search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்துக்கட்சி கூட்டம்"

    • கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
    • அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது

    சென்னை:

    காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை முறையாக வழங்குவதை முறைப்படுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில் தமிழகத்துக்கு காவிரி தண்ணீரை திறந்து விடுவது தொடர்பாக மேற்கண்ட அமைப்புகள் பிறப்பிக்கும் உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமலேயே இருந்து வருகிறது.

    தென்மேற்கு பருவமழை காலத்தில் கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும். இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு ஆகிய 2 அமைப்புகளும் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை கணக்கிட்டு கடந்த 12.7.2024 முதல் 31.7.2024 வரையில் நாள் ஒன்றுக்கு ஒரு டி.எம்.சி. என்ற கணக்கில் விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளன.

    ஆனால் இதனை கர்நாடக அரசு ஏற்க மறுத்து விட்டது. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறும் வகையில் அமைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை திறந்து விடாத கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதாகும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இதைத் தொடர்ந்து காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை பெறுவதற்கு தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இதன்படி அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அனைத்து கட்சிகளின் சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடங்கியது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    இந்த கூட்டத்தில் அ.தி. மு.க. சார்பில் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ் குமார், பா.ஜ.க. சார்பில் கரு. நாகராஜன், கருப்பு முருகானந்தம், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன் மற்றும் ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    அடுத்த கட்டமாக எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு காவிரி நீரை பெறலாம்? என்பது பற்றி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    இது தொடர்பாக உரிய முடிவுகளை எடுத்து அதனை தமிழக அரசு விரைவில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் அம்மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக், காவிரி கரையோர மாவட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

    காவிரி ஒழுங்காற்று குழு தமிழகத்திற்கு 11,500 கன அடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்திருந்தது.

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்று குழு தினசரி தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட பிரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒழுங்காற்று குழு பரிந்துரைக்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    பரிந்துரையை எதிர்த்து மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்யவும் கர்நாடக முடிவு செய்துள்ளது.

    மேலும், தினசரி 8,000 கன அடி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு திறக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, "ஒரு டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிட முடியாது" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    • இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை.
    • அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய மந்திரிகள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. 

    பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க. எம்.பி. டாக்டர் எம். தம்பிதுரை, தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். 


    இந்த கூட்டத்தில், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு பேசிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன என குறிப்பிட்டார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விமானப்படைக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் விமானப்படையினர் தாக்குதல் நடத்தியது குறித்து விவாதிக்க வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அனைத்து கட்சி கூட்டத்தை இன்ரு கூட்டினார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார்,



    அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவில் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டார்.

    இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆதரவு எப்போதும் இருக்கும்; விமானப்படையின் நடவடிக்கையை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளார். #IAFAttack #LoC #SushmaSwaraj #AllPartyMeeting
    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் 9 தலைவர்கள் கலந்து கொண்டனர்.#CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆகிய 9 கட்சித் தலைவர்களும் தி.மு.க. சேர்ந்த துரைமுருகன், டி.கே.எஸ். இளங்கோவன், வி.பி. துரைசாமி, ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோரும் கலந்து கொண்டனர்.



    காவிரி பிரச்சனையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தவிட்டது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கினை பெறுவதற்கு அரசு தேவையான முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்துவது உள்பட பல்வேறு முடிவுகள் பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.#CauveryIssue #MKStalin
    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #CauveryIssue #MKStalin
    சென்னை:

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல் செய்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் மற்றும் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை கண்காணிப்பது இந்த அமைப்பின் பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகாரம் பொருந்திய அமைப்பாக மட்டும் இருந்தால் மட்டுமே அதனை தமிழகம் ஏற்கவேண்டும் என அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதவது:-

    காவிரி விவகாரத்தில் தொடர் கண்டனங்களிலிருந்து தப்பிக்க, தனது வரைவு திட்ட விவரங்களை மத்திய அரசு சமர்ப்பித்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தும் வகையில் நாளையே அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை மாநில அரசு கூட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    ×