search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்துள்ளது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மார்னஸ் லபுசேன், மிட்ச்ல் மார்ஷ் தலா 51 ரன்களில் அவுட்டாகினர். டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராளே அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 189 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 84 ரன்கள், ஹாரி புரூக் 61 ரன்கள், மொயீன் அலி 54 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் நிலைத்து நின்று ஆடிய பேர்ஸ்டோவ் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 592 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 275 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் ஹேசில்வுட் 5 விக்கெட்டும், ஸ்டார்க், கிரீன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்து அணி 67 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. உஸ்மான் கவாஜா 3 ரன்னிலும், டேவிட் வார்னர் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மார்னஸ் லபுசேன் அரை சதமடித்து 51 ரன்களில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கேமரூன் கிரீன் 16 ரன், அலெக்ஸ் கேரி 20 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இதில், முதலில் களமிறங்கிய சாக் கிராளே மற்றும் பென் டக்கெட் விளையாடினர். பென் டக்கென் ஒரே ரன் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து, ஜாக் கிராளே சதம் அடித்து 189 ரன்கள் குவித்தார். பென் டக்கெட்டை தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி அரை சதம் அடித்து 54 ரன்கள் எடுத்தார்.

    பின்னர் விளையாடிய ஜோ ரூட், அரை சதம் அடித்த 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். தற்போது, ஹாரி ப்ரூக் 14 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 24 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், 2ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 72 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 384 ரன்கள் எடுத்து 67 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

    • ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    மான்செஸ்டர்:

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. உஸ்மான் கவாஜா 3 ரன்னிலும், டேவிட் வார்னர் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மார்னஸ் லபுசேன் அரை சதமடித்து 51 ரன்களில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் எடுத்து வெளியேறினார். கேமரூன் கிரீன் 16 ரன், அலெக்ஸ் கேரி 20 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் ஓரளவு போராடி 36 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 90.2 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டும், பிராட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.

    • முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது.
    • பிராட் வீசிய பந்தில் கவாஜா அவுட்டானதை அடுத்து, ஸ்டுவர்ட் பிராட் தனது 599வது விக்கெட்டை வீழ்த்தினார்.

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது.

    இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்த போட்டியின், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி தலா 32 மற்றும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இதில், பிராட் வீசிய பந்தில் கவாஜா அவுட்டானதை அடுத்து, ஸ்டுவர்ட் பிராட் தனது 599வது விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், பிராட் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்தபோது, அந்த பந்து ஜோ ரூட்டிடம் கேட்சாக மாறியது.

    இதன்மூலம், பிராட் தனது 166வது டெஸ்டில் முதல் இன்னிங்சின் 50வது ஓவரில் 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையை ஸ்டுவர்டு பிராட் படைத்துள்ளார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
    • இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது.

    இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், முதலாவதாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி தலா 32 மற்றும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    பின்னர், பேட்டிங் செய்த மார்னஸ் அரை சதம் அடித்து 51 ரன்களில் அவுட்டானார். பின், ஸ்டீவின் ஸ்மித் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பின்னர், டிராவிஸ் ஹெட் 48 ரன்கள், கேமரூன் கிரீன் 16 ரன்கள், அலெக்ஸ் காரே 20 ரன்களும் எடுத்தனர்.

    மிட்செல் ஸ்டார்க் 23 ரன்கள் மற்றும் பாட் கம்மின்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.

    • படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும்.
    • சட்ட விரோதமாக வருபவர்கள் ருவாண்டா போன்ற நாடுகளுக்கு மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

    பிரிட்டனில் பல வருடங்களாக சட்ட விரோதமாக புலம் பெயர்வோர் சிறு படகுகளில் ஆயிரக்கணக்கில் அந்நாட்டு கடற்கரைகளில் வந்திறங்குகின்றனர். இவ்வாறு புகலிடம் தேடி வருபவர்களால் அந்நாட்டில் பல சிக்கல்கள் உருவாவதாகவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கான மசோதா சட்டமாவதற்கான கடைசி தடையும் நீங்கியுள்ளது.

    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் "படகுகளை நிறுத்துவோம்" என்று அறிவித்து பெருமுயற்சி செய்து உருவாக்கிய இந்த திட்டத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்து காணப்பட்டு வந்தது.

    இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேல்சபை "சட்டவிரோத குடியேற்ற மசோதா" இனி சட்டமாவதற்கு இருந்த பல தடைகளை நீக்கியுள்ளது.

    சில உறுப்பினர்கள் அடிமைப்பாதுகாப்பு தொடர்பான திருத்தங்களையும், குழந்தை புலம்பெயர்ந்தோரை எவ்வளவு காலம் தடுத்து வைக்கலாம் என்பதற்கான வரம்புகளை குறிப்பிட வேண்டும் என முன்மொழிந்தனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பில் தோற்கடிக்கப்பட்டனர்.

    இந்த மசோதாவின்படி படகில் வரும் எவருக்கும் பிரிட்டனில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் உரிமை மறுக்கப்படும். இந்த மசோதா மன்னரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக உள்ளது.

