search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    • பெயிண்ட் வாளிகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், குளிர்சாதன பிரிட்ஜ், மேசைகள், மிட்டாய்கள் என தனக்குத் தேவைப்படாத பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார்.

    நவ நாகரிகப்பெண்கள் அதிகம் ஷாப்பிங் செய்கிறார்கள் என்பதே பெருமபாலான கணவர்களின் கவலையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் பெண் ஒருவருக்கு தூக்கில் ஷாப்பிங் செய்யும் அறிய வகை வியாதி உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான கெல்லி கிநைப்ஸ் என்ற பெண் தூக்கத்தில் தன்னை அறியாமலேயே தனக்கு தேவையில்லாத பொருட்களையெல்லாம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து வருகிறார். இதனால் அவருக்கு ரூ.3 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது.

     

    மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் கெல்லிக்கு பாராசோம்னியா என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாராசோம்னியா இருப்பவர்கள் தூக்கத்தில் எழுந்து சுயநினைவு இல்லாமலேயே நடப்பது, பேசுவது, சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். தூக்கத்தில் மூளையின் ஒரு பகுதி மட்டும் செயல்படுவதால் இது நடக்கிறது.

    மாறிவரும் வாழ்க்கை முறையால் கெல்லியின் விஷயத்தில் பாராசோம்னியா மேலும் ஒரு படி போய் தூக்கத்தில் ஷாப்பிங் செய்வது வரை சென்றுள்ளது. கெல்லி தூக்கத்தின்போது ஆன்லனில் பிளாஸ்டிக்கால் ஆன முழு பேஸ்கெட்பால் செட்டப், நெட், பெயிண்ட் வாளிகள், புத்தகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், குளிர்சாதன பிரிட்ஜ், மேசைகள், மிட்டாய்கள் என தனக்குத் தேவைப்படாத பொருட்களையெல்லாம் வாங்கிக் குவித்துள்ளார்.

     

    தனது வங்கி விவரங்களும் கிரெடிட் கார்ட் தகவல்களும் ஏற்கனவே ஆன்லைனில் பதிவாகியுள்ளதால் தூக்கத்தில் ஷாப்பிங் செய்யும்போது பணம் தானாகவே சென்று விடுகிறது என்றும் தனிப்பட்ட வங்கி விவரங்களை தூக்கத்தில் யாருக்காவது சேர் செய்து விடுவதால் மோசடி நிகழும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விரக்தியில் தெரிவிக்கிறார் கெல்லி.


     



    மூன்று குழந்தைகளுக்கு தாயாக உள்ள கெல்லி, 2018 இல் தனது முதல் குழந்தை பிறந்தபோது இந்த வியாதிக்கு ஆளாகியுள்ளார். மருத்துவ சிகிச்சை பெற்று வந்தாலும் அது பெரிய அளவில் பயனளிக்கவில்லை என்பதால் செய்வதறியாது தவித்து வருகிறார் கெல்லி.

    • பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
    • 4 போட்டி கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.

    லண்டன்:

    பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.

    4-வது டி20 போட்டி நடைபெற்ற நேற்று முன்தினம் பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானை பெண் ரசிகை ஒருவர் சந்தித்து அவரது பார்ம் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.

    இதுதொடர்பான உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஷதாப் கான் ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது ஒரு பெண் ரசிகர், ஷதாப் கானிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். நீங்கள் ஏன் இவ்வளவு சிக்சர்களை விட்டுக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும். அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

    பெண் ரசிகையின் கேள்விக்கு ஷதாப் கான் மௌனமாக புன்னகைத்தார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாக பரவியது.

    • ரிஷிசுனக் அணிந்திருந்த ‘முதுகு பை’அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்கிலாந்தில் பொது தேர்தல் ஜூலை 4-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் ரிஷிசுனக் தனது கட்சிக்கு ஆதரவு திரட்டி நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ரிஷிசுனக் சமீபத்தில் லண்டனில் இருந்து கார்ன்வால் வரை செல்லும் ஸ்லீப்பர் ரெயிலில் பயணம் செய்தார்.

    அப்போது ரிஷிசுனக் அணிந்திருந்த 'முதுகு பை'அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆர்.எஸ். என எழுதப்பட்டிருந்த அந்த 'முதுகு பை'யுடன் அவர் ரெயிலில் ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த 'முதுகு பை' தொடர்பான விபரங்களை அறிய மக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர். அந்த 'முதுகு பை' டுமி அரைவ் பிராட்லி நிறுவனத்தின் பேக் என்று கருதப்படுகிறது.

    இவை மிகப்பெரிய கடைகளில் விற்கப்படுகிறது. இந்த பையின் இந்திய மதிப்பு சுமார் ரூ.79 ஆயிரம் என கூறப்படுகிறது. இந்த பை தொடர்பான விபரங்கள் வைரலாகி வரும் நிலையில், பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.


    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.

    ஓவல்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியும், 3-வது டி20 போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று ஓவலில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. உஸ்மான் கான் 38 ரன், பாபர் அசாம் 36 ரன், முகமது ரிஸ்வான் 23 ரன்கள் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் மார்க் வுட், அடில் ரஷீத், லிவிங்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்களான பில் சால்ட், ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர்.

    பிலிப் சால்ட் 24 பந்தில் 45 ரன்னும், ஜாஸ் பட்லர் 21 பந்தில் 39 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். வில் ஜாக்ஸ் 20 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், 15.3 ஓவரில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

    ஆட்ட நாயகன் விருது அடில் ரஷீத்துக்கும், தொடர் நாயகன் விருது ஜாஸ் பட்லருக்கும் வழங்கப்பட்டது.

    • தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.
    • பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.

    இங்கிலாந்தில் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தனது கணவருக்கு ஆதரவாக ஒரு அன்பான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விஷயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், உங்களுக்குள் உள்ள பொதுவான விஷயம் என்ன என்று மக்கள் எப்போதும் எங்களிடம் கேட்கிறார்கள். நண்பர்களை மீண்டும் சந்திப்பது, ஸ்பானிஷ் உணவுகளை சாப்பிடுவது, இருவருக்கும் இடையிலான பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள், கடின உழைப்பு, வாழ்க்கையில் வெற்றி பெற வழி என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பது, நம் குழந்தைகளுக்கு இன்று உள்ளதை விட சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைப்பது, ஹாரோவில் மக்களின் முக்கியமான மதிப்புகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் எதிர்காலம் பற்றி பேசுவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது.


    • இங்கிலாந்தில் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும்.
    • பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெற உள்ள 3-வது பொதுத்தேர்தலாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் வரும் ஜூலை 4-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும். இதையடுத்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் ரிஷி சுனக் நேற்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், எதிர்காலத்தில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் தேசிய சேவை கட்டாயமாக்கப்படும். இது தேசிய உணர்வை உருவாக்கும். கட்டாய தேசிய சேவையின் கீழ் 18 வயது இளைஞர்கள் ஒரு ஆண்டுக்கு ராணுவத்தில் சேரவேண்டும். இதற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் 2.5 பில்லியன் பவுண்ட்ஸ் செலவிடும் என தெரிவித்தார்.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பர்மிங்காம் நகரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் சாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 0, ஆயுப் 2 ரன்களில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக விளையாடுய ஆசாம் 32 ரன்களிலும் மறுபுறம் அதிரடி காட்டிய பக்கார் ஜமான் 45 (21) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதன் காரணமாக 1 – 0* (4) என்ற கணக்கில் டி20 தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், சில படங்களை மரியாதையுடன் எடுங்கள் என பதிவிட்டனர்.

    இங்கிலாந்தில் வரலாற்று சிறப்புமிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அரண்மனையை சுற்றி உள்ள பகுதிகள் முன்பு நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள்.

    இதையொட்டி அரண்மனை முன்பு ஏராளமான போலீசார் காவல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் லண்டனின் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவலர்களின் அணிவகுப்பு நடந்துள்ளது. அப்போது அங்கு சென்றிருந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் குதிரை முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அந்த சுற்றுலா பயணி புகைப்படம் எடுப்பதற்காக குதிரையை தொட்டுள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த குதிரை கிளர்ந்தெழுந்து அந்த பெண்ணை தாக்கி உள்ளது.

    இதனால் அந்தப்பெண் தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு அங்கிருந்த சிலர் உதவி செய்தனர். பின்னர் குதிரை படை வீரர் அந்த குதிரையை சாந்தப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான காட்சிகள் எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், சில படங்களை மரியாதையுடன் எடுங்கள் என பதிவிட்டனர்.

    • இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது.
    • தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம்.

    இங்கிலாந்தில் வரும் ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். அவர் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பொதுத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

    இதுகுறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறும்போது, "பாராளுமன்றத்தை கலைக்க இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் கோரினேன். இந்த கோரிக்கையை மன்னர் ஏற்றுக்கொண்டார். ஜூலை 4ம் தேதி பொதுத் தேர்தலை நடத்துவோம். இங்கிலாந்து தனது எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கும் தருணம் இது" என்றார்.

    இங்கிலாந்தில் 2025-ம் ஆண்டு ஜனவரிக்குள் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும். இது தொடர்பாக பிரதமர் ரிஷி சுனக் 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் தேர்தல் நடைபெறும் என்று கூறிவந்தார். இதற்கிடையே தேர்தல் தேதி வெளியாகி உள்ளது. 

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பிரதமராக பொறுப்பேற்றார். ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக சந்திக்கும் தேர்தல் இதுவாகும். 2016-ம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெற உள்ள 3-வது பொதுத் தேர்தலாகும்.

    இதனிடையே எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருப்பதாக கூறியிருந்தது.

    இது தொடர்பாக தொழிலாளர் கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயாராக இருக்கிறோம். எங்களிடம் ஒரு முழுமையான ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரக்குழு தயாராக உள்ளது. நாடு தற்போது பொதுத் தேர்தல் வேண்டும் என்று விரும்புகிறது என்று நாங்கள் நினைக்கிறோம்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்து, நேபாளம் இடையிலான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டு கடந்துள்ளது.
    • நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை சந்தித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடிகை மனிஷா கொய்ராலா உள்பட 4 நேபாள பிரதிநிதிகள் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துள்ளனர்.

    இந்நிலையில், நேபாளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

    இதுதொடர்பாக மனிஷா வெளியிட்டுள்ள பதிவில், இங்கிலாந்து-நேபாள நாடுகள் இடையேயான 100 ஆண்டு நட்பைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு பிரதமரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நட்பின் அடிப்படையில் அவரையும் அவரது குடும்பத்தையும் இமயமலை அடிவார கேம்ப்பிற்கு அழைத்திருக்கிறேன். அவருக்கு நான் நடித்த ஹீரமண்டி வெப் தொடர் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசனின் இந்தியன், ரஜினிகாந்தின் பாபா போன்ற படங்களில் நடித்துள்ள மனிஷா கொய்ராலா, புற்றுநோயில் இருந்து போராடி மீண்டவர். சமீபத்தில் இவர் நடித்திருந்த ஹீரமண்டி வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

    • அக்‌ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது.

    இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர் பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதி. கடந்த ஆண்டு 275-வது இடத்தில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அக்ஷதா மூர்த்தியின் வருமானம் அவரது கணவரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரியில் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளின் படி, ரிஷி சுனக் 2022-23 இல் ஜிபிபி 2.2 மில்லியனை ஈட்டியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

    இவர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கு காரணம், அக்ஷதா மூர்த்தியின் தந்தை [நாராயண மூர்த்தி]-யின் ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸில் அக்ஷதா பங்கு வைத்திருப்பதுதான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்போசிஸில் உள்ள பங்குகள் ஒரு வருடத்திற்குள் 108.8 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்து கிட்டத்தட்ட 590 மில்லியன் பவுண்டுகள் உயர்ந்துள்ளது.

    பிரிட்டன் இளவரசர் சார்லஸின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 600 மில்லியன் பவுண்டுகளாக இருந்தது. இந்த ஆண்டு 610 மில்லியன் பவுண்டுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டனின் பணக்கார குடும்பங்களின் வருடாந்திரத் தொகுப்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா குடும்பம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் அவர்களின் சொத்து மதிப்பு 37.196 மில்லியனை எட்டியுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது.
    • ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    ஆந்திரா மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பாராளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் தனது ஒய்எஸ்ஆர்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஐந்து மாதங்களாக பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    தொடர்ந்து, ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கு பதிவு நடந்தது. தேர்தலை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க லண்டன் சென்றுள்ளார்.

    ஜெகன் மோகன் ரெட்டி நேற்று இரவு விஜயவாடாவில் உள்ள கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் விஸ்ட்ஜெட் மூலம் புறப்பட்ட நிலையில் இன்று லண்டன் சென்றடைந்தார்.

    முதலமைச்சருடன் அவரது மனைவி ஒய்.எஸ். பாரதி மற்றும் மகள்கள் ஹர்ஷா மற்றும் வர்ஷா உள்ளனர்.

    லண்டனை தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்திற்குச் செல்கின்றனர்.

    நாடு முழுவதும் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே ஜெகன் மோகன் ரெட்டி ஜூன் 1 ஆம் தேதி அன்று நாடு திரும்புகிறார்.

    ×