என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
T20 உலகக் கோப்பை திருவிழா 2024
- 2-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார்.
- 4-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் பண்ட் ஆட்டமிழந்தார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.
அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.
2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார்.
- இந்திய அணியில் மாற்றம் ஏதும் இல்லை.
- தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்குகிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி தொடங்கிவிட்டது. டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி:-
1. ரோகித் சர்மா, 2. விராட் கோலி, 3. ரிஷப் பண்ட், 4. சூர்யகுமார் யாதவ், 5. ஷிவம் துபே, 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ஜடேஜா, 8. அக்சர் பட்டேல், 9. குல்தீப் யாதவ், 10. பும்ரா, 11. அர்ஷ்தீப் சிங்.
தென்ஆப்பிரிக்கா அணி:
1. டி காக், 2. ஹென்ரிக்ஸ், 3. மார்கிராம், 4. ஸ்டப்ஸ், 5. கிளாசன், 6. டேவிட் மில்லர், 7. யான்சன், 8. மகாராஜா, 9. ரபடா, 10. நோர்ஜே, 11. ஷம்சி.
பிட்சி ரிப்போர்ட் (இயன் பிசப்)- ஆடுகளத்தில் உயிருடன் புற்கள் இல்லை. இதனால் பந்து பேட்டிற்கு எளிதாக வரும்.
- இந்தியா 2007-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பை வென்றது.
- 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்தியா இலங்கையிடம் தோல்வி அடைந்தது.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் டாஸ் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
இதுவரை நடந்துள்ள 8 டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிகளில் 7 முறை டாஸ் வென்ற அணி கோப்பையைக் கைப்பற்றி உள்ளது.
ஒரே ஒரு முறை டாஸ் தோற்ற அணி உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.
இந்தியா 2007ம் ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதேபோல், 2014-ல் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி இலங்கையிடம் தோல்வி அடைந்தது.
- ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பரூக்கி அணியில் இடம் பிடித்துள்ளார்.
- அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ்க்கு அணியில் இடம் கொடுத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.
இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 20 அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியை வெளியிட்டுள்ளது.
இதில் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு தங்கள் அணிகளை அழைத்துச் சென்ற ரோகித் சர்மா மற்றும் மார்கிராம் ஆகியோரை கேப்டனாக தேர்வு செய்யவில்லை.
முதன்முறையாக அரையிறுதிக்கு அணியை அழைத்துச் சென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கானை கேப்டனாக நியமித்துள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்துள்ள டி20 உலகக் கோப்பை அணி:-
1. ரோகித் சர்மா, 2. டிராவிஸ் ஹெட், 3. நிக்கோலஸ் பூரன், 4. ஆரோன் ஜோன்ஸ், 5. மார்க்ஸ் ஸ்டோய்னிஸ், 6. ஹர்திக் பாண்ட்யா, 7. ரஷித் கான் (கேப்டன்), 8. ரிஷாத் ஹொசைன், 9. நோர்ஜே, 10, பும்ரா, 11. பரூக்கி.
இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ஆஸ்திரேலிய அணியில இருந்து இருவர் இடம் பிடித்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் (நிக்கோலஸ் பூரன்) , அமெரிக்கா (ஆரோன் ஜோன்ஸ்), வங்காளதேசம் (ரிஷாத் ஹொசைன்), தென்ஆப்பிரிக்கா (நோர்ஜே), ஆப்கானிஸ்தான் (ரஷித் கான், பரூக்கி) அணி வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.
- டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
- அதனால் விராட் கோலியின் பேட்டிங் பார்ம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பார்படாஸ்:
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர் விராட் கோலி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளார்.
இந்நிலையில், விராட் கோலியின் பார்ம் குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியதாவது:
இது விராட் கோலியின் ஆட்டம் அல்ல. அவர் விரைவாக ரன்கள் குவிக்கப்போய் தனது விக்கெட்டை பறிகொடுக்கிறார்.
ஏனென்றால் மறுமுனையில் அதற்கு நேர்மாறாக ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
ரோகித் ஆக்ரோஷமாக விளையாடுவதால் விராட் கோலியும் அதற்கு முயற்சிசெய்து விரைவிலேயே ஆட்டம் இழக்கிறார்.
அவர் அதிக நேரம் களத்தில் நின்றால் தனது பழைய பார்மை நிச்சயமாக மீட்டெடுக்க முடியும். அவர் தனது பழைய பாணியில் விளையாட மறுப்பதால்தான் இவ்வாறு வெளியேறுகிறார்.
