search icon
என் மலர்tooltip icon

    துபாய்

    • இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்.
    • கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும்.

    துபாய்:

    அரேபியா நாடுகள், அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகளாலேயே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒபெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்த கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.

    இந்நிலையில், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    அதன்படி, கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை 5 லட்சம் பீப்பாய்களாக குறைக்க உள்ளது.

    வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

    இதனால் ஒட்டுமொத்தமாக ஒபெக் கூட்டமைப்பில் இருந்து பெறப்படும் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியும் குறைய உள்ளது.

    கச்சா எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தவே தன்னிச்சையாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா உள்ளிட்ட ஒபெக் நாடுகள் தெரிவித்துள்ளன.

    இந்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்த மாநாடு நாளை தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    துபாய் :

    துபாயில் 9-வது உலகத்தமிழர் பொருளாதார மாநாடு நாளை (சனிக்கிழமை) தொடங்கி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார்.

    இதில் பங்கேற்க சென்னையில் இருந்து துரைமுருகன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவரை மாநாட்டின் துணைத்தலைவர் தொழிலதிபர் பிரசிடெண்ட் அபூபக்கர் வரவேற்றார்.

    இதுகுறித்து பிரசிடெண்ட் அபூபக்கர் கூறுகையில், 'துபாயில் நடைபெறும் பொருளாதார மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்கள் முதலீடு செய்ய வாய்ப்பு ஏற்படும். தொழில் வளர்ச்சியில் மிகப்பெரிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க இந்த மாநாடு பெரும் துணையாக இருக்கும். 3 நாட்கள் துபாய் மாரியட் அல் ஜடாபில் நடக்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்க உள்ளனர். மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தும் 183 நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

    எனவே தமிழ்நாட்டில் உள்ள வளம், அரசின் கொள்கை நிலைப்பாடு முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் முக்கியத்துவம், போன்ற பல விஷயங்கள் சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும்' என்று தெரிவித்தார்.

    • சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் பங்கேற்றார்

    துபாய்:

    துபாயில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) மகளிர் அமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சி துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூல் உள்ள அரங்கில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் TEWA அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதில் சிறுவர், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டி, சமையல், பரதம், ஆடல், பாடல் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    இந்த மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் கலாச்சார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ஓய்வு பெற்ற IAS அதிகாரி மற்றும் திரைப்பட இயக்குனருமான ஞான ராஜசேகரன், அரவிந்த் குழுமத்தின் உரிமையாளர் பிரபாகர், முத்தமிழ் சங்க நிர்வாகிகள் ராஜு மற்றும் பாலு, செய்தியாளர் அஸ்கர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் அமீரகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை கௌரவிக்கும் வகையில் நினைவு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

    இதில் அமிரக தமிழ் சங்கம், தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) மகளிர் அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • இறுதிப் போட்டியில் திட்டச்சேரி எம்சிசி அணியினரும், சூப்பர் ஸ்டைக்கர்ஸ் அணியினரும் மோதினர்.
    • நிறைவு விழா ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் தலைமையில் நடைபெற்றது

    துபாய்:

    துபாய் ஈமான் கலாச்சார மையம் சார்பில் E8 நாக்அவுட் கிரிக்கெட் போட்டி துபாய் தேரா பகுதியில் அமைந்துள்ள கோல்டை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் திட்டச்சேரி எம்சிசி அணியினரும், சூப்பர் ஸ்டைக்கர்ஸ் அணியினரும் மோதினர். இதில் திட்டச்சேரி எம்சிசி அணியினர் வெற்றி பெற்று கோப்பையை வென்றனர்.

    நிறைவு விழா ஈமான் தலைவர் பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் தலைமையில், பொதுச் செயலாளர் ஹமீது யாசின் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நவாஸ்கனி எம்பி, லீப் ஸ்போர்ட்ஸ் ரமேஷ், கிரீன் குலோப் ஜாஸ்மின், மனநல ஆலோசகர் பஜிலா ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஈமான் அமைப்பின் சார்பில் அஸ்கர், சமீர், சேக், யாகூப், ஹாஜா அலாவுதீன், ஹாஜி, நிஜாம், ஜலால், தமீம், ஜமால்தீன், சமீம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பட்டிமன்றம், ஆடல், பாடல் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
    • துபாய் ஈமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    துபாய்:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு துபாய் புள்ளைங்கோ சார்பில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துபாய் அல்-கீஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஷாநவாஸ் மற்றும் அய்யாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இந்த நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழக பரம்பரியத்தை போற்றும் வகையில் பெண்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

    இதில் பட்டிமன்றம், ஆடல், பாடல் மற்றும் சிலம்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பங்கு பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் ஈமான் கலாசார மையத்தின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், ரேடியோ கில்லி மற்றும் BM குரூப்ஸ் மேலாளர் உமர், TAM குரூப் ஆப் கம்பெனி நிறுவனர் ஷனவாஸ், IBG குழுமத்தின் நிர்வாகி ராஜா, காட்டு பசி உரிமையாளர் தமிழரசி மற்றும் அசோக், மதுரை பிரியாணி உரிமையாளர் பாலு மற்றும் ஜமுனா, SALWA நிறுவன உரிமையாளர் ரவி, செய்தியாளர் அஸ்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் அமீரகத்தில் வாழ் சிறந்த தமிழ் பெண்களுக்கு கௌரவப்படுத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை சுஜி மற்றும் ஹரிணி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை துபாய் புள்ளைங்கோ பெர்மி, ஜெனனி, அருணா மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் பிரிவின் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.
    • இதில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவை வீழ்த்தினார்.

