search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • அதிகபட்சமாக டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதம் அடித்து களத்தில் இருந்தார்.
    • இந்தியா சார்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்களை சாய்த்தார்.

    ஹோவ்:

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது.

    ஹோவ் நகரில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

    அந்த அணி வீராங்கனை அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் அரை சதம் அடித்து களத்தில் இருந்தார்.டேனி வியாட் 43 ரன் அடித்தார். சோபியா டங்க்லே 29 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்களை சாய்த்தார். இதைத் தொடர்ந்து 228 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது.

    • இளவரசர் ஆண்ட்ரூ தனது தாய்க்கு அஞ்சலி செலுத்தினார்.
    • ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறுகிறது.

    லண்டன்ல்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலுக்கு தொடர்ந்து மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இந்தியா சார்பில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கு நிகழ்ச்சியிலும் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். 


    இந்நிலையில் ராணியின் உடலுக்கு அவரது 2வது மகன் இளவரசர் ஆண்ட்ரூ அஞ்சலி செலுத்தினார். ஒரு மகன் மீதான உங்கள் அன்பு, இரக்கம், அக்கறை, நம்பிக்கையை என்றென்றும் பொக்கிஷமாக வைத்திருப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு நாளை காலை 6.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வருகின்றனர். 

    • ராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
    • ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றார்.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும், அமெரிக்க அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் தனி விமானத்தில் புறப்பட்ட அதிபர் ஜோ பைடன் லண்டன் சென்றடைந்தார்.

    • ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானம் மூலம் லண்டன் சென்றார்.
    • கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

    லண்டன்:

    இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் கடந்த 13-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல் ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் நேற்று இரவு விமானம் மூலம் புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று அதிகாலை லண்டன் சென்றடைந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணி எலிசபெத் மறைவுக்கு இந்தியா சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு லண்டன் பயணம்.
    • ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான மக்கள் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அங்கு திரண்டுள்ளனர். இரவு பொழுதிலும் நீண்ட வரிசையில் சுமார் 25 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் மணிக்கணக்கில் வரிசையில் நின்றிருந்த மக்களுடன் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் ஆகியோர் கைகுலுக்கி உரையாடினர். 


    நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவர் மிகவும் அமைதியாகவும், நட்பாகவும் இருந்தார், மிகவும் மென்மையாக இருந்தார் என்று மன்னர் சார்லசுடன் உரையாடிய ஜெரால்டின் பாட்ஸ் தெரிவித்தார். ராணி எலிசபெத் இறுதிச் சடங்கு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. 


    இந்நிலையில் ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார். ராணி இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது மனை ஜில் பிடன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    • ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கு 19-ந்தேதி லண்டனில் நடைபெறுகிறது.
    • லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    லண்டன் :

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி தனது 96 வயதில் மரணம் அடைந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் கோட்டையில் அவரது உயிர் பிரிந்தது.

    ராணியின் மறைவால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது இறுதி சடங்கு வருகிற 19-ந் தேதி லண்டனில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

    இதனிடையே ஸ்காட்லாந்து தலைநகர் எடின்போராவில் வைக்கப்பட்டிருந்த ராணியின் உடலுக்கு முதலில் அரச குடும்பத்தினரும், பின்னர் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

    அதன் பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி விமானப்படை விமானம் மூலம் நேற்று முன்தினம் லண்டன் கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு ராணியின் உடலை மன்னர் 3-ம் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர். பின்னர் ராணியின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

    அங்கு அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.22 மணி அளவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து ராணியின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ராணியின் சவப்பெட்டியின் மீது அவரது கிரீடம் வைக்கப்பட்டிருந்தது.

    ஊர்வலத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டிக்கு பின்னால் மன்னர் 3-ம் சார்லஸ், அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி நடந்து சென்றனர்.

