் துணை காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியாவிற்கு நேற்று மதியம் ஒரு சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து கால் வந்தது. காலில் பேசியவர் தன்னை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
துணைக் காவல் ஆணையரிடம் பேசிய அவர், உங்களது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.1,11,930 சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் இதுதொடர்பாக உங்கள் மீது மும்பை காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பின்னர் உங்களிடம் இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டும் என்று கூறி அந்த நபர் வீடியோ கால் செய்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் இருந்த ராஜேஷ் தண்டோடியாவை பார்த்து உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு இத்தகைய சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இதனை துணைக் காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்.
- பிறந்த நாள் விழாவை 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட்டம்.
- உங்கள் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47-வது பிறந்த நாள் வருகிற 27-ந்தேதி (புதன்) கொண்டாடப்படுகிறது.
பிறந்த நாள் விழாவை 'உதயநிதி உதயநாள் விழா' என்ற பெயரில் ஒரு மாத காலம் கொண்டாட சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஃபிளெக்ஸ் பேனர் வைப்பதையும், பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிப்பதாவது:-
என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில், என்னுடைய இந்தப் பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில்கொள்ளுமாறு, உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத் தருகிறது .உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும்… pic.twitter.com/cjxr8o8num
— Udhay (@Udhaystalin) November 25, 2024
- புதிய ஓபன் வயர்லெஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
- அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
போட் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் லூப் ஓபன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் ஏர்டோப்ஸ் ப்ரோகியர் ஓபன் இயர் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய ஓபன் வயர்லெஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
க்ளிப் ஆன் டிசைன் கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஏர் கன்டக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு காதுகளை முழுமையாக அடைத்துக் கொள்ளாமல் அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இந்த இயர்பட்சில் 12mm டிரைவர்கள் உள்ளன. இத்துடன் போட் சிக்னேச்சர் சவுண்ட் மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இதில் இரண்டு EQ மோட்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. கேமர்களுக்காக இந்த இயர்பட்சில் 40ms வரை லோ-லேடன்சி மோட் உள்ளது. இத்துடன் அழைப்புகளின் போது அதிக தரமுள்ள ஆடியோ கிடைப்பதை ENx உறுதிப்படுத்துகிறது.
புதிய ஏர்டோப்ஸ் லூப் மாடல் 50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ், இயர்பட்சை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து 200 நிமிடங்கள் வரை பயன்படுத்த வழி செய்கிறது. இத்துடன் IWP தொழில்நுட்பம், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் ஏர்டோப்ஸ் லூப் மாடல்: பியல் வைட், கூல் கிரே மற்றும் லாவெண்டர் மிஸ்ட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் விற்பனை போட், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.
- பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.
சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்மசாட்டி உள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.
திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான விடியல் இன்றுவரை கிடைத்த பாடில்லை.
பெண்கள் முன்னேற்றம்தான் சமுதாய முன்னேற்றம் என்பதை உணர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசை இத்தருணத்தில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமான இன்று, பெண்கள் அச்சமின்றி வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்திட உறுதியேற்போம்.திமுக ஆட்சியில், பெண்கள் சாலையில் நடமாடவே அச்சப்படும் அளவிற்கு பாதுகாப்பில்லாத அவல நிலை இருப்பதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். அதற்கான…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) November 25, 2024
- இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'.
- இந்தப் படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகியுள்ள இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பேபி ஜான் படத்தின் 'நைன் மடாக்கா' பாடல் தற்பொழுது வெளியாகியுள்ளது. பாடல் மிகவும் வைபாக உள்ளது. இப்பாடலை தமன் இசையில் தீ மற்றும் திலிஜித் தோசாஞ் பாடியுள்ளனர்.
பாடலின் காட்சிகள் மற்றும் கீர்த்தி சுரேஷின் நடனம் மிகவும் கவர்ச்சிகரமாக இருப்பதால் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 8.30 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் இலங்கை திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 880 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 980 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1050 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, அதற்கடுத்த இரு தினங்களில் வடமேற்கு திசையில் தமிழகம்- இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
கடலோர தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, சிவகங்கை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை மறுதினம் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 28-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 29-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை முதல் வரும் 30-ந்தேதி வரை தெற்கு கேரளா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்றே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலங்கையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
சென்னையில் இருந்து சுமார் 1050 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. நாகையில் இருந்து சுமார் 880 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இலங்கையில் இருந்து 600 கி.மீ. தொலைவில் தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ள நிலையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்