தற்போது விராட் கோலிக்கு பேட்டிங் ரிதம் சரியாக அமையவில்லை. அவரது எல்லையில் பந்து விழுந்தால் அவர் அதை தாராளமாக முயற்சி செய்யலாம். ஆனால் அவர் ஷாட்களை உருவாக்க முயற்சிக்கிறார்.
நீங்கள் சிறப்பான பேட்டிங் பார்மில் இருக்கும்போது அவ்வாறான ஷாட்களை முயற்சி செய்யலாம். எதிரணிக்கு 300 ரன்கள் கூட வெற்றி இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அது சரியாக அமையவில்லை எனில், சிறிது பொறுமையாகக் காத்திருந்து விளையாட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.
- ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பும்ரா, அர்ஷ்தீப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.
- தென்ஆப்பிரிக்கா பார்படாஸ் மைதானத்தில் தற்போதுதான் விளையாட இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பார்படாஸ் பிரிட்ஜ் டவுண் கென்சிங்ஸ்டன் ஓவலில் நடைபெற இருக்கிறது.
இந்த மைதானத்தில் இதுவரை எட்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஓமன்- நமீபியா இடையிலான போட்டி டையில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. ஸ்காட்லாந்து- இங்கிலாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மற்ற ஆறு போட்டிகளில் மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், மற்ற 3 போட்டிகளில் 2-வது பேட்டிங் செய்த அணியும் வெற்றி பெற்றுள்ளன.
பொதுவாக இந்த மைதானத்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்துள்ளன. கடைசியாக இங்கிலாந்து- அமெரிக்கா இடையிலான போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் ஏழு விக்கெட்டுகள் வீழ்த்தினர். என்றாலும் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.
அமெரிக்காவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றினர். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர் சேஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வேகப்பநது வீச்சாளர்கள் 4 விக்கெட் வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய அணியில் பும்ரா அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். குல்தீப் யாதவ், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
இன்று 4-வது ஆடுகளத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஆடுகளம் குட் பவுன்ஸ் உடன் வேகப்பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்ஆப்பிரிக்கா நோர்ஜே, ரபடா, யான்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஷம்சி, மகாராஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. தேவை என்றால் கேப்டன் மார்கிராம் பந்து வீசுவார்.
தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்கள் முதலிலேயே விக்கெட்டுகளை வீழ்த்த முனைப்பு காட்டுவார்கள்.
அதேவேளையில் இந்தியா அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகிய இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா அவர்களுக்க துணையாக பந்து வீசுவார்கள். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் துருப்புச் சீட்டாக இருப்பார். அவருடன் அக்சர் பட்டேல், ஜடேஜா உள்ளனர்.
இன்றைய போட்டியில் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் அணி ஆதிக்கம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா இந்த தொடரில் இதுவரை விளையாடியவில்லை. முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடியுள்ளது.
- நடப்பு உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
- 7 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
ஆனாலும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இல்லை.
7 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே ரசிகர்கள் அவரது பார்ம் குறித்து கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இதுபோன்ற விஷயங்கள் சூப்பர் ஸ்டார்கள் அல்லது விராட் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு நடக்கும்.
முந்தைய உலகக் கோப்பைகளில் அவர் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தினார் என்பது எங்களுக்குத் தெரியும்.
இது யாருக்கும் ஏற்படலாம். ஆனால் அதில் உள்ள நல்ல விஷயம். அவர் இறுதிப் போட்டியில் இருக்கிறார்.
சில சமயங்களில் பெரிய வீரர்களை அழைக்கலாம், மேலும் முன்னேறி அணிக்கான உண்மையான ஆட்டத்தையும் வெல்லலாம்.
விராட் கோலி போன்ற ஒரு வீரரை சந்தேகமின்றி நீக்க முடியாது. அவர் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவர் என்பதை அறிவோம்.
எனவே அவர் இறுதிப்போட்டியில் என்ன வழங்குவார் என்பதை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
- இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது.
- மேலும், இந்தியாவுக்கு சாதகமாக ஐ.சி.சி. அட்டவணை தயாரித்துள்ளது என்றார் வாகன்.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு பார்படாசில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, இந்தியாவுக்கு சாதகமான வகையில் ஐ.சி.சி. அட்டவணையை தயாரித்துள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடர் இந்திய அணியை மையமாக வைத்து நடப்பதால் மற்ற அணிகளுக்கு அநியாயம் நடக்கிறது என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், மைக்கேல் வாகனின் கருத்து குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:
மைக்கேல் வாகன் எனக்கு மிகவும் அன்பான நண்பர். இரவு 8 மணிக்கு இந்திய கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதன் மூலம் ஐ.சி.சி எப்படி இந்தியாவுக்கு கிரிக்கெட் போட்டிகளை வெல்ல உதவுகிறது என்று எனக்குத் தெரியவில்லை.
ஒளிபரப்பு கிரிக்கெட் போட்டிகளை எப்படி வெல்லும் என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் இன்னும் நடுவில் விளையாடி வெற்றிபெற வேண்டும்.
இரண்டாவதாக, அவர்கள் எல்லா இடங்களிலும் சுற்றிச் சென்று வெற்றி பெற்றபோது கயானாவை ஏன் வெற்றிக்கான இடமாக நினைக்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை.
உலக கிரிக்கெட்டில் இந்தியா அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.
ஒரு நிறுவனத்தின் 80 சதவீத பங்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர்கள் அதிக லாபத்தை எதிர்பார்ப்பார்கள் என தெரிவித்தார்.
- கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பேசியுள்ளனர்
- தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.
டி 20 உலகக் கோப்பை போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்த நிலையில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை தோல்வியையே சந்திக்காமல் இந்த இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளன. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கும் இடையில் அணல் பறக்கும் வகையில் நடக்க உள்ள இன்றைய இறுதிப்போட்டியை ரசிகர்களும் கிரிக்கெட் வீரார்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
அணியில் உள்ள ஒவ்வொருவரின் பலம் மற்றும் பலவீனம் குறித்த விவாதமே இப்போது திரும்பிய இடத்திலெல்லாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கசிகோ ரபாடா, டேவிட் மில்லர், ஹெயின்ரிச் க்ளாஸன், கேசவ் மகராஜ் ஆகியோர் தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.
ரோகித் சர்மா பயம் என்பதையே அறியாத சிறந்த ஆட்டக்காரர் என்றும் தான் அவரின் பெரிய ரசிகன் என்றும் கேசவ் மஹராஜ் கூறியுள்ளார். க்ளாஸன் ரோகித் பற்றி கூறுகையில், அவர் கிரிக்கெட்டில் நம்பமுடியாத வகையில் சிறந்த மூளைக்காராக உள்ளார். அவருடன் விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி பேச நான் ஆர்வமாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
டேவிட் மில்லர் பேசுகையில், ரோகித் டி- 20 யில் சிறந்த பினிஷராக உள்ளார். களத்தில் பதற்றம் அடையாத அவரின் நிதானத்தைப் பார்த்து வியக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், ரபாடா ரோகித்தை தலைசிறந்த பேட்டர் என்றும் உலகின் தலைசிறந்த பவுலர் என்றும் புகழ்ந்துள்ளார்.
- இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
- வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகை.
பிரிட்ஜ்டவுன்:
9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.
லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதியை எட்டின.
அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா எப்படி?
முன்னாள் சாம்பியனும், 'நம்பர் ஒன்' அணியுமான இந்தியா, நடப்பு தொடரில் தோல்வி பக்கமே செல்லாமல் இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
லீக்கில் பாகிஸ்தான் உள்பட 3 அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 அணிகளையும் தோற்கடித்தது. கனடாவுக்கு எதிரான லீக் மட்டும் மழையால் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
அரைஇறுதியில் குல்தீப், அக்ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை போட்டுத்தாக்கிய இந்தியா அதே உத்வேகத்துடன் தென்ஆப்பிரிக்காவையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது.
கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் கடந்த இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் அசத்தினர். ஆனால் விராட் கோலியின் செயல்பாடு தொடர்ந்து கவலைக்குரியதாக இருக்கிறது. 7 ஆட்டங்களில் 75 ரன் மட்டுமே எடுத்துள்ளார். தொடக்க ஆட்டக்காரர் வரிசைக்கு தாவிய பிறகு அவரது இயல்பான பேட்டிங்கே காணாமல் போய் விட்டது.
இருப்பினும் அவருக்கு ஆதரவாக உள்ள கேப்டன் ரோகித் சர்மா, 'கோலியின் தரம் குறித்து எங்களுக்கு தெரியும். 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுபவருக்கு பார்ம் ஒரு பிரச்சினையே இல்லை. அனேகமாக இறுதிப்போட்டியில் ஒட்டுமொத்தமாக தனது சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்துவார்' என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இதே போல் ஷிவம் துபேவும் கணிசமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா (13 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (15), குல்தீப் யாதவ் (10), அக்ஷர் பட்டேல் பிரமாதப்படுத்துகிறார்கள்.
