search icon
என் மலர்tooltip icon

    மேற்கிந்தியத் தீவு

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்ரேலியாவை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். குல்பதின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:

    இன்று என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன்.

    இது உலகக் கோப்பை தொடர். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால் அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது. மேலும் அது உங்களை தூங்க விடாது.

    எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    ஆன்டிகுவா:

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 37 ரன், ரிஷப் பண்ட் 36 ரன், ஷிவம் துபே 34 ரன், ரோகித் 23 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா சமன்செய்துள்ளது.

    இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 49 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை தலா 30 போட்டிகளில் வென்றுள்ளன.

    • இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
    • அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சினால் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

    • முதலில் ஆடிய இந்திய அணி 196 ரன்களைக் குவித்தது.
    • இந்திய அணியின் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.

    ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

    குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், இன்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.

    வங்காளதேசம்:

    தன்ஜித் ஹசன், லிட்டன் தாஸ், நஹ்முல் ஹொசைன் ஷான்டோ, தவுஹித் ஹ்ருடோய், ஷகிப் அல் ஹசன், மகமதுல்லா, ஜாகர் அலி, ரிஷத் ஹொசைன், மெஹிதி ஹசன், தன்ஜிம் ஹசன் சாகிப், முஸ்தபிசுர் ரஹ்மான்

    • டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • நாளை அதிகாலை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின்போது பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுன் ஓட்டலில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹலால் மாட்டிறைச்சி கிடைக்கவில்லை. இதனால் மாட்டிறைச்சியை ஓட்டலுக்கு தருவித்து அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    ஆப்கானிஸ்தான் அணி உணவுப் பட்டியலில் ஹலால் இறைச்சியும் இடம்பிடித்திருந்தது. எனவே ஹலால் மாட்டிறைச்சி ஒரு பிரச்சனையாக மாறியது.

    இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் வீரர் கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் ஹலால் இறைச்சி கிடைக்கவில்லை. சில சமயம் நாங்களே சமைப்போம். அல்லது சில சமயங்களில் வெளியே செல்வோம். இந்தியாவில் கடந்த உலகக் கோப்பையில் எல்லாம் சரியாக இருந்தது. ஹலால் மாட்டிறைச்சி இங்கு ஒரு பிரச்சனையாக மாறியது. ஒரு நண்பர் ஹலால் மாட்டிறைச்சியை எங்களுக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் சொந்தமாக சமைத்து சாப்பிட்டோம் என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 163 ரன்களை எடுத்தது.
    • டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் குவித்தார்.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

    இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினர். டி காக் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் அவுட்டானார். டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    கிளாசன் 8 ரன்னிலும், மார்கிரம் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா 32 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஜடேஜா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்திருந்த சாதனையை இந்தியா தற்போது சமன்செய்துள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 194 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் டி காக் 74 ரன்கள் எடுத்தார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 11 ரன்னில் வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு டி காக்குடன் மார்கிரம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்ரேட்டை உயர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் டி காக் 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மார்கிரம் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்குகிறது.

    • லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று தொடங்குகிறது.
    • சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை சந்திக்கிறது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுகள் இன்று தொடங்குகிறது.

    குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது.

    அரையிறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது நிச்சயம்.

    இந்நிலையில், விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது என ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ரஷித் கான் கூறுகையில், விராட் கோலிக்கு பந்துவீசுவது மிகவும் கடினமானது. அவர் எப்போதும் ரன்களைக் குவிப்பதற்கும் உங்கள்மீது அழுத்தம் கொடுப்பதற்கும் இடைவெளிகளைக் கண்டுபிடிப்பார். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவருக்கு பந்து வீசுவது மிகவும் சவாலானது என தெரிவித்தார்.

    • நிக்கோலஸ் பூரன் 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்கள் குவித்தார்.
    • கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    செயிண்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 218 ரன்களை குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 8 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 98 ரன்களை குவித்தார்.

    அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 114 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 8 சிக்சர்களை விளாசியதன் மூலம் நிக்கோலஸ் பூரன் 128 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர்களை அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை நிக்கோலஸ் பூரன் முறியடித்துள்ளார்.

    கிறிஸ் கெயில்ஸ் 124 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

    நடப்பு உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பிடித்த இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவியது.

    நேபாளத்திற்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி நெதர்லாந்துடன் மோதுகிறது.

    இந்நிலையில், லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் கீழே தள்ளிவிட்டோம்.

    எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக எங்களால் மகிழ்ச்சியை தரமுடியாதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என கொஞ்சம்கூட நினைக்கவில்லை.

    சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் சுற்றுப் பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது.

    இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்சுகளுக்கும், டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது என கூறினார்.

    ×