search icon
என் மலர்tooltip icon
    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகாவில் பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.
    • வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா பாண்டமங்கலம், பொத்த னுார், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோக னுார், பரமத்திவேலுார், அண்ணாநகர், பிலிக்கல்பா ளையம், ஆனங்கூர், ஜேடர்பாளை யம்,கொத்த மங்கலம், சிறுநல்லி கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் விவசாயிகள் பூவன், பச்சநாடன், கற்பூர வல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை பயி ரிட்டுள்ளனர். வாழைத்தார் கள் விளைந்த உடன் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை ஏலம் எடுப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு ஏலம் எடுத்து செல்கின்றனர்.

    ஏலம் எடுக்கப்பட்ட வாழைத்தார்களை, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்க ளுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பரமத்தி வேலூர் தினசரி ஏல மார்க்கெட்டில் நடைபெற்ற ஏலத்திற்கு 500 வாழைத்தார்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.170-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.200 -க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் வாழைத்தார் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    வாழைதார் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் சரிவு, விவசாயிகளை கவலையடைச் செய்துள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, வாழைத்தார் விலை சரிந்தாலும், வாங்க ஆள் இல்லாமல் திருப்பிக் கொண்டு போகும் நிலை உள்ளது. தற்போது வாழைத்தார் வரத்து அதிகமாக உள்ளது. வெளி மாவட்ட, வெளி மாநில வியாபாரிகள் யாரும் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்தனர். விளைச்சரிவுக்கு இதுவும் ஒரு காரணமாகும். வாழைத்தார்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும், சரக்கு வாகனங்களின் வாடகைக்கு கூட கட்டுபடி ஆகாது. அக்னி நட்சத்திரம் முடிந்தவுடன் சுப முகூர்த்தம் நாட்களில் விலை உயரும் என தெரிவித்தனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது.
    • பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனம், கார்த்திகை தீபம், வைகாசி விசாகம் உள்பட பல திரு விழா நாட்களில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடக்கும். இதை தவிர பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு அமாவாசை நாட்களிலும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர்.

    பக்தர்கள் வசதிக்காக ஒவ்வொரு அமாவாசை நாட்களும் சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை வைகாசி மாத அமாவாசை வருகிறது.

    சிறப்பு பஸ்கள்

    இதையொட்டி சேலம் புதிய பஸ் நிலையம், மேட்டூர், தர்மபுரி ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து 40 சிறப்பு பஸ்கள் இயக்க சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நட வடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையில் தங்கி தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது கடந்த 13-ந்தேதி பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்தனர்.
    • கரூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் மேல்சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அடுத்த வி.புதுப்பாளையத்தில் எம்.ஜி.ஆர் என்கிற முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலையில் தங்கி தூங்கிக் கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது கடந்த 13-ந்தேதி பெட்ரோல் ஊற்றி மர்ம கும்பல் தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்க ளான ராஜேஷ் (19), சுகுராம் (28), யஷ்வந்த் (21), கோகுல் (23) ஆகியோர் படுகாய மடைந்தனர்.

    கரூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை யில் மேல்சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்ட னர். இதில் நேற்று அதி காலை ராஜேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். மேலும் 3 பேரில் மற்றொருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    உடல் ஒப்படைப்பு

    இது சம்பவம் பற்றி ஓடிசா மாநிலத்தில் உள்ள ராஜேஷின் உறவினர்க ளுக்கு போலீசாரும், தொழி லாளர்களும் தகவல் தெரி வித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து ராகேஷ் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று ராஜேஷ் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஜேடர்பா ளையம் போலீஸ் நிலை யத்தில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்திருந்த நிலையில் ஒருவர் உயிரி ழந்ததை அடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார், பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், பரமேஸ்வ ரர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரநாதர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனி யாண்ட வர் கோவிலில் உள்ள பர்வ தீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிவபெருமா னுக்கும் நந்தி பெருமானுக்கும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராத னைகளும், சிறப்பு அலங்கா ரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நிறை மாத கர்ப்பிணியான பிரேமாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • இதனை தொடர்ந்து 3-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் பிரேமாவிற்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி தாமரை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரேமா.

    இரட்டை குழந்தை

    நிறை மாத கர்ப்பிணியான பிரேமாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து கடந்த 2-ந் தேதி சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து 3-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் பிரேமாவிற்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை பெற்று ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு திரும்பினார்.

    தொடர்ந்து பிரேமா வலியால் மிகவும் அவதியுற்று வந்தார். இதனால் சாப்பிட கூட முடியாத சூழல் நிலவியது. இதனால் கடந்த 14-ந் தேதி மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    மருத்துவமனை நிர்வாகம் பெண்ணின் இறப்பு குறித்து சரிவர காரணம் கூறாததால் வேதனை அடைந்த உறவினர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதுகுறித்து உறவினர்கள் கூறும்போது, தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் இளம்பெண் பிரேமா உயிரிழந்துள்ளார். தற்போது இரட்டை குழந்தைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அடுத்த முருங்கப்பட்டி பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதனிடையே கடந்த வாரம் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    இதில் எழிலரசியின் உறவினரான பெத்தாம்பட்டி அரசுப்பள்ளியில் அப்போது சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் சந்திரன் (57) என்பவர் செல்லத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செல்லம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் இரு தரப்பினரும் இரும்பாலை போலீசில் புகார் அளித்தனர்.