    இவ்வாறு சட்ட விரோதமாக வருபவர்கள் ருவாண்டா போன்ற நாடுகளுக்கு மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள்.

    2022 ஆம் ஆண்டில் 45,000க்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்தோர், தென்கிழக்கு பிரிட்டனின் கரைகளில் சிறிய படகுகளில் வந்தனர்.

    ஒவ்வொரு ஆண்டும் அதிகளவில் புலம் பெயர்வோர் இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது 2018ஐ விட 60% அதிகரித்திருக்கிறது.

    • ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார்.
    • ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்.

    லண்டன்:

    சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. 

    கார்லோஸ் அல்காரஸ் தொடர்ந்து 29-வது வாரமாக நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். ஜோகோவிச் 2-வது இடத்திலும், ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 4-வது இடத்திலும் உள்ளனர்.

    இதேபோல, பெண்கள் ஒற்றையரில் போலந்தின் இகா ஸ்வியாடெக் முதலிடத்திலும், பெலாரசின் சபலென்கா 2-வது இடத்திலும், கஜகஸ்தானின் ரிபாகினா 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை முதல் முறையாக உச்சிமுகர்ந்த செக் குடியரசின் மார்கெட்டா வோன்ட்ரோசோவா கிடுகிடுவென 32 இடங்கள் எகிறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த நிலை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அல்காரஸ் பெறும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
    • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    20 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதன்மூலம் விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரசுக்கு 24.50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் கிடைத்தது.

    இந்நிலையில், வெற்றி பெற்ற அல்காரஸ் பேசுகையில், ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம். அவரைப் பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். நான் பிறந்த காலகட்டத்திலேயே பல பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

    தோல்விக்கு பிறகு ஜோகோவிச் பேசுகையில், வெற்றி பெற்ற அல்காரசுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான வீரரிடம் தோல்வி அடைந்துள்ளேன். தாம் தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதால், இன்று வெல்ல வேண்டியதை தோற்றுவிட்டேன், இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது.

    தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார்.

    ஜோகோவிச் விம்பிள்டனில் 2018-ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

    கொரோனா பாதிப்பால் 2020-ம் ஆண்டு போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்றது.
    • இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் ஜோகோவிச், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரசுடன் மோதினார்.

    இதில், முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என எளிதில் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 2-வது செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். மூன்றாவது செட்டை 6-2 என அல்காரஸ் கைப்பற்றினார். அதிரடி காட்டிய ஜோகோவிச் நான்காவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை அல்காரஸ் 6-4 என கைப்பற்றினார்.

    இறுதியில், அல்காரஸ் 1-6, 7-6, 6-1, 3-6, 6-4 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி சுமார் 4.45 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

    விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் முதல் முறையாக கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர்.
    • ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    லண்டன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள் டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

    இதில் 23 கிராண்ட் பட்டம் வென்ற சாதனையாளரும், தரவரிசையில் 2- வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) - உலகின் முதல் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.

    விம்பிள்டன் பட்டத்தை அதிக முறை வென்றவர் ரோஜர் பெடரர். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இவர் 8 தடவை சாம்பியனாகி இருந்தார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினால் பெடரின் சாதனையை ஜோகோவிச் சமன் செய்வார். அவர் விம்பிள்டன் போட்டியில் 7 முறை வெற்றி பெற்றுள்ளார்.

    36 வயதான நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விம்பிள்டனில் 2018 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 4 தடவை பட்டம் பெற்றுள்ளார். கொரோனா பாதிப்பால் 2020 ஆண்டு போட்டி நடைபெறவில்லை.

    அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் ஜோகோவிச் விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாகவும், ஒட்டு மொத்தமாக 24-வது கிராண்ட் சிலாமையும் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

    அவர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 10 தடவையும், பிரெஞ்சு ஓபனை 3 தடவையும், அமெரிக்க ஓபனை 3 தடவையும் வென்றுள்ளார்.

    20 வயதான அல்காரஸ் முதல்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். அமெரிக்க ஓபன் சாம்பியனான அவர் ஜோகோவிச்சின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஜோகோவிச்சை வீழ்த்தி 2-வது முறையாக கிராண்ட் சிலாம் பட்டத்தை வெல்லும் வேட்கையில் அல்காரஸ் உள்ளார்.

    சமபலம் வாய்ந்த இருவரும் மோதும் விம்பிள்டன் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் நேருக்கு நேர் மோதுவது 3-வது முறையாகும். இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் தலா 1 வெற்றியை பெற்றனர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை வான்ட்ரோ சோவா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை (துனிசியா) வீழ்த்தி முதல் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றார்.

    • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதியில் நம்பர் 1 வீரரான அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    லண்டன்:

    விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் நம்பர் 1 வீரரான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரசும், ரஷியாவின் டேனில் மெத்வதேவும் மோதினர்.

    இதில், அல்காரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

    ×