    அதேபோல் மன்னர் 3-ம் சார்லசின் உடன்பிறப்புகளான இளவரசி ஆனி, இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் இளவரசர் எட்வர்டு ஆகியோரும் ராணியின் சவப்பெட்டி பின்னால் நடந்து சென்றனர்.

    மன்னர் 3-ம் சார்லஸ், இளவரசி ஆனி, இளவரசர்கள் எட்வர்டு மற்றும் வில்லியம் ஆகியோர் ராணுவ உடைகளை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    அதே சமயம் அரச பதவிகளை துறந்த இளவரசர் ஹாரியும், பாலியல் புகாரில் சிக்கி அரச பதவிகளை இழந்த இளவரசர் ஆண்ட்ரூவும் சாதாரண உடையில் பங்கேற்றனர்.

    அவர்களுடன் பாரம்பரிய உடைகளை அணிந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் ராணியின் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்றனர்.

    இந்த பிரமாண்டமான ஊர்வலத்தை பார்ப்பதற்காக பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணகக்கான மக்கள் திரண்டிருந்தனர். மதியம் 3 மணி அளவில் ஊர்வலம் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தை அடைந்தது.

    பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வெஸ்ட்மினிஸ்டர் மண்டபம் திறக்கப்பட்டது.

    ஆனால் ராணிக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த திங்கட்கிழமை மாலையில் இருந்தே பல கி.மீ. தொலைவுக்கு நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர்.

    ராணியின் இறுதி சடங்கு நடைபெறுகிற வருகிற 19-ந் தேதி காலை 6.30 மணி வரையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் லண்டனில் குவிந்து வருகின்றனர்.

    இதையொட்டி லண்டனில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் காத்து நிற்கும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி விமான நிலைய சோதனை போன்றதொரு சோதனைக்கு பின்னர் மக்கள் வெஸ்ட்மினிஸ்டர் மண்டபத்துக்குள் நுழைந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 142 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 16.4 ஓவரில் 146 ரன்கள் எடுத்து வென்றது.

    லண்டன்:

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி டெர்பியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து பெண்கள் அணி 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கெம்ப் அதிரடியாக ஆடி 37 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். பவுச்சர் 34 ரன்கள் எடுத்தார்.

    இந்திய பெண்கள் அணி சார்பில் ஸ்னே ரானா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 20 ரன்னிலும், ஹேமலதா 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா அதிரடி காட்டினார். அவர் 53 பந்தில் 13 பவுண்டரி உள்பட 79 ரன்கள் குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 29 ரன்கள் எடுத்துள்ளார்.

    இறுதியில், இந்திய பெண்கள் அணி 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    • ஸ்காட்லாந்தில் இருந்து எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டன் கொண்டு வரப்பட்டது.
    • பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும் ராணியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்தார். அவரது உடல் கார் மூலம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டு வரப்பட்டது. அங்கு உள்ள புனித கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டது.

    இதையொட்டி, தேவாலயத்தை சுற்றி உள்ள க‌ட்ட‌டங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ராணியின் உடலைச் சுற்றி ஸ்காட்லாந்து அரச வழிமுறைப்படி வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டு, அரண்மனை மெய்க்காப்பாளர்களும், வில்லாளர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குறிப்பிட்ட இடைவெளி விட்டு, பாதுகாப்பு வளையம் போடப்பட்டு, பொதுமக்கள் பார்வையிட்டு அஞ்சலி செலுத்த‌ அனுமதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஸ்காட்லாந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டனை சென்றடைந்தது.

    அங்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடல் 4 நாட்கள் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    ராணியின் உடலுக்கு பல லட்சம் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    • இளவரசர் ஹாரி அரச குடும்பத்தில் இருந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறினார்.
    • ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.

    லண்டன் :

    இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது அரச குடும்பத்தில் இருந்து வெளியேறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். தற்போது ராணி எலிசபெத் மறைவை தொடர்ந்து கடந்த 8-ந்தேதி முதல் இங்கிலாந்து அரச குடும்பத்துடனேயே இருந்து வருகிறார்.