    இதில் எழிலரசி அளித்த புகாரின்பேரில் செல்லத்தின் மகன் தாமோதரனும், செல்லம் அளித்த புகாரின்பேரில் சந்திரனும் கைது செய்யப்பட்டனர்.

    இதனிடையே இந்த விவகாரம் குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேச்சல் கலைச்செல்வி துறை ரீதியான விசாரணை நடத்தி, சத்துணவு அமைப்பாளர் சந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
    • கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக போலீசார் கள்ளச்சாராயத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் வீடியோ ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சாராய பாக்கெட்டுகளை வாங்க அதிகாலை முதலே குடிமகன்கள் குவிகின்றனர். இதனால் இப்பகுதியில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

    சாராய விற்பனை குறித்து, மக்கள் சட்டம், ஒழுங்கு மற்றும் மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தும், போலீசார் சாராய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு கல்லாகட்டுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறை உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாராய விற்பனையை தடுத்து, சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

    இதனிடையே கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர் காவல் உட்கோட்ட த்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் தற்காலிக சோதனை சாவடி மற்றும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • உதயசங்கர் (வயது 30). வெள்ளி வியாபாரி. இவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது.
    • 4 பேர் கும்பல், உதயசங்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.

    சேலம்:

    சேலம் அரிசிபாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் உதயசங்கர் (வயது 30). வெள்ளி வியாபாரி.

    இவர் மீது ஓமலூர் போலீஸ் நிலையத்தில் வெள்ளிக்கட்டி வழிப்பறி வழக்கு உள்ளது. இவருடன் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சரவணன் என்பவரும் இந்த வழிப்பறி வழக்கில் கைதானார்.

    வெள்ளி தொழில் செய்து வந்த உதயசங்கர், புல்லட்டில் வலம் வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளப்பட்டி கூட்டுறவு சொசைட்டி பகுதியில் நண்பர் அலெக்ஸ்பாண்டியனுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 4 பேர் கும்பல், உதயசங்கரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர். அவரது நண்பர் அலெக்ஸ்பாண்டியன் லேசான வெட்டுக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    தி.மு.க. நிர்வாகி கைது

    இந்த கொலை சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொலையாளிகளான காமலாபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் (23) மற்றும் 3 ரோடு ஜெயா நகரை சேர்ந்த ஆனந்த் (26) ஆகியோர் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் முன்பு சரண் அடைந்தனர்.

    இதையடுத்து இருவரிடமும் பள்ளப்பட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் உதயசங்கரை கொலை செய்ய சேலம் தி.மு.க. 26-வது வார்டு செயலாளர் முருகன் (45) ஆட்களை ஏவி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

    பரபரப்பு தகவல்

    இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலீசாருக்கு பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கொலையுண்ட உதயசங்கர், வசதியானவர்களை மிரட்டி பணம் பறிக்கும் வேலையை செய்து வந்துள்ளார். அதுபோல் தி.மு.க. வார்டு செயலாளர் முருகனிடமும் உதயசங்கர் மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முருகன் முடிவு செய்தார்.

    இதற்காக ரூ.1.50 லட்சம் பேரம் பேசி, முதற்கட்டமாக கூலிப்படைக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்து, கூலிப்படையினரை ஏவி விட்டது ெதரியவந்தது.

    மேலும் இந்த கொலையில் ெதாடர்புடைய சந்தோஷ், தீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இவர்கள் இருவரும் பன்னீர்செல்வம், ஆனந்த் ஆகியோரின் கூட்டாளிகள் ஆவர். தலைமறைவாக உள்ள 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக ேதடி வருகின்றனர்.

    • ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருந்து அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • தலைவாசல், ஊனத்தூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் , காட்டுக்கோட்டை உள்ள கல்வராயன்மலை, பட்டிமேடு வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் இருந்து அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தலைவாசல், ஊனத்தூர், சிறுவாச்சூர், மணிவிழுந்தான் , காட்டுக்கோட்டை உள்ள கல்வராயன்மலை, பட்டிமேடு வனப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மலை பகுதியை யொட்டியுள்ள கிராம பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில் மணிவிழுந்தான் வசந்தபுரம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றுமேடு விவசாய நிலத்தில் பள்ளம் தோண்டி அங்கு கள்ளச்சாராயம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அதிகாரிகள், அங்கு சென்று விவசாய நிலத்தை தோண்டினர். அங்கு வரிசையாக லாரி டியூப்களில் கள்ளச்சாராயம் ஊற்றி, பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். மொத்தம் 28 டியூப்களில் 1000 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சாராயத்தை போலீசார் அழித்தனர்.

    6 பேருக்கு வலைவீச்சு

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்கிற பெண்டு மனோகரன், அவரது மனைவி வசந்தா, மகன் மணிகண்டன், பிரபு என்பவரின் மனைவி தனலட்சுமி, அவரது மகன்கள் சுதன் மற்றும் சூர்யா உள்ளிட்ட 6 பேர், கள்ளச்சாராயம் பதுக்கல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த அவர்கள் 6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இதனால் 6 பேரையும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, தேடும் பணியில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    1400 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

    அதுபோல் ஆவாரை-சடையம்பட்டி செல்லும் பாதையில் உள்ள பட்டிமேடு வனப்பகுதி நீரோடை பகுதியில் சாராயம் காய்ச்ச 7 பேரல்களில் வைத்திருந்த 1400 லிட்டர் சாராய ஊறல் மற்றும் அங்கு 3 லாரி டியூப்களில் இருந்த 90 லிட்டர் கள்ளச்சாராயம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

    இந்த கள்ளச்சாராயத்தை காய்ச்சும் பணியில் ஈடுபட்ட ஆவாரை முருகேசன் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சின்ராஜ் (30), மணி (28), ரவி (31) ஆகியோரை ேதடி வருகின்றனர்.

    மற்றொரு வாலிபர் கைது

    இதே போல், கெங்கவல்லி அருகே சாத்தப்பாடியில் சாராயம் விற்ற ஆத்தூர் புங்கவாடி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் (37) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் திருச்சி பிரதான சாலை அஸ்வின் பேக்கரி முதல் முங்கப்பாடி வரை நடைபெறுகிறது.
    • இந்த பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் சேலம் குகை திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் திருச்சி பிரதான சாலை அஸ்வின் பேக்கரி முதல் முங்கப்பாடி வரை நடைபெறுகிறது. இதற்கான பணி இன்று காலை தொடங்கியது.

    இந்த பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் சேலம் குகை திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் வள்ளுவர் சிலை சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலக சந்திப்பு, 4 ரோடு சந்திப்பு, லீ பஜார், சண்முகா பாலம், சந்தைப்பேட்டை வழியாக நெத்திமேடு அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றன.

    புலிக்குத்தி சந்திப்பில் இருந்து பிரபாத் சந்திப்பு செல்ல வேண்டிய இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் புலிக்குத்தி பிரதான சாலை, சிவனார் தெரு, கருங்கல்பட்டி சாலை வழியாக திருச்சி சாலை சென்றன.

    இந்த போக்குவரத்து மாற்றத்தால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வானவில் மன்றம்.
    • இந்த நிகழ்ச்சி நேற்று தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

    தாரமங்கலம்:

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் வானவில் மன்றம். இல்லம் தேடி கல்வி மையங்கள் இணைந்து ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா நிகழ்ச்சி தாரமங்கலம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த அரசு பள்ளிகளில் நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி நேற்று தாரமங்கலம் எம்ஜிஆர் காலனி பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார மேற்பார்வையாளர் சங்கர் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நம் அன்றாட வாழ்வில் அறிவியல் பயன்பாடு குறித்தும், எதையும் நாம் அறிவியல் சிந்தனையோடு செயல்படுத்த வேண்டும் என்றும்,மேலும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு மந்திரமா? தந்திரமா? என்ற மேஜிக் நிகழ்ச்சியும், அறிவியல், கணித செயல்பாடுகள், ஓரிகாமி எனப்படும் காகித மடிப்பு கலையும் மாணவர்களுக்கு கற்று தரப்பட்டது.

    கோடை விடுமுறையில் மாணவர்கள் இதுபோன்ற கலைகளை வீட்டில் செய்து பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இவ்விழாவில் ஆசிரியர் பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார் பலர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி குழந்தை களும். பெற்றோர்களும் அறிவியல் ஆசிரியர்களும் திரளாக கலந்து கொண்ட னர். முடிவில் ஆசிரியர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

    • தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழகத்தில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதையொட்டி, தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பல இடங்களில் கள்ளச்சா ராயம் விற்பனை செய்த வர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டம் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் விற்பனை, போலி மதுபான விற்பனை போன்ற மதுவிலக்கு சம்பந்தமான குற்றங்கள் நடைபெறுவது தெரிந்தால், பொதுமக்கள் அது குறித்த தகவல்களை 88383 52334 என்ற நம்பருக்கு போன் மூலமாகவோ, வாட்ஸ் ஆப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம்.

    அவ்வாறு கிடைக்கும் தகவலின் பேரில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மேலும், தகவல் தருபவர்கள் குறித்த ரகசியம் பாதுகாக்கப்படும். இந்த செல்போன் நம்பர் மாவட்ட எஸ்.பி.யின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×