கடந்த ஆண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை இரண்டிலும் இறுதிப்போட்டியில் கோட்டை விட்ட இந்தியா இந்த முறை கோப்பையை கையில் ஏந்தி நீண்ட கால ஏக்கத்தை தணிக்குமா என்பதே ரசிகர்களின் பேராவலாகும். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு இதுவே கடைசி 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியாகும். அதனால் அவர்களும் வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள்.
2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை உச்சிமுகர்ந்த பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்ஆப்பிரிக்கா
உலக தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் தென்ஆப்பிரிக்க அணி மீது ஆரம்பத்தில் பெரிய அளவில் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. உலகக் கோப்பைக்கு முன்பாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 11 ஆட்டங்களில் ஆடி 9-ல் தோற்று இருந்தது.
ஆனால் உலகக் கோப்பைக்குள் நுழைந்ததும் பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்கள் அவர்களுக்கு புதுதெம்பை கொடுத்தது. லீக்கில் 4 வெற்றி, சூப்பர் 8 சுற்றில் 3 வெற்றி, அரைஇறுதி என்று அந்த அணியும் சறுக்கலின்றி வீறுநடை போடுகிறது.
அது மட்டுமின்றி உலகக் கோப்பை போட்டி ஒன்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அரைஇறுதியை தாண்டியதில்லை. அவர்களின் பேட்டிங் சீரற்றதாக காணப்பட்டாலும் ககிசோ ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11), அன்ரிச் நோர்டியா (13) மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ் ஆகிய பந்து வீச்சு கூட்டணி அவர்களுக்கு பக்கபலமாக இருந்து வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது.
இதில் அரைஇறுதியில் ஆப்கானிஸ்தானை 56 ரன்னில் சுருட்டியது கவனிக்கத்தக்கது. பந்து வீச்சில் வலுவாக உள்ள நிலையில் குயின்டான் டி காக், கிளாசென், மில்லர், கேப்டன் மார்க்ரம், ஹென்ரிக்ஸ் ஆகியோரது பேட்டிங் ஒருசேர கிளிக் ஆகும் பட்சத்தில், இன்னும் அபாயகரமான அணியாக மாறி விடுவார்கள். அதனால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். ஆனால் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கே வெற்றி வாய்ப்பு கிட்டும்.
தென்ஆப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவு நனவாகுமா? வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக் கோப்பையை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா வசப்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இந்த மைதானத்தை பொறுத்தவரை நடப்பு தொடரில் இங்கு 8 ஆட்டங்கள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 181 ரன்கள் எடுத்து வெற்றி கண்ட ஆட்டமும் அடங்கும். அந்த அனுபவம் இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலமாக இருக்கும்.
20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: விராட் கோலி, ரோகித் சர்மா (கேப்டன்), ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப்சிங், பும்ரா.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், கேஷவ் மகராஜ், ககிசோ ரபடா, அன்ரிச் நோர்டியா, தப்ரைஸ் ஷம்சி.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது.
- இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 4 ஓவர் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.
இந்நிலையில், கிரேடு கிரிக்கெட்டர் போட்காஸ்டில் பங்கேற்ற தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இந்திய அணியின் குல்தீப் யாதவ் பந்துவீச்சுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அப்போது, கடந்த மாதம் தான் வெளியிட்ட பதிவை நினைவுபடுத்தினார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி அமர்வுகளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் எனக்கு பந்து வீசமாட்டார்.
2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் குல்தீப் பந்துவீசாமல் இருப்பது சுழற்பந்து வீச்சாளரின் கவனமான முடிவு.
டெல்லி அணியுடனான பயிற்சி வலைகளில் குல்தீப்பை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தேன்.
உலகக் கோப்பைக்கான எனது சொந்தத் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
- இவருக்கு முன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார்.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறி அசத்தியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அவரது தலைமையில் இந்திய அணி எட்டியுள்ள 3-வது இறுதிப்போட்டி ஆகும்.
கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் இந்தியா தகுதிபெற்றது. உள்ளூரில் களமிறங்கிய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இதேபோல், கடந்த 2021-23-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது.
இந்நிலையில், ரோகித் சர்மா ஐசிசி நடத்தும் ஒருநாள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய 2வது கேப்டன் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.
இவருக்கு முன்னதாக நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்