    இளவரசர் வில்லியம்-கேதரின் தம்பதி, இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ஒன்றாக இணைந்து, விண்ட்சார் கோட்டையின் வாயிலில் ராணிக்கு மலரஞ்சலி செலுத்திய பொதுமக்களிடம் பேசி தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் மறைந்த தனது பாட்டியும், ராணியுமான எலிசபெத் தனக்கு ஒரு வழிகாட்டி கருவி போல இருந்ததாக ஹாரி புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது தொடர்பாக தங்கள் ஆர்க்வெல் இணையதளத்தில் அவர், ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை மற்றும் கண்ணியத்துடன் இருந்ததாக குறிப்பிட்டு உள்ளார். மேலும், ராணுவ தளபதியாக ராணியை முதன்முதலில் சந்தித்தது, தனது அன்பான மனைவியை ராணி முதன்முதலில் சந்தித்து, அன்பான கொள்ளுப் பேரக்குழந்தைகளை (தனது குழந்தைகள்) கட்டிப்பிடித்த முதல் தருணம் போன்றவற்றை குறிப்பிட்டும் நெகிழ்ச்சியடைந்து உள்ளார்.

    • மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர்.
    • இவர் வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார்.

    லண்டன் :

    இங்கிலாந்தில் மறைந்த ராணி 2-ம் எலிசபெத் மிகப்பெரிய நாய் பிரியர். தனது வாழ்நாளில் 30-க்கும் மேற்பட்ட கோர்கிஸ் ரக நாய்களை வளர்த்துள்ளார். கடைசியாக அவரிடம் மிக் மற்றும் சாண்டி என்ற 2 இளம் நாய்கள் இருந்தன.

    அத்துடன் கேண்டி என்ற டோர்கி ரக நாய் ஒன்றும் இருந்தது. தற்போது ராணி மறைந்ததை தொடர்ந்து இந்த நாய்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருந்தது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    இந்த நிலையில், இந்த நாய்களை இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் அவரது முன்னாள் மனைவி சாரா ஆகியோர் பராமரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை ஆண்ட்ரூ குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.

    மிக் மற்றும் சாண்டி ஆகிய 2 நாய்க்குட்டிகளை கடந்த ஆண்டு ஆண்ட்ரூவும், அவரது மகள்களும்தான் ராணி எலிசபெத்துக்கு பரிசளித்து இருந்தனர். தற்போது மீண்டும் அவை ஆண்ட்ரூ குடும்பத்தினரிடமே வந்துள்ளது.

    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • அந்த அணியின் ஒல்லி ராபின்சன் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், ரபாடா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    40 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்னும், எர்வி 26 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. 4-ம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலே அரை சதமடித்தார். அவர் 57 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அலெக்ஸ் கேரி 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜாக் கிராலே 69 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியது. ஆட்டநாயகன் விருது இங்கிலாந்தின் ஒல்லி ராபின்சனுக்கு அளிக்கப்பட்டது.

    தொடர் நாயகன் விருது இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் ரபாடா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    • இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 158 ரன்னில் ஆல் அவுட்டானது.
    • தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் ஜேன்சன் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 5 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஒல்லி போப் 67 ரன்கள் எடுத்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ஜேன்சன் 5 விக்கெட்டும், ரபாடா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    40 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடியது. இரண்டாவது இன்னிங்சிலும் அந்த அணி வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 169 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் எல்கர் 36 ரன்னும், எர்வி 26 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் பென் ஸ்டோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் தலா 3 விக்கெட்டும், ஆண்டர்சன், ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

    நான்காம் நாள் முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலே அரை சதமடித்தார். அவர் 57 ரன்னும், அலெக்ஸ் லீஸ் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. வெற்றி பெற இன்னும் 33 ரன்களே தேவைப்படுவதால், இங்கிலாந்து அணி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ×