search icon
என் மலர்tooltip icon

    துருக்கி

    • துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3 தடவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 3,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

    அங்காரா:

    துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 3,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது.

    நிலநடுக்கத்தில் 3,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

    இந்நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் பறவைகள் அந்நகரைச் சுற்றி வட்டமடித்துள்ள காட்சிகள் வைரலாகி வருகின்றன.

    நிலநடுக்கத்தை உணர்த்தவே பறவைகள் அவ்வாறு பறந்து திரிந்ததாக சமூக வலைதளத்தில் பலரும் கருத்து பதிவிட்டனர்.

    • துருக்கியில் 24 மணி நேரத்தில் 3 தடவை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியது.
    • துருக்கியில் 6.0 என்ற ரிக்டர் அளவில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அங்காரா:

    துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

    7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து, 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என துருக்கி அரசு அறிவித்துள்ளது.

    • துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
    • துருக்கியில் நடந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2300ஆக அதிகரித்துள்ளது.

    துருக்கியில் தற்போது மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பதற்றம் நீடித்துள்ளது.

    துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக இது பதிவானது.

    இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது.

    துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது.

    துருக்கியில் நடந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1400ஆக இருந்தது.

    இந்நிலையில், திருக்கியில் அதிகாலை முதல், அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து தற்போது 6.0 என்ற ரிக்டர் அளவில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், பலி எண்ணிக்கை 2,300ஆக உயர்ந்துள்ளது.

    • நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் பதற்றம் உருவானது.

    துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் காசினா டெட் என்ற பகுதி உள்ளது. மிகச் சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி- சிரியா எல்லையில் அமைந்துள்ளது.

    துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக இது பதிவானது.

    இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடியது. பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரம் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் உயிர் பயத்தில் ரோடுகளில் நின்று கொண்டு இருந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அடுக்கு மாடி கட்டிடங்களும் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்களும் கடுமையான சேதம் அடைந்தது. பல கட்டிடங்கள் தரைமட்டமானது.

    அதிகாலை நேரம் என்பதால் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பொது மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் பலர் என்ன நடந்தது என தெரியாமல் தூக்கத்திலேயே உயிர் இழந்துவிட்டனர்.

    நில நடுக்க பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசினா டெட் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது. இதனால் கட்டிடங்கள் ஆடியது. பொது மக்கள் வீடுகளைவிட்டு அதிர்ச்சியில் வெளியே ஓடி வந்தனர்.

    துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக எரிவாயு குழாய் வெடித்து சிதறியதால் பதற்றம் உருவானது.

    துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த நிலநடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    துருக்கி, அதியமான், மலாட்டியா, தியார்படுர் உள்ளிட்ட 8 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அந்நாட்டு அதிபர் தயாயில் கிர்டோசன் பாதிக்கப்பட்ட மாகாணங்களை சேர்ந்த கவர்னர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலநடுக்கம் தொடர்பாகவும், அதிகாரிகள் மீட்பு பணிகளை முழு வீச்சில் செல்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

    துருக்கியை தொடர்ந்து பக்கத்து நாடான சிரியா நாட்டிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி 230 பேர் வரை இறந்துவிட்டனர். 516 பேர் படுகாயம் அடைந்தனர்.

    துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து நடந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1300ஆக  அதிகரித்துள்ளது.

    உருக்குலைந்து கிடக்கும் கட்டிட இடிபாடுகளில் இன்னும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரபடுத் தப்பட்டு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்ட பிறகுதான் எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.

    மீட்பு பணி நடந்து வரும் கட்டிடங்கள் முன்பு உயிர் தப்பியவர்கள் சோகத்துடன் நின்று உள்ளனர். தங்கள் குடும்பத்தை சேர்ந்த வர்கள் கதி என்ன என்பது தெரியா மல் அவர்கள் தவித்து வரு கின்றனர்.

    தங்கள் கண்முன் வீடுகள் இடிந்து விழுந்ததை பார்த்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமாக காட்சி அளிக்கிறது. தீயணைப்பு துறை மற்றும் போலீசாரின் மீட்பு பணியில் பொதுமக்க ளும் ஈடுபட்டு வருகின்றனர்.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நில நடுக்கம் லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

    லெபனான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் 40 நொடிகள் நீடித்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியது. படுக்கையில் படுத்திருந்தவர்கள் கீழே உருண்டு விழுந்தனர். 2 நாடுகளை உலுக்கிய நில நடுக்கத்தால் தெற்கு இத்தாலியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்குவதும், இடிந்து கிடக்கும் கட்டிடங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    துருக்கி நாட்டில் நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. கடந்த 1999-ம் ஆண்டு பூகம்பத்திற்கு 17 ஆயிரம் பேர் உயிர் இழந்தனர். அந்த சமயம் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த பூகம்பத்தில் 40 பேரும் அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 114 பேரும் இறந்தனர். அதன்பிறகு இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 180க்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர்.