    துபாய்:

    துபாய் ஓபன் சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ், சக நாட்டு வீரர் ஆந்த்ரே ரூப்லெவுடன் மோதினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரூப்லெவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    ஏற்கனவே, மெத்வதேவ் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சை அரையிறுதியில் வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மெத்வதேவ் இந்த ஆண்டில் ரோட்டர்டாம், தோஹா மற்றும் துபாய் என தொடர்ச்சியாக 3 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

    • துபாய்க்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    • இதுவே உலகின் ஆடம்பர நட்சத்திர விடுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    துபாய் :

    சுற்றுலாவுக்கு பெயர் பெற்ற துபாய்க்கு ஆண்டுதோறும் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டில் சுமார் 70 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாக அந்த நாட்டின் சுற்றுலாத்துறை கூறுகிறது.

    இந்த நாட்டின் சுற்றுலா இடங்களில் உலகின் உயரமான கட்டிடம் என கூறப்படும் புர்ஜ் கலீபாவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வரிசையில் தற்போது 'அட்லாண்டிஸ் தி ராயல்' என்ற நட்சத்திர விடுதியும் சேர்ந்துள்ளது. இந்த விடுதியின் நுழைவாயில் முதல் குளியல் அறையில் உள்ள சோப்பு வரை எல்லாமே உலகிலேயே விலை உயர்ந்தவை ஆகும்.

    இந்த நட்சத்திர விடுதியில் உள்ள அறையின் ஒரு நாள் வாடகையாக 1,000 டாலர் ( சுமார் ரூ.82 ஆயிரம்) முதல் 1 லட்சம் டாலர்( ரூ.82 லட்சம்) வரை வசூலிக்கப்படுகிறது. தற்போது இதுவே உலகின் ஆடம்பர நட்சத்திர விடுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் 2ம் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் வென்ற செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

    இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், நெதர்லாந்து வீரர் தலான் கிரீக்ஸ்பூரை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்,

    • துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் முதல் சுற்று போட்டி நடந்தது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாயில் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், தகுதி நிலை வீரர் தாமஸ் மசாக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டை மசாக் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஜோகோவிச் போராடி 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    இறுதியில், ஜோகோவிச் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்,

    • துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது.
    • இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற சானியா முடிவு செய்துள்ளார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் துபாயில் தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா, அமெரிக்காவின் மேடிசன் கீசுடன் இணைந்து பங்கேற்கிறார்.


    இந்தப் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற முடிவு செய்துள்ள சானியா, இரட்டையர் முதல் சுற்றில் ரஷியாவின் குடெர்மிதோவா-சம்சோனோவா ஜோடியை இன்று எதிர்கொள்கிறார்.

    • காலிறுதியில் ஹாங்காங்கை வென்ற இந்தியா அரையிறுதியில் நுழைந்தது.
    • சீனா அரையிறுதியில் இந்தியாவை தோற்கடித்தது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, சீனா அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    எச்.எஸ்.பிரனோய் தோல்வி அடைந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது.

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி சீன ஜோடியை வென்றது. பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி சீனாவை வென்றது. இதனால் இந்தியா 2-2 என சமனிலை வகித்தது.

    கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் இஷான் பட்நாகர், டனிஷா கிராஸ்டோ ஜோடியை சீன ஜோடி வென்று, 3-2 என்ற கணக்கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம் உறுதியானது.

    • கஜகஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியாவை வீழ்த்தியது இந்தியா வென்றது.
    • நேற்று நடந்த காலிறுதியில் ஹாங்காங்கை வென்ற இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.

    துபாய்:

    ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் கடந்த 14ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்தப் பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும்.

    இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் கஜகஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும், மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசியாவையும் வீழ்த்தியது.

    இந்நிலையில், நேற்று காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில்

    லக்ஷயா சென் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா தோல்வி அடைந்து 0-2 என பின்தங்கியது.

    அடுத்து நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் துருவ் கபிலா, சிராக் ஷெட்டி ஜோடி 20-22, 21-16, 21-11 என்ற கணக்கில் ஹாங்காங் ஜோடியை வென்றது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 16-21 21-7 21-9 என்ற கணக்கில் வென்றார்..

    பெண்கள் இரட்டையரில் டிரிசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-13, 21-12 என்ற கணக்கில் வென்றது. இதனால் இந்தியா 3-2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    ×