    துருக்கியில் நில நடுக்கத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டு உடமைகள் சேதமடைந்து உள்ளது வேதனை தருகிறது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

    • காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

    காசியன்டெப்:

    துருக்கி நாட்டின் வட கிழக்கு பகுதியில் காசியன்டெப் என்ற பகுதி உள்ளது. மிகச்சிறந்த தொழில் நகரமாக திகழும் இந்த பகுதி துருக்கி-சிரியா எல்லையில் அமைந்துள்ளது.

    காசியன்டெப் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக இது பதிவானது.

    இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பொருட்கள் உருண்டோடியது. இதனால் பயந்துபோன பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். அவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரம் அவர்கள் வீடுகளுக்குள் செல்லாமல் உயிர் பயத்தில் ரோடுகளில் நின்று கொண்டு இருந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. அடுக்குமாடி கட்டிடங்களும் சீட்டு கட்டு போல் சரிந்து விழுந்தது. வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. கட்டிடங்களும் கடுமையான சேதம் அடைந்தது.

    இதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களில் காசியன்டெப் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.

    துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை நிகழ்ந்த துருக்கியில் நிகழ்ந்த நில நடுக்கம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நில நடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல், ஜோர்டான், ஈரான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் உணரப்பட்டது.

    துருக்கியை தொடர்ந்து லெபனான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்தது. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 53 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்குவதும், இடிந்து கிடக்கும் கட்டிடங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெளியே பறந்து சென்று விழுந்தன.
    • படுகாயம் அடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நசிலி:

    துருக்கி நாட்டின் அய்டின் மாகாணத்தில் உள்ள நசிலி மாவட்டத்தில் ஓட்டல் ஒன்றில் எரிவாயு சிலிண்டரை மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அந்த ஓட்டலின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் வெளியே பறந்து சென்று விழுந்தன. அந்த கட்டிடத்தின் முகப்புபகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.

    தீயில் இருந்த தப்பிக்க இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக குதித்த இரண்டு பேர் உயிர் பிழைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் தீயை அணைத்ததுடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மாகாண ஆளுநர் அனடோலு தெரிவித்துள்ளார்.

    • வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும் அங்கு பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

    அங்காரா:

    துருக்கியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் தெற்கு மாகாணமான கும்லூகா பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.

    ஒரே இரவில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த மழை காரணமாக 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளத்தின் வேகத்தில் சில பாகங்களும் இடிந்து விழுந்தன. மழையின் வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கார்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட போது கார்கள் ஒன்றோடொன்று மோதி உருக்குலைந்து காணப்பட்டன.

    வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. மேலும் அங்கு பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

    • போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • ஐஎஸ் அமைப்பால் முன்னர் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது

    இஸ்தான்புல்:

    துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இஸ்திக்லால் கடை வீதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதும் மக்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே போர்க்களம்போல் காட்சியளித்தது.

    குண்டுவெடிப்பு குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்த குண்டுவெடிப்பில் 6 பேர் இறந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

    2015-2016 காலகட்டத்தில் துருக்கியை குறி வைத்து ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களின் போது இஸ்திக்லால் அவென்யூ கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • துருக்கியில் லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.

    அங்காரா:

    கிழக்கு துருக்கியில் அக்ரி மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தில் லாரி மீது பயணிகள் பேருந்து மோதி தீப்பிடித்தது. பயணிகள் சிலர் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே குதித்துத் தப்பினர். எனினும், பேருந்துக்குள் தீ வேகமாக பரவியதால், கீழே இறங்க முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்ட 7 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடம் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    • சுரங்க வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்தது.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    அங்காரா:

    துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

    இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 14 தொழிலாளர்கள் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கிய 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

    அங்காரா:

    துருக்கியில் கருங்கடல் பகுதி அருகே அமைந்துள்ள பர்டின் மாகாணத்தின் அம்சரா நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். நூற்றுக்கும் அதிகமானோர் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் வேலை செய்துகொண்டிருந்த பலரும் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் சுரங்கத்தில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்டனர்.

    இந்நிலையில், நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுரங்கத்திற்குள் சிக்கிய எஞ்சியோரை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    • சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் அங்கு பணியாற்றிய 14 தொழிலாளர்கள் பலியாகினர்.
    • மேலும் இடிபாடுகளில் சிக்கிய 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    அங்காரா:

    துருக்கியின் வடக்குப் பகுதியில் செயல்பட்டு வரும் நிலக்கரி சுரங்கத்தில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர்.

    அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதியில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், சுரங்க வெடி விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என உள்துரை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சுரங்கத்தினுள் சிக்கிய 20 பேரை மீட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    மீத்தேன் வாயு உருவானதே வெடி விபத்துக்கு காரணம் என சுரங்கத் தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